“பிராமணாள் கஃபே” மட்டும் சாதியை முன்னிறுத்துகிறதா?

37
பிராமணாள் கஃபே

பிராமணாள் கஃபே” என்ற பெயர் கொண்ட உணவு விடுதிக்குத் திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்றனர். Image Credit

பிராமணாள் கஃபே

இவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் எதுக்குடா வம்பு! என்று, இந்த உணவு விடுதியின் உரிமையாளரைக் காலி செய்யக் கூறி விட்டார்.

என்னை இங்கே இருந்து தான் காலி செய்ய முடியும் நான் வேறு இடத்தில் இதே பெயரில் உணவு விடுதி துவங்குவேன்” என்று கூறி இருக்கிறார். Image Credit

திரும்பத் துவங்குகிறாரா / விட்டு விடுகிறாரா என்பது தேவையில்லாத விஷயம்.

திராவிட கழகத்தினர்

திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததும், இதில் ‘பிராமணர்கள் மட்டுமே உணவு உண்ணலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை போல‘ என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் இந்தப் பெயர் மட்டுமே பிரச்சனை.

உணவு விடுதியில் அனைவரும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். “பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்காகவே இத்தனை பிரச்சனைகள், ஆர்பாட்டங்கள்.

சாதியை முன்னிறுத்தி பிராமணர்கள் மட்டும் தான் பெயர்களை வைக்கிறார்களா? நாயுடு ஹால், கவுண்டர் மெஸ், செட்டியார் கடை, தேவர் ஃபிலிம்ஸ் etc பெயர்கள் எல்லாம் எந்தக் கணக்கில் வரும்!!

இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் நடத்தவில்லை.

பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துகிறார்கள், இல்லை என்று கூறவில்லை ஆனால், இதையே மற்றவர்களும் செய்கிறார்களே!

மற்றவர்கள் செய்யவில்லை என்றால் இவர்களைக் கேள்வி கேட்பது நியாயம்.

தருமபுரி கலவரம் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆதிக்க சாதிப் பெண், தலித் பையனைத் திருமணம் செய்ததால் அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆதிக்க சக்திகளின் நெருக்கடி காரணமாகச் செய்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியாது.

தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு தலித் பகுதியில் இருந்த வீடுகளை அடித்து நொறுக்கி, எரித்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள்.

இதோட விட்டார்களா! தலித் மட்டுமே தேவையில்லை ஆனால், அவர்கள் நகை வேண்டும் என்று அதையும் கொள்ளை அடித்துச் சென்று இருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் சாதியை முன்னிறுத்தி மிரட்டலாகப் பேசுகிறார்கள்.

ஏன் அமைதி?

இதைக் கேட்க யாரும் இல்லை, பிராமணர்களை வசை பாடுபவர்கள் இதற்கு வாயே திறக்க மாட்டேன் என்கிறார்கள்.

இதே பிராமணர்கள் செய்து இருந்தால், பரதநாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, தில்லானா அனைத்தும் ஆடி ஓய்ந்து இருப்பார்கள்.

“பிராமணாள்” என்ற பெயர் வைத்ததற்கு குதித்தவர்கள் இதற்கு ஏன் அமைதியாக உள்ளார்கள்? பேருக்கு அறிக்கை விட்டது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

“பிராமணாள் கஃபே” என்ற பெயருக்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியவர்கள், இது போலக் கொடுமையான நிகழ்வுக்கு எவ்வளவு செய்து இருக்க வேண்டும்!!

“பிராமணாள்” என்றால் எதுவும் பேச மாட்டான்… எவ்வளவு வேண்டும் என்றாலும் அடிக்கலாம். ஆதிக்க சாதியினரிடம் இது போல நடந்தால் அடி விழும்.

வடிவேல் ஒரு படத்தில் “ஓமக்குச்சி நரசிம்மனை” போட்டு அடி அடி என்று அடித்துத் தன்னை வீரன் என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அது போல உள்ளது.

பிராமணர்கள் தங்கள் சாதியை முன்னிறுத்துவார்கள், இது ஒன்றும் யாரும் அறியாத புதிய விசயமில்லை ஆனால், இவர்கள் மட்டுமே இதைச் செய்வதில்லை.

அனைத்து சமூகங்களிலும் நடக்கிறது. ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் எத்தனை பேர் சாதி பார்க்காமல் உள்ளார்கள் என்று கூற முடியுமா? ஒரு தலித் நபரை தங்கள் வீட்டினுள் அனுமதித்து விடுவார்களா? இதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்?

எங்கள் கிராமத்திலேயே இது நடக்க 1 % கூட வாய்ப்பில்லை.

Read: தீண்டாமை எப்போது ஒழியும்?

சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்காகக் குறிப்பாக ஒருத்தனை மட்டுமே அடிப்பது என்ன நியாயம்? 

அனைவரையும் ஒரே மாதிரி எதிர்த்து நில்லுங்கள்.

பாகுபாடு ஏன்?

ஒருவருக்கு அடி இன்னொருவருக்கு அமைதி என்ற பாகுபாடு ஏன்?  எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களைப் அடிப்பது தான் சாதி எதிர்ப்பா?!

லாஜிக்காகப் பேசினால் சாதியை எதிர்ப்பவர்கள் பகுத்தறிவை புகட்டுபவர்கள் இவர்களுக்கு எந்தச் சாதியும், மதமும் கிடையாது.

இவர்கள் எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாதியையும் சாராதவர்கள்.

அப்புறம் என்ன?அனைத்து சாதிகளிலும், மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தை மூட நம்பிக்கையை எதிர்க்க வேண்டியது தானே!

இதில் என்ன ஒரு சாராரை மட்டும் தாக்குவது, அவர்களை மட்டுமே முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துவது….!!

தான் உயர்ந்த சாதி என்பது அனைவரிடமும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் தூங்கிக் கொண்டு இருக்கும் மிருகம் தான்.

எப்போது வேண்டும் என்றாலும் அது தன்னை வெளிக்காட்டி விடும், அதற்கான சூழல் அமையும் போது.

சாதி எதிர்ப்பை அனைத்து சமூகத்தினரிடமும் சமமாகக் காட்டுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

37 COMMENTS

  1. giri
    migavum nalla pathivu..
    enaku jaathiyai muniruthi oruvaridam pesuvatho palaguvatho pidikathu..
    oruvaridam pesi palagum pothu muthal santhipil illavitalum aduthadutha santhipugalil
    neengal ithelam seivathilaiye neengal intha jaathiyai sernthavara endru kettu viduvaargal..
    jaathi murai,theendamai kodumaigalai adiyodi verukiren…nammal itharku ethenum seiya mudiyuma endru yosithirukiren…thani manithanaai paarthu thirunthinaalozhiya thiruttai pola ithaiyum ozhika mudiyathu…ini varum kaalangalil ethenum maatram nadakum endru ethir paarkiren..

