கூகுள் குரல் சேவையில் எழுதப்பட்ட கட்டுரை!

9
கூகுள் குரல்

புதுமைகளைப் புகுத்துவதில் கூகுளைக் அடித்துக் கொள்ள யாருமில்லை. தற்போது கூகுள் குரல் சேவை (Google Voice) என்ற புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நம்முடைய குரல் வழியாகவே எழுத முடியும். நான் பயன்படுத்திய வரை சிறப்பாக வேலை செய்கிறது.

தட்டச்சு மூலமாக எழுதும்போது வார்த்தைகள் சரியாக வருகிறது ஆனால், அதுவே குரல் வழியாக எழுதும்போது கோர்வையாக வருவதில்லை.

உதாரணத்திற்குச் சிறப்பாக எழுதுபவர்களை மேடையில் பேசக் கூறினால், அனுபவமில்லை என்றால் திணறுவார்கள். சரளமாக எழுதுவது போல மேடையில் பேச முடியாது.

நம் தவறுகளை உணரும் நேரம்

நாம் பேசும்போது வாக்கியத்தின் இறுதியை முழுமையாக முடிக்காமல் விழுங்கி விடுவோம். இதில் அவ்வாறு செய்தால் இறுதி சொற்கள் வருவதில்லை.

எனவே, இதன் மூலம் நம்முடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள முடிகிறது.

ஆங்கிலக் கலப்பில் பேசினால் இச்சேவையால் சரியாக மொழிமாற்றம் செய்ய முடியவில்லை, முழுவதும் தமிழில் பேசினால் மட்டுமே சிறப்பாக வருகிறது.

நான் என்னுடைய தளத்தில் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் எழுதுவதால், இதில் எழுத எளிமையாக உள்ளது. நான் தட்டச்சு செய்து இதையே எழுதியிருந்தால் இன்னும் விரைவாக எழுதியிருப்பேன்.

இதில் வார்த்தைப் பிழைகளை திருத்துவதால் நம்முடைய எண்ணத்தில் தடை ஏற்படுகிறது ஆனாலும் தொடர்ச்சியாக இந்தக் குரல்வழி வசதியை பயன்படுத்தும் போது அனுபவம் கிடைத்து இன்னும் சிறப்பாக இதை மேம்படுத்தலாம்.

ஒரு சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தேன் மோசமில்லை!

கட்டுரை எழுதுவதற்கு மட்டுமல்ல WhatsApp போன்ற சேவைகளிலும் பயன்படுத்தலாம்.

இக்கட்டுரை எழுதியதில் எனக்கு முழுமையான திருப்தி இல்லை இருப்பினும் புதிய முயற்சி ஒன்றை செய்து பார்த்ததில் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.

தவறுகளை திருத்த உதவுகிறது

இதைப் பயன்படுத்தும்போது வார்த்தையைச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது.

சரியாக உச்சரிக்கவில்லை என்றால் எழுத்துப் பிழை ஏற்படும். எழுத்துப்பிழையைத் தவிர்க்க சரியான தமிழைப் பேச வேண்டியதுள்ளது, இது நம்முடைய பேச்சு தமிழை மேம்படுத்துகிறது.

பேசும்போது வார்த்தைகளை முழுமையாகக் கூறாதவர்கள் இதைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களை மேம்படுத்த முடியும், இதை என்னால் உணர முடிகிறது.

இச்சேவையை கூகுள் தமிழிலும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி! 🙂

மேலே எழுதியதில் துணைத் தலைப்புகள்,  பிழை திருத்தியது தவிர அனைத்துமே கூகுள் குரல் வழி சேவையின் மூலம் எழுதியது.

கொசுறு

மேற்கூறியது ஒரு அசத்தலான தொழில்நுட்பம் என்றால், பேருந்தில் வரும் போது ஒரு அசத்தலான காட்சியைக் கண்டேன்.

ஒருவர் தன்னிடம் இருந்த திறன்பேசியைப் பார்த்து தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார்.

பாடல் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என்று பார்த்தால், Head Set ம் பயன்படுத்தவில்லை. கவனித்தால் Video Chat ல் யாருடனோ சைகையில் பேசிக்கொண்டு இருந்தார்.

பேச இயலாதவர்கள் போல, இருவரும் சைகையிலேயே கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நான் இதுவரை இவர்களுக்குக் குறுந்தகவல் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இருந்தேன். தொழில்நுட்பம் எப்படித் தடையை நீக்கியுள்ளது பார்த்தீர்களா?

