HDD / SSD தெரியும் ஆனால் “mSata” தெரியுமா?

8
World smallest harddisk

தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்து சாதனங்களும் சிறிதாகிக் கொண்டு வருகிறது. Hard disk / SSD பற்றிக் கொஞ்ச நாள் முன்னாடி விளக்கி இருந்தேன்.

அதோடு இனி எதிர்காலம் SSD தான் என்றும் கூறி இருந்தேன்.

கொஞ்ச நாள் முன்பு என்னுடைய அலுவலகத்தில் பணி புரியும் ஒருவருக்கு அவருடைய மடிக்கணினியில் பிரச்சனை ஆனால், எதனால் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

வழக்கமாக எங்கள் நிறுவனத்திற்கு Dell கணினி தான் வாங்குவோம். Dell சேவையை எவராலும் அடித்துக்க முடியாது. அசத்தல் சேவை.

வாரண்டியில் இருந்தால் ரொம்பக் கேள்வி கேட்காமல் உடன் சரி செய்து கொடுப்பார்கள்.

பிரச்சனை எதில் என்று கண்டறிய முடியவில்லை அதனால் Mother Board , SSD (HDD) இரண்டையுமே மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டு இருந்தேன், அவர்களும் சரி என்று SSD அனுப்பி விடுகிறேன் என்று என் நண்பனுக்கு அனுப்பி விட்டார்கள்.

அவன் அதை எடுத்துட்டு என்னைப் பார்க்க வந்தான். வந்து “Dell கொடுத்தாங்க!” என்று போஸ்டல் கவர் மாதிரி இருந்த ஒன்றைக் கொடுத்தான்.

இது என்ன.. HDD எங்கே? என்றேன். அது தான் இதுன்னு கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி சொன்னான்.

mSata

மச்சி! Dell உனக்கு HDD அனுப்பி இருக்காங்கன்னு சொன்னாங்களே! அது எங்க? என்றால்.. இது தான் கொடுத்தாங்க என்றான்.

சரின்னு பிரித்துப் பார்த்தால், மேலே படத்தில் நீங்கள் பார்க்கும் RAM போல இருக்கும் சிப் தான் HDD. (RAM அளவைவிடச் சிறியது!).

இது 512 GB SSD ன்னு தெரிஞ்சதும் தலை கிறுகிறுத்து விட்டது.

அடப்பாவிகளா! இனி போகிற போக்கைப் பார்த்தால், HDD பகுதியே இல்லாமல் SD card slot அளவு மட்டுமே போதும் போல இருக்கே! ன்னு கிர்ர் ஆகிட்டேன்.

ஆமாம் மக்களே! நீங்கள் பார்க்கும் இந்தக் குட்டி சாதனம் தான் இனி உங்கள் கணினியில் எதிர்காலத்தில் இருக்கப் போகிறது.

வழக்கமான Sata HDD எடையில் 100 ல் 5 பங்கு எடை தான் இருக்கும் ஆனால், வேகம் 100 மடங்கு தெறிக்கும்.

ஏற்கனவே SSD பற்றி விளக்கமாகவும் எளிமையாகவும் கூறி விட்டதால், புதிதாகப் படிப்பவர்கள் SSD கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ளவும்.

Readமின்னல் வேகம் அது தான் “SSD”

இது போல ஒரு mSata வேண்டும் என்று நான் வழக்கமாக வாங்கும் ஒரு Vendor ரிடம் கேட்டால் அவர்களுக்குத் தெரியவில்லை. மாற்றி அனுப்பி விட்டார்கள்.

அவர்களுக்கு விளக்கி பின் சரியாக அனுப்பினார்கள்.

அதனால் நீங்கள் தில்லாக மற்றவர்களை.. “என்னப்பா உன் கணினி mSata ல இருக்கா பழைய மாடலா!!” என்று கலாயிக்கலாம் 🙂 .

Samsung V NAND SSD PRO M.2

உங்கள் ஆச்சர்யம் முடியும் முன்பே இதை விட வேகமான ஒரு SSD சாதனத்தைச் சாம்சங் வெளியிடப்போகிறது. அதன் பெயர் Samsung V NAND SSD PRO M.2.

இதில் 48-layer V-NAND இருப்பதால் சிறிய சாதனத்தில் அதிகத் தகவல்களை அடக்க முடிகிறது (Compressed format).

இதை மேலும் விளக்கினால் உங்களுக்குக் குழப்பமாக இருக்கும். எனவே, இந்த வசதி வரை வந்து விட்டது, நாம எங்க இருக்கோம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

2015 அக்டோபர் (இந்த) மாதம் இந்தச் சாதனம் வெளியாகப் போகிறது. News / Image Credit PCWorld.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

8 COMMENTS

  1. கிரி, mSATA- வும் SSD-யும் ஒன்றா, ப்ளீஸ் விளக்கவும்.

    நன்றி,

    கணேஷ்

  2. கணேஷ் தொழில்நுட்பத்தில் ஒன்று வடிவமைப்பில் வேறு அவ்வளோ தான்.

    இதுவும் SSD யில் ஒரு வகையே.

  3. 512 GB SSD இந்த அளவிற்கு சிறியது என்பதை நம்ப முடியவில்லை கிரி. தொழில்நுட்ப வளர்ச்சியினை பற்றி ஒன்றும் கூறுவதற்கு இல்லை. தினம், தினம் புதிய மாற்றங்கள் கண்டிப்பாக வரவேற்க கூடிய ஒன்று. ஆனால் இந்த மாற்றங்கள் வரக்கூடிய சந்ததிகளுக்கு எந்த வகையில் உதவும் / பாதிக்கும் என்பதை மட்டும் யோசிக்க முடியவில்லை. பகிர்வுக்கு நன்றி கிரி.

  4. பகிர்வுக்கு நன்றி தல
    உங்க கிட்ட தனியா ஒரு நாள் hardware class கத்துக்கணும் ஊருக்கு வரும் போது

    – அருண் கோவிந்தன்

  5. உங்க பதிவை படிச்ச பிறகுதான் நான் ssd உள்ள tab + கம்ப்யூட்டர் – Acer Aspire 11 ஜீனில் வாங்கினேன் இப்போ MSATA பத்தி சொல்றீங்க… இது போங்கு ஆட்டம்
    என்ன தான் இருந்தாலும் டேட்டாக்கள் பாதுகாக்கப்படுமா என்று கேள்வி. ஏனெனில் ரெண்டு மாசத்து முன்னாடி என் 1 டேரா பைட் ஹார்ட்டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படங்கள் வைத்திருந்தேன்… உங்க பேவரைட் ஹாஸ்டல் உட்பட

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ராஜ்குமார் என்ன போங்கு ஆட்டம்?! சரியாத் தானே வாங்கி இருக்கீங்க. இது அளவில் மட்டுமே வித்யாசம் மற்றபடி வேகம் இரண்டுமே ஒன்று தான்.

    இறுதியாகக் கூறியது இனிமேல் தான் வரப் போகிறது. இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும். மாசாமாசம் புதுசா விடுறாங்க.. நேற்று வாங்குன தொலைக்காட்சி அடுத்த வாரம் பழைய மாடல் ஆகி விடுகிறது 🙂 .

    உங்கள் முக்கியத் தகவல்களை Cloud ல் சேமியுங்கள்.

  7. கிரி
    சூப்பர்..

    எஸ் எஸ் டி யோட எச் பி ப்ரோ புக் வந்திருக்கா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!