Monster (2024 Indonesian) | Child Kidnapper

6
Monster

ந்தோனேசியா த்ரில்லர் படமாக வந்துள்ளது Monster. Image Credit

Monster

குழந்தைகளைக் கடத்துபவரிடம் அக்கா, தம்பி மாட்டிக்கொள்கிறார்கள். இருவரும் என்ன ஆனார்கள்? இருவரும் தப்பித்தார்களா? என்பதே Monster.

வசனமில்லா படம்

இப்படத்தை பார்க்கத்தூண்டியவை த்ரில்லர் மற்றும் படத்தில் வசனங்கள் இல்லையென்பது தான்.

வசனம் இல்லாமல் படம் எடுக்க த்ரில்லர் படங்கள் பொருத்தமானது காரணம், அங்கே பயமும், அமைதியுமே அதிகம் இருக்கும், வசனத்துக்கான தேவை குறைவு.

திரைக்கதை இவ்வகை படங்களுக்கு எழுதுவது எளிது ஆனால், அதைச் சுவாரசியமாக கொடுப்பது கடினம். இவர்கள் ஓரளவு கொடுத்துள்ளார்கள்.

Alana & Robin

பள்ளி முடிந்து வரும் Alana & Robin இருவரையும் ஜேக் கடத்தி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனது வீட்டுக்குக் கொண்டு சென்று விடுகிறான்.

இதிலிருந்து தப்பிக்கும் Alana, அருகில் வீடும் இல்லையாதலால், உதவிக்குக் கேட்க முடியாது என்பதாலும், தம்பியும் மாட்டி இருப்பதால், திரும்ப இங்கேயே வருகிறாள்.

இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

இந்தச் சிறுமி சிறப்பாக, மிகை நடிப்பு செய்யாமல் சிறப்பாக நடித்துள்ளாள். படத்தின் முதன்மை கதாபாத்திரம் இச்சிறுமி தான்.

தன்னால் என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் முயல்வது சிறப்பு. அதுவும் குறிப்பாகத் தம்பியின் உயிரும் ஆபத்தான நிலையில் இருக்கையில்.

பலவீனம்

இது போன்ற படங்களுக்கு இருக்கும் பலவீனம், அடுத்த என்ன நடக்கும், நடக்கலாம் என்று ஓரளவு ஊகிக்க முடியும் காரணம், ஏற்கனவே பார்த்த படங்கள்.

இதைச் செய்து இருக்கலாமே, அதெப்படி அனைத்துப் படங்களிலும் இது போன்று வருகிறது என்று தோன்றும் காட்சிகளும் உள்ளது.

வசனம் இல்லாததால், புரிந்து கொண்ட வரை, சிறுவர் சிறுமிகளைக் கடத்தி அவர்கள் உடல் உறுப்புகளை விற்பனை செய்பவர் போலத் தெரிகிறார்.

இந்தச் சிறுமி எப்படி பெரிய நபரைச் சமாளிக்க முடியும்? எனவே, அதற்குத் தகுந்த திரைக்கதையை அமைத்துள்ளார்கள்.

இது போன்ற படங்களில் நாம் பாதிக்கப்பட்டவர் நிலையில் இருந்தால், என்ன செய்து இருப்போம், என்ன முடிவு எடுத்து இருப்போம் என்ற எண்ணம் வரும்.

படம் முழுக்க கதாப்பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றன. வேறு எந்த வசனமும் இல்லை.

பின்னணி இசை பரவாயில்லை, இன்னும் பயமுறுத்தி இருக்கலாம்.

யார் பார்க்கலாம்?

பலரும் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். படம் நல்லாவே இல்லையென்று 🙂 .

எனக்கு ஓகே படம் தான். த்ரில்லர் படங்களைப் பார்க்க விரும்புபவர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

படத்தின் பெயர் Monster என்று இருந்தாலும், ரொம்ப பயமுறுத்தும் அளவுக்கெல்லாம் இல்லை ஆனால், என்ன நடக்குமோ என்ற பரபரப்பு உள்ளது.

NETFLIX ல் காணலாம்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. கிரி. இன்னமும் OnePlus 8 தான் உபயோகிக்கிறீர்களா? ரொம்ப நாட்களாக கேட்க நினைத்த கேள்வி. என்னிடம் அந்த சமயம் எந்த மொபைல் வாங்கலாம் என நிறைய டிஸ்கஸ் செய்து வாங்கினீர்கள். இப்போதும் OnePlus 8 தான் வைத்துள்ளீர்களா?

  2. entertainment and dailynews

    The application market has exploded recently, with millions of people using their own
    applications using the apple app store and google play. These apps can range from your
    everyday calculator app to games that are available on almost any device. But how do these programmers create an app and entertainment.

  3. கிரி.. நான் பொதுவாக அயல்நாட்டு மொழி படங்களை பார்ப்பது மிகவும் அரிது.. ஆனால் நண்பர்களோ / யூடூப்பில்லோ யாராவது பரிந்துரைக்கும் போது சில படங்களை காண்பேன். அதிலும் குறிப்பாக சீனா படங்களை பார்ப்பதில் விருப்பம் இருக்கும்.. வித்தியாசமான நிறைய கதைகள் கொண்ட பல படங்கள் உண்டு..

    இது போல படங்கள் தமிழில் வரவில்லையே என்ற ஏக்கம் உண்டு. கிராபிக்ஸ் படங்கள் மீது சுத்தமாக ஆர்வம் கிடையாது.. யதார்த்தமாக உள்ள படங்களின் மீது எப்போதும் ஆர்வம் உண்டு.. அதிலும் குறிப்பாக சிம்பிள் ஸ்டோரி யாக இருந்தால் இன்னும் விரும்பி பார்ப்பேன்.. நீங்கள் குறிப்பிட்ட படத்தை காண முயல்கிறேன்.

  4. @ஹரிஷ்

    ஆமாம்,

    இன்னும் புதிது போலவே வைத்துள்ளேன் (screen protector கூட இல்லை).

    அக்டோபர் வந்தால் நான்கு வருடங்கள் முடிகிறது. இதே போல தொடர்ந்தால், இன்னும் இரு வருடங்கள் வைத்து இருப்பேன்.

    ஒரு மாதத்துக்கு முன் பேட்டரி திடீரென்று வேகமாக குறைந்து வந்தது. அந்த நேரத்தில் OnePlus security update வந்தது இருந்தது.

    அதனால், ஒருவேளை இது தான் பிரச்சனையோ என்று நினைத்தேன்.

    பின்னர் battery optimization செய்த பிறகு திரும்பப் பழைய நிலைக்கு வந்து விட்டது. சில நேரங்களில் சில App update பேட்டரியை காலி செய்து விடுகிறது.

    • நீண்ட வருடம் ஒரே மொபைல் பயன்படுத்தினால் battery மாற்றி விடுங்கள் 2000 to 3000 உள் தான் செலவு ஆகும் original battery. அது தான் safety மற்றும் புது battery போட்டால் பேட்டரி backup மிக நன்றாக வரும்

  5. @யாசின்

    நான் அயல்நாட்டுப்படங்களை மட்டுமே அதிகம் பார்க்கிறேன் 🙂 .

    உங்கள் (நம்) ஏக்கம் தீரத் தமிழிலும் வந்துள்ளது. அதன் விமர்சனம் அடுத்தது எழுதுகிறேன் 🙂 . பார்த்துட்டு சொல்லுங்க.

    Monster கூட எளிமையான ஒருவரிக்கதை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here