காங்கிரஸ் எதனால் ஆபத்தான கட்சி?

0
காங்கிரஸ்

காங்கிரஸ் எதனால் ஆபத்தான கட்சி என்பதை இக்கட்டுரை கூறுகிறது. Image Credit

காங்கிரஸ்

இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்காகத் துவங்கப்பட்ட கட்சி தற்போது ஒரு குடும்பத்தின் கட்சியாக, சொத்தாக மாறி விட்டது.

காங்கிரஸ் வழியாக நேரு பிரதமரானதால், அப்படியே அவர் குடும்பமே தொடர்ச்சியாக வந்ததோடு சம்பந்தமே இல்லாமல் காந்தி பெயருடன் உரிமை கொண்டாடி விட்டது.

மகாத்மா காந்திக்கும் தற்போதுள்ள காந்திகளுக்கும் என்ன சம்பந்தம்?

கட்சியைக் கைப்பற்றி விட்டதோடு முஸ்லீம் ஆதரவு நிலை இலைமறைவு காயாக இருந்து தற்போது வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கான கட்சியாகி விட்டது.

முஸ்லீம் ஆதரவு

எந்த மதத்துக்கு ஆதரவாகவும் ஒரு கட்சியிருக்கலாம் ஆனால், அனைவருக்குமான கட்சி போலப் பரப்புரை செய்து, செயல்களில் அவ்வாறு இல்லையெனும் போது பிரச்சனையாகிறது.

சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் எப்படியெல்லாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றியுள்ளது, மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பதைப் படித்து அதிர்ச்சியாகி விட்டது.

ரயில்வே துறைக்குப் பிறகு இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ளது முஸ்லீம் வஃக்பு வாரியம் என்பது எத்தனை பேருக்குத்தெரியும்? இதற்கு முழுக்காரணம், காங் ஆட்சியில் கொண்டு வந்த சட்டதிருத்தங்கள்.

இவையெல்லாம் எப்படி பொதுவில் விவாதிக்கப்படவில்லை என்று வியப்பாக உள்ளது.

2014 ல் ஆட்சியை விட்டுச் செல்லும் போது பல நூறு கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை அவசரஅவசரமாக வஃக்பு வாரியத்துக்கு மாற்றியுள்ளார்கள்.

ஒரு நாட்டையே பிரித்துக்கொடுத்தும், இந்தியாவிலும் நிலங்கள் முஸ்லிம்களுக்கு தான் அதிகம் என்பது எந்த விதத்தில் நியாயம்?

அரசியல் சாசனம்

ஒரு மதத்துக்கு ஆதரவாக இருப்பது வேறு ஆனால், அதற்காகச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுவது தவறு.

எடுத்துக்காட்டுக்கு, அரசியல் சாசனத்துக்கு எதிராக இடஒதுக்கீடு கொடுக்கிறார்கள் ஆனால், மோடி அரசியல் சாசனத்தை மாற்றுவதாக பரப்புரை செய்கிறார்கள்.

இவர்களே பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து விட்டு, பட்டியலின மக்களுக்கு எதிராக மோடி செயல்படுகிறார் என்று பரப்புரை செய்கிறார்கள்.

சாதிப்பிரிவு, தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையென்று கூறும் முஸ்லிம் மதத்துக்கு, ஒதுக்கீட்டிலிருந்து பிரித்துக் கொடுப்பது எப்படி நியாயமாகும்?!

மத ரீதியாக இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் கிடையாது ஆனால், பாஜக அல்லாத மாநில மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளன.

ஆனால், இங்கே விமர்சிக்கப்படுவது மோடி. இது எந்த வகையில் நியாயம்?

ராகுல்

பாஜகவினர் இவரைப் பப்பு என்று கூறி குறைத்து மதிப்பிட்டுக் கிண்டலடித்து வருகிறார்கள் ஆனால், ராகுல் ஆபத்தானவர் என்பதை பலர் உணரவில்லை.

பலரும் கூறுவது போல ராகுல் கோமாளித்தனமான செயல்களையும், முட்டாள்தனமாகப் பேசி காங் கட்சிக்குச் சிக்கலையும் ஏற்படுத்தி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு தலைவருக்குண்டான பேச்சாகவோ, செயல்களாகவோ இவரது நடவடிக்கையில்லை ஆனால், ஊடகங்கள் மற்றும் சமூகத்தளங்களின் வழியாக இவரைப் பெரிய ஆளாகக் கட்டமைக்கிறார்கள் ஆனாலும் எடுபடவில்லை.

