கே ஜி எஃப் [2018] முதல் அத்தியாயம்

2
KGF movie poster கே ஜி எஃப்

தென் இந்திய திரைப்படங்களில், கன்னட திரையுலகம் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தனி வழியில் செல்வார்கள். Lucia படம் தான் நான் பார்த்த முதல் கன்னடப் படம். அதன் பிறகு பார்க்கத் தூண்டிய படம் கே ஜி எஃப்.

Read Lucia [2013] நான் பார்த்த முதல் கன்னடத் திரைப்படம்

கே ஜி எஃப் / KGF

சிறு வயதில் இருந்தே பெரியாளாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் யாஷ், அதைச் செயல்படுத்த “Power” தேவை என்பதை உணர்ந்து அடிதடியில் இறங்கி முக்கியமான Don ஆக உருவெடுக்கிறார்.

1950 – 85 காலக் கட்டங்களில் போர்கள் காரணமாகத் தங்கத்துக்கான மதிப்பு உயர்கிறது.

எனவே, இதைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பொறுப்பில் உள்ள யாஷை, இன்னொரு முக்கிய வில்லன், கருடா என்பவனைக் கோலார் தங்க சுரங்கத்தில் கொன்றால் உன்னை மும்பை Don ஆக்குகிறேன் என்கிறான்.

சுரங்கத்தினுள் சென்றால் வெளி உலகத்தையே காண முடியாது என்ற சூழ்நிலையில் உள்ள இடத்துக்கு ஒரு சாதாரணச் சுரங்க தொழிலாளி போல நுழையும் யாஷ் இறுதியில் கருடாவை கொல்கிறாரா?

என்பதை இந்த முதல் அத்தியாயத்தில் கூறி இருக்கிறார்கள்.

பிரம்மாண்டம் 

உண்மையில் சில காட்சிகள் பாகுபலி போலப் பிரம்மாண்டமாக இருக்கிறது. எந்த நம்பிக்கையில் இப்படிச் செலவு செய்து எடுத்தார்கள் என்று வியக்க வைக்கிறது.

படம் கர்நாடகாவிலும், வட மாநிலத்திலும் குறிப்பாக மும்பை போன்ற நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் பெரியளவில் ஆதரவில்லை ஆனால், தற்போது சில திரையரங்குகளில் வரவேற்பு காரணமாகக் காட்சிகளைக் கூடுதலாக்கி இருக்கிறார்கள்.

முதல் பாதி என்னவென்றே புரியாத அளவுக்குக் காட்சிகள் உள்ளது. என்ன நடக்கிறது? கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதே புரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உள்ளது.

காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் வந்து செல்கிறது.

ஆனால், இவற்றை அனைத்தையும் கடந்து நம்மை ரசிக்க வைப்பது அந்தக்காலக் காட்சிகள், உடைகள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, வித விதமான வில்லன்கள், யாஷ் அதிரடி நடிப்பு, சண்டைக்காட்சிகள், அதில் வரும் கார்கள் என ஒவ்வொன்றும் அழகு.

வில்லன்கள்

அதிலும் இத்தனை வில்லன்களை எங்கே பிடித்தார்கள் என்று தெரியவில்லை, செம்ம கெத்தாக இருக்கிறார்கள்.

அவர்கள் உடை, முரட்டு தாடி, கைகளில் உள்ள செயின், மோதிரம் என்று அசத்தலாக உள்ளனர். தமிழ் பின்னணி குரல்களும் அசத்தல்.

இப்படம் ஒரு எழுத்தாளர் கதை சொல்வதாக விரியும் அவருக்கு நிழல்கள் ரவி பின்னணி குரல் கொடுத்துள்ளார், அம்சமாக உள்ளது.

யாஷ் எத்தனை பேர் வந்தாலும் சாகடித்து விடுகிறார், நம்பவே முடியவில்லை என்றாலும், காட்சிகள் சுவாரசியமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

இருப்பினும் அதெப்படிய்யா இத்தனை பேரை அடிப்பது, துப்பாக்கி குண்டுகளுக்குத் தப்பிப்பது என்ற கேள்விகளும் நமக்கு வந்து செல்லும்.

