ஆண் குழந்தை இல்லாத சத்யராஜ் ஆண் குழந்தை வேண்டி இரண்டாவது திருமணமும் செய்தும்! பெண் குழந்தையே பிறக்க, பின்னர் முதல் தாரத்துக்கே ஆண் குழந்தை பிறக்கிறது, அக்குழந்தை தான் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி. Image Credit
வளரும் கார்த்தி தன் அக்கா பெண்களை மணக்காமல் வேறு பெண்ணைக் காதலிக்கிறார். அக்காக்களுக்குத் தெரிய வந்து பஞ்சாயத்தாக, இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.
கடைக்குட்டி சிங்கம்
கார்த்தி மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் விவசாயி, தான் விவசாயி என்பதில் பெருமை கொண்டவர். அதை அவ்வப்போது மற்றவர்களிடத்தும் காட்டவும் செய்கிறார்.
நான் இப்படம் பார்க்க முக்கியக்காரணம் இப்படத்தில் கார்த்திக்கு இருக்கும் அக்காக்கள் எண்ணிக்கையே! 🙂
எனக்கு மூன்று அக்காக்கள், பையன் வேண்டும் என்பதற்காகவே நான்காவது வரை. அக்காலங்களில் இது வழக்கமான ஒன்று தான் என்பதால் வியப்பில்லை.
அப்பா பையன் வேண்டும் என்று விரும்பினாரே தவிர, பெண் குழந்தைகள் மீது வெறுப்பில்லை. அம்மா அப்பா இருவருமே நால்வரையும் ஒரே மாதிரி தான் வளர்த்தார்கள்.
மற்றவர்கள் எல்லாம் சொத்துக்காக, மற்ற காரணங்களுக்காகச் சண்டை போடும் போது, “ஏன் இப்படி அடித்துக்கொள்கிறார்கள்?” என்றே தோன்றும்.
நாங்கள் ஒற்றுமையாக இருக்கக் காரணமே எங்கள் பெற்றோர் அனைவரையும் ஒரே மாதிரி அன்பாக வளர்த்ததே!
இதில் ஐந்து அக்காக்கள் என்பதே நான் படம் பார்க்கக் காரணம்.
Read : அக்காவின் அன்பு தெரியுமா?
விவசாயம்
படத்தில் விவசாயத்தை உயர்த்தி இருப்பதாகச் செய்திகளில் வந்தது ஆனால், சில காட்சிகள் தவிர்த்துப் பெரும்பாலும் இவர்கள் குடும்பப் பாசம், சண்டை ஆகியவையே உள்ளது.
இப்படத்தில் சூரி, கார்த்தி அக்கா பையன். எனவே, கூடவே இருக்கும் கதாப்பாத்திரம். சூரி பெரியளவில் நகைச்சுவையில்லை ஆனால், வெறுப்பைக் கொண்டுவரவில்லை.
கார்த்தி காதலிக்கும் பெண்ணாகச் சாயிஷா. மற்றவர்கள் அனைவரையும் கிராம சாயலில் எடுத்த இயக்குநர் பாண்டிராஜ், நாயகிக்கு மட்டுமே வெளி மாநில பெண்ணைப் பிடித்தது ஏன்?
ப்ரியா பவானி சங்கரையே நாயகியாகப் போட்டு இருக்கலாம்.
ப்ரியா எங்கு பார்த்தாலும் “Mobile Selfie Video” எடுத்துட்டு எரிச்சலைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறார். அவர் அப்படி எடுப்பதற்கான எந்தக் காரணமும் புரியவில்லை.
அடி வாங்குவதற்காகவே ஒரு வில்லன், மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை. இவர் உயரம், முகவெட்டுக்கு இன்னும் சிறப்பாக இவரைப் பயன்படுத்தி இருக்கலாம்.
சத்யராஜ் இரண்டாவது மனைவி பானுப்பிரியா திடீரென்று கோபித்துக்கொண்டு போவதும், இறுதியில் தூண்டி விடுவதும் இயல்பாக இல்லை.
இதில் ஒரு அக்கா பெயர் “உளவுத்துறை” 🙂 .
ஒளிப்பதிவு & இசை
வேல்ராஜ் ஒளிப்பதிவு கிராம பசுமையை அழகாகக் காட்டியது, பல இடங்களுக்குச் சென்று எடுத்து இருப்பார்கள் போல. காடுகளையும் வயல்வெளியையும் காணவே மகிழ்ச்சி!
இசை இமான் என்பதே எனக்கு இப்பட விமர்சனம் எழுதும் போது தான் பார்த்தேன், வழக்கமான இசையில்லை.
அக்காக்கள், அக்கா கணவர் சொந்தம் என்று மிகப்பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது. கிராமங்களில், சிறு நகர்ப் புறங்களில் இப்படம் மக்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை.
சண்டை, ஆபாசம், வெட்டு குத்து கொலை என்றே பார்த்து நொந்து போய் இருந்தவர்களுக்கு, இதிலும் சில சண்டைகள் இருந்தாலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கலகலப்பான கிராம படம் வந்ததே மகிழ்ச்சி அளித்து இருக்கும்.
செய்திகளில் கூறியபடியோ, பலரும் மிகையாகக் கூறிய அளவுக்கோ எனக்குப் படம் தோன்றவில்லை.
