The Finest Hours (2016) | மிரட்டும் ஆழிப்பேரலை

3
The Finest Hours

1952 ம் ஆண்டு நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து The Finest Hours உருவாக்கப்பட்டுள்ளது.

The Finest Hours

கடுமையான புயல் காரணமாக, கப்பல் சிக்கிக்கொள்ள, உதவி கேட்கிறார்கள்.

இதே போல ஒரு பிரச்சனைக்கு மற்ற உதவும் குழுவினர் சென்று விட்டதால், Webber மற்றும் அவருடன் மூன்று பேர் ஆபத்தில் இருப்பவர்களை மீட்கச் செல்கிறார்கள்.

ஆபத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டார்களா? காப்பாற்ற சென்றவர்கள் பிழைத்தார்களா? என்பதே கதை.

படுபயங்கரமான புயலில் கடல் அலைகள் பொங்குவதைப் பார்த்தால், பகீரென்று உள்ளது. மிகப்பெரிய கட்டிடம் அளவுக்கு அலைகள் உயரே எழும்புகின்றன.

காப்பாற்ற செல்பவர்கள் படகு தண்ணீருக்குள்ளே சென்று மேலே வரும் போது மிரட்டலாக உள்ளது ஆனாலும், படகு வடிமைப்பின் காரணமாகத் தொடர்ந்து செல்வது வியப்பாக உள்ளது.

கடல் அலை ஸ்கேட்டிங்கில் அலைக்குள்ளே போவதை கண்டு இருப்பீர்கள், அது போலப் பல மடங்கு பெரிய அலை சுழலுக்குள் படகு சென்றால் எப்படியிருக்கும்?!

மிரட்டி விட்டார்கள் மிரட்டி.

பேய் காற்று – கடும் பேரலை – கும்மிருட்டு

பேய் காற்று, கடும் பேரலை, முரட்டு மழை, கும்மிருட்டு.

எதிரில் இருப்பவரே தெரியாமல் இருக்கும் போது திசைக்காட்டியும் தொலைந்து போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

பாதிக்கப்பட்ட கப்பல் பாதி உடைந்து, மீதியும் விரைவில் உடைந்து விடும் நிலையில் இருக்கும்.

இவர்களோ எதோ ஒரு நம்பிக்கையில் திசைகாட்டி இல்லாமல் கடும் இருட்டில் சென்று கொண்டு இருப்பார்கள். நால்வருமே இளையவர்கள்.

படுபயங்கரமான கடல் பயணம். CG மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்கள்.

Webber க்கு சில நாட்களில் திருமணம் என்ற நிலையில் அவருக்காகக் காத்திருக்கும் மரியம் என்று கடும் நெருக்கடி.

உடைந்த கப்பலில் உள்ளவர்கள் பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட, என்ன ஆகும்?! என்று பதட்டமாகிறது.

12 பேர் மட்டுமே

காப்பாற்றச் செல்லும் படகில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே செல்ல முடியும் ஆனால், கப்பலில் இருப்பவர்களோ 32 பேர். எப்படி அனைவரும் தப்பிக்க முடியும்?

இது தோல்விப்படமாகும் ஆனால், ஏன் தோல்வியடைந்தது எனப் புரியவில்லை. தோல்விப்படங்கள் அனைத்தும் மோசமான படங்கள் என்று அர்த்தமில்லை.

The Finest Hours போல மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டு ஏதோ காரணங்களால் வரவேற்பை பெறாமல் இருக்கலாம்.

CG க்காகவே இரு முறை பார்த்தேன். ஏனென்றால், உண்மையான கடல் கொந்தளிப்பையும், சுழல் காற்றையும், பேரலையையும் பார்த்தது இல்லை.

எனவே, இப்படம் மூலம் காண வாய்ப்புக்கிடைத்தது.

The Perfect Storm படமும் இதைவிடப் பயங்கரமாக இருக்கும், படமும் மிகப்பெரிய வெற்றி ஆனால், The Finest Hours படமே என்னைக் கவர்ந்தது.

அனைவரையும் இப்படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். Hotstar ல் உள்ளது.

Directed by Craig Gillespie
Screenplay by Scott Silver, Paul Tamasy, Eric Johnson
Based on The Finest Hours: The True Story of the U.S. Coast Guard’s Most Daring Sea Rescue by Michael J. Tougias and Casey Sherman
Starring Chris Pine, Casey Affleck, Ben Foster, Holliday Grainger, John Ortiz, Eric Bana
Music by Carter Burwell
Cinematography Javier Aguirresarobe
Edited by Tatiana S. Riegel
Production company Walt Disney Pictures, Whitaker Entertainment, Red Hawk Entertainment
Distributed by Walt Disney Studios, Motion Pictures
Release date January 25, 2016 (TCL Chinese Theatre), January 29, 2016 (United States)
Running time 117 minutes[1]
Country United States
Language English

Read : 6 Underground (2019) மிரட்டல் சண்டை

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, பொதுவாக எனக்கு இது போல படங்களில் ஆர்வம் ரொம்ப குறைவு .. காரணம் யதார்த்தமான படங்களை மட்டும் அதிகம் விரும்புவேன் .. கிராபிக்ஸ் , விஎஸ் , அனிமேஷன் படங்களில் அதிக ஆர்வமில்லை கிரி..

  2. யாசின் நீங்க தவறா புரிந்து கொண்டீர்கள். இது அனிமேஷன் கிராபிக்ஸ் படமில்லை.

    இயல்பான படம் தான். இதில் வரும் காட்சிகளைக் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜம் போலக் காட்ட முடியாது. அதற்காக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எனக்கும் அனிமேஷன் படங்களில் ஆர்வமில்லை, உடன் சூப்பர் ஹீரோ படங்களிலும்.

  3. அருமையான விமர்சனம்.. நானும் பார்க்கிறேன்.

    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!