இயக்குநர் ராஜேஷ் மீண்டும் ஒரு முறை தன் வழக்கமான நகைச்சுவையை நம்பி ஒரு கல் ஒரு கண்ணாடி களத்தில் இறங்கி இருக்கிறார்.
இந்த முறை கலைஞர் பேரன், ஸ்டாலின் மகன் உதயநிதி கதாநாயகனாக அவருக்கு மிகப்பெரிய துணையாக இரண்டாவது கதாநாயகன் அந்தஸ்துடன் சந்தானம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி
படத்தின் கதை என்னவென்றால்… படத்தில் கதையே இல்லை என்பது தான் 🙂 அட! நிஜமாகவே கதை இல்லைங்க.
கதையே இல்லாம எப்படிங்க இருக்க முடியும் என்று கேட்பது புரிகிறது.
நீங்க என்ன நினைத்தாலும் இது தான் உண்மை. உதயநிதி ஹன்சிகாவை காதலிக்கிறார் அவரைக் கைப்பிடிக்கிறார் அவ்வளோ தான் இதில் எதைக் கதை என்று கூறுவது? 🙂 .
திரைக்கதை
ராஜேஷ் திரைக்கதை பலமே படத்தின் வெற்றி. படத்துவக்கத்திலிருந்து இறுதி வரை நகைச்சுவை மற்றும் சுவாரசியமான திரைக்கதை மூலம் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்.
அவ்வப்போது வரும் என்னையா இது கதையே இல்லாம படம் பார்கிறோமோ! என்ற எண்ணத்தை நகைச்சுவை மறக்கடித்து விடுகிறது.
அது எப்படித்தான் படம் முழுக்க நகைச்சுவையை அப்படியே கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.
உதயநிதி
உதயநிதிக்கு இதை விடச் சிறப்பாக ஒரு முதல்ப் படம் அமைந்து விடாது என்று நினைக்கிறேன்.
அவர் தனக்கு ஏற்ப ஒரு கதையை!! என்பதை விட இயக்குனரைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார் என்பதே உண்மை.
முதலில் மிஸ்கின் படத்தில் நடிப்பதாகவும் பின் அந்த அளவுக்குச் சீரியஸ் ஆன கதாப்பத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு தான் இல்லை என்பதால் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்,
நான் நினைத்த அளவிற்கு மோசம் இல்லாமல் சிறப்பாகவே நடித்து இருந்தார்.
பெரிய தலையோட மகன் என்பதால் இடி மின்னல் எரிமலை நான்கு உதயநிதி மாதிரி சர் சர் என்று வருவாரோ என்று பயந்து இருந்த வேளையில் கொசு வலைக்குள் இருந்து வந்து படம் பார்க்கும் அனைவரின் வயிற்றிலும் பாலை வார்த்து விட்டார்.
நிஜமாகவே படம் முழுக்க எந்த வித பில்டப்பும் இல்லாமல் நடித்ததற்கே இவரைப் பாராட்ட வேண்டும் 🙂
துவக்கத்தில் நடிப்பில் தடுமாற்றம் தெரிந்தாலும் போகப் போக நல்ல முன்னேற்றம்.
தான் பேசும் போது சரியாக நடிக்கிறார் ஆனால் மற்றவர்கள் பேசும் போது தான் எப்படி இயல்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தான் திணறுகிறார்.
இனி வரும் படங்களில் சரி செய்து கொள்வார் என்று நம்பலாம்.
நடனத்தில் அதிக பயிற்சி தேவை இந்தப்படத்தின் வெற்றி இவருக்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதால் விரைவில் அனைத்தையும் கற்றுக்கொள்வார்.
சந்தானம்
சந்தானம் படத்தின் வெற்றிக்கும் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. Image Credit
மனுஷன் படம் துவக்கத்தில் இறுதிக் காட்சி வரை படம் பார்க்கும் அனைவரின் வயிற்றையும் பதம் பார்த்து விட்டார்.
இவருடைய டைமிங் நகைச்சுவைக்குத் திரையரங்கம் முழுவதும் அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தனர்.
நட்புக்காக வரும் ஸ்னேஹாவைப் பார்த்து உதயநிதி டேய்! புன்னகை அரசிடா! என்று கூற நான் மட்டும் என்ன புழுங்கல் அரிசின்னா சொன்னேன்” என்று கலகலக்க வைத்துக்கொண்டே இருந்தார்.
