கலைஞர் கருணாநிதி நாடு

4
கலைஞர் கருணாநிதி நாடு

திர்காலத்தில் தமிழகத்தைக் கலைஞர் கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றம் செய்யத் திமுகவினர் கோரிக்கை வைத்தாலும் வியப்பதற்கில்லை. ஏனென்றால், கலைஞர் பெயர் வைக்கும் வேகம் அந்தளவில் உள்ளது. Image Credit

பெயர்கள்

தமிழகத்தில் திறக்கப்படும் கட்டிடங்களுக்கு, ஏற்கனவே இருந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்தால், கலைஞர் பெயர் வைப்பதை திமுக அரசு வழக்கமாக வைத்துள்ளது.

எப்போதுமே தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் கட்சி சார்ந்த தலைவரின் பெயரை வைப்பது இயல்பு.

ஆனால், தற்போதைய திமுக அரசுக்கு இது வியாதி போல மாறி விட்டது.

இதுவரை முந்தைய ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆட்சியில் திறக்கப்பட்ட கட்டிடங்கள், பாலங்கள், திமுகக் கட்டிய கட்டிடங்கள் அனைத்துக்கும் கலைஞர் பெயர் வைத்துள்ளார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு என்னமோ இவர்கள் சொந்தப்பணத்தில் கட்டியது போல அனைத்துக்கும் அவர்களது கட்சியினர் பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் ஏராளமானோர் இருக்கையில் கலைஞர் மட்டுமே தமிழ்நாட்டைக் கண்டுபிடித்து வளர்த்தது போலத் திமுக செய்து கொண்டுள்ளது.

இந்த ஆட்சியில் ஒன்றை கவனித்தீர்கள் என்றால், திராவிடத் தலைவர்கள் பெயருக்கு ஒரு இடத்தில் பெயர் வைக்கப்பட்டு, அண்ணா தொடர்ந்து தவிர்க்கப்பட்டு வருகிறார்.

தற்போது மதுரை நூலகக் கட்டிடம், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை என்று அனைத்து இடங்களிலும் கலைஞர் பெயர் மட்டுமே!

மாவட்டங்களின் பெயர்களை அந்த ஊர் பெயர்களாக மாற்றி, பேருந்துகளில் இருந்த பெயர்களை மாற்றிப் பொதுப்படையாக்கி கலைஞர் செய்த சிறப்பான இச்செயலுக்காக இன்றும் கலைஞர் மீது மரியாதை கொண்டுள்ளேன்.

அதிமுக ஆட்சி

திமுக அளவுக்கு இல்லையென்றாலும், அதிமுகவும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்று கலைஞரே வைத்துக்கொண்டது போல அம்மா உணவகம் என்று ஜெ வைத்துக்கொண்டார்.

இது போன்று கோயம்பேடு பேருந்து நிலையம் எம்ஜிஆர் பெயர் மாற்றப்பட்டது, மெட்ரோ நிலையம் பெயர் மாற்றப்பட்டது.

அழகான, பாரம்பரியமிக்கச் சென்னை சென்ட்ரல் பெயர் மாற்றப்பட்டு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது. இதற்கு 2019 தேர்தலுக்காக அனுமதி கொடுத்தவர் மோடி.

காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வந்தால், உறுதியாக எழும்பூர் ரயில்நிலையம் பெயர் கலைஞர் கருணாதிநிதி ரயில்நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

கலைஞர் கருணாநிதி நாடு

தமிழுக்காக, தமிழ்நாட்டுக்காக, இந்தியாக்காகப் போராடியவர்கள் ஏராளமானோர் இருக்க, ஒருவரின் பெயர் கூட வைக்க இவர்களுக்குத் தோன்றவில்லையா?!

தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள் ஆனால், தமிழை வளர்த்தவர்கள், தமிழுக்காக உயிரை இழந்தவர்கள், தமிழ் தாத்தா உ. வே. சா என்று ஒருவர் பெயர் கூட ஸ்டாலின் நினைவுக்கு வரவில்லையா?!

இந்த ஆட்சியில் கலைஞர் பெயர் வைப்பது இயல்பாக இல்லாமல், வெறித்தனமாக நடந்துகொண்டுள்ளது.

