கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (2020)

5
Kannum Kannum Kollaiyadithal கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

லையாள நடிகர் துல்கர் சல்மான் 25 வது படம் தமிழில் 🙂 .

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

துல்கரும் அவரது நண்பர் ரக்க்ஷனும் இணைந்து தொழில்நுட்ப திருட்டை செய்கிறார்கள். அதுவும் சும்மா இல்லை, அதிகப் புத்திசாலித்தனமாக.

துல்கர் விவரமான திருடன் ஆனால், இவர்களே ஏமாந்து விடுகிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கதை. Image Credit – Twitter

ரித்து வர்மா துல்கர் காதல் துவக்கத்தில் சலிப்பு தட்டி, இன்னும் கதையே துவங்கவில்லையே எனும் போது துல்கர் கடனட்டை வேலை செய்யவில்லையென ஆரம்பிக்கிறது.

துல்கர் & ரக்க்ஷன் கூட்டணி

துல்கர் நண்பனாக வரும் ரக்க்ஷன் கூட்டணி நன்றாக உள்ளது. படம் நெடுக புன்னகைக்க, சிரிக்க வைத்துக்கொண்டே உள்ளார். இவர் பேசுவது தனுஷ் பேசுவது போலவே உள்ளது.

இடைவேளை ட்விஸ்ட் செம்ம சுவாரசியம் ஆனால், ஊகிக்க முடிந்தது. இறுதியிலும் பாதி ஊகித்தேன் மீதி சுத்தமா எதிர்பார்க்கவில்லை. திரையரங்கில் எல்லோருமே ரசித்தார்கள்.

தற்போதெல்லாம் முகவரி சான்றிதழ் கெடுபிடி அதிகமாகி விட்டது, அவ்வளவு எளிதில் போலி முகவரி கொடுத்துச் சிம் வாங்கிட முடிவதில்லை ஆனாலும், செய்கிறார்கள்.

திருட்டை கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியாகக் கௌதம் மேனன்.

சிறு சிறு கதாப்பாத்திரங்களில் வந்தவர் இதில் முக்கியக்கதாப்பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். காவல் அதிகாரி வேடம் நன்றாகப் பொருந்தியுள்ளது.

திரைக்கதை

‘சூதுகவ்வும்’ படத்தில் திருட்டை செய்பவர்களைப் படம் பார்க்கும் மக்கள் ரசிக்கும்படியான கதையமைப்பு இருக்கும்.

இதிலும் அதே போல இவர்கள் செய்வது தவறு என்றாலும் நாயகன் என்பதால் அதையும் வேறு கோணத்தில் ஏற்றுக்கொள்வதாக வருகிறது.

இதெல்லாம் சரியா என்ற கோணத்தில் யோசித்தால், ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால், பொழுதுபோக்காகக் கடந்து சென்றால், சலிப்பாக்காத சுவாரசியமான படம்.

துல்கர் செய்யும் காரியங்கள் இவ்வளவு எளிதாகச் செய்து விட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினாலும் திரைக்கதை சுவாரசியத்தில் அடிபட்டுப் போகின்றன.

இறுதிக்காட்சிகள் பரபரப்பாகவும், ட்விஸ்ட் நிறைந்ததாகவும் உள்ளன. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்துள்ளார்.

சென்னை மற்றும் பல இடங்களைக் கழுகுப்பார்வை கோணத்தில் காட்டுவது அட்டகாசமாக உள்ளது. படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி இருந்தது.

பொழுதுபோக்குப் படத்தைத் தொழில்நுட்ப சுவாரசியத்துடன் பார்க்க விரும்பும் அனைவருக்கும்  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் பரிந்துரைக்கிறேன்.