சண்டைக்காட்சிகள் எல்லாம் ரணகளமாக இருக்கிறது. யாஷ் பார்க்கவும் செம்ம கெத்தாக இருக்கிறார், இதிலும் வழக்கமான ஒரு காதல் உள்ளது.

படம் முந்தைய காலக் கதை என்பதால், ஒளிப்பதிவு வண்ணம் Black / Brown Tone ல் உள்ளது.

இரண்டாம் பாதி முழுக்க சுரங்கத்தில்

இரண்டாம் பாதித் தங்க சுரங்க காட்சிகள் மிரட்டலாக உள்ளன, இறுதிக்காட்சியில் வரும் காளி சிலை, அதன் இடமெல்லாம் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது.

சில காட்சிகள், நடிகர்கள் நடிப்பு, உடல் மொழி, வசனங்கள் தெலுங்கு படங்களை நினைவு படுத்துகிறது. இடையிடையே படத்தில் இந்தி வசனங்கள் வரும் போது ஒன்றுமே புரியாமல் பார்க்க வேண்டியது உள்ளது.

சுரங்க காட்சிகள் முழுக்க புழுதியிலேயே எடுத்துள்ளார்கள். எப்படித்தான் எடுத்தார்களோ!? நடித்தவர்கள் பாவம். ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து இருப்பார்கள்.

வன்முறை காட்சிகள் பிடிக்காதவர்கள் படத்தைத் தவிர்ப்பது நல்லது.

KGF அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது ஆனால், மேற்கூறிய காட்சிகளை ரசிக்க முடிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

எனக்குப் படம் பிடித்தது.

Directed by Prashanth Neel
Produced by Vijay Kiragandur
Written by Dialogues:Prashanth Neel, Chandramouli M.,Vinay Shivangi
Screenplay by Prashanth Neel
Story by Prashanth Neel
Starring Yash, Srinidhi Shetty
Narrated by Anant Nag
Music by Ravi Basrur, Tanishk Bagchi
Cinematography Bhuvan Gowda
Edited by Shrikanth
Release date 20 December 2018 (United States & Canada), 21 December 2018 (India)
Running time 155 minutes
Language Kannada

கொசுறு

கே ஜி எஃப் இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. இதில் சுரங்கப்பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள், யார் இதற்கு அடுத்த “தல” போன்றவை இருக்கலாம்.

பிற்சேர்க்கை

கே ஜி எஃப் இரண்டாம் அத்தியாயம் (2022)

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கோலார் தங்க சுரங்கம் இந்த பெயரை சின்னவயதில் பாடப்புத்தகத்தில் படித்த நியாபகம்.. பல கற்பனைகள் உண்டு.. இந்த தங்க சுரங்கத்தை பற்றி.. தற்போது அதே பெயரில் படம்.. இந்த படத்தின் திரை முன்னோட்டம் பார்த்தேன்.. மிகவும் பிடித்து இருந்தது.. படத்தை பார்க்கவும் ஆர்வம் இருக்கிறது.. உங்களுடைய விமர்சனத்தை பார்த்த பின் ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது.. எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை.. ஆனால் பார்த்து விட்டு என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன்.. படம் என்று வந்து விட்ட பின் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது.. (யாஷ் எத்தனை பேர் வந்தாலும் சாகடித்து விடுகிறார், நம்பவே முடியவில்லை என்றாலும், காட்சிகள் சுவாரசியமாக இருப்பதை மறுப்பதற்கில்லை).. இயக்குனரின் திறன் இங்கு தான் உள்ளது..

    விரைவில் இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. இதில் சுரங்கப்பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள், யார் இதற்கு அடுத்த “தலை” போன்றவை இருக்கலாம்… நிச்சயம் எதிர்பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!