அடங்க மறு [2018]

2
அடங்க மறு

காவல் துறையில் இணைந்த ஜெயம்ரவி பணபலம், அதிகார பலம் படைத்தவர்களின் மகன்களின் தவறுகளைத் தட்டிக்கேட்க அதனால் அவரது குடும்பத்தை இழக்கிறார். Image Credit

இதனால் கோபம் கொண்ட ஜெயம்ரவி, தொழில்நுட்ப உதவியுடன் எப்படி அவர்களைப் பழிவாங்குகிறார் என்பதே அடங்க மறு.

அடங்க மறு

வழக்கமான பழிவாங்கல் கதை தான் ஆனால், அதைப் புத்திசாலித்தனம், தொழில்நுட்பம் உதவியுடன் எப்படிச் செய்கிறார் என்று சுவாரசியமாகக் கூறி இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி செய்த பிரச்சனைக்காக அவரது குடும்பத்தையே உடனே அழிப்பது நம்பும்படியில்லை அதே போல அதை ஒன்றுமே இல்லை என்பது போல உயரதிகாரி சம்பத் சமாளிப்பதும் ஏற்றுக்கொள்ளும்படியில்லை.

ஜெயம்ரவி உடன் பணிபுரியும் அதிகாரி, காவலராக அழகம்பெருமாள், முனீஸ்காந்த். இருவருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்து இருக்கிறார்கள். முனீஸ்காந்த் புன்னகைக்க வைக்கிறார்.

ஜெயம் ரவி ராஷி கண்ணா காதல், பக்குவப்பட்ட காதலாகக் காட்டப்பட்டுள்ளது.

ஜெயம்ரவி ராஷிகண்ணா இருவருமே முன்பே காதலித்து வருவதாகக் காட்டப்படுவதால், இவர்களைக் காதலிக்க வைப்பதற்காக!! வைக்கப்படும் தேவையற்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளது. 

எனவே, கதை சீராகப் பயணிக்க உதவுகிறது.

அதிரடியான இரண்டாம் பாதி

முதல் பாதியிலேயே அனைத்தும் நடந்து விடுவதால், இரண்டாம் பாதி முழுக்கப் பழிவாங்கல் தான் எனும் போது படம் பார்க்கும் நமக்குச் சுவாரசியமாக உள்ளது.

பெரும்பாலும் கடைசி அரைமணி நேரம் மட்டுமே இது போல இருக்கும். இதில் இரண்டாம் பாதி முழுக்க அதிரடி தான்.  சில வசனங்கள் ரசிக்கும்படி இருந்தன.

ஜெயம் ரவி ஆளு வாட்ட சாட்டமாக இருப்பதால், சண்டைக்காட்சிகளில் பொறிப் பறக்கிறது.

நக்கலாகக் கிண்டலாகப் பார்த்து நம்மைக் கவர வேண்டிய இடங்களில் எல்லாம் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். இதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

ஜெயம் ரவி நண்பராக வருபவர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? எப்படி? ஏன்?  ஜெயம் ரவிக்கு தைரியமாக உதவுகிறார் என்பதைப் பற்றிய விளக்கமில்லை.

இறுதியில் ஒரு பையனின் தந்தைக்கு (பாபு ஆண்டனி) தொழில் மரியாதையா? மகனா? என்று செக் வைப்பது மிரட்டல்.

என்ன நடக்கும் என்று நமக்குத் தெரிந்தாலும், பார்க்க நமக்குச் சுவாரசியமாகவே உள்ளது.

இரவு நேரக்காட்சிகள், ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் படத்துக்கு ஒரு பிரம்மாண்டத்தைத் தருகிறது.

பின்னணி இசை நன்றாக உள்ளது ஆனால், பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியில்லை.

திரைப்படங்களில் மட்டுமே ஜெயம்ரவி போலச் செய்ய முடியும், உண்மையான வாழ்க்கையில் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.

எனவே, இதையெல்லாம் மறந்து லாஜிக் இடறல்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், நிச்சயம் சுவாரசியமான படம் என்பதில் சந்தேகமில்லை.

Directed by Karthik Thangavel
Produced by Sujatha Vijaykumar
Written by Karthik Thangavel
Starring Jayam Ravi, Raashi Khanna, Sampath Raj
Music by Sam C. S.
Cinematography Sathyan Sooryan
Edited by Anthony L. Ruben
Release date 21 December 2018
Running time 146 minutes

கொசுறு

இப்படம் சத்யம் திரையரங்கில் பார்த்தேன். 2.0 படம் 4D ஒலியில் பார்க்க வேண்டும் என்று கடந்த வாரம் சென்று இருந்தேன், 4D ஒலியே இல்லை, ஏமாற்றமாகி விட்டது.

எப்போதுமே நியாயமாக நடந்து கொள்ளும் சத்யம் நிர்வாகம் ஏன் இது போல ஏமாற்றியது என்று புரியவில்லை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, கிட்டதிட்ட ஒரு மணி நேரம் படம் மட்டும் பார்த்தேன்.. அதன் பின் எனக்கு எந்த சுவாரசியமும் ஏற்படாததால் அதற்கு பின் பார்க்கவில்லை.. தனிஒருவனை ரொம்ப ரசித்து பார்த்ததால் என்னவோ, ஜெயம் ரவியை முழுவதும் என்னால் இந்த படத்தில் ரசித்து பார்க்க முடியவில்லை..

    தற்போது என்னுடைய ரசனையும் முற்றிலும் மாறிவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது… முன்பு மிகவும் ரசித்த படங்களையே தற்போது மீண்டும் பார்க்க ஆர்வமில்லை!!! குறிப்பாக எந்த புது படங்களையும் பார்க்க ஆர்வம் ஏற்படுவதில்லை.. காரணம் தெரியவில்லை!!! பாடல்கள் மட்டும் தற்போது விரும்பி கேட்கிறேன்.. எப்போதும் போல பழைய பாடல்களை!!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் திரையரங்கில் பார்ப்பதற்கும் வீட்டில் பார்ப்பதற்கும் வித்யாசமுள்ளது 🙂

    வந்த படங்களில் இது, கனா வெற்றிப்படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here