    • வானம் எனக்கொரு போதி மரம்

      சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

      சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

      தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

      பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

      இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

      அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

      நல்லையா தயாபரன்

  2. dec 21….
    nan ooruku mun kootiye selvathaal enna seiveergal ulagam azhiyum pothu endru en kanavaridam ungal pathivai sutti kaati ketatharku enakoru chineese fig kidaikamala poi vidum engirar…:) 🙂

  3. @அகிலா சாதியை அவ்வளவு சீக்கிரம் எல்லாம் ஒழிக்க முடியாது. நாம் விரும்பவில்லை என்றாலும் அது நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், அதோடு சில நேரங்களில் நம்மிடம் உள்ள குணம் எப்போதாவது வெளிப்பட வாய்ப்பும் உண்டு. இவை எல்லாம் தலைமுறை மாற்றங்களில் மட்டுமே குறையும்.

    உங்க கணவர் கூறியதை நினைத்து சிரித்தேன் 🙂 நான் இதை கூறியவுடன் என் மனைவி உங்க கிட்ட போய் கேட்டேன் பாருங்க… என்னை சொல்லணும் என்று கூறுகிறார் 🙂

    நீங்கள் இதைப் படிக்கும் இடத்தில் facebook blocked ஆக இருந்தால் இதில் தமிழ் கமெண்ட் வர கொஞ்சம் தாமதமாகும். ஏனென்றால் என்னுடைய facebook சார்ந்த widget கள் தேடி விட்டு இதற்கு வருவதால் கொஞ்சம் தாமதமாக வரும். மற்றபடி சரியாக வேலை செய்கிறது. இதில் இருந்து தான் இதை டைப் செய்கிறேன்.

    ஒரு போஸ்ட் திறந்து விட்டு கொஞ்சம் நேரம் கழித்து (அதாவது அனைத்து widget ம திறந்த பிறகு) டைப் செய்தால் தமிழில் வரும். இல்லை என்றால் http://www.google.com/transliterate/tamil இங்கே சென்று தமிழில் அடிக்கலாம்.

  4. ரெண்டே ஜாதி தான் ஒன்று ஆண் இன்னொன்று பெண்

    மூன்றாம் கொசுறு படித்து விட்டு சிரித்தேன் கிரி

  5. தி க தான் போராட்டம் நடத்தியது. எனவே அவர்களைப் பார்த்துத்தான் அனைத்துக் கேள்விகளையும் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர்களுள் சிலர் பதிவுகள் நடத்துகிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஏன் கேட்கக் கூடாது?

    இரண்டாவது, வருணாசிரம் பிரேமாசிரம் என்பனவெல்லாம் உங்களுக்கு வெட்டிபேச்சாக இருக்கலாம். மற்றவருக்கும் அப்படியே என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்? Why do u force ur opionion on others?

    சாதிக் கொடுமைகள் வன்னியர் செய்ததைத் தட்டிக்கேட்கவில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் சென்னையில் இருந்தால் பல போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதை நேரடியாகக் காண்பீர்கள். அருள் என்ற வன்னியர் எழுதிய பதிவில் அவரைத் தட்டிக்கேட்டவர்கள் எல்லாரும் தி க காரர்களா? வாய்ப்பில்லை. கிடைக்கும்போது செய்வார்கள். போராட்ட வழிகள் அதாவது தட்டிக்கேட்கும் முறைகள் வேறுபடும். அரசியல்வாதியின் போராட்டம் தெருவில் இறங்கி நடக்கும். பொது மக்கள அப்படிச்செய்யவில்லையென்றால், சாதிக்கொடுமைச் சரியென்றா வரும்? என்ன பேசுகிறீர்கள்?

    மற்ற சாதிகள். அதாவது தேவர் போன்றோரின் சாதிவெறியைப் பிறர் கேட்கவில்லை என்று சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உண்மை அபபடியில்லை. எதிர்ப்புக்குரல்கள் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. உத்தபுரம் பிள்ளைகள் சுவர் கட்டியது கம்யூனிஸ்டுகள் மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவருமே மனம் புழங்கினார்கள். தேவர்களை எதிர்த்தால் பெணடை கழற்றிவிடுவான் என பகடி செய்து உங்கள் செயலுக்கு நியாயத்தைத் தேடுகிறீர்கள். நீங்களும் அருவாளைத்தூக்குங்களே வேண்டாமென்று எவரேனும் சொல்லமாட்டார்கள். தேவர் ஜெயில் கோர்ட்டு என்று போவான். உங்களாலும் முடியுமா? சொல்லுங்கள்.

    சாதிக்கொடுமைகள், தீண்டாமை எவர் செய்தாலும் தவறென்பதுதான் சமூகச் சான்றோரின் நினைப்பு. இதைத் தி க காரன் சொன்னால் பகடி செய்வோம் என்பது உங்கள் குறுகி மனப்ப்பான்மை மட்டுமே.

    பிராமணன் என்பது சாதிப்பெயரன்று. அப்படி நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். இதுவே உங்கள் வாதத்தின் அடிப்படைக்கோளாறு.

    சாதியுணர்வோ, சாதிகளையோ அழிக்கமுடியாது தற்போது. பின்னொரு காலம் அழிக்கும். அப்படி அழித்து வாழ்வோரும் பலர் இப்போது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம் சந்ததி கேடுகெட்டாலும் நம் வருங்கால சந்ததிகள் கெடாதென நம்புவோம்.

    மற்றவர்கள் செய்தால் அதைத் தட்டிக்கேட்கவில்லை. நாங்கள் செய்தால் மட்டுமே தட்டிக்கேட்கிறார்கள் என்று சொன்னீர்களே அது போதும் நீங்கள் செய்கிறது தப்பு என்பதை ஒத்துக்கொளவதற்கு.

  6. குலசேகரன் உங்களின் நீண்ட பதிலுக்கு நன்றி. (ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நீண்ட பதில் என்னுடைய தளத்தில் வந்து இருக்கிறது)

    “அவர்களுள் சிலர் பதிவுகள் நடத்துகிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஏன் கேட்கக் கூடாது?”

    வேற வேலையே வேண்டாங்க.. இவங்க கூட விவாதம் செய்தால் நான் காலத்துக்கும் பேசிட்டு இருப்பேன். எனக்கு அது வேலையும் கிடையாது.

    “வருணாசிரம் பிரேமாசிரம் என்பனவெல்லாம் உங்களுக்கு வெட்டிபேச்சாக இருக்கலாம். மற்றவருக்கும் அப்படியே என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்? Why do u force ur opionion on others?”

