த்ரில்லர் படங்கள் தமிழில் குறைவு, அதற்கு நம் மக்களின் ஆர்வமின்மையே காரணம், ஆனாலும் யுத்தம் செய் போன்ற திரைப்படங்கள் வந்து கொண்டு தான் உள்ளது. Image Credit
நகரில் பெண்கள் காணாமல் போகிறார்கள், பொது இடங்களில் வெட்டப்பட்ட கைகள் ஒரு பெட்டியில் அடிக்கடி வைக்கப்படுகின்றன. இதை யார் செய்தது எனத் தெரியாமல் காவல் துறை திணறுகிறது.
இதைக்கண்டு பிடிக்கும் பொறுப்பு CBCID அதிகாரி சேரன் வசம் வருகிறது. இந்தக் குற்றங்களைச் சேரன் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.
எந்த வித சமரசமும் (ஒரு குத்துப்பாட்டைத்தவிர) இல்லாமல் எடுக்கப்பட்ட சிறப்பான தமிழ் த்ரில்லர். க்ரைம் நாவல் மாதிரி விறுவிறுப்பாகச் செல்கிறது.
அஞ்சாதே படத்தைப் போல இதிலும் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். பல காட்சிகள் “ஹாஸ்டல்” படத்தை நினைவுபடுத்துகிறது.
குறிப்பாகக் கைகளை அறுக்கும் காட்சிகள் மற்றும் பெண்களை அலங்காரம் செய்யும் காட்சிகள். மிஸ்கின் என்றாலே சர்ச்சை தான் போல இருக்கு 🙂 .
யுத்தம் செய் மிஸ்கின் டச்
மிஸ்கின் படம் என்றால் குறிப்பிட்ட காட்சிகளைப் பார்த்தால் போதும் என்கிற அளவிற்கு அவருடைய டச் தெரிகிறது.
குறிப்பாக இசை, கேமரா கோணம், இருட்டு, சில நடிகர்களின் மேனரிசம் என்று பலவற்றைக் கூறலாம்.
சேரனின் நடிப்புக்கு இடைவேளை சண்டைக்காட்சியை கூறலாம். மிகச் சிறப்பாக வித்யாசமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி. சரியாகப் பொருந்துகிறார்.
சேரனின் உதவியாளராக வரும் பெண் பார்த்தால் பச்சை மண்ணாக இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணை இக்கதாப்பாத்திரத்திற்கு போட்டு இருக்கலாம்.
அனுபவமுள்ள இன்னொரு உதவியாளராக வருபவர் நடிப்பு நன்றாக உள்ளது.
ஒரு சில காட்சிகளில் நீண்ட நாள் பணியின் அனுபவத்தால், அவர் ஒரு சிலரிடம் பேசும் முறை சினிமாத்தனம் இல்லாமல் இருக்கிறது.
இடைவேளைக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கும் விவரிக்கும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தி இருக்கலாம்.
காரணம், அவர்கள் கூறும் பல விசாரணை குறிப்புகளைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. யார் யாரை சொல்கிறார்கள் என்பது புரிய கடினமாக உள்ளது.
பின்னணி இசை
பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் படத்துக்குப் பின்னணி இசை பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
மிஷ்கினின் பங்கு உள்ளது என்பது “அஞ்சாதே” படத்தின் பின்னணி இசையைக் கேட்டு இருந்தால், புரியும்.
இரண்டு படங்களிலும் இசையமைப்பாளர்கள் வேறு என்றாலும் பின்னணி இசை ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கும்.
ஒரே ஒரு குத்துப்பாடல் அது அவசியமில்லை என்று கூறவில்லை ஆனால், அது இல்லாமல் இருந்தாலும் ஒன்றும் பெரிய இழப்பில்லை.
“கத்தாழை கண்ணாலே” போல ஒரு பாடல் ஆனால், அது போல இதில் எடுபடவில்லை. நடனமும் ஏறக்குறைய அப்பாடலைப்போலவே இருந்தது.
ஒரு சில இடங்களில் காட்சி தெளிவாக இல்லாமல் இருந்தது, ஜூம் இன் ஜூம் அவுட் செய்வதாலா என்று தெரியவில்லை ஆனால், கோணம் சரியாக இருந்தது.
இக்கொலைகளை செய்பவர்கள் செயல் சில நம்பமுடியாத அல்லது நடைமுறையில் சாத்தியமில்லாததாக உள்ளது.
