பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கத் திமுகப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாலு, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் சென்ற போது, தலைமை செயலாளர் தங்களை மட்டப்படுத்திப் பேசி விட்டார் என்று குற்றம் சாட்டினார்கள்.
தயாநிதியிடம் தலைமை செயலாளர் என்ன சொன்னார் என்பதை TR பாலு விளக்கக் கேட்க, ‘எங்களை மூன்றாம் தர மக்களைப் போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா?‘
என்று தயாநிதி கூறினார்.
இவர்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு வைக்கச்சென்று, பட்டியலின மக்களை இழிவுபடுத்தித் தயாநிதி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். Image Credit
இவர்கள் கூறியதே பெரிய சர்ச்சையாக இருக்க, அதற்குத் திருமாவளவன் அவர்கள் கூறிய கருத்து இன்னும் பலருக்குக் கடுப்பை கிளப்பி விட்டது.
மீசையை முறுக்காத திருமா
‘தலைமைச்செயலாளர் குறித்துத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’ என்றது அதிர்ச்சியளிக்கிறது.
அதில் உள்நோக்கமில்லை என்றாலும், இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்.‘ என்று திருமா ட்வீட் போட்டார்.
இதையே திமுக அல்லாத ஒரு நபர் கூறியிருந்தால், திருமா இந்நேரம் தீயை மிதித்தது போலக் குதித்து இருப்பார் ஆனால், வேண்டப்பட்டவர்கள் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் ‘தோழமை சுட்டுதல்‘. நல்லா இருக்கு உங்க நியாயம்.
இதோடு மொத்த ஊடகங்களும், ட்விட்டர் போராளிகளும் கொந்தளித்து ஒரு வாரத்துக்கு இதையே பேசிக் கதறி இருப்பார்கள்.
ஆனால், ஊடகங்களில் தற்போது இதைப் பற்றிய விவாதங்களே இல்லை, எதோ பேருக்குச் செல்லமாகத் தட்டி பேசிக்கொண்டு உள்ளார்கள், திருமா போல.
ட்விட்டர் போராளிகள் எதுவுமே நடக்காதது போல உள்ளனர்.
எவ்வளவு கேவலமான செயல்!
யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம்!
ஆக, இவர்களுக்கு யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம், என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. இதெல்லாம் ஒரு பிழைப்பா!
கொஞ்ச நாள் முன்னாடி தான் RS பாரதி ‘பட்டியலின மக்கள் நீதிபதியானது திமுக போட்ட பிச்சை‘ என்று கூறினார். அதற்கும் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லை, அதன்பிறகும் அடங்காமல் அவர் பேசியதற்கும் எதிர்ப்பு இல்லை.
இவையெல்லாத்தையும் விட, ஊடகங்களைக் காறித்துப்பி இருந்தார், ஊடகங்களோ யாரையோ சொல்வது போலவும், தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லையென்பது போலவும் அமைதியாக இருந்தார்கள்.
இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை எதுவுமில்லை ஆனால், விவாதங்களில் மட்டும் வாய் கிழிய பேசுவது.
திருமா அவர்களே!
ஒரு பாராளுமன்றப் பதவிக்காக மானத்தை விட்டு வாழ்வதற்கு எதற்கு மீசையை முறுக்கிக்கொண்டு இருக்க வேண்டும் திருமா அவர்களே!
‘அமைதிப்படை’ படத்தில் மணிவண்ணன் மீசையை முறுக்கிக்கொண்டு இருப்பதை சத்யராஜ் பார்த்து, ‘மணியா! கள்ளு குடித்தா வாயை எப்படித் துடைப்பே‘ என்று கேட்டதும் மணிவண்ணன் செய்து காட்டுவார்.
முறுக்கிய மீசை இறங்கி விடும். ‘இனி இப்படியே இருக்கட்டும்‘ என்று கூறி விடுவார். திருமாவும் இதைச் செய்து பார்க்கலாம்.
மீசையை முறுக்கிக் காட்டுவதல்ல வீரம், தவறு செய்தால் தைரியமாக எவரையும் தட்டிக் கேட்பதன் பெயர் தான் வீரம்.
திருமா! அது உங்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை என்பது கசப்பான உண்மை.
தொடர்புடைய கட்டுரைகள்
ஊடகத்துக்கு ஆர் எஸ் பாரதி ‘பொளேர்’
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பொதுவாக நீங்க எதுக்கும் தீவிரமாக பொங்கக்கூடிய நபர் இல்லையே? இப்போது இந்த விசயத்தில் நேரிடையாக போட்டுத் தாக்கியத்திற்குக் காரணம் என்ன? (பின்குறிப்பு நாலைந்து நாட்கள் கழித்து இதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்)
அப்படியில்லை ஜோதிஜி. அடிக்கடி நான் இது போல எழுதும் நபரல்ல ஆனால், இணைப்பில் உள்ள கட்டுரைகளும் இது போல எழுதப்பட்டது தான்.
எல்லாத்துக்கும் பொங்கிக்கொண்டு இருந்தால், அதற்கு மதிப்பு இருக்காது. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.
ஆளுக்கொரு நியாயம் என்று இவர்கள் நடந்து கொள்வதாலையே கடுப்பு ஏற்படுகிறது, வேறு ஒன்றுமில்லை.
நான் கேட்டதில் தவறு இருந்தால் சொல்லுங்க.. திருத்திக்கொள்கிறேன்.
உங்கள் அன்பான வேண்டுகோள் ஏற்கப்பட்டது 🙂 .
திருமா தொழுகை செய்யும் படத்தைப் பார்த்தவுடன் நீங்க புரிந்து கொள்ள வேண்டும். பெரும் பாலும் அவர்சாதியைச் சார்ந்தவர்களின் 90 சதவிகிதம் பேர்கள் பெந்தகோஸ் கிறிஸ்துவ பிரிவில் தான் இருக்கின்றார்கள். செல்கின்றார்கள். இவர் மட்டும் ஆளுர் ஷா நவாஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றார். உடனடி பதிலுக்கு நன்றி.
நேற்று ஜோதிமணியை கரு நாகராஜன் என்பவர் ஆபாசமாக விமர்சித்தார் என்று மொத்த ஊடகமும், இதே திருமாவளவனும் பொங்கினார்கள்.
ஆனால், ஒரு சமூகத்தையே இழிவு படுத்திய தயாநிதிக்கு வெறும் தோழமை சுட்டுதல்.
இவங்க கிட்ட இந்த வித்யாசம் தான் கடுப்படிக்கிறது.