அதுவும் விமானத்தில் நடக்கும் காட்சிகள் அல்டிமேட்.
சந்தானம் இதில் கொஞ்சம் உடம்பு போட்டு விட்டார் இதை இவர் கவனிக்க வேண்டியது அவசியமாகும் இல்லை என்றால் அங்கிள் உருவத்தில் விரைவில் வந்து விடுவார்.
அப்புறம் இளைய நடிகர்களுடன் நடிக்கச் சிரமமாகி விடும்.
ஹன்சிகா
ஹன்சிகாக்கு ஒரு வேலையும் இல்லை மற்றவர்களைப் போலவே 🙂 நல்லா கொழு மொழுக் என்று இருக்கிறார் அடுத்த குஷ்பூ போல.
அழகே அழகே பாடலில் பச்சை புடவையில் வரும் போது பலருக்கு இதயம் நொறுங்கி இருக்கும்.. ஹி ஹி அந்தப் பலரில் நானும் ஒருவன்.
ஹன்சிஹாக்கு அவரின் அப்பா ஷியாஜி ஷிண்டே ஒரு பையன் பார்த்து இருக்க அவரும் ஹன்சிஹாவும் பேசும் போது ஒரு கட்டத்தில் சண்டையாகி விட அவர் ஹன்சிஹாவை திட்டுவார் பாருங்க.. செம காமெடி.
நான் ரொம்ப ரசித்தேன். அந்த நேரத்தில் உதயநிதி நடவடிக்கைகள் ரசிக்கும் படி இருக்கும்.
இப்படியொரு காரணமா?
உதயநிதி அப்பாவாக அழகம் பெருமாள் அம்மாவாக சரண்யா.
சரண்யா பட்டப்படிப்பு முடிக்காமல் முடித்தாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்ததால் அவருடன் அழகம் பெருமாள் 20 வருடமாக பேசாமல் இருப்பாராம்.
ஏன் ராஜேஷ் உங்க படத்துல கதை இல்லைன்னு யாராவது கவலைப்பட்டாங்களா அப்புறம் எதற்கு இப்படியொரு மொக்கையான காரணத்தை வைத்து இருந்தீர்கள்?
இவ்வாறு காட்டியதிற்கு சாதாரணமாகவே காட்டி இருக்கலாமே! இன்னும் நன்றாகவே இருந்து இருக்கும்.
படத்திலே கதை இல்லாதது கூடப் பெரிதாகத் தோன்றவில்லை இந்த இருபது வருட விஷயம் தான் படு மொக்கையாக இருந்தது.
க்ளைமாக்ஸ் வழக்கம் போல எப்படி முடிப்பது என்று தெரியாமல் இதிலும் திணறி எப்படியோ முடித்து இருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ்
இசை ஹாரிஸ் ஜெயராஜ் ஓகே. செம ஹிட் ஆகிய “வேண்டாம் மச்சான் வேண்டாம்” பாடலை இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்.
அதிலும் சந்தானம் எதோ ஆட வேண்டுமே என்று ஆடுகிறார்.
ஹாரிஸ் ஒரே மாதிரி இசையமைப்பதை கொஞ்சம் தவிர்த்தால் நல்லது.
எது எப்படியோ! ராஜேஷ் ஹேட்ரிக் வெற்றி கொடுத்து விட்டார்.
இறுதிக் காட்சியில் இரண்டாவது படத்தில் முதல் பட நாயகன் ஜீவா வருவார் மூன்றாவது படமான இதில் இரண்டாவது பட கதாநாயகனான ஆர்யா வருவார்.
இவருடைய நான்காவது படமான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் உதயநிதி வருவாரோ! 🙂 .
தமிழ்ப் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லாமல் இருந்தால் படம் முழுக்க கவலை மறந்து குடும்பத்துடன் சென்று சிரிக்க முழு உத்தரவாதம்.
திமுக அனுதாபிகள் இந்தப்படத்திற்கு கட்சி சாயத்தைப் பூசாமல் இருந்தால் உதயநிதிக்கு நல்லது.
கலைஞர் குடும்பத்தில் இருந்த வந்த அருள்நிதி படம் மௌனகுரு க்ளாஸ் படம் என்றால் உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாலி படம்.