தொழில்நுட்பம் சில நேரங்களில் பிரச்சனையாக இருந்தாலும், இவர்களைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக அமைந்துள்ளளது. மகிழ்ச்சி 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

 1. அருமை. நன்றி. பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் பேசி தட்டச்சுவதற்கு ஒரு மென்பொருளை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறோம். தமிழுக்கும் வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. இனிதான் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். பிழைகள் சரிசெய்ய வேண்டி வரும். ஆனால் பழகி விட்டால் வேலை மிகச் சுலபமாகி விடுமென்றே எண்ணுகிறேன்.

  ஃபீட்லியில் வாசிக்கும் போது இருந்த தவறுகள் இங்கே வரும் போது இல்லை.
  குறிப்பாக, “தவறுகளை திருத்த உதவுகிறது” பத்தியில். விரைந்து சரி செய்து விட்டீர்கள்:). ஆயினும் இன்னும் ஓரிடத்தில்.. கவனிக்க.

 2. சூப்பர். நானும் ட்ரை பண்ணேன். ஆனால் ஒர்க் ஆகவில்லை.

  இந்த கட்டுரையில் செட்டிங்-கில் என்னன்னெ செய்யவேண்டும் என்று கூறியிருந்தால் பலருக்கும் உதவியாக இருந்திருக்கும்.

 3. அதற்குத் தான் காணொளியை இணைத்துள்ளேன்! இதில் எப்படி செய்வது என்பதை விளக்கியுள்ளார்கள்.

 4. நானும் இந்த வசதியை வாட்ஸ் ஆப்பிள் பயன்படுத்தி பார்த்து இருக்கிறேன் . மிகவும் அருமையாக வந்தது. செல்லினத்திலும் இது வேலை செய்கிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் பின்னூடடம் இடவும் இது மிகவும் பயன்படுகிறது தங்கள் தளத்திற்கும் இந்த வசதியை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். கைப்பேசியில் தளத்தை படிக்கும் பொது பின்னூட்டம் இடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. செல்லினத்தை கொண்டு எழுத முடியவில்லை அண்ணா. அதனாலேயே நிறைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இடாமல் போய்விடுகிறேன் .

 5. தங்கள் தளத்திற்கும் இந்த வசதியை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். கைப்பேசியில் தளத்தை படிக்கும் பொது பின்னூட்டம் இடுவதில் சிக்கல் ஏற்படுகிறது

  Repeat

 6. பேஸ்புக்கில் இந்த வசதியை பயன்படுத்தி அசுரன் புத்தகத்தில் ராவணன் சொன்ன ஒரு கருத்தை படிக்கும் போதே செல்லினத்தை பயன்படுத்தி பதிவிட்டு பார்த்தேன் அருமையாக வந்தது. வாட்ஸ் ஆப்பிள் வந்த எழுத்து பிழை இதில் வர வில்லை அண்ணா

 7. கார்த்திக் ஜோதிஜி இதற்கு என்று தனிப்பட்ட முறையில் வசதி கிடையாது. நீங்கள் எப்படி whatsapp பயன்படுத்துகிறீர்களோ அதே முறையில் இதிலும் குரல்வழி கருத்துரை செய்யலாம்.

  என்னுடைய இந்தக் கருத்துரை கூகுள் குரல் வழி சேவையின் மூலமே எழுதப்பட்டது 🙂

 8. கூகிளின் ஒவ்வொரு முயற்சியும் புதுமையாக இருக்கிறது. கூகிளின் தொழில்நுட்ப செய்திகள் உங்கள் பதிவுகளில் வருவதால் நான் அனைத்தையும்
  பயன்படுத்துகிறோனோ, இல்லையோ அதை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி கிரி. தொழில்நுட்ப செய்திகளை நான் வேறு எதிலும் படிப்பதில்லை. கூகுள் குரல் சேவை இதுவரை நான் அறிந்தது அல்ல. முயற்சி செய்து பார்க்கிறேன். 2005 /2006 வருடங்களில் இந்த சேவை இருந்தால் நன்றாக இருக்கும் என நண்பர்களிடம் விவாதித்ததுண்டு.. காப்புரிமை வாங்காமல் விட்டாச்சு!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 9. @ராமலக்ஷ்மி “ஆயினும் இன்னும் ஓரிடத்தில்.. கவனிக்க.”

  நன்றி. சரி செய்து விட்டேன் 🙂

  @யாசின் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here