கூகுள் மேப் | செமையா மாட்டி விடும்

1
கூகுள் மேப் Google_Map

கூகுளின் மிகச் சிறந்த சேவைகளில் ஒன்று கூகுள் மேப் (Map). உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியில் (App) முக்கிய இடத்தில் உள்ளது.

கூகுள் மேப்

புதுப் புது வசதிகளைக் கொண்டு வரும் கூகுள் தற்போது கொண்டு வந்து இருக்கும் சேவை மிகச் சிறந்த சேவையாகவும் மிகச் சிக்கலான சேவையாகவும் மாறி இருக்கிறது 🙂 . Image Credit

அப்படி என்ன சிறந்த சேவையையும் சிக்கலையும் சேர்ந்தே கொண்டு வருகிறது?!

வாங்க பார்ப்போம்

புதிய வசதியில் நீங்கள் இருக்கும் இடத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் மூலம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பரோ குடும்ப உறுப்பினரோ எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்குப் பெற்றோரோ, துணையோ அக்கா தங்கையோ தம்பியோ ஊரில் இருந்து வந்தால், மொபைலில் இருக்கும் கூகுள் மேப்பை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

நம் இடத்துக்குச் சரியாக வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து, பதட்டமடையத் தேவையில்லை. அதற்கேற்ற மாதிரி நம் திட்டங்களை மாற்றலாம்.

இது Live என்பது குறிப்பிடத்தக்கது.

கால அளவு

இதில் கால அளவு உள்ளது. 30 நிமிடங்களா, ஒரு மணி நேரம் மட்டுமே அல்லது எப்போதுமேவா என்று நம் விருப்பம் போல மாற்றியமைக்க முடியும்.

அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே நம் இடத்தைக் காண முடியும்.

மனைவியின் மொபைலில் இதைச் செயல்படுத்தி இருக்கிறேன். ஊரில் இருந்து வரும் போது அல்லது புதிதாக ஒரு இடத்துக்குச் செல்லும் போது இதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் அவர்களுக்கு உதவலாம்.

எடுத்துக்காட்டுக்கு உங்களுக்குத் தெரிந்த இடத்துக்கு முதல் முறையாக உங்கள் உதவி இல்லாமல் செல்கிறார்கள் என்றால், இதன் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்து நேரா போகணும், இடது வலது திரும்பணும் என்று கூற முடியும்.

சிக்கல் என்ன?

மேற்கூறியதை படித்த பிறகு சிக்கல் என்னவென்று புரிந்து இருக்கும் 🙂 🙂 .

அதே தான்…

பொய் சொல்றவங்க மாட்டிக்குவாங்க. மனைவியிடம் நான் அங்கே இருக்கிறேன் இங்கே இருக்கிறேன் என்று கதை விட்டால், “அப்படியா.. சரி உங்க கூகுள் மேப் Share பண்ணுங்க!” என்றால்.. சோலி சுத்தம் 😀 .

அலுவலகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் உள்ளவர்கள், மேலதிகாரியிடம் நான் இங்கே இருக்கிறேன் என்று கதை விட முடியாது.

அப்படியாப்பா.. கொஞ்சம் கூகுள் மேப் Share பண்ணு!” என்றால்… சார்.. அது வந்து.. அது.. ன்னு முழிக்க வேண்டியது தான்.

இதை என் நெருங்ங்ங்ங்ங்ங்கிய நண்பனிடம் கூறி, “டேய்! இனி ஏதாவது லொள்ளு பண்ணுன உன் மனைவியிடம் இந்தக் கூகுள் மேப் விசயத்தைப் போட்டுக்கொடுத்து விடுவேன்” என்று மிரட்டி இருக்கிறேன் 😀 .

டேய் இதை மட்டும் சொல்லிடாத… (அப்புறமா எப்படியும் தெரிந்து விடும் என்றாலும்) நான் செத்தேன்” என்று கூறி இருக்கிறான்.

Enjoy The Google Map Sharing 🙂 .

கொசுறு 

கூகுள் வழிகாட்டி இருந்தால், உலகில் எங்கும் யார் துணையுமின்றி செல்லலாம்.

இது போல நண்பர்கள் மூவர் இணைந்து “கபாலி” சிறைக் காட்சி வரும் மலாக்கா அதைச் சுற்றியுள்ள இடங்கள் சென்றோம். மிகவும் உதவியாக இருந்தது.

புதிய இடம் எங்கே சென்றாலும் எனக்கு வழிகாட்டுவது கூகுள் தான்.

Readபத்து மலை | மலேசியா பயணம்

1 COMMENT

  1. கிரி இந்த பிரச்சினை வாட்சப் வந்தபோதே ஆரம்பித்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here