    குலசேகரன் எந்த இடத்தில் நான் மற்றவர்களை ஃபோர்ஸ் செய்கிறேன் என்று கூற முடியுமா? நான் என்னுடைய கருத்தை மட்டுமே கூறினேன், நான் யாரையும் நிர்பந்திக்கவில்லை. இதையே நான் திருப்பியும் கேட்கலாம்.

    “பொது மக்கள அப்படிச்செய்யவில்லையென்றால், சாதிக்கொடுமைச் சரியென்றா வரும்? என்ன பேசுகிறீர்கள்?”

    பொது மக்களைப் பற்றி நான் எங்கேயும் கூறவில்லையே! இது சம்பந்தமாக போராட்டம் செய்பவர்களை மட்டும் தான் கூறினேன்.

    “உண்மை அபபடியில்லை. எதிர்ப்புக்குரல்கள் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.”

    ஆமாம். ஒலித்துக்கொண்டு இருக்கின்றன யாருக்கும் கேட்காத அளவில்.

    “நீங்களும் அருவாளைத்தூக்குங்களே வேண்டாமென்று எவரேனும் சொல்லமாட்டார்கள். தேவர் ஜெயில் கோர்ட்டு என்று போவான். உங்களாலும் முடியுமா? சொல்லுங்கள்.”

    ரொம்ப நல்ல ஐடியாங்க அருவாளை தூக்க சொல்வது. உங்களால் முடியுமா என்றால்.. என்னை பிராமின் என்று நினைத்து இதைக் கேட்டு இருந்தால்.. சாரி நான் பிராமின் இல்லை. எங்கள் சமூகத்திலும் அடிதடி காரர்கள் தான் ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.

    “சாதிக்கொடுமைகள், தீண்டாமை எவர் செய்தாலும் தவறென்பதுதான் சமூகச் சான்றோரின் நினைப்பு. இதைத் தி க காரன் சொன்னால் பகடி செய்வோம் என்பது உங்கள் குறுகி மனப்ப்பான்மை மட்டுமே”

    இதற்கு பதில் என்னுடைய பதிவிலையே கூறி இருக்கிறேன்.

    “பிராமணன் என்பது சாதிப்பெயரன்று. அப்படி நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். இதுவே உங்கள் வாதத்தின் அடிப்படைக்கோளாறு.”

    சரிங்க உங்க வாதப்படியே எதோ ஒன்றாக இருக்கட்டுமே! இவர்கள் தவறு செய்யும் போது பொங்குபவர்கள், நீங்கள் கூறியபடி எதிர்ப்பு குரல்கள் பலமாக ஒலிக்கும் போது மற்றவர்களுக்கும் இதே போல எதிர்ப்பு குரல்கள் அனைவருக்கும் கேட்கும்படி ஒலிக்கட்டுமே.

    “சாதியுணர்வோ, சாதிகளையோ அழிக்கமுடியாது தற்போது. பின்னொரு காலம் அழிக்கும். அப்படி அழித்து வாழ்வோரும் பலர் இப்போது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம் சந்ததி கேடுகெட்டாலும் நம் வருங்கால சந்ததிகள் கெடாதென நம்புவோம்.”

    இதை கூறினீர்களே! அருமை. இதைத் தான் நானும் விரும்புகிறேன். சில தலைமுறைகள் தாண்டி இவை எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். இருப்பினும் சாதியை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று தோன்றவில்லை.

    “மற்றவர்கள் செய்தால் அதைத் தட்டிக்கேட்கவில்லை. நாங்கள் செய்தால் மட்டுமே தட்டிக்கேட்கிறார்கள் என்று சொன்னீர்களே அது போதும் நீங்கள் செய்கிறது தப்பு என்பதை ஒத்துக்கொளவதற்கு.”

    மறுபடியும் கூறுகிறேன் நான் பிராமின் அல்ல. நமக்கு ஒரு விஷயம் கேட்கணும் என்று தோன்றினால் அதில் நாம் சம்பந்தப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. பதிவிலேயே கூறி இருக்கிறேன் தவறு யார் செய்தாலும் தவறு தான். அது பிராமினாக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும்.

    BTW நான் தவறு செய்து இருந்தால் அதை ஒத்துக்கொள்ள என்றும் தயங்கியதே இல்லை. இதில் நான் எந்த தவறும் செய்து இருப்பதாக கருதவில்லை.

    உங்க எதிர்ப்பு பின்னூட்டம் பிடித்ததோ இல்லையோ, உங்களுடைய கருத்தை நாகரீகமா முன் வைக்கும் பாங்கு ரொம்பப் பிடித்தது :-).

  7. //மற்றவர்கள் செய்தால் அதைத் தட்டிக்கேட்கவில்லை. நாங்கள் செய்தால் மட்டுமே தட்டிக்கேட்கிறார்கள் என்று சொன்னீர்களே அது போதும் நீங்கள் செய்கிறது தப்பு என்பதை ஒத்துக்கொளவதற்கு.//

    குலசேகரன்
    பிராமணன் செய்தால் மட்டும் தான் கேட்போம் என்று சொல்வதிலிருந்தே தெரிகிறது நீங்கள் தொடை நடுங்கிகள் என்று

  8. கிரி

    நல்ல பதிவு . அது எப்படி நாலு சதவிக்ஹித ஏற்கனவே ஒடுக்கப்பட்ட சமூகத்தை தமிழ்நாடு கட்சிகள் அத்ஹனையும் எதிர்க்கிறது என்று புரியவில்லை . திராவிட கட்சிகள் சாதி என்றல் brahmin என்று பேர் வைத்து விட்டன. இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் இவர்களுக்கு கீழ் சாதி தேவை படுகிறது . வோட்டு வாங்குவதற்கு சாதி தேவை. சுயநல காரர்கள் .

  9. கிரி அவர்களே, சில வருடங்களுக்கு முன் பிராமனாள் கபே இருந்தது அதை போராட்டம் நடத்தி மூடு விழ கண்டார்கள், அந்த உணவகத்தில் பிரமணர்களுக்கு தனி மரியாதையும் மற்ற சாதி இனருக்கு வேறு மாதறியும் நடத்தினார்கள், பிராமணர்கள் சாப்பிட்டால் அவர்கள் அந்த இலையை எடுத்து போடா தேவை இல்லை, மற்ற சாதி இனர் சாப்பிட்டால் அவர்களே அந்த இலையை எடுத்து போடா வேண்டும், அப்புறம் பிரமணர்களுக்கு மட்டும் தனி இடம் இருக்கும், இதுதான் அதை எதிர்பதற்கு காரணம்.
    இப்போது ஆரம்பத்தில் எல்லோரையும் சரிசமமாக நடத்துவார்கள் சிறிது காலம் சென்ற பின் பழைய பிராமனாள் கபே முறைக்கு திரும்பி விடுவார்கள் அதற்குதான் இப்போதே போராட்டம் நடத்தி மூடி விட்டார்கள். நீங்களும் பிராமணன் இல்லை நீங்கள் சென்றாலும் உங்களுக்கும் இந்த மரியாதை குறைவுதான் கிடைக்கும் ஆகவே இந்த போராட்டம் உங்களுக்கும் சேர்த்துதான் நடந்திருக்கிறது.
    மற்றபடி செட்டியார், ரெட்டியார், கவுண்டர் நடத்தும் உணவகங்களில் எல்லோருக்கும் ஒரே மரியாதை தான். அதனால் அதை யாரும் எதிர்க்க வில்லை
    நான் கேட்பது என்னவென்றால் பிராமணனோ மற்ற ஜாதி காரனோ யாராக இருந்தால் என்ன? சாபிட்டதர்க்கு பணம் கொடுக்கிறார்கள் பின்பு ஏன் ஒரு ஜாதிக்கு மட்டும் ஒரு மரியாதை மற்ற ஜாதிகாரர்களுக்கு வேறு மரியாதை? வியாபாரத்திற்கு உணவகங்கள் திறக்கிரார்களா? இல்லை ஜாதி பகமை பாராட்ட உணவகங்கள் திறக்கிரார்களா?

