கெத்து காட்டும் NETFLIX

4
NETFLIX

கைபுள்ளையாகச் சுற்றிக்கொண்டு இருந்த NETFLIX தற்போது இந்தியாவில் சக்கைபோடு போட்டு வருகிறது. பல்வேறு வகையான கட்டணங்களை அறிவித்ததால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

NETFLIX

இந்தியாவில் Amazon, Hotstar இரண்டுக்கும் தான் கடுமையான போட்டி இருந்தது. NETFLIX கட்டணம் அதிகம் என்பதாலும், இந்தியா பகுதி NETFLIX ல் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் வரவேற்பை பெறவில்லை.

திரைப்படங்களின் உரிமம் என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும்.

தற்போது புதிய படங்களின் வரவு அதிகரித்துள்ளது. திறன்பேசியில் மட்டும் பார்க்கும்படியான குறைந்த கட்டணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

எனவே, அவரவர் தேவைக்கு ஏற்பத் திட்டங்களில் கட்டணம் செலுத்தி பயன்படுத்துகிறார்கள்.

நான் மாதம் ₹499 திட்டத்தில் பயன்படுத்தி வந்தேன், பின்னர் கட்டணம் அதிகமாக இருந்ததால், விருப்பம் இருந்தும் கட்டுப்படியாகாததால் நிறுத்தி விட்டேன்.

HDFC சலுகை

HDFC கடனட்டை வழியாக நான்கு மாதங்களுக்கு மாதாமாதம் பணம் செலுத்தினால் ஒரு மாதம் மட்டுமே கட்டணம், மூன்று மாதங்களுக்குக் கட்டணம் தள்ளுபடி என்றது.

அதாவது பணம் கட்டி, மாத இறுதியில் திரும்ப நம் கணக்கில் போட்டு விடுவார்கள்.

நானும் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன் ஆனால், ஒரு மாதம் கூடப் பணம் திரும்ப வரவில்லை. ஏமாற்றி விட்டார்கள் போல, சரி தொலையுதுன்னு விட்டுட்டேன்.

ஏனென்றால்,  ஏற்கனவே எனக்கு அனுபவம் இருந்தது ஆனால், நிரூபிக்க ஆதாரம் இல்லை.

இந்தமுறை  தாமதம் செய்தாலும், சரியாக ₹1497 கொடுத்து விட்டார்கள் 🙂 .

Ultra HD

நால்வர் இணைந்து ‘Ultra HD’ கணக்கு வாங்கிக்கொள்ளலாமா? என்று நண்பர்களுடன் விவாதித்தோம். இதில் 4 சாதனங்கள் (Devices) வரை பயன்படுத்தலாம்.

கட்டணம் மாதம் ₹799.

எனவே, ஒத்துவரும் நான்கு நண்பர்களை மட்டும் இணைத்து ஒரு கணக்கு பெற்று விட்டோம். இக்கணக்கை வேறு எவருக்கும் பகிரக் கூடாது என்ற கண்டிப்பான ஒப்புதலுடன்.

சமீபத்தில் திடீர் என்று, ஒரு வருடத்துக்குக் கட்டணம் செலுத்தினால், 50% தள்ளுபடி என்று NETFLIX ஒரு சலுகை கொடுத்தது. மிகச்சிறந்த தள்ளுபடி.

இதன்படி பார்த்தால், மாதம் ஒருவருக்கு ₹100 தான் வருகிறது, அதோடு ‘Ultra HD’ தரமும் கிடைக்கிறது.

Amazon Prime / Hotstar Premium

நான் ஏற்கனவே, Amazon Prime, Hotstar Premium (இதில் கிரிக்கெட்டும் பார்க்கலாம்) பயன்படுத்துகிறேன். வருடத்துக்குக் கிட்டத்தட்ட ₹3000 வருகிறது, அனைத்தும் சேர்த்து.

குடும்பத்துடன் வருடத்தில் மூன்று திரைப்படங்களுக்குச் சென்றாலே இதைவிட அதிகமாகச் செலவாகிறது. எனவே, வருடத்துக்கு ₹3000 என்பது தகுதியான செலவே!

என்னுடைய பிரச்சனை, ஏராளமான திரைப்படங்கள் பார்க்க உள்ளது ஆனால், பார்க்கும்படியான சூழ்நிலை இல்லை. வெள்ளி & சனி இரவு மட்டுமே பார்க்க முடியும்.

கோடை விடுமுறைக்குக் குடும்பத்தினர் ஊருக்குச் சென்று விட்டால், தினம் ஒரு படம், வார இறுதியில் குறைந்தது 4 + 4 படங்கள் 🙂 .

தமிழ் திரைப்படங்கள் மட்டுமே பார்ப்பவர்களுக்கு NETFLIX பயனில்லை. இந்திய மொழிப்படங்களை வாங்குவதிலும் கவனம் செலுத்தினால், மேலும் பயனாளர்களைப் பெறலாம்.

இந்தியாவில் கைப்புள்ளையாக இருந்த NETFLIX தற்போது கெத்தாகி விட்டது 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

அசத்தலான அமேசான் சேவைகள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, நான் இதுவரை இதுபோன்ற எந்த சேவைகளையும் பயன்படுத்தியது இல்லை.. இந்த நிறுவனங்களின் வளர்ச்சி உண்மையில் வியப்பாக இருக்கிறது.. கிட்டதிட்ட 5 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சேரன் C2H என்ற நிறுவனத்தை தொடங்கி, திரைப்படங்களை வெளியிட போட்ட ஆரம்ப புள்ளி தான் இன்று இந்த துறையில் கோலோச்சும் அனைத்து நிறுவங்களும்..

    சேரன் வெற்றி பெறவில்லையென்றாலும் அவரின் முயற்சி பாராட்டிற்கு தக்கது.. அவரின் பாதையை பின்பற்றி இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பல கோடிகளை இங்கு சம்பாரிப்பது வியப்பாக இருக்கிறது.. திரைத்துறையின் ஒற்றுமையின்மையின் காரணமாக தான் அவரால் வெற்றி பெறமுடியவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்..

  2. @யாசின் சேரன் கொண்டு வர நினைத்த காலம் தவறானது. CD மறைந்து பலரும் USB stick க்கு மாறி விட்டார்கள் அதோடு இந்தமுறை வந்தாலும் திருட்டு DVD யில் பார்க்கவே பலரும் முயற்சிப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here