இதைப் பலரும் கவனித்து இருப்பீர்கள். தற்போது இப்படி அனைத்துக்கும் கலைஞர் பெயர் வைக்கிறோமே என்ற எந்த வெட்கமும் இல்லாமல் போய் விட்டது.

ஸ்டாலின் ஆட்சி அடுத்த முறையும் தொடர்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், மாநிலத்தின் பெயர் கலைஞர் கருணாநிதி நாடு என்ற பெயர் மாற்றக் கோரிக்கை வந்தாலும் வியப்பதற்கில்லை.

சாதனைகள் செய்த தலைவர்கள் பெயர் வைப்பது தவறில்லை ஆனால், இதுபோல மற்றவர்களைப் புறக்கணித்து ஒருவர் பெயரையே அனைத்துக்கும் திணிப்பது கேவலமான செயல்.

கொசுறு

பெயர் வைக்கும் வியாதி போல அனைவருக்கும் சிலை வைக்கும் பெரும் வியாதி அதிகரித்துள்ளது. இதைப் பற்றித் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

தொடர்புடைய கட்டுரை

பெயர் மாற்ற அடாவடிகள்

4 COMMENTS

  1. கிரி.. உண்மையில் அரசியில் தலைவர்களின் பெயர்களை வைப்பதன் காரணம் , எனக்கு சிறு வயதில் தெரியவில்லை.. பின்பு தான் இதை குறித்து தெளிவு ஏற்பட்டது .. ஆரம்ப காலங்களில் அரசு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பெயர்ளை கொண்டு இருந்தது.. அதன் பின்பு எல்லாம் மாற்றப்பட்டது..

    எனக்கு அந்த பருவத்தில் தீரன் சின்னமலை என்ற அதிவேக தூரத்தில் இயக்கப்படும் பேருந்து மின்னல் வேகத்தில் எங்கள் பகுதியை கடந்து போகும். சமீபமாக தமிழ்நாட்டின் 30/40 வருட அரசியல் குறித்து வெவ்வேறு காணொளிகளை பார்த்து வருகிறேன்.. இரண்டு அரசுகளும் எப்படியெல்லாம் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்கள் என்பதை எண்ணும் போது.. கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை..

    ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது எவ்வளவு மாற்றங்களை கொண்டு வர முடியும்.. எவ்வளவு நன்மையான விஷியங்கள் மக்களுக்கு செய்ய முடியும்.. தமிழ்நாட்டை உலக அளவில் எப்படியெல்லாம் கொண்டு வர முடியும்…

  2. @யாசின்

    “ஆரம்ப காலங்களில் அரசு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பெயர்ளை கொண்டு இருந்தது.. அதன் பின்பு எல்லாம் மாற்றப்பட்டது.”

    இதைக்கட்டுரையில் கூறியுள்ளேன் –> https://www.giriblog.com/tamilnadu-cm-pazhanisamy-useless-action/

    இக்கட்டுரையிலும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அதையும் சேர்த்து விட்டேன்.

    “தமிழ்நாட்டை உலக அளவில் எப்படியெல்லாம் கொண்டு வர முடியும்”

    உலகளவில் வேண்டாம், சென்னை உட்பட நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தினாலே போதும். அவ்வளவு பெரிய விருப்பத்தை நினைக்கும் அளவு தற்போது சூழல் இல்லை.

  3. 25 லட்சங்கள் கோடி ஆட்டையை போட்ட கருணாநிதி இந்த தமிழ் நாட்டு மக்கள் இன்னும் நம்புவது உலக அதிசயம், இப்போ அவர் குடும்பமும் இன்னும் cheating செய்வது தெரிஞ்சும் சங்கி மங்கி னு மத்திய அரசை குறை சொல்லி கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் எங்கே உருப்பட போறாங்க

  4. தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசுகிறார்கள் ஆனால், தமிழை வளர்த்தவர்கள், தமிழுக்காக உயிரை இழந்தவர்கள், தமிழ் தாத்தா உ. வே. சா என்று ஒருவர் பெயர் கூட ஸ்டாலின் நினைவுக்கு வரவில்லையா?!
    —-
    எப்படி வைப்பார்கள் கிரியார் ? . அவர்தான் உ. வே.சாமிநாத ஐயர் ஆயிற்றே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here