  10. கிரி,
    உங்கள் நல்ல எண்ணம் புரிகிறது . அதே நேரத்தில் இந்த விடயத்தில் உங்கள் புரிதல் மிகவும் மேலோட்டமானது என்பது என் தாழ்மையான கருத்து .

  11. @முபாரக் சில வருடங்களுக்கு முன்பு பிராமணாள் ஹோட்டலில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்கவே இப்படித்தான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையவே முடியாது. இரட்டை குவளை முறை ஒழிந்ததாகக் கூறப்படுகிறது, இன்னும் எத்தனை கிராமங்களில் இது நடக்கிறது என்பதை அறிவீர்களா?

    இன்னும் சிறு நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் சாதியினருக்கு சமமாக உட்கார முடியாது. இவர்கள் வந்தால் அந்த ஹோட்டலே புறக்கணிக்கப்படும் மற்றவர்களால்.

    பிராமணாள் ஹோட்டலில் பாகுபாடு செய்கிறார்கள் என்றால் அதை எதிர்த்துப் போராடலாமே தவிர ஹோட்டலை மூடக்கூறி அல்ல. நீங்கள் கூறுவது போல மற்ற சாதியினர் நடத்தும் ஹோட்டலில் இந்த பாகுபாடுகள் இல்லை என்றெல்லாம் நீங்கள் கூறவே முடியாது. இது போல நடக்கும் எத்தனையோ இடங்களை நான் கண்டு இருக்கிறேன். இன்னும் தொடருகிறது. பெரிய நகரங்களில் இவை இல்லை காரணம் எளிது, யார் யார் என்று யாருக்குமே தெரியாது.

    அதே போல குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் மட்டுமே எதுவுமே வெற்றிகரமாக நடந்து விட முடியாது, பொதுமக்களின் ஆதரவில்லாமல். எந்த நடிகரின் படமும் ரசிகர்களால் மட்டுமே ஓடி விட முடியாது, பொது மக்களின் ஆதரவும் தேவை.

    உண்மையில் நான் சென்றாலும் இது போல நடந்தால், பிடித்து ஒரு காட்டு காட்டி விட்டு அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன். மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன். அப்படி போய் அங்கே சாப்பிட வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கில்லை. ஊருல 100 ஹோட்டல் இருக்கு சாப்பிட, வம்படியா அங்கே போய் அவமானப்பட மாட்டேன். எனக்கு பிராமணாள் ஹோட்டல் சட்னி சாம்பார் வேண்டும் என்கிறவன் போய் அனுபவிக்கட்டுமே எனக்கென்ன.

    இன்னும் இரட்டை குவளை முறை தான் இருக்கிறது (கொஞ்சம் பாலிஷாக). இவைகளும் இவர்கள் போராடக் கூடிய இடங்களே! யார் தவறு செய்தாலும் தவறே! அது பிராமணாள் ஹோட்டலாக இருந்தாலும் சரி எந்த ஹோட்டலாக இருந்தாலும் சரி.

    @ஜோ நீங்கள் கூறியது போல மேலோட்டமாக இருக்கலாம். நான் கூறுவது தான் சரி என்று கூறவில்லை, எனக்கு தெரிந்த அளவில் எழுதி இருக்கிறேன். மற்றவர்கள் அவர்கள் கருத்தை கூறுவது போல் என்னுடைய கருத்தை நான் கூறுகிறேன்.

  12. பகிர்வுக்கு நன்றி கிரி.. ஜிமெயில் புதிய வசதியினையும் தெரிவித்தமைக்கு நன்றி…

  13. திரு. கிரி அவர்களே,

    இந்த சுட்டியினை பார்க்கவும் : http://vanjikkapadupavaninkuralgal.blogspot.com/2012/11/blog-post_21.html
    பிரச்சினையின் அடுத்த பக்கம்.
    இந்த பதிவு கண்டுகொள்ளப்படாமல் போவதாக தோன்றியதால் பகிர்கிறேன். மற்றபடி உண்மை மற்றும் எதிர்வாதங்கள் தனி. இதனை இடுகையில் பின்னூட்டமாக அனுமதித்து இடுவதா அல்லது இதன் மேல் தனி பதிவாக இடுவதோ / சாரத்தினை உங்கள் கருத்தாக இடுவதோ என்பது தங்கள் முடிவு.

  14. இதைப் பத்தி எழுதாமல் உங்களால இருக்க முடியலை. காரணம்..எதுக்கெடுத்தாலும் பிராமனனை மட்டும் திட்டுறானுக அயோக்கியனுக.. ஏன் இதேபோல், இதைவிட பலமடங்க தவறுகள் செய்யும் மற்றவர்களை திட்டக்கூடாது? னு சொல்ல வர்ரீங்க. இது உங்க பக்க வாதம். சரி.

    ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. தி க காரன் செய்றது எல்லாம் சரினு இங்கே பதிவுலகில் எல்லாரும் சொல்லவில்லை! தி க காரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கான். பிறகு அடாவடித் தனம் செய்து கடையை அடைக்க செய்து இருக்கான். அவன் இப்படி செய்தது சரியா? என்றால் அது தப்பு என்பதுதான் ப்லர் எண்ணம்.

    சரி, அதே நேரத்தில், பாரம்பரிய பிராமனாள் நடத்தும் உணவகம்னு கடை முகப்பில் போட வேண்டியது அவசியமா? னு பார்த்தால் சாதியை/தீண்டாமையை ஒழிக்கனும்னு சொல்லிக்கொண்டு இருக்க நம்ம, இதை எதிர்க்கத்தான் செய்யனும்.

    இதை தி க காரனுக்கு சப்போர்ட்னு நீங்க தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்!

