Mirzapur | Series | ரணகளமான உத்தரப்பிரதேசம்

3
Mirzapur

Gangs of Wasseypur திரைப்படம் பீகாரை பிரித்து மேய்ந்தால், Mirzapur சீரீஸ் உத்தரப்பிரதேசத்தைக் காட்டி மிரட்டியுள்ளது. Image Credit

Mirzapur

Mirzapur பகுதியில் தாதாவாக இருக்கும் திரிபாதி, கள்ளத்துப்பாக்கி தயாரிப்பது, போதைப்பொருள் விற்பது, இதோடு அடிதடி என்று வலம் வருபவர்.

திரிபாதி மகனான முன்னா கல்லூரி மாணவன். தாதா மகன் எப்படி இருப்பான்? அதே பொறுக்கித்தனம், தெனாவெட்டு.

இன்னொரு பக்கம் நேர்மையான வக்கீல், அவருக்கு இரு மகன்கள், ஒரு மகள். இவர்கள் வாழ்வில் முன்னா தலையிட நேர, வாழ்க்கை முறையே மாறி விடுகிறது.

இடையில் மற்ற தாதா போட்டிகள், சண்டைகள், அரசியல் என்று செல்கிறது.

இறுதியில் என்ன ஆகிறது என்பதே Mirzapur.

உத்தரப்பிரதேசம்

இந்தச் சீரிஸ் பார்த்த ஒவ்வொரு தென்னிந்தியருக்கும் உத்தரப்பிரதேசத்தில் இப்படி நடக்குமா? உண்மையா? இல்ல கற்பனையா? என்ற சந்தேகம் வந்து இருக்கும்.

உயிருக்கு மதிப்பே இல்லை, அசால்ட்டாகச் சுடுகிறார்கள்.

திருமணத்தில் துப்பாக்கியில் மேலே சுடுவது, அரசியல்வாதிகள், பெரிய தலைகள் ஆட்கள் துப்பாக்கியுடன் சுற்றுவது என்று கதிலங்க வைக்கிறார்கள்.

என்ன தான் நண்பர்கள் மூலமாகப் பல தகவல்களைக் கேட்டு இருந்தாலும், இப்படியும் நடக்குமா?! என்ற சந்தேகம் சீரீஸ் முழுக்கத் தொடர்ந்தது.

நடுத்தரக் குடும்பத்திலும் வன்முறை சாதாரணமானதாக உள்ளது, அதாவது அதை ஏற்றுக்கொள்கிறார்கள், கடந்து செல்கிறார்கள்.

நம்ம ஊரிலெல்லாம் வாய்ப்பே இல்லை.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் உள்ளது என்று பேசிக்கொண்டு இருந்தால், இந்தியாவிலேயே அப்படித்தான் உள்ளது. நமக்குத் தெரியவில்லை.

யாதவ் சாதியினர் ஆதிக்கச் சாதியினராகவும், அனைவரையும் கட்டுப்படுத்துகிறவர்களாகவும் வருகிறார்கள்.

அகிலேஷ் யாதவ் போன்றவர்களின் சாதியா? இதற்கு எதிர்ப்பு எதுவும் வரவில்லையா?!

திரிபாதி

முழுக்கப் பட்டையைக் கிளப்புவது திரிபாதி (Pankaj Tripati) தான்.

ஒரு தாதா எப்படி இருப்பார்? இரு வகையான தாதாக்களைக் காண முடியும்.

ஒருவகை அமைதி ஆனால், திட்டங்கள், ஆட்கள் மூலம் மிரட்டுவார்கள். இன்னொருவகை ஆக்ரோஷமாக இருப்பார்கள். இவர்களும் வன்முறைகளில் கலந்து பயமுறுத்துவார்கள்.

திரிபாதி முதல் வகை. சர்க்கார் படத்தில் அமிதாப் எப்படி அமைதியாகச் செம மாஸ் காட்டுவாரோ அதே போல.

எதற்கும் பதட்டமாகாமல், உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் அசத்தலாக நடித்துள்ளார்.

கதாப்பாத்திரங்கள்

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அசத்தலாகப் பொருந்தியுள்ளார்கள்.

முன்னா முரட்டுத்தனமான, அவசரபுத்தியுள்ளவன் ஆனால், இறுதியில் அவசரப்படாமல் மூளையைப் பயன்படுத்திச் செய்யும் ஒரு காரியம் தரமான திருப்பமாக இருக்கும்.

அடிதடியை விட மூளையைப் பயன்படுத்தினால், சேதத்தை அதிகம் செய்ய முடியும் என்று காட்டியிருக்கும்.