இயல்பாகப் படம் எடுப்பவர்கள் ஏன் இதைப்போல விசயங்களில் கோட்டை விடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் என்றால் எனக்கு இதில் பல எப்படிக்கள்? உள்ளது.
இதை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் நிச்சயம் சிறந்த த்ரில்லர் படம்.
குழந்தைகளுடன் பார்க்க ஏற்றப் படமல்ல. த்ரில்லர் படங்களை ரசிப்பவர் என்றால் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத படம் யுத்தம் செய்.
தண்டனைகள் பற்றி முன்பு நான் கொலை வெறிக் கோபத்துடன் எழுதிய கட்டுரையை நேரம் அனுமதித்தால் படித்துப்பாருங்கள் “ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!“
Directed by Mysskin
Produced by Kalpathi S. Aghoram Kalpathi S. Ganesh Kalpathi S. Suresh
Written by Mysskin
Starring Cheran, Dipa Shah, Y. G. Mahendra, Lakshmi Ramakrishnan, Jayaprakash, Selva, Srushti Dange, Ineya
Music by K
Cinematography Sathyan Sooryan
Edited by Gagin
Release date 4 February 2011
Running time 152 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
மிகவும் அழகாக எழுதப்பட்ட ஒரு விமர்சனம்.
//வருகிற ஆத்திரத்தில் படத்தில் வருகிற மாதிரி லொட லொட னு பேசுற நாக்கை பிடுங்கி எறிந்து விடலாம் போல இருக்கிறது.//
கிரி….
ஹா…ஹா…ஹா… யுத்தம் செய் படத்தோட எஃபெக்ட் நல்ல வேளை தியேட்டர்ல கிடைச்சு இருக்க வேண்டியது….
அவர்கள் தப்பித்தார்கள்….!!
கிரி ,
யுத்தம் செய் ஒரு மிக சிறந்த த்ரிலர் ,” M ”,THE MAN ESCAPED ,போன்ற படத்திற்கு இணையானது இப்படம் ..,என்னளவில் மிஷ்கின் ஒரு மிக சிறந்த படைப்பாளியாகவே கருதுகிறேன் .,நந்தலாலா வை தவிர .,
விமர்சனம் நல்லா இருக்குங்க சார்.
//வருகிற ஆத்திரத்தில்
படத்தில் வருகிற மாதிரி லொட லொட
னு பேசுற
நாக்கை பிடுங்கி எறிந்து விடலாம்
போல இருக்கிறது .//
ஆஹா…. வன்முறை படங்கள் பிடிக்கும்னு சொல்றீங்கன்னு பார்த்தா வன்முறையே ரொம்ப பிடிக்கும் போலிருக்கே…! இடைவேளை வந்ததுதான் அந்த பெண்களின் நல்லவேளை போலிருக்கு 🙂
விமர்சனம் அருமையான ரசனையுடன் எழுதியிருக்கீங்க அண்ணே , சூப்பர்
பகிர்வுக்கு நன்றி :))
யுத்தம் செய் பார்க்கலாம் 🙂
nice giri…
இன்னும் பார்க்கவில்லை. ஆனால், கேள்விப்பட்டவரை, “HOSTEL ” மற்றும் “SAW ” படங்களின் தாக்கம் அதிகம் உள்ளதுபோல் தெரிகிறது.
கிங் விஷ்வா, கோபி, சங்கர், Mrs கிருஷ்ணன், தமிழ், மாணவன், பிரபு மற்றும் அழகன் வருகைக்கு நன்றி
@கோபி & Mrs. கிருஷ்ணன் 🙂
@சங்கர் என்னென்னமோ படம் சொல்றீங்களே! கலக்குறீங்க போங்க.. உலகப்படமா பார்க்க ஆரம்பித்துட்டீங்க போல 😉
@அழகன் ஹாஸ்டல் உண்டு சா இல்லை.
படம் பார்க்கும் போது என் பின் அமர்ந்து இருந்த இரு பெண்கள் பேசியே சாவடித்தார்கள். ஏன் இந்த மாதிரி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது பேசிக்கொண்டே இருக்கிறார்களோ!
adhey dhan Giri enakkum aachu, pakathula moonu pasanga, ellathukkum comment adikaranga.. anegama kuthu padam nu nenachivandhutanga pola.. idhula pathadhadhukku phone vera vandhuchu oruthanukku, pesikittey irundhan…
Padam superb, ellarum kettadhu yaarupa adhu music director nalla potrukaaney nu
“Observers are observed” – Ipadi anga anga Mysskin touch irundhuchu