    இதுபோல் சாதிய வெறியை தூண்டும் செயல்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கனும். சாதியை தேவியில்லாமல் விளம்பரப் படுத்துவதை நிறுத்தனும் என்பதற்காக எதிர்ப்பு!

    ஆனால் உங்களால அப்படி பார்க்க முடியாது??? ஏன் என்றால் பிராமணன்னா அடிக்க வர்ரான் என்கிற ஒரு “காம்ப்ளெக்ஸ்”! அதனால் இதுபோல் கடை நடத்துவது சரி என்பதுபோல் நீங்க வாதிட முற்படுவதாக பலரும் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கு.

    “தேவர் மெஸ்” “நாடார் கல்லூரி” “செட்டியார் ஜவுளிக்கடை” என்று பிற சாதியினரும் இதே தவறை செய்றாங்க. அதுவும் சரி அல்ல! அதுவும் தவறுதான். அவர்கள் செய்வது சரி என்று நாம் யாவரும் வாதாட முற்படவில்லை! அதனால், அவன் செய்றான், இவர்கள் செய்தால் என்ன? என்கிற வாதம் சரியானதல்ல! ரெண்டு பேரு செய்றதும் தப்புத்தான். தி க காரன் இந்த விசயத்தி்ல் அறிவில்லாத தனமாத்தான், ஒருதலை பட்சமாக நடந்துக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறோம்.

    மற்றவர்களும் இதுபோல் சாதிப்பெருமை பேசுவதும் தப்புத்தான். தர்மபுரி சம்பவம் சம்மந்தமாக பலரும் வன்னியர்கள்மேல் எரிச்சலில்தான் இருக்காங்க. வன்னியர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை பதிவர் அருள் கண்டிக்கவில்லைனு பலரும் பதிவெழுதி திட்டிக்கிட்டுதான் இருக்கோம். இல்லையா?

    இது போதாதுனு கொங்கு வெள்லாள கவுண்டர், தலித் அல்லாத ப்லர் ஒண்ணு சேரனும்னு கேவலமான ஒரு அறிக்கை விட்டு இருக்கதை தி க காரன் கண்டிக்கக்காத கோழைகள்தான். அதில் மமாற்றுக் கருத்து இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    தி க காரன் செய்றான் என்பது இங்கே பிரச்சினையில்லை. அவன் யோக்கியன் இல்லை என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

    ஆனால், ஜாதியை ஒழிக்கனும்னு நீங்கல்லாம் சொல்வது உண்மை என்றால்..பாரம்பரியா பிராமனாள் நடத்தும் ஒரு உணவகம்னு சொல்வதை தவிர்ப்பதுதான் அழகு, நலல்து. தி க காரன் மேலே உள்ள கோபத்தில் உங்க “நடு நிலை” தவறாமல் நீங்க கவனமாக இருக்க வேண்டிய சூழல் இது.

    ஏன் என்றால் அதுபோல் சாதி விள்ம்பரங்களை குறைப்பதுதான், சமுதாயத்தில் சாதி வெறியை எதிர்க்க, மறுக்க, குறைக்க, நம்மால் செய்ய முடிகிற ஒரு சின்ன உதவி.

    தி காரன் செய்ற ஒருதலை பட்சம், அயோக்கியத்தனம்னு அவன் மேலே உள்ள கோபத்தில், எரிச்சலில் நீங்க நடுநிலை தவராமல் பார்த்துக்கோங்க, கிரி!

    டிஸ்க்ளைமர்: உங்க பதிவை கவனமாகப் படிக்காமலே இந்தப் பின்னூட்டம். நீங்க உங்க பதிவில் நீங்கள் “நடுநிலை” தவறவில்லை என்றால் இரட்டிப்பு சந்தோஷம்தான்! நன்றி 🙂

  15. வாங்க வருண் 🙂

    “ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. தி க காரன் செய்றது எல்லாம் சரினு இங்கே பதிவுலகில் எல்லாரும் சொல்லவில்லை!”

    சொல்லவே முடியாது.

    “சரி, அதே நேரத்தில், பாரம்பரிய பிராமனாள் நடத்தும் உணவகம்னு கடை முகப்பில் போட வேண்டியது அவசியமா? னு பார்த்தால் சாதியை/தீண்டாமையை ஒழிக்கனும்னு சொல்லிக்கொண்டு இருக்க நம்ம, இதை எதிர்க்கத்தான் செய்யனும்.”

    மாற்றுக்கருத்தில்லை. வழிமொழிகிறேன். முகப்பில் போட வேண்டியது இல்லை ஆனால் இது அடுத்த பிரச்சனை. இதற்கு பதில் பின்னால் கூறுகிறேன்.

    “இது போதாதுனு கொங்கு வெள்லாள கவுண்டர், தலித் அல்லாத ப்லர் ஒண்ணு சேரனும்னு கேவலமான ஒரு அறிக்கை விட்டு இருக்கதை தி க காரன் கண்டிக்கக்காத கோழைகள்தான். அதில் மமாற்றுக் கருத்து இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.”

    நான் சரியாக புரிந்ததால் தான் தானே எழுதியே இருக்கிறேன்.

    “ஜாதியை ஒழிக்கனும்னு நீங்கல்லாம் சொல்வது உண்மை என்றால்..பாரம்பரியா பிராமனாள் நடத்தும் ஒரு உணவகம்னு சொல்வதை தவிர்ப்பதுதான் அழகு, நலல்து. ”

    ஏற்றுகொள்கிறேன் இதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

    இங்கே இரண்டு விஷயங்கள் குறிப்பிட வேண்டியது உள்ளது. இதை குழப்பாமல் தெளிவாகக் கூறுகிறேன்.

    1. அனைத்து சாதிப் பெயர்களையும் எதிர்ப்பது. (இது நீங்க)

    2. பிராமணர்களை மட்டுமே எதிர்க்கிறார்களே ஏன் மற்றவர்களை இது போல எதிர்க்கவில்லை அதாவது இதே வேகத்துடன்.(இது நான்)

    இதில் முதல் வகையை நீங்கள் கூறி இது தான் சரி என்கிறீர்கள்.

    நான் இரண்டாவது வகை கேள்வியை கேட்டு இருக்கிறேன். நீங்கள் முதல் வகையை கேட்பது தான் சரியான ஒன்று அது தான் மெயின் என்கிறீர்கள். இது தான் நீங்கள் கூற வருவது… சரியா!

    இதற்க்கு நான் தற்போது பதில் கூறுகிறேன்.