வக்கீல் மகன்களாக வருபவர்கள் இருவரும் தடால் என்று மாறிச் செயல்படுவது நம்பமுடியாததாக உள்ளது ஆனாலும் திரைக்கதையில் சிறப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மூத்த மகன் முரடனாகவும், இளையவன் புத்திசாலியாகவும் வருகிறார்கள். இறுதியில் எதிர்பாரா திருப்பம்.

அரசியலுக்காக ஏற்படும் திருப்பங்கள், திரிபாதி இரண்டாம் மனைவி நடிப்பு, குடும்பக் கவுரவத்திற்காக நடக்கும் செயல்கள் என்று ரணகளமாக உள்ளது.

சில மோசமான செயல்கள் கூடச் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவது வியப்பை அளிக்கிறது.

ஒளிப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்பதை இயல்பான காட்சியமைப்பில் காட்டியுள்ளார்கள்.

Gangs of Wasseypur அளவுக்கு இல்லையென்றாலும், கிட்டத்தட்ட நெருங்குகிறது.

காரணம், Gangs of Wasseypur படத்தில் நிஜ மக்களோடு படமாக்கியிருப்பார்கள். எப்படி எடுத்து இருப்பார்கள்? என்று வியப்பாக இருந்தது.

இதிலும் உள்ளது ஆனால், இடங்கள் பெரும்பாலும் வீடு, குடோன், கல்லூரி, என்று சென்று உள் இடங்களுக்குள்ளே முடிந்து விடுகிறது.

யார் பார்க்கலாம்?

RAW வான, வன்முறையுள்ள, தாதா, அரசியல் என்று காண விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத சீரீஸ்.

அதோடு உத்தரப்பிரதேச கலாச்சாரம், வாழ்க்கை முறையை ஓரளவு புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்குச் சரியான பரிந்துரை.

நேரடியான உடலுறவு காட்சிகள், ஆபாச வார்த்தைகள் உள்ளன, குடும்பத்தோடு பார்க்க முடியாது.

தமிழ் மொழி மாற்றத்தில் உள்ளது. தமிழ் கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாக வருகிறது 🙂 . எனவே, எச்சரிக்கை.

இரண்டு சீசன்கள் உள்ளது, மூன்றாவது வரும். கதை இன்னும் முடியவில்லை.

Amazon Prime ல் காணலாம்.

Genre Crime, Thriller, Action
Created by Karan Anshuman, Puneet Krishna, Vineet Krishna
Directed by Karan Anshuman, Gurmeet Singh, Mihir Desai
Starring Pankaj Tripathi, Divyendu Sharma, Rasika Dugal
Music by Anand Bhaskar
Composer John Stewart Eduri
Country of origin India
Original language Hindi
No. of seasons 2
No. of episodes 19 (list of episodes)
Cinematography Sanjay Kapoor
Editors Manan Mehta, Anshul Gupta
Running time 38–65 minutes
Release
Original network Amazon Video
Original release 16 November 2018 – present

தொடர்புடைய திரை விமர்சனம்

Gangs of Wasseypur

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. நான் பார்த்த முதல் வெப் சீரிஸ் இது தான் கிரி. பொதுவாக வெப் சீரிஸ் சில ஆண்டுகளாக பிரபலமாக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாமலே இருந்தது.. நான் நினைத்து என்னவென்றால் வெப் சீரிஸ் என்றால் நாடகம் போல் பகுதி பகுதியாக இருக்கும் என்று நான் எண்ணி கொண்டேன்.. நண்பர்களிடமும் படங்களை குறித்து பேசுவேனே தவிர, வெப் சீரிஸ் பற்றி டிஸ்கஸ் செய்தது இல்லை.. ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஒரு வெப் சீரிஸ் கூட பார்த்தது இல்லை.. அதே சமயம் அதை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதும் இல்லை.. (தற்போதும் இல்லை). வெப் சீரிஸ் குறித்த செய்தி என்றாலே கடந்து செல்வேன்..

  கடந்த ஆண்டு இறுதில் , அமேசான் தளத்தில் ஏதோ தேடி கொண்டிருந்த போது மிர்சாபூர் என்று பார்த்தேன்.. மிர்சாபூர் என்றவுடன் உ.பி மாநிலத்தின் ஒரு பகுதியை குறித்த கதையாக இருக்கும் என்று பார்க்க ஆரம்பித்தேன்.. முதல் பகுதி பார்க்க பார்க்க மிரண்டு விட்டேன்.. இயக்கியவர்களின் திறனை கண்டு வியந்து விட்டேன்.. ஒரு சில கேள்விகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மிக சிறந்த ஒரு காவியமாகத்தான் எனக்கு தோன்றியது.. அந்த பகுதியின் அரசியல் குறித்த நிலையையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது..

