Tailgate (2019 Dutch) | சைக்கோ துரத்தல்

2
Tailgate movie

Bumperkleef என்ற பெயரில் நெதர்லாந்தில் வெளியாகி Tailgate என்று மற்ற நாடுகளில் வெளியாகிய படம். Image Credit

Tailgate

பொறுமையின்மை, அவசரம், கோபம், ஈகோ, வாக்குவாதம் அதனால் ஏற்படும் விளைவுகளே Tailgate. இதுவொரு Road Movie.

சைக்கோ

Jeroen தன் வயதான தாய் தந்தையைப் பார்க்கத் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் காரில் பயணிக்கிறார்.

நெடுஞ்சாலையில் முன்னே செல்லும் வாகனம் வழி கொடுக்காமல் சென்றதால், கடுப்பாகும் Jeroen ஒரு வழியாக அவரைத் தாண்டிச் செல்லும் போது அந்த வாகனத்தில் உள்ள Willem இடம் கோபமாகச் சைகை காட்டி செல்கிறார்.

இதனால், கடுப்பான Willem இவர்களைத் துரத்திப் பழி வாங்குகிறார்!

Willem சைக்கோத்தனமாக நடந்து கொள்கிறார். அதாவது ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு மிகப்பெரிய தொல்லைகளைக் கொடுக்கிறார். அவரின் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுகிறார்.

Jeroen உடன் பயணிக்கும் அவரது குடும்பத்தினரும் பாதிப்படைகிறார்கள்.

குடும்பம்

Tailgate எனக்கு திருப்பியளிக்கவில்லை காரணம், ஒரு சின்னப் பிரச்சனைக்கு இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்பதோடு, முடிவு திருப்திகரமாக இல்லை.

இப்படத்துக்கு விமர்சனம் எழுதக்காரணமே கணவன் மனைவியாக நடித்தவர்களின் உரையாடல்களும், சண்டைகளுமே. அப்படியொரு எதார்த்தமாக இருந்தது.

நெதர்லாந்து கதை என்றாலும், பதட்டத்தில் இவர்கள் பேசுவது, சண்டையிட்டுக்கொள்வது ஒரு சராசரி இந்தியக்குடும்பத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. கணவன் மனைவி எங்கே இருந்தாலும் ஒரே மாதிரி தான் போல 🙂 .

துவக்கத்திலேயே இந்தியக்கணவனின் மனநிலையை Jeroen பிரதிபலித்து விடுகிறார். மனைவியின் பேச்சுகளும், பதட்டங்களும் அதையே பிரதிபலிக்கின்றன.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், மனைவியின் விவாதங்களும், கேள்விகளும் நம்ம ஊர் படங்களை அல்லது நம் குடும்பங்களில் சண்டையைப் பார்ப்பது போலவே இருந்தது. ஈகோவால் தான் பிரச்சனையே ஆரம்பிக்கும்.

படத்தில் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் நம்மோடு பொருத்திப்பார்க்க முடியும்.

ஒவ்வொரு நிலையிலும் நாம் என்ன பேசுவோம், செய்வோம் என்பதையே பொருத்திப் பார்த்தேன். இதுவே விமர்சனம் எழுதத் தூண்டியது.

ஒளிப்பதிவு அப்பகுதி உட்கட்டமைப்பை, இயற்கை அழகைக்காட்டுகிறது ஆனால், என்ன ஆகுமோ என்ற பதட்டத்தால் இயற்கையை ரசிக்க முடியவில்லை 🙂 .

யார் பார்க்கலாம்?

அனைவருக்கும் பிடித்தமான படமில்லை ஆனால், மேற்கூறிய விவாதங்கள், சூழ்நிலைகள், சண்டைகள், நடவடிக்கைகளில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினால், படத்தைப் பார்க்கலாம்.

மற்றவர்கள் விலகி இருப்பது நலம்.

Tailgate பார்த்தபிறகு தேவை இல்லாமல் வாயையும், கையையும் வாடகைக்கு விடக் கூடாது என்பதில் உறுதியாகி விட்டேன் 😀 .

கார் வைத்துள்ளவர்கள் பார்க்க முயற்சிக்கவும்.

Amazon Prime ல் உள்ளது.

தமிழில் பார்க்கும் போது முழுமையான உணர்வைப் பெற முடியாததால், பாதிக்குப் பிறகு Dutch மொழிக்கே மாற்றி ஆங்கில சப்டைட்டில் வைத்துக்கொண்டேன்.

Director Lodewijk Crijns
Writer Lodewijk Crijns
Starring Jeroen Spitzenberger, Anniek Pheifer, Willem de Wolf
Music by Steve Willaert
Cinematography by Bert Pot
Editing by Bert Jacobs
Release date 31 October 2019
Countries of origin Netherlands
Runtime 1 hour 26 minutes
Language Dutch

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. விமர்சனத்தை பாதி படிக்கும் போது, படத்தை பார்க்க வேண்டாம் என்று தோன்றியது. படித்து முடித்த உடன் படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.. உங்கள் எழுத்துக்களை மிகவும் கவனமா கையாளுவதை உணர முடிகிறது..

    நெதர்லாந்து கதை என்றாலும், பதட்டத்தில் இவர்கள் பேசுவது, சண்டையிட்டுக்கொள்வது ஒரு சராசரி இந்தியக்குடும்பத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. கணவன் மனைவி எங்கே இருந்தாலும் ஒரே மாதிரி தான் போல.. மனிதன் கால்படாத இடங்களிலும் இவ்வாறு தான் இருக்கும் போல..

    ஒவ்வொரு நிலையிலும் நாம் என்ன பேசுவோம், செய்வோம் என்பதையே பொருத்திப் பார்த்தேன். இதுவே விமர்சனம் எழுதத் தூண்டியது. – மிக சரியான காரணம்..

    Tailgate பார்த்தபிறகு தேவை இல்லாமல் வாயையும், கையையும் வாடகைக்கு விடக் கூடாது என்பதில் உறுதியாகி விட்டேன் – நம்ம இந்த விஷியத்தில் எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருப்பேன்.. படித்த பிறகு கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “உங்கள் எழுத்துக்களை மிகவும் கவனமா கையாளுவதை உணர முடிகிறது.”

    🙂 நன்றி.

    “மிக சரியான காரணம்..”

    படத்தில் முடிவு எடுக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். இதை நாம் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்போம் என்று ஒப்பிட்டு பார்த்தேன்.

    வெளியே இருந்து ஆயிரம் அறிவுரை கூறலாம் ஆனால், அந்த நிலையில் இருக்கும் போதே அதன் நெருக்கடி புரியும்.

    “இந்த விஷியத்தில் எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருப்பேன்.”

    யாசின் நீங்க சொல்லவே வேண்டாம் 🙂 . நீங்க எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் என்று எனக்கு மட்டுமல்ல.. இங்கு படிக்கிற பலருக்கும் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here