    நீங்கள் கூறியது போல நான் இரண்டாவதை தான் செய்து இருக்கிறேன் காரணம், அதற்குண்டான சூழல் நிலவியதால். அனைத்து சாதிப் பெயர்களையும் எதிர்க்க வேண்டும் என்ற விவாதம் வந்தால் அதில் எனக்கு முழு உடன்பாடே! மாற்றுக்கருத்தே இல்லை. எனவே இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

    இரண்டாவது விசயத்தை பேசி இருப்பதால் நான் முதல் விஷயத்தை ஆதரிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. சாதிப் பெயரே கூடாது என்பதில் எனக்கு முழு உடன்பாடே. ஆணியே புடுங்க வேண்டாம் என்பது தான் என் நிலை.

    “தி காரன் செய்ற ஒருதலை பட்சம், அயோக்கியத்தனம்னு அவன் மேலே உள்ள கோபத்தில், எரிச்சலில் நீங்க நடுநிலை தவராமல் பார்த்துக்கோங்க, கிரி!”

    நடுநிலை என்ற ஒன்றே கிடையாது வருண். அவரவர் கருத்தை தான் கூற முடியும். எப்படி கூறினாலும் ஒரு சாராருக்கு அதில் உடன்பாடு இருக்காது. அப்படி இருக்கும் போது அது எப்படி நடுநிலை ஆகும்? பெரும்பாலனவர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தை கூறினால் “நடுநிலை” என்ற பெயரில் கூறுகிறார்கள் அவ்வளவே!

    ஆனா நீங்க “நடுநிலை” என்ற வார்த்தையை எதற்கு இவ்வளவு “அழுத்தி” என்னைப் பார்த்து கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை 🙂

    கவுண்டர் கரகாட்டக்காரன் படத்துல சொல்ற மாதிரி அது ஏன் என்னைப் பார்த்து அந்தக் கேள்விய கேட்டீங்க? 🙂 ஹி ஹி

  16. “பிராமணாள் ” என்பது வர்ணம் சார்ந்த பெயர். சாதிகளுக்கு அடிப்படையான வர்ண பாகுபாட்டை இன்றும் நினைவுபடுத்தும் ஒரே வர்ணம் பிராமணன் தான். ஏனைய வர்ண பெயர்கள் வழக்கொழிந்து விட்டன.
    சாதி பெயர்களான ஐயர், ஐயங்கார் போன்றவற்றை சுமந்த பல வர்த்தக நிலையங்கள் இன்றும் உள்ளன.

    இங்கு வர்ணத்தை நோக்கிய போராட்டமே அன்றி சாதிகளை நோக்கியல்ல. சாதிகளை நோக்கிய போராட்டத்திற்க்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டும் போல் உள்ளது.

    நீங்கள் தொடர்ச்சியாக இணையம் பார்ப்பவர் அல்ல போல் உள்ளது. தருமபுரி சம்பவத்துக்கு மிக பாரிய கண்டன போர்கள் நடைபெற்றன. இதை கண்டு சில வன்னிய சாதி வெறி பிடித்தவர்கள அதை கண்டு கண்டு மிகவும் கடுப்படைந்தனர். அதில் ஒருவர் தான் இங்கு பின்னூட்டம் இட்ட iTTiAM.

    சகல சாதி பெயர்களுக்கும் எதிராக போராட்டம் நடை பெற வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால் அதற்குரிய அரசியல், சமூக சூழ்நிலை தமிழகத்தில் இல்லை.

    பிராமணாள் கபே உரிமையாளர் “ஐயங்கார் கபே ” என்று பெயர் மாற்றி இருந்தால் தி.க கட்சியினரால் ஒன்றும் செய்திருக்க முடியாது.

    முதல் கட்டமாக வர்ணங்களை ஒழிக்க போராட்டம் நடத்தட்டும் பின் சாதிகளை ஒழிக்க போராட்டம் நடக்கும.

  17. Nice Write up Giri:

    As you said the word “Brahmin” is enough for Thi.Ka people to raise issues. Unfortunately the Brahmins does not come out and give counter attacks and waste their precious time in involving those activities. Even in films these people will project brahmin community only and not other’s can you play jokes with Muslim Community or Christians for that matter.. No never. Caste system has to go .. but it will take time … this system starts when we get into the earth..(if you people know about racism you guys will not talk about this).. the same activity cannot be done in the same vigour in some parts of our country. I do agree when Periyaar led this organisation when things were bad.. as far as I know Periyar was against false prophecies (Mooda Nambikkaigal) and some other things which were being followed were absurd to the way we live. Gone are the days and being a brahmin you face a lot of discrimination in the society you live.. You score marks and you will not be offerred a seat and somebody who has scored lower than you will be walking away with it for just not being a Brahmin. And to woo the votes our politicians play dirty games. There are a few corporates where you get a job easily for being a brahmin what make them to do all these stuff the discrimination you face and way your are left in the lurch are all the components. These The.Ka people does not have back bones to go and fight with everybody as you said the caste system and certain policies which they still follow today are unacceptable. Will write again

    Kamesh

  18. துணிச்சலான (நடுநிலையான) நல்ல பதிவு. வாழ்த்துகள் கிரி.

    வெளியே சாதி இல்லை என்று காட்டிக்கொண்டாலும்; வன்னியர்,கவுண்டர்,தேவர்,நாடார்,முதலியார்,போன்றவர்களுக்கு பொதுவாக பிராமினும் பிடிக்காது, தலித்துகளையும் பிடிக்காது. இவர்கள் பொதுவான எதிரிகள்.
    தெற்கே நாடருக்கும் தேவருக்கும் ஆகவே ஆகாது. மேற்கே கவுண்டருக்கும் முதலியாருக்கும் (பிற சாதி போல சண்டை போடாவிட்டாலும்) மனதளவில் ஆகவே ஆகாது.

    என்ன சாதியை வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளட்டும்; மனிதனை மனிதனாக குறைந்த பட்ச மரியாதையோடு நடத்தினாலே போதும்.

  19. இந்த மதம் மாற்றம் மாதிரி சாதி மாற்றம் இருந்தால் ????? யார் வேண்டும்மானாலும் என்ன சாதியிலும் சேரலாம் லா ??????? அப்புறம் எந்த பிறைச்சனை இருக்கதுல ???????

  20. @ETHICALIST

    “நீங்கள் தொடர்ச்சியாக இணையம் பார்ப்பவர் அல்ல போல் உள்ளது”

    :-). சின்ன திருத்தம் சாதிச் சண்டைகளை இணையத்தில் அதிகம் பார்ப்பதில்லை. மற்றபடி SMS ஐ விட இணையத்தில் பதில் வேகமாக வரும் என்னிடம் இருந்து.

    “சகல சாதி பெயர்களுக்கும் எதிராக போராட்டம் நடை பெற வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால் அதற்குரிய அரசியல், சமூக சூழ்நிலை தமிழகத்தில் இல்லை.”

