Pandora (கொரியன் 2016) அணு உலை பேரழிவு

0
Pandora

தென் கொரியாவில் உள்ள அணு உலையில், நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்படுகிறது. விரிசலால் கதிர் வீச்சு வெளிப்பட்டு அனைவரும் பாதிப்புக்குள்ளாக்குகிறார்கள். இதைச் சரி செய்தார்களா? என்ன ஆனது? என்பதே Pandora படம்.

Pandora

இப்படத்தை எப்படி எடுத்தார்கள்?! ஒன்றும் புரியலை.

கொரியாவில் உள்ள மக்கள் அனைவருமே நடித்தால், எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.

ஏனென்றால், அவ்வளவு கூட்டமான மக்கள், போக்குவரத்து நெரிசல், பாதிக்கப்பட்ட இடங்கள் என்று அனைத்துமே தத்ரூபமாக இருந்தது.

6 Underground திரைப்படம் போல, எது CG என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.

அணு உலை பாதிப்புக் காட்சி மட்டுமே CG யாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிந்தது ஆனாலும் உறுதியாகக் கூற முடியவில்லை.

அணு உலை எவ்வளவு அபாயகரமானது என்று தெரிந்தாலும், காட்சிகளாகவும், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளாகவும் பார்க்கும் போது பகீர் என்று உள்ளது.

விபத்தால், அதைச் சுற்றியுள்ள இடங்கள், பாதிக்கப்பட்ட இடங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என்று அனைத்துமே அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதிர் வீச்சுக்கு பயந்து மக்கள் தூரமாகப் பயணம் செய்யும் போது ஏற்படும் பதட்டம், வன்முறை, வாகன நெரிசல் என்று அனைத்துமே பிரம்மாண்டமாக உள்ளது.

வழக்கமான ஆங்கிலப்படத்தின் நாட்டுக்காக என்று இல்லாமல் குடும்பத்துக்காக என்றும், அதே சமயம் வசனம் பேசாமல் எதார்த்தமான விருப்பத்தை, மனநிலையை வெளிப்படுத்தி இருப்பது மனதை தொடுகிறது.

அணு உலை விபத்து

ஜப்பானில் Fukushima ல் நடந்த அணு உலை விபத்து பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள், அச்சம்பவத்தை நினைவுபடுத்தியது.

Pandora ஒளிப்பதிவு படத்துக்குப் பிரம்மாண்டத்தைக் கொடுத்து இருக்கிறது. இதை எப்படி எடுத்து இருப்பார்கள்? என்றே ஒவ்வொரு காட்சியிலும் தோன்றியது.

அதோடு அரங்க அமைப்பு (Settings) எதுவுமே செயற்கையாக இல்லை. இவர்களின் தொழில் நேர்த்தியை நினைத்து வியப்பாக உள்ளது.

இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு என்று அனைத்துமே அட்டகாசம்.

தவற விடக் கூடாத திரைப்படம். ஏகப்பட்ட படங்களைப் பார்த்துத் திருப்தியாகாமல் நொந்து போய் இருந்த சமயத்தில் இப்படம் முழு மன நிறைவைக் கொடுத்தது.

NETFLIX ல் உள்ளது.

Directed by Park Jung-woo
Produced by Kim Chul-yong, Park Kyung-sook
Written by Park Jung-woo
Starring Kim Nam-gil
Music by Jo Yeong-wook
Cinematography Choi Young-hwan
Edited by Park Gok-ji
Release date December 7, 2016
Running time 136 minutes
Country South Korea
Language Korean

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!