Directed by M. Rajesh
Produced by Udhayanidhi Stalin
Written by M. Rajesh
Starring Udhayanidhi Stalin, Hansika Motwani,Santhanam
Music by Harris Jayaraj
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Red Giant Movies
Release date(s) 13 April 2012
கொசுறு
படத்தில் உதயநிதி சந்தானம் பெயர் வரும் போது திரையரங்கில் பலத்த கைதட்டல். சந்தானம் கைதட்டல் எதிர்பார்த்தது உதயநிதிக்கு எதிர்பார்க்கவில்லை. இதோட இயக்குனர் ராஜேஷ் பெயருக்கும் செம கைதட்டல்.
என் அருகில் கணவன் மனைவி இரண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தையுடன் அமர்ந்து இருந்தனர். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை எந்தக் குறும்பும் பண்ணாமல் அமைதியாக சமத்தாக உட்கார்ந்து இருந்தது.
இது வரை இப்படியொரு குழந்தையைப் பார்த்ததே இல்லை. கொடுத்த வச்சவங்கப்பா! 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ரொம்ப நல்லா இருந்தது விமர்சனம்.
பாஸ் என்கிற பாஸ்கரன் பார்த்து இந்த படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு இருந்தது படம் ஜாலியாக வந்திருக்கிறது என்றால் விடுவதாவது
இன்று பார்க்க போகிறேன் கிரி
விமானத்தில் இருவரும் அடிக்கும் லூட்டிக்கே படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது….
பில்லா ட்ரெயிலர் தூள்.
கிரி,
உதயநிதி இது தான முதல் படம்.. இதுக்கப்புறம் பார்கொனோம் …. என்ன நசுங்கின சோம்பு படங்கள் எல்லாம் (பழசு) அவர் பேசும்போது, சண்டை காட்சியின் போது, நடன கட்சியின் பொது, ஒரு 20 டு 30 பேர் கை தட்டி விட்டு வெளீல போயடுவங்கோ,, I will watch the movie because it is from the director SMS and BEB otherwise for Uthayanithi.. and all no..
Thiruvizhala thirudina mathiri oru muzhi.. ivan ellan nadikkum pothu naama en try panna koodathunnu thappa thonuthu….
அன்புள்ள கிரி,
மிக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அருமையான விமர்சனத்துக்கு நன்றி. நீங்கள் கூறியுள்ளது போல் சந்தானம் மிகப் பெரிய பலம் இந்தப் படத்துக்கு.
நிறை குறையுடன் நிறைவான விமர்சனம். நன்றி.
//இறுதிக் காட்சியில் இரண்டாவது படத்தில் முதல் பட நாயகன் ஜீவா வருவார் மூன்றாவது படமான இதில் இரண்டாவது பட கதாநாயகனான ஆர்யா வருவார் இவருடைய நான்காவது படமான ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் உதயநிதி வருவாரோ!//
எனக்கென்னமோ ஆர்யாதான் நாலாவது படமான ‘ஆல் இன் அழகுராஜா’விலும் வருவாரின்னு தோணுது, ஏன்னா அவர்தான் மூன்று படத்திலும் நடிச்சிருக்காரே :p
தல,
படம் நல்லா இருக்கு சந்தானம் தான் படத்த காப்பாத்தினார் நு தோணுது
வேணாம் மச்சான் பாட்டு கு நல்லா ஆடி இருக்கலாம்
பாஸ் படத்தோட பார்த்தா இது கொஞ்சும் மொக்கை தான் ஆனா இருக்குறதுல நல்லா இருக்கு
– அருண்
கிரி,
படத்துல லாஜிக் இல்ல. அது ராஜேஷ் படத்துக்கு தேவையும் இல்ல . but , அது தெரியாத மாதிரி அழகா படம் எடுத்து இருக்குறார் ராஜேஷ். starting to end supera pogudhu padam. Every one liked the songs in the movie because of the different dance movements by udhayanidhi. Santhanamdhan indha padathukku main . manushan supera panniyirukkar. romba nal achu ippadi oru comedya parthu. nan innoru thadavai pogalamnu irukken.
அனைவரின் வருகைக்கும் நன்றி
வினோத் & சதீஷ் தகவலுக்கு நன்றி
@காமேஷ் தல உதயநிதி மேல காண்டுல இருக்கீங்க போல 🙂 ஆனால் நீங்க கூறும் அளவிற்கு மோசமில்லை.
@ஸ்ரீனிவாசன் நன்றி
@ஜீவர்தர்ஷன் நீங்க கூறுவதிலும் வாய்ப்பு இருக்கு 🙂
nice