    ஏன் இல்லை? ஏன் இருக்கக் கூடாது? என்பதை விளக்கினால் என்னை போன்றவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு. பிராமணாளை சாத்த சூழ்நிலை இருக்கும் போது, மற்ற சாதிகளின் பெயர்களை எதிர்க்க என்ன சூழல் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

    “பிராமணாள் கபே உரிமையாளர் “ஐயங்கார் கபே ” என்று பெயர் மாற்றி இருந்தால் தி.க கட்சியினரால் ஒன்றும் செய்திருக்க முடியாது.”

    நீங்கள் கூறும் வர்ணாசிரம் எத்தனை பேருக்கு தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா? தி க காரங்களுக்கும் இது சார்ந்த சொற்ப பேருக்கு மட்டுமே தெரியும். பொதுமக்கள் எவரிடமாவது வர்ணாசிரம் என்றால் என்ன என்று கேளுங்கள். எனக்கு நித்தியானந்தா ஆசிரமம் தான் தெரியும் என்பார்கள். எனவே பொதுமக்களை பொறுத்தவரை ஐயர் கஃபே பிராமணாள் கஃபே எல்லாமே ஒன்று தான்.

    “முதல் கட்டமாக வர்ணங்களை ஒழிக்க போராட்டம் நடத்தட்டும் பின் சாதிகளை ஒழிக்க போராட்டம் நடக்கும.”

    நல்லா இருக்குங்க உங்க நியாயம். வர்ணாசிரம் என்பதன் அர்த்தமே தெரியாத ஒரு விசயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் ஆனால், ஒரு ஊரையே காலி செய்த ஆதிக்க சக்திகளை பின்னர் பார்க்கலாம் என்று கூறுகிறீர்கள்.

    யாருக்குமே புரியாத ஒரு விசயத்துக்கு போராட்டம் வேண்டும் என்பது முக்கியமா! அல்லது சாதி பற்றி நன்கு தெரிந்த மக்களிடம் சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது முக்கியமா!!

    @காமேஷ் நன்றி

    @காத்தவராயன் எல்லா சாதிக்காரனும் அடித்துகுறான். மேல் சாதியிலேயே அதில் யார் மேல் சாதி என்று போட்டி. இது இந்தக் காலத்தில் முடிவடையாது.

  21. கிரி,
    கலக்கிட்ட தல
    பதில் ஒவ்வொன்னும் செமையா இருக்கு
    ஆரோக்யமான விவாதம் நடத்தும் எல்லாருக்கும் நன்றி

    – அருண்

  22. ETHICALIST சொன்னது சரி என்பது என் கருத்து. நீங்க எங்கும் ஐயங்கார் பேக்கரி பார்த்ததில்லையா? ஊருக்கு குறைந்தது நாலு இருக்குமே 🙂 . அய்யர் கஃபே உண்டு ஆனால் அதிகளவில் இல்லை. வர்ணாசிரம் பற்றி எல்லாருக்கும் தெரியாது தான். அதுக்காக வர்ணாசிர பெயர் வைக்கலாமா? இப்படி பெயர் வைக்கும் முறை தவறு என்பது என் கருத்து.

  23. இந்த பிராமனாள் கபே மேட்டர் எல்லாம் சும்மா ஒரு விளம்பரத்துக்குத்தான். அதே இங்கே இதை வைத்து அரசியல் பண்ண நிறைய கூட்டங்கள் இருக்கு. இது குறித்து பேச வேண்டுமானால் கூட நிறைய டிஸ்கி போட்டுத்தான் பேசவேண்டும். இல்லை என்றால் ஏதாவது ஒரு குருப் வந்து நம்மை கும்மி விடுவார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் சாதியை ஒழிக்க பாடுபடுகிறார்கள் என்பதுதான் பெரிய காமெடி.

    கொசுறு 4: என்ன சொல்ல வெறும் பெரு மூச்சுதான் வருகிறது.

  24. ஏன் எல்லோரும் சாதி ஒழிக்க வேண்டும்னு சொல்றீங்கன்னு புரியல. சாதி ஒழியனுமா? தீண்டாமை ஒழியனுமா? சாதிய கண்டு ஏன் இப்படி எல்லாரும் பயபற்றீங்க? சாதி வேறு, அதனால் வரும் தீண்டாமை வேறு.
    சாதி என்பது நீ, உன் குடும்பம், உன் சுற்றத்தார் சார்ந்தது / உள்ளடக்கியது.
    தீண்டாமை எனபது மனிதனால் சாதியை வைத்து உருவாக்க பட்டது.
    இன்னக்கி நீங்க சாதிய ஒழிக்கலாம், ஆன தீண்டமைய ஒழிக்க முடியாது. அது வேற ரூபத்துல வரும். அது இன்னக்கி சாதி வடியுல இருக்கு. நேத்து வர்ணம் வடியுல இருந்தது. நாளக்கி அது வேற வடியுல வரும் (சத்தியமா வரும்).
    தீண்டமைய ஒழிக்கணும்ன சாதிய ஒழிக்க வேண்டியதில்ல, மனித நேயத்தே வளர்க்கணும். உங்க பசங்க புள்ளங்கல்லுக்கு மனித நேயத்தே வரதுங்க. மனுசன மனுசனா பாக்க சொல்லிகுடுங்க. உங்க வீட்டு பக்கத்துல இருக்கற ஏழை பிள்ளைங்களோட விளையாட அனுமதியுங்க. அங்க இருந்துதான் தீண்டாமை ஒழிக்க முடியும்.

    வைடிவேலு சொல்ற மாதிரி “போய் பசங்கல படிகவையும்கப்பா”

  25. பிராமிணாள் கபே வர்ணாசிரமம் என்றால் கரூர் வைஸ்யா பேங்க் என்னவாம்?

  26. Who told Brahmins are keeping quite? .They are the root cause for all these inequality since 2000 years.If we try to find the history of how the caste system is formed. We cannot discuss with descent language.
    chinmayi who complained on her abuse ,in her same twitter she twitted as “I am iyengar and proud to be”.These kind of attitude can be found in most of the them and in all caste.
    Changes can be done by not only discussing this in the social website but have to discuss with our parents and relatives also.Only blaming dravida kalazham is little ignorant.But if periyar and Dravid kalagham was not there in 1970’s we would have afraid to enter these things even in internet now.