ஆனால், வழக்கமான படங்களிலிருந்து மாறுதலாகக் கிராமப்படம் பார்த்ததில் மகிழ்ச்சியே!
தலைவர் படத்திற்கு பிறகு பட விமர்சனம். அருமை. 🙂 படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
//விபத்து ஏற்பட்டால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லாம்,//
செல்லலாம்.
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் எழுத்துப்பிழை.
நன்றி.
சாமிராஜன்.
நான் இந்தப் படம் பார்க்காால் இருக்க ஒரே காரணம்தான், எச்ச சத்தியராஜ்.
நான் இந்த படத்தை பார்க்க ஒரே ஒரு காரணம் திரு. சத்யராஜ் அவர்கள்.
இந்த பதிவு உண்மையிலே உங்களால் எழுதப்பட்டது தானா அண்ணா ….
உங்களின் எழுத்து நடையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு உள்ளது…இரண்டு முறை இந்த பதிவை நான் படித்து விட்டேன்…முதல் முறை வேகமாக படித்தேன்…இரண்டாவது முறை நின்று நிதானமாக படித்தேன்….
இப்போதெல்லாம் புத்தக விமர்சனம் தாங்கள் எழுதுவது இல்லை..என்ன ஆச்சு அண்ணா…
facebook இல் பெண்களின் ஆடை தேர்வு பற்றிய பதிவின் லிங்க் கொடுத்து இருந்திர்கள். அந்த லிங்க் என்னோட மொபைலில் ஓபன் இப்போது வரை ஓப்பன் ஆகவே இல்லை அண்ணா…சுற்றி கொண்டே இருக்கிறது…அந்த லிங்கை இங்கே பகிரமுடியுமா அண்ணா
என் பார்வையில் ….
படத்தில் விவசாயி பற்றி பெருமையக்கூறி இருக்காங்க பார்க்க போன …. ஒண்ணுமேயில்ல ..
கதாநாயகன் கல்லூரியில் பேசும் காட்சியை தவிர வேற ஒன்றும் இல்லை…
இதுக்குத்தான் சூர்யாவும் கார்த்தியும் இவ்ளோ பில்ட்டப் குடுத்தாங்களோ ….
வில்லனுக்கு வேலைய இல்லை …. அப்பறோம் கதாநாயகி தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க ….
இந்த படம் என்க்கு சுமார் ரகம் தான்…
ஒரு சாம்பிள் …
கதாநாயன் வீடு மட்டும் பெரியதாக காட்டிருக்கும் இயக்குனர் ….
அக்காள் வீடுகளை சின்னதாக காட்டிவிட்டார்…
அனைவரும் கோவிலில் வசனம் பேசி மாறிவிடுவது நம்பும்படியாயில்லை…..
முதல் 20 வருடம் கிராமத்தில் வாழ்ந்தவர்கள், நகரத்திற்கு வேலையின் காரணமாக இடம் பெயர்ந்தாலும் ஊரை, உறவை மறக்காமல் இருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் நிறை குறைகளைக் கடந்தும் நேசிக்கத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும். நம் மனதில் எந்த அளவுக்கு பாசம், ஈரம் இருக்கின்றது என்பதனை இந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு காட்சிகளில் கண்ணீர் வராமல் இருந்தால் ஆச்சரியமே. நீண்ட நாளைக்குப் பிறகு தமிழகத்தில் குடும்பம் குடும்பமாக (இன்னமும் திருப்பூரில் வெளியிட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது) பார்க்கின்ற படமாக உள்ளது. இவரின் பசங்க படமென்பது பாடம். இந்தப் படமென்பது காவியம்.
@சாமிராஜன் எழுத்துப்பிழை இதற்கு முன்னும் வந்து இருக்கிறது, நீங்கள் கவனிக்காமல் இருந்து இருக்கலாம் 🙂
@ஜீவதர்சன் 🙂 வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல இவருக்கு இதில் நடிக்க வாய்ப்பில்லை.
@கார்த்தி அப்படியா? எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே! எப்போதும் போலத்தான் எழுதி இருக்கிறேன்.
புத்தகம் இன்னும் படிக்கவில்லை அதனால் எழுதவில்லை 🙂 ஒவ்வொரு புத்தகமும் 250, 300 என்று இருப்பதால் வாங்க யோசனையா இருக்கு.
https://www.giriblog.com/dress-tips-for-ladies/
@செந்தில் விவசாயம் பற்றிய இவங்க கொஞ்சம் அதிகமா Promote பண்ணிட்டாங்க அதான் காரணம்.
கோவிலில் உடனே மாறுவது எனக்கும் செயற்கையாகத் தான் இருந்தது.
@ஜோதிஜி எனக்கு கண்ணீர் எல்லாம் வரவில்லை ஆனால், படம் நன்றாக இருந்தது. இது போல நான்கு படங்கள் முன்பு வந்து இருந்தால், இது சுமாரான படமாக மாறி இருக்கும்.
மாறுதலாக வந்ததே படத்தின் வெற்றிக்கு காரணம்.
பசங்க படம் செம்ம 🙂 . ஆனால், இப்படம் காவியம் என்பது கொஞ்சம் அதிகமே!