எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் நாய் பிரியமான ஒரு பிராணியாக இருந்து வருகிறது. Image Credit
இதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதில் இருந்தே நாய்கள் என்றால் ரொம்பப் பிரியம்.
A Tale of mari and three puppies
ஒரு சிறுமி மற்றும் நாயின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு அருமையான திரைப்படமாக வந்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு சிறுமி ஒரு நாய்க் குட்டியைக் கண்டெடுத்து வளர்க்கிறாள்.
சில வருடங்களுக்குப் பிறகு அங்கு ஏற்படும் பூகம்ப்பத்தில் அவர்கள் வீடு தரைமட்டமாகி விடுகிறது, இந்தச் சிறுமி மற்றும் அவருடைய தாத்தா மாட்டிக்கொள்கிறார்கள்.
மீட்ப்புபடையினர் இவர்களைக் கவனிக்காமல் புறப்பட முயற்சிக்கும் போது இந்த நாய் அவர்களை அழைத்து வந்து இவர்களை மீட்க உதவுகிறது.
சீதோஷ்ண நிலை காரணமாகவும் பெரியவரின் உடல் நிலை காரணமாகவும் நாயை அவர்களால் காப்பாற்றி அழைத்துச் செல்ல முடிவதில்லை.
அந்த நேரத்தில் அந்தச் சிறுமியின் கதறலும் மீட்புப்படை ஹெலிகாப்டரைப் பின் தொடர்ந்து அந்த நாய் ஓடி வர அதைக்கண்டு மேலும் அந்தச் சிறுமி கதற தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அந்த இராணுவ சார்ஜென்ட் இயலாமையில் நிற்க அந்தக் காட்சி உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்.
முடிந்த வரை ஓடிய நாய் பின் ஹெலிகாப்டர் செல்லும் பாதையையே ஏக்கமுடன் பார்த்து நிற்பதைப் பார்க்கும் போது நம்மைக் கண்கலங்க வைத்து விடும்.
இதன் பிறகு என்ன ஆவது என்பது தான் கதை.
ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம்
இது ஜப்பானில் நடந்த உண்மைச் சம்பவம் ஆகும் அதைப் படமாக எடுத்து இருக்கிறார்கள்.
இந்தச் சிறுமி, அவளுடைய அண்ணன், தாத்தா, அப்பா முக்கியமாக மாரி என்கிற இந்த நாய் அனைவரும் அற்புதமாக நடித்து இருக்கிறார்கள்.
இந்தப்படத்தை நான் மூன்று முறை தொடர்ந்து பார்த்து விட்டேன் பார்த்த ஒவ்வொரு முறையும் அழுது விட்டேன்.
இந்தச் சிறுமி & நாயின் நடிப்பும் அருமை. இதற்கு மேல் எதுவும் கூறவும் விரும்பவில்லை. இதற்கு மேல் எதுவும் கூறவும் விரும்பவில்லை.
இது போல அருமையான படத்தைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகி விட்டது. இதற்கு எனக்கு நாய் பிடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இது போன்ற இன்னொரு படம் “Eight below”. இதுவும் ஒரு அற்புதமான படம். நேரமிருக்கும் போது அவசியம் இந்தப்படத்தைப் பாருங்கள்.
A Tale of Mari and three puppies யை நினைவூட்டிய நண்பர் முத்துவுக்கு நன்றி.
Read: சுனாமி அழிவில் மூன்று வாரம் தாக்கு பிடித்த நாய்!
Read: நாய் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
மெல் கிப்சன் இயக்கிய அபோகலிப்டோ படத்தின் விமர்சனம் எழுதுங்கள் ப்ளீஸ்…
பதிவுக்கு நன்றி கிரி.. ராஜேஷ்ன் கருத்து படி அபோகலிப்டோ படம் எனக்கும் பிடித்த படம்.. அதுவும் இரண்டாம் பாகம் மிகவும் அருமை.. அபோகலிப்டோ படம் கிரிக்கும் பிடிக்குமானால் விமர்சனம் பின்பு எழுதலாமே!!! எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த படம் பார்க்க போன எனக்கும் என் நண்பர்களுக்கும் 200 % திருப்தி கிடைத்தது…. பொதுவாக ஹாலிவுட்ல் டைரக்டர்ரை என்றுமே பிதாமகனாக கொண்டாடுகின்றனர்.. என்னை பொருத்தவரை அது சரியே!!! மெல் கிப்சன் ஒரு பிதாமகனே…
வணக்கம் கிரி அவர்களே
அருமையான பதிவு.
உங்கள் இடுகை மூலம் நான் வளர்த்த ஒரே நாய் ஜானியை ஞாபகபடுத்தி விட்டீர்கள்.
உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் கண் கலங்கிவிட்டேன் நிச்சயம் குறுந்தகடு கிடைத்தால் இந்த படத்தை பார்ப்பேன்
நல்லா இருக்கு பதிவு .. படம் பாத்துட்டு சொல்லுறேன் தல
– அருண்
@ராஜேஷ் பின்னர் நிச்சயம் எழுதுகிறேன்
@யாசின் இதன் இரண்டாம் பாகம் வந்தது போல தெரியவில்லையே. அது பற்றி லிங்க் எதுவும் இருந்தால் கொடுங்கள்.
@இளவரசன் சதீஷ் அருண் நன்றி
மன்னிக்கவும் கிரி என்னுடைய வாக்கிய பிழைக்காக.. நான் இரண்டாம் பாகம் என்று குறிப்பிட்டது ” ஹீரோ வில்லங்களிடம் இருந்து தப்பிப்பதை தான்”…
Yeah this one is a good movie… Recent times two dog movies made me felt the same. if you got a chance try
Hachiko: A Dog’s Story and
Marley & me.
Both are very good.
Cheers