  Pankaj Tripati ஏப்பா என்ன நடிப்பு.. இவர் உடலின் ஒவ்வொரு பாகமும் நடிக்கிறது.. முன்னாவும் சளைக்காமல் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்.. பவ்ஜி, மக்பூல் , வக்கீல், etc … என கூறி கொண்டே போகலாம் .. கதையை தன்னுடைய தோளில் முழுமையாக சுமந்து இருந்தது pankaji thirpathi .. பார்வையிலும், பேசுவதிலுமே இவரின் வில்லத்தனம் மொத்தமாக
  வெளிப்படும்..வில்லன் என்றால் கொடூரமாக இருக்க வேண்டும்.. 100 பேரை அடிக்க வேண்டும், நல்ல உடலமைப்பு இருக்க வேண்டும் என்ற எதுவும் இல்லாமல்.. அமைதியாக வந்து போகிறார்.. முன்னாவின் நண்பனை, முன்னாவை வைத்து கொண்டு கொல்லும் காட்சி.. செம்ம!!!

  வசனங்கள் எல்லாம் அழுத்தமாக இருக்கிறது.. இசையும் நன்றாக இருந்தது.. கதையில் எத்தனை பாத்திரங்கள் அவற்றை இயக்குனர் சிற்பமாக செதுக்கி இருக்கிறார்.. எடிட்டிங் மிகவும் சிக்கலான ஒன்று.. ஆனால் கதையை எங்கும் தொய்வில்லாமல் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர்.. குழு முழுவதும் ராட்சஷ உழைப்பு மேற்கொண்டு இருக்க வேண்டும்..

  இந்த வெப் சீரிஸ் குறித்து பாராட்ட வார்த்தைகள் இல்லை.. இரண்டாம் பாகமும் பார்த்தேன்.. ஆனால் என்னுடைய ஆல் டைம் பெஸ்ட் .. முதல் பாகம் தான்.. வெப் சீரிஸ் பார்த்த பின் பங்கஜ் அவரின் சில நேர்காணல்களை பார்த்தேன்.. கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது.. சிறப்பான நடிப்பினை வெளிபடுத்தி இருந்தார்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  மிர்சாபூர்க்கு அடுத்ததாக எனக்கு பிடித்த சீரிஸ் : The Forgotten Army – Azaadi Ke Liye .. prime இல் தமிழிலும் இருக்கிறது.. இதுவும் செம்மையாக இருக்கும்.. ஆர்ட் டைரக்ட்சன் அருமையாக இருக்கும்.. சுதந்திரத்திற்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளை கொண்ட கதையிது.. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் கிரி.. நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்..

 2. Mirzapur Season 1 is excellent, but Season 2 is mediocre. As I am closely residing to UP State, it is not fully true about Gundagardi (hooliganism), somehow is there.
  People in Delhi-NCR & neighbouring states are very much short fuse, which leading to scuffles, sometimes murders also. Country pistol / guns / rifles are easily available in UP. They are very much pride about what they have in their house. Casteism reflects much more in rural when comparing to urban districts.
  Giri, Please watch Pankaj Tripathi’s ‘Ludo’ & ‘Gunjan Saxena’ movie.

 3. @யாசின் ஏகப்பட்ட வெப் சீரிஸ் தரமானதாக உள்ளது. அதுவும் NETFLIX ல் கொட்டிக்கிடக்கிறது. பார்க்க தான் நேரமில்லை.

  மிர்சாபூர் இரண்டு பாகங்களும் எனக்குப் பிடித்தது. அனைத்துமே சிறப்பாக கையாளப்பட்டு இருந்தது.

  The Forgotten Army – Azaadi Ke Liye விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்.

  @GaneshAs you’re residing nearby place, you know very well about it. I heard but when I am watching the scenes like this I couldn’t digest.

  I was really shocked to see these kinds of mentality and violence.

  How Govt are allowing all these pistols culture? Why they are not taking any actions?

  “Please watch Pankaj Tripathi’s ‘Ludo’ & ‘Gunjan Saxena’ movie.

  Yeah, I have seen both movies and both are good, especially Ludo. Gunjan Saxena I read the content was exaggerated and first woman said It’s not as filmed.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here