மேற்கூறியதெல்லாம் எனக்குப் பிரச்சனையில்லை ஆனால், அவரின் விஷமத்தனம் தான் கவலையளிக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சி

2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்துக்களைப் பிரிக்க இவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன்.

காரணம், வெளிநாட்டுக்குச் சென்று வந்த பிறகு, இந்துக்களைப் பிரிப்பதில் குறிப்பாக பட்டியலின மக்களிடம் தவறான கருத்துக்களைக் கொண்டு செல்வதில் ராகுல் தீவிரம் காட்டுகிறார்.

கவனித்தவர்களுக்குத் தெரியும் ராகுல் எந்த அளவுக்கு இந்துக்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார் என்பதை.

நேர்மையாகப் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை என்பதால், இந்தக் கேவலமான வேலையைக் கையில் எடுத்துத் தீவிரமாக இதைச் செய்கிறார்.

ராகுல் அளவுக்கு மற்றவர்கள் அதிகம் பேசவில்லை ஆனால், ராகுலின் பேச்சுக்குப் பின்னே வெளிநாட்டு ஆலோசனையுள்ளதைத் கவனித்தால் உணர முடியும்.

தேர்தல் வாக்குறுதிகள்

எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது புரிந்ததாலோ என்னவோ வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

  • வேலை இல்லாமல் இன்ஸ்டா பயன்படுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவித்தொகை என்று திகில் கிளப்புகிறார்.
  • இறந்தவரின் சொத்தில் 45% அரசு எடுத்துக்கொள்ளும், மீதியே வாரிசுகளுக்கு என்கிறார்.
  • பெண்களுக்கு மாதம் ₹8500 என்கிறார்.

தமிழகத்தில் ₹1000 ரூபாய்க்கே வழி இல்லாமல், தகுதியானவர்களுக்கு என்று தமிழக அரசு மாற்றி விட்டது.

இதில் எப்படி மாதம் ₹8500 கொடுக்க முடியும். கொஞ்சமாவது லாஜிக் உள்ளதா?

வரி / கட்டண உயர்வு

இதைச் சமாளிக்க வரி உயர்த்துவோம் என்று ராகுல் ஆலோசகர் கூறுகிறார். கூறியதோடு, நடுத்தர மக்கள் கொஞ்சம் வரி கொடுப்பதால் என்ன குறைந்து விடப்போகிறது! என்று கேட்கிறார்.

திமுக என்ன செய்கிறதோ அதைத்தான் காங் ஆட்சிக்கு வந்தால் செய்யும்.

மாதம் தகுதியானவர்களுக்குக் கொடுத்ததற்காக இன்று மின்சாரக் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி உட்படப் பல்வேறு கட்டணங்கள் உயர்ந்து விட்டது.

ஏற்கனவே கொடுக்கப்பட்ட சலுகைகள் பறிக்கப்பட்டது. இதே தான் காங் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும்.

எடுத்துக்காட்டாக, திமுக போன்று வாக்குறுதிகளை அள்ளி விட்டு நிதி இல்லாமல் கர்நாடகா காங் அரசு விழித்துக்கொண்டு இருப்பதோடு, கட்டணங்களையும் உயர்த்தி வருவதைப் போல, மத்தியிலும் செய்யும்.

நாட்டுப்பற்று

பாஜகவை என்ன வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம் ஆனால், அவர்களின் நாட்டுப்பற்றை மறுக்க முடியாது.

இதுவரை இந்தியாக்கு கிடைக்காத மரியாதை உலகளவில் உயர்ந்து வருகிறது. பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ச்சியடைந்து கொண்டே உள்ளது.

உட்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் இதுவரை கண்டிராத அளவு மாற்றம் பெறுகிறது. எல்லை மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், மேற்கூறியதுக்கு அப்படியே நேர் எதிராக காங் ஆட்சியுள்ளது. காங் ஆட்சி, மேற்கத்திய நாடுகளின் அடிமையாக இருந்தது.

அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதைக் கேட்டுக்கொண்டு, அடங்கிச் சென்றது. 10 வருடங்கள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொம்மையாக இருந்தார்.

வெளியுறவுத்துறை அப்போது யாருக்குத் தெரியும் ஆனால், இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் மதிப்பை எங்கோ கொண்டு சென்று விட்டார்.

தரமான பதிலடிகளைக் கொடுத்து வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை

ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக தான் இருக்கும். ராகுலுக்கு நாட்டின் மீது எந்தப் பற்றும் மரியாதையும் கிடையாது.

மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார், ஆத்திரமாக உள்ளது. தன் நாட்டையே இழிவுபடுத்துகிறோம் என்ற உணர்வே இல்லை.

