ட்விட்டரில் வார்த்தைகளை மறைப்பது எப்படி?

1
twitter ட்விட்டரில் வார்த்தைகளை மறைப்பது எப்படி?

ட்விட்டரில் நமக்குப் பிடிக்காத கணக்குகளை Mute செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், பலருக்கு தெரியாதது ட்விட்டரில் வார்த்தைகளை மறைப்பது எளிது என்பது.

நாம் பின்தொடரும் அனைவரும் நமக்குப் பிடித்த தகவல்களைப் பகிர்வார்கள் என்று கூற முடியாது. எனவே, சில நேரங்களில் நமக்குப் பிடிக்காத வார்த்தைகளும், தேவையற்ற Hashtag செய்திகளும் மற்றவர்களால் நம் டைம் லைனுக்கு வரும்.

ட்விட்டர் தரும் வசதிகளால் இவற்றை மறைக்க முடியும், அதாவது நம் டைம் லைனில் வராதபடி செய்ய முடியும். Image Credithttps://help.twitter.com/

வார்த்தைகளை மறைப்பது எப்படி?

iOS திறன்பேசியாக இருந்தால், குறிப்பிட்ட வார்த்தைகளை Double Click செய்தாலே Mute என்ற வசதி வரும், இதன் மூலம் விரைவாகச் செய்ய முடியும்.

Android திறன்பேசிகளில் இது போன்று முடியாது காரணம், எழுத்துக்களை Copy செய்யும் வசதியில்லை.

எனவே, ஒவ்வொரு வார்த்தையாக, Hashtag ஆகியவற்றைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்.

ட்விட்டரில் வார்த்தைகள், Hashtag யை மறைப்பதன் மூலம், நாம் விரும்பாத ட்வீட்களை நம் டைம் லைனில் இருந்து மறைக்க முடியும்.  

இதை உங்கள் ட்விட்டர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ட்விட்டரில் giriblog தளத்தைப் பின் தொடர https://twitter.com/giriblog

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. எந்த சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவது இல்லை. வாட்ஸஅப் மட்டும் தான்.. ஆரம்பத்தில் ட்விட்டர் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்.. பின்பு அப்படியே விட்டு விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here