வீரம் [2014]

6
வீரம்

ம்பிகளுக்காகத் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கும் அஜித் எப்படி தமன்னாவை காதலிக்கிறார்? அதன் தொடர்ச்சியாக என்ன நடக்கிறது என்பது தான் வீரம் கதை.

எதிர்பார்ப்பே இல்லாமல் சென்றது ரொம்ப நல்லதாகி விட்டது.

இதுவே படத்தை ரசிக்க உதவி புரிந்தது. படம் சூப்பர் ஹிட் தான் சந்தேகமே இல்லை.

வீரம்

பாசமான அண்ணன் தம்பிகள் அவர்களுடன் அவர்கள் அடிதடி வழக்குகளைப் பார்ப்பதற்காகவே வழக்கறிஞராகச் சந்தானம். Image Credit

அஜித் ரொம்ப நல்லவர். எப்படின்னா… அடி வாங்குபவர்கள் கூட நல்லா தெம்பா அடி வாங்கணும் என்று சாப்பாடு போட்டு அடிப்பார் 🙂 .

தமன்னா வழக்கமான கதாநாயகி என்றாலும் வழக்கமாக ரொம்ப பேக்கு கதாநாயகிபோல இல்லாமல் ஓரளவு நல்ல கதாப்பாத்திரம். தமன்னா ம்ம்ம் செம 😉 .

படத்தில் இரு வில்லன்கள். இதில் முதல் வில்லனைத் துவக்கத்திலேயே டம்மி வில்லன் ஆக்கி விட்டார்கள்.

இனி இந்த ஊரில் உன்னைப் பார்த்தேன் தொலைத்து விடுவேன் என்று அஜித் கூறியதால், வேறு ஊருக்குப் போய் விடுவார்.

அங்கேயும் அஜித் வர… “நீங்க நார்த் இந்தியா பக்கம் போவீங்களா?” என்று கேட்பது செம ரகளை 🙂 ஆனால், இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்.

சண்டைக் காட்சிகள்

சண்டை காட்சிகள் செமையாக இருக்கிறது. ரயில் சண்டை அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து உள்ளார்.

இன்னொரு சண்டையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி எதிரிகளைத் தாக்குவது செம மாஸ்.

கடைசி சண்டையில் வில்லனிடம் “முடிந்தால் என்னைத் தாண்டிச் செல்” என்று கூறும் போது பட்டையைக் கிளப்புகிறார்.

முதல் பாதியில் சந்தானத்திற்கு தான் அதிக வசனங்கள். படத்தில் நகைச்சுவையும் அருமை. இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது ஆறுதல்.

சந்தானம் முதல் பாதியில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

அஜித் தம்பி ஒரு ஃபிகரை பிக்கப் செய்ய ‘டேய்! நீ எப்படா இந்தச் சிம் கார்டை ஏக்டிவேட் பண்ணுனே! என்று கேட்கும் போது அரங்கமே சிரிப்பில் மூழ்கியது 🙂 .

கொஞ்ச நேரம் ரமேஷ் கண்ணா வருகிறார். இரண்டாம் பாதியில் தம்பி ராமையா நகைச்சுவை பகுதிக்கு வருகிறார். ரொம்ப மோசம் இல்லாமல் இருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு அஜித் தாடி எடுத்துட்டு தமன்னா வீட்டுக்கு வரும் போது, தமன்னா அப்பா நாசர், அஜித்தை பார்த்து “எங்கே பையன் வரலையா?” என்று கேட்டு விடுவாரோ என்றே இருந்தது,

அந்த அளவிற்கு வயது நரைத்த முடியால் தெரிகிறது.

மக்கள் ஏற்கனவே இதெல்லாம் தெரிந்து தான் வருகிறார்கள் என்பதாலும், இது அஜித் என்பதாலும் ஏற்றுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

அஜித் நரைத்த முடியுடன் வருவதை தொடர்ந்தால் அதுவே பின்னாளில் அவருக்குச் சிக்கலாகும். அஜித் இதை யோசிப்பது நல்லது.

குடும்பப் படம்

இடைவேளைக்குப் பிறகு குடும்ப படமாகி விடுகிறது. பாசம், அன்பு என்று அனைவரையும் கவர்ந்து விடுகிறது. அஜித்தும் அடக்கி வாசித்து உள்ளார்.

முதல் பாதி நகைச்சுவை மற்றும் சண்டையும், இரண்டாம் பாதி குடும்ப செண்டிமெண்ட் மற்றும் சண்டையாகவும் இருக்கிறது.

ஆக மொத்தம் இரு பகுதியுமே நன்றாக உள்ளது. டூயட் பாடல்களில் அஜித் ரொம்ப மெதுவாக ஆடுகிறார். ஏன்?

பாடல்கள் விரைவிலேயே (மூன்று – நான்கு நிமிடங்கள்) முடிந்து விட்டது.

இந்த DSP யை என்ன வைத்துக் கும்மினால் நன்றாக இருக்கும் என்று கூறுங்கள்.