Directed by Desingh Periyasamy
Produced by Anto Joseph, Viacom 18 Studios
Written by Desingh Periyasamy
Story by Desingh Periyasamy
Starring Dulquer Salmaan, Ritu Varma
Music by Soundtrack: Masala Coffee, Score: Harshavardhan Rameshwar
Cinematography K. M. Bhaskaran
Edited by Praveen Anthony
Release date 28 February 2020
Country India
Language Tamil

கொசுறு

1 ரூபாய்க்கு பதிலாகக் கடைக்காரர் மிட்டாய் கொடுத்ததால், ரித்து வர்மா சண்டைக்குப் போவார். இதற்கு அருகில் இருந்த என் மனைவி என்னைப்பார்த்து சிரித்தார்.

இக்காட்சியில் வரும் வசனங்கள் கிட்டத்தட்ட பின்வரும் கட்டுரையில் உள்ளது 😀 .

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. மிகவும் சரி கிரி … நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அதை ஏன் விட்டு கொடுக்க வேண்டும் . நாம் விருப்ப பட்டால் யாரேனும் ஏழைக்கு தானமாக கொடுக்கலாம். எனக்கு தினசரி இந்த பிரச்சினை ஏற்பட்டதுண்டு சில பல காலத்துக்கு முன்பு. புகை பிடிக்கும் பழக்கம் இருந்த போது 10rs கொடுத்தால் 2 rs பாக்கி குடுக்கஅமல் டப்பைப்பாங்க . அதுவும் நான் இருந்த இடமான DLF வளாகத்தில் நம்மை சுற்றி IT லார்ட் லபக்கு தாஸ் தான் இருப்பாங்க (நானும் ஒரு IT லார்ட் லபக்கு தாஸ் தான்) அனைவரும் வந்து 10 ரூ கொடுத்துவிட்டு சிகராட்டே வாங்கி விட்டு ௨ ரூ வாங்காமல் சென்று விடுவார்கள் நான் மட்டும் தகறாரு செய்யவேண் இந்த IT லார்ட் லபக்கு தாஸ் எல்லாம் என்னை பிச்சைக்காரன் போல பார்ப்பார்கள் … Peer பிரஷர் என்பதை மிகவும் எளிதாக புரிய வைத்தார்கள் …

 2. கிரி, மகாநதி படம்தான் துல்கர் சல்மான் நடித்து நான் பார்த்த அவருடைய முதல் படம்.. அவருடைய பாத்திரத்தை நிறைவாக செய்து இருப்பார்.. வேறு எந்த படமும் நான் பார்க்கவில்லை.. தற்போது நமக்கு வயசாகி விட்டதால் இளைய ஹீரோகளின் உடல் மொழி, நடிப்பு நமக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.. அசோக் செல்வனின் நடிப்பு எனக்கு பிடிக்கும்.. ஆனால் அவருக்கான சரியான படங்கள் அமையவில்லையோ என்று தோன்றுகிறது..

  இந்த படத்தை தற்போது பார்ப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.. இருப்பினும் துல்கர் சல்மான் நடிப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.. ஏனெனில் மம்முட்டி எனக்கு விருப்பமாக நடிகர்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @sarav மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதியே நாம் கேட்பதில்லை. இதை விட்டால், நாம் அனைத்தையும் தைரியமாகக் கேட்போம்.

  அதோடு பணத்தின் மதிப்புத் தெரிந்தவர்களுக்கு இதைக் கேட்கத் துணிவு இருக்கும்.

  @யாசின் 🙂 🙂 மகாநதி நீங்க சொல்வது துலுக்கானம் (ஷங்கர்) 🙂

 4. கிரி, சின்ன பிழை.. தமிழில் நடிகையர் திலகம் (திரைப்படம்), தெலுங்கில் இந்த படத்தோட பெயர் Mahanati . ஜெமினி கணேசன் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்து இருப்பார்.. கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்த படம் இது..

 5. நீங்க சொன்னது சரி தான் யாசின்.. நான் தான் இதை மறந்து விட்டேன். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தது நினைவு இருந்தது ஆனால், துல்கர் நடித்தது நினைவில்லை.

  இப்படம் பாதி பார்த்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here