தங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு தலைவரை, கட்சியைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். எனவே காங் வெற்றி பெற்றால், காங் கட்சியினரை விட இவர்களே மகிழ்வார்கள் குறிப்பாக அமெரிக்கா, சீனா.

இந்தியா மீண்டும் 20 வருடங்களுக்குப் பின்னே சென்று விடும். இதையெல்லாம் நினைத்தாலே பகீரென்று உள்ளது ஆனால், இது எதையுமே தெரியாமல், மோடி எதிர்ப்பு என்ற பெயரில் உணராமல் உள்ளார்கள்.

எதிர்க்கட்சி

காங்கிரஸ் கட்சியை எதிர்த்தாலும் நான் ஒரு போதும் காங் என்ற கட்சி இல்லாமல் போவதை விரும்பியதில்லை. காரணம், எதிர்க்கட்சி என்ற ஒன்று இருந்தாலே ஆட்சியில் கேள்விகள் கேட்கப்படும்.

ஆனால், தொடர்ந்து பிரிவினை பேச்சுகள், இந்துக்களை வீழ்த்த எடுக்கும் முயற்சிகள், இந்தியாவைக் கீழிறக்கும் காங் அழிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

காங் மிக மிக ஆபத்தான கட்சி, இந்துக்களுக்கு மட்டுமல்ல இந்தியா என்ற நாட்டுக்கும். இதைப் பலர் உணர்ந்து வருகிறார்கள் அதன் எதிரொலியே காங் கட்சியின் தோல்விகள்.

இங்கே மோடி எதிர்ப்பில், மேற்கூறியவை பலரின் கண்களுக்குத் தெரிவதில்லை.

தற்போது எந்த முற்றிய நிலையில் உள்ளது என்றால், இந்தியாவைப் பாராட்டுவது பாஜகவைப் பாராட்டுவது போல என்று நினைக்கும் மோசமான நிலைக்கு வந்துள்ளது.

காங் என்ன நினைக்கிறது?

காங் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது முற்றிலும் தன்னை முஸ்லிம்களுக்கான கட்சியாகவே மாற்றிக்கொண்டுள்ளது.

பெரும்பான்மை இந்துக்களை எதிர்ப்பதால் காங் கட்சி தொடர்ந்து பலவீனமாகி வருகிறது. வெற்றி பெறும் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது.

வரும் சில இடங்களும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலைக்கு, மாற்றாக உள்ள கட்சி என்ற அளவிலேயே வாக்குகள் கிடைக்கிறது.

சிறுபான்மையென்றால், கிறித்தவர்களுக்கும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் ஆனால், முஸ்லிம்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது.

இது எப்படியென்றே புரியவில்லை!

தன் கொள்கைகளால் கட்சி வீழ்கிறது என்று தெரிந்தும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து இதே பாதையில் செல்வது வியப்பை அளிக்கிறது.

வித்தியாசம்

இங்கே தான் திமுக வித்தியாசப்படுகிறது.

இந்துக்கள் ஆதரவு இல்லையென்ற நிலை ஒரு நாள் வந்தால், சிறுபான்மையினரை அம்போ என்று விட்டு இந்து ஆதரவாக திமுக மாறி விடும்.

இது ஒரு நாள் நிச்சயம் நடக்கும். அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள். காரணம், காங் போலத் தன் கட்சியை அழித்துக்கொள்ள திமுக முட்டாள் கட்சியல்ல.

எனவே, சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், காங் கட்சியை நம்பலாம் திமுகவை நம்ப முடியாது.

ஒரு முஸ்லீம் MP வேட்பாளர் கூட 2024 பாராளுமன்றத் தேர்தலில் இல்லாமல், முஸ்லிம்களின் முழுமையான வாக்குகளைத் திமுக பெறுகிறது.

தமிழக காங் கட்சியைத் தலைமை காங் உடன் ஒப்பிட வேண்டாம். தமிழக காங் கட்சி திமுக என்ன செய்கிறதோ அதன் படி செல்லும்.

2024 பாராளுமன்ற முடிவுகள்

பாராளுமன்ற முடிவுகள் நிச்சயம் பல்வேறு செய்திகளை உணர்த்தும்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ராகுல் பிரிவினைப் பேச்சின் தாக்கம் எப்படியுள்ளது? போலி வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? இந்துக்கள் வாக்கைப் பிரித்துள்ளனரா? தமிழக பாஜகவுக்கு எப்படி ஆதரவு அளித்துள்ளார்கள்?

என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதில் தரும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இலவசத்தால் என்ன ஆபத்து?

மோடி என்ன செய்தார்?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here