அஜித் படத்திற்கு இசை அமைக்க வாய்ப்புக் கிடைத்து, அதை இப்படி கேவலமாகச் சொதப்ப இவரால் தான் முடியும். மொக்கைப் பாட்டு எல்லாமே.

ஒரு பாட்டைத் தவிர எல்லா பாட்டுமே ஏற்கனவே போட்ட பாடல்களின் இசை. இவர் என்ன நினைத்து இசையமைத்தார் என்று அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

எந்தப் பரபரப்பும் இல்லாத பின்னணி இசை. இந்தப் படத்தில் இசை சிறப்பாக வந்து இருந்தால், படம் இன்னொரு படி அருமையாக இருந்து இருக்கும்.

அஜித் பலரை போட்டுத் தள்ளுகிறார் ஆனால், பேருக்குக் கூடக் காவல்துறை விசாரிக்கவில்லை. படம் பார்ப்பவர்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கடைசியில் வரும் வில்லனும் [அதுல் குல்கர்னி] பெட்ரோல் பங்க் மீது எல்லாம் மோதி வெடித்தும் உயிருடன் வந்து அஜித் உடன் சண்டை போடுகிறார், இருந்தும் இந்தச் சண்டையை ரசிக்கும் படி செய்தது சந்தேகம் இல்லாமல் அஜித் தான்.

அஜித் “ஆரம்பம்” படம் பிடிக்கவில்லை ஆனால், வீரம் செமையாக இருக்கிறது.

தனது இரண்டாவது படத்திலும் சிறப்பான திரைக்கதை மூலம் சிவா வெற்றி பெற்று உள்ளார். குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தப் பொங்கல் தல பொங்கல் 🙂 .

Directed by Siva
Produced by Bharathi Reddy
Written by Bharathan (dialogues)
Story by Bhoopati Raja, Siva
Starring Ajith Kumar, Tamannaah, Vidharth, Bala, Pradeep Rawat
Music by Devi Sri Prasad
Cinematography Vetri
Editing by Kasi Viswanathan
Studio Vijaya Productions
Release dates January 10, 2014
Running time 155 minutes
Country India
Language Tamil
Budget INR70 crore (US$11 million)

தொடர்புடைய விமர்சனம்

ஜில்லா (2014)

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. என்ன அண்ணா இன்னும் ஜில்லா வ நீங்க பாக்க வே இல்ல அதுக்குள்ள இது தல பொங்கல் நு சொல்லிட்டிங்க …

    நீங்க எழுதி இருக்குற வீரம் விமர்சனம் பாக்கும் பொது எனக்கு ஜில்லா படத்த வேற ஒரு கதை களத்துல பாக்குற மாதிரி இருக்கு

    ஜில்லா வும் இந்த ஆக்சன் காமடி காதல் பாசம் சென்டிமென்ட் ல கலந்த கலவையாக இருக்கு … நல்லாவும் இருக்கு ,,, கொடுத்த பணம் வீண் போகல என்பதால் நான் ஹேப்பி

    உங்கள் மீது நம்பிக்கை வைத்து நாளை வீரத்துக்கு செல்கிறேன்
    என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்

  2. வீரம் படம் இன்னும் பார்க்கவில்லை. இந்த வாரத்தில் பார்ப்பேன். பகிர்தமைக்கு மகிழ்ச்சி. பொங்கல் வாழ்த்துகள் கிரி..

  3. @கார்த்திகேயன் ரொம்ப சாரி. ஜில்லா படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஜில்லா விமர்சனம் எழுதும் போது உங்களைத் தான் நினைத்தேன்.

    தல பொங்கல் என்று கூறியதிற்கு காரணம், அஜித் படங்கள் பல சரியாகப் போனதில்லை. தற்போது தான் மங்காத்தா ஆரம்பம் வீரம் என்று வெற்றி பெற்று இருக்கிறது. அதனால் கூறினேன்.

    @யாசின் யாசின் 15 நாள் நீண்ட விடுமுறையில் சென்று இருந்ததாக கூறி இருந்தீர்கள். ரொம்ப சந்தோசம். குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 🙂 . கமெண்ட் எதுவும் வராத போதே நினைத்தேன்..எங்க ஆளைக் காணோமே என்று.

    பொங்கல் வாழ்த்துகள்.

  4. நேற்று சென்னை – OMR AGS -இல் வீரம் படம் பார்த்தேன்!!! படம் பட்டைய கிளப்பி இருக்கு!!! நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது!!!

    படம் சூப்பர் ஹிட்!!!

  5. படம் நல்லா இருக்குதா கிரி – அளவா விமர்சனம் செஞ்சியிருக்கீங்க….. இன்னைக்கு பாத்துடுறேன் (சவுதியில்தான் தியேட்டர் கிடையாதே என்ன பண்றது)..

  6. உங்கள் விமர்சனம் அருமை. அதைப் படித்து விட்டு தான் இன்று படத்துக்கு போக முடிவெடுத்து குடும்பத்துடன் சென்றோம். படம் எனக்குப் பிடித்திருந்தது. நன்றி. இன்னொரு நண்பர் குடும்பமும் வந்திருந்தது. $15 டிக்கெட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here