  27. she twitted as “I am iyengar and proud to be”
    ரேக்ஹா மேடம் இதில் என்ன தவறு என்று புரியவில்லை. நான் திரும்பவும் சொல்றேன், சாதி என்பது நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் சுற்றத்தார் சார்ந்தது / உள்ளடக்கியது. இதை ஏன் நாம் பெருமையாக சொல்லக்குடாது? நான் கௌண்டர் என்று சொல்ல பெருமை படுகிறேன். அதே போல் ஒரு சக்கிலியர் ‘நான் சக்கிலியர்’ என்றும், ஒரு பறையர் ‘நான் பறையர்’ என்றும் பெருமை படவேண்டும். அதில் மற்றவர்களுக்கு என்ன பிரெச்சனை? நான் கௌண்டன் என்பதால், மட்ரவர்களை மதிபதில்லை என்றும், வேற்றுமை பாராட்டுகிறேன் என்றும், அர்த்தமல்ல (infact என்னுடன் ஆபீஸ்-இல் பணிபுரியும் நண்பர் ஒரு சக்கிலியர். எங்கள் இரு குடும்பமும் ஒரே காபோண்டில்தான் குடி இருக்கோம். என் மகள் அவர்கள் வீடில்தான் எப்பழுதும் விளையாடிகொண்டிருப்பால்).
    நீங்கள் உங்களது சாதியை கூற கூச்சபடுகிரீர்கள் அல்லது பயபடுகிரீர்கள் என்றால் தான் பிரெச்சனை.
    நான் முன்னால் கூறியது போல், சாதி வேறு, அதனால் வரும் தீண்டாமை வேறு. நாம் தீண்டமையதான் ஒலிக்கவேண்டுமே தவிர, சாதியை அல்ல.

  28. Hello GowriShankar,
    If you are proud about your caste you are indirectly saying that we are all slaves under brahminism..Study Manudharmam and see how the classification.What is the base for that?Untouchability and caste is bonded together.We are the illegal child of brahmins.that what the caste system says.If we are proud on that then we have to confess that we dont study the history or understand the base.People who understand the brahminism would obviously get angry and I am the one on that.
    If you want to abolish untouchability you have to wipe the caste.this is my point of view.

  29. I dono Brahminism, I guess most of us don’t. if you are saying that, what we are following as caste and caste system is from that Brahminism, then I dono know that. May be, there should be a broader discussion for that. But here problem is untouchability. What you are saying is, wipe caste for abolish untouchability. No madam, I don’t buy that. As I am repeatedly telling untouchability is different thing. Caste is different thing. Today untouchability is practiced based on caste, tomorrow it will be practiced based on something else, may be based on economic status. We need to remove untouchability by improving humanity. Wiping caste is not permanent solution, it is just a temporary fix.
    Tell me one thing madam, how many of us are readily allowing our children to play with poor kids next door? And asking our children to avoid those kids? Is it not untouchability?

  30. சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

    சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

    தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

    பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

    இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

    அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

    நல்லையா தயாபரன்

  31. For several centuries, “Brahmins” – the “priestly caste” – were religious and spiritual figures, educators, thinkers and philosophers in India. Among Brahmins gotras are reckoned patrilineally and each gotra takes the name of a famous Rishi (or sage) who was the patrilineal forebearer of that clan.The Brahmins belonging to the same gotra are related to each other patrilineally, and there may be very little else in common between them. According to the Vedic system, a man and a woman belonging to the same gotra are considered to be a brother and sister, so a wedding between a man and a woman belonging to the same gotra (known as sa-gotra) is forbidden as it will cause anomalies in the progeny that come out of such a wedding.. A married woman takes up the gotra of her husband. Ambalavaasi people (living in (by) ambalam or temple – temple inmates) and vishwakarma (acharis) caste people also now claim that they are Brahmins.

    The Bhagwad Gita states that caste is a birthright! A Brahmin is one who is educated and knowledgeable of the scriptures and leads a holy life and is not a birthright!. I understand an immigrant’s need to connect to his or her roots. But in western countries Brahmins have their sons go through the sacred thread ceremony and that child grows up to be a meat eater, drinker with no knowledge of the scriptures. What is wrong is that in the age of ‘Kali Yuga’ anyone is claiming Brahmin as a birthright even when they eat meat, indulge in alcohol and live arrogant materialistic lives. My Bengali Brahmin friends made never made any qualms about relishing various fish and chicken delicacies. Most of the Brahmins in North America to celebrate their teenage boys’ sacred thread ceremony which is a coming-of-age ceremony held only for brainwashed impressionable Brahmin boys into thinking within the narrow walls of their caste. Sacred thread ceremony is a ritual for initiating a boy in to the spiritual life and as per Vedas, all Hindus (except the shudras) have the right for sacred thread ceremony. For most of the Brahmins in North America caste is an important part of their identity as if it is the 24th pair of chromosomes and wear their Brahmin identity on their lapel. Indians keep on making pathetic efforts to tell the world that they belong to the “Brahmin” – upper caste. There is nothing to be proud about one’s so called upper caste. One contributes nothing to be born in a particular caste. It is a chance occurrence. No human being is born superior. In fact, there is nothing to be proud of a system, which is blatantly discriminatory. The caste system is a very backward culture. Indians not only embrace but also tout their upper caste while living in USA which has fought two civil wars against discrimination. It is a disgrace!

  32. “பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு”
    நீங்க ஏன் அத “ஆதிக்கத்தின் வெளிப்பாடு”-னு நெனக்கறீங்க? அப்படி பெயருக்கு பின்னால சாதி பெயர போட்டவங்ககிட்ட நீங்க கேடீங்கள? அத என்ன ரீசனுக்காக போற்றுக்கன்களோ? நீங்களா ஒன்ன நினச்சுகிட்டு, அதுதான் கரெக்டுன்னு எப்படி சொல்லலாம்? அப்போ நீங்க lastname-மா என்ன போடுவீங்க? “iyar”, “pillai”-னு போடறத ஒரு lastname-மா மட்டும் நீங்க ஏன் பாக்ககூடாது?
    சாதிய, sex மாதிரி, மூடி மூடி வெச்சு, அத பத்தி வெளிபடைய பேசுறதே தப்புனுற்ற மாதிரி பண்ணியாச்சு.
    அதனால சாதிய பற்றிய முழுதான அறிதல நாம miss பண்ணிட்டோம்.
    நீங்க சாதி “தீண்டாமையின் மற்றொரு வடிவம்”-னு சொல்லி இருக்கீங்க. அப்போ தீண்டாமைக்கு வேறு பல வடிவம் இருக்குன்றதை ஒத்துக்கிறீங்க. அப்போ சாதின்ற ஒரு வடிவத்த ஒழிக்கரத விட்டுட்டு, ஏன் எல்லாரும் தீண்டாமைய ஒழிக்க முயற்சிக்ககூடாது?
    பாஸ், தீண்டாமைக்கு சாதிதான் காரணம்னு, சாதிய ஒழிக்கரதுக்கு பதிலா, நாம தீண்டாமையதான் ஒழிக்கணும். சாதிய பாவம் அதுபோக்குலையே விட்டுடுங்க.
    நான் என் lastname-க்கு என் familyname “vellalan”-னு தான் போடணும். அத போட்டா நீங்க நான் சாதி வெறி புடுச்சவனு சொல்றீங்க. சாதி பெயர பெயருக்கு பின்னால போடுறத, வெறும் “Lastname”-மா மட்டும் பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here