பழிவாங்கும் சீரீஸாக The Glory வந்துள்ளது. Image Credit
The Glory
பள்ளியில் படிக்கும் போது சக மாணவ, மாணவிகளால் மிக மோசமாகப் பாதிப்பட்ட பெண், 18 வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு செய்யும் சம்பவமே The Glory.
கொரியன் பள்ளிகள்
கொரியன் படம், சீரீஸ்களைப் பார்த்த வரை, பள்ளியில் அதிக வன்முறை இருப்பதாக உணர்கிறேன். உண்மையா, மிகைப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.
ஆனால், தொடர்ந்து வருவதால் உண்மையாகவே இருக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது.
பல நாடுகளின் பள்ளியில் நடக்கும் சம்பவங்களைப் படமாக, சீரீஸாகப் பார்த்து இருந்தாலும், கொரியன் ஒரு படி மேலே இருப்பதாகவே உள்ளது.
Song Hye-kyo
Song Hye-kyo பெண் தான் பழிவாங்குபவராக நடித்துள்ளார்.
இக்கதாப்பாத்திரத்துக்காகவே உள்ளவரைப் போல நடித்துள்ளார். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஆனால், தீர்க்கமான பேச்சின் மூலம் அழுத்தமான உணர்வுகளை முன் வைக்கிறார்.
சீரீஸ் முழுக்கவே மிக அமைதியாகவே நடித்துள்ளார் ஆனால், இவர் செயல்களின் பாதிப்பு மிரட்டலாக இருக்கும்.
எப்படி இதுபோலத் திட்டமிட முடிந்தது என்று வியப்பாக உள்ளது. இயக்குநர் இவரைச் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இதுவெல்லாம் நடக்கிறது என்று புரியாமல் குழம்புவது சிறப்பு, பின்னர் தெரிய வந்து ஆத்திரமாவது அதிரடி.
சிலருக்கு இவர் வைக்கும் செக் தரமானவை.
அதோடு தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வது என்று சிறப்பான கதாப்பாத்திரம்.
எந்தச் செயலிலும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், செயலில் தெளிவாக இருப்பார்.
கதாப்பாத்திரங்கள்
நண்பர்கள், அவர்களுடைய தொடர்புடையவர்கள், பெற்றோர்கள் என்று ஏராளமான பேர் இருப்பதால், யாரை சொல்கிறார்கள் என்பதில் பெரிய குழப்பமுள்ளது.
இதைவிடப் பெரிய குழப்பம் அனைவரது பெயரும் ஒரே மாதிரி உள்ளது. யாரை சொல்கிறார்கள் என்றே புரியவில்லை, குத்து மதிப்பாக இவராகத்தான் இருக்கும் என்று கருத வேண்டியுள்ளது.
மேலும் ஒரு குழப்பம், பலரது முகம் துவக்கத்தில் ஒரே மாதிரி தெரிவதால், தலை கிறுகிறுத்து விடுகிறது. இதில் பெயரும் குழப்பமாவதால் சில புரியவில்லை.
சரி Wiki ல படிப்போம் என்று படித்தால், அதிலும் பெயர் குழப்பமே ஏற்பட்டதால், கடுப்பாகி விட்டது 🙂 .
Song Hye-kyo காதலராக வருபவர் பொருத்தமாக உள்ளார், பெண்களுக்குப் பிடிக்கும் அழகான மருத்துவர். பேச்சில் பதற்றம் இல்லாமல் பேசுவது ரசிக்கும்படியுள்ளது.
இதே போல முக்கிய வில்லியாக வருபவர், அவரது கணவராக வருபவர் என்று அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இவரது கணவர் எப்போதும் நேரடியாக விஷயத்துக்கு வருபவர். தேவையில்லாததை பேசிட்டு இருக்காமல், எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுபவர்.
அறியாமல் செய்த தவறு
பழிவாங்கும் போது ‘அறியாத வயதில் செய்த தவறுகளைத் தற்போது இவ்வளவு பெரிய பிரச்சனையாக்கணுமா‘ என்று கேட்பார்கள்.
கேட்பதில் நியாயம் இருப்பதாகவே தோன்றும் காரணம், அனைவருமே சிறு வயதில் பல தவறுகளைச் செய்து இருப்போம் ஆனால், கால மாற்றத்தில் கிடைத்த அனுபவத்தில் தவறுகளை உணர்ந்து இருப்போம்.
இவர்கள் செய்தது சாதாரணத் தவறுகள் அல்ல என்பதும், அறியாமல் செய்து விட்டார்கள் என்று கருத முடியாத தவறுகளாக இருப்பதும், இன்னமும் அடாவடித்தனத்தைத் தொடர்கிறார்கள் என்பதே இக்கதையின் முக்கியத்துவம்.
இதற்கு இவர்களிடம் பணம் அதிகம் இருப்பது முக்கியக்காரணம்.
திரைக்கதை
முதல் 4 எபிசோட் சாதாரணமாகச் செல்கிறது, சம்பவங்களாக உள்ளது, பரபரப்பு இல்லை. பழிவாங்கலை Song Hye-kyo துவங்கிய பிறகே சூடு பிடிக்கிறது.
திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை அனைத்துமே சிறப்பு.
யார் பார்க்கலாம்?
இதை யாரும் பரிந்துரைக்கவில்லை, எதையாவது பார்ப்போம் என்று பார்த்தேன் 🙂 .
பழிவாங்கும் கதையில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்.
எப்படி 16 எபிசோட் முடிந்தது என்றே தெரியவில்லை, அடுத்தடுத்து வேகமாகச் சென்றது போன்ற உணர்வு.
அடல்ட் காட்சிகள் இருப்பதால், குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றதல்ல.
NETFLIX ல் காணலாம்.
Written by Kim Eun-sook
Directed by Ahn Gil-ho
Starring Song Hye-kyo, Lee Do-hyun, Lim Ji-yeon, Yeom Hye-ran
Country of origin South Korea
Original language Korean
No. of episodes 16
Producers Yoon Ha-rim, Kim Young-kyu
Cinematography Jang Jong-kyung
Editors Han Ji-woo, Park Eun-mi
Running time 47–72 minutes
Original network Netflix
Original release December 30, 2022 – March 10, 2023
கொசுறு
ஒரு நாளில் பார்த்ததோடு முதல் முறையாக ஒரே நாளில் 79 GB பயன்படுத்தி இருக்கிறேன். இதற்கு முன் 76 GB 🙂 .
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, பொதுவாக நான் அதிகம் வெப் சீரிஸ் பார்ப்பவன் அல்ல.. ஆனால் நான் வெகு அரிதாக பார்த்த சில கொரிய படங்கள் என்னை கவர்ந்து இருக்கிறது.. கடந்த வருடம் படத்தின் பெயர் நினைவில் இல்லை.. மிகவும் தரமான படம்..
என்னுடைய ஆல் டைம் விருப்ப கொரிய படம் The Way Home (2002 film) .. வாய்ப்பிருந்தால் காணவும்.. தமிழில் ஏன் இவ்வாறெல்லாம் படங்கள் வர மாட்டுது என்ற ஏக்கம் சில படங்களை காணும் போது இயல்பாகவே எழுகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின் The Way Home NETFLIX ல் உள்ளது ஆனால், இந்தியாக்கு இல்லை. குறித்து வைத்துள்ளேன், வந்தால் பார்க்கிறேன்.