Sisu (2022 Finnish) | வல்லவனுக்கு வல்லவன்

2
Sisu movie

1944 ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த போது Finland ல் நடக்கும் சம்பவமாக Sisu. Image Credit

Sisu

தங்கத்தைக் கண்டறிந்து அதை விற்று வாழ்க்கை நடத்தும் Joma, அவருடன் துணையாக ஒரு குதிரை, நாய்.

தங்கத்தை எடுத்துச் செல்லும் வழியில் ஜெர்மனியின் நாஜிப்படை அவரைக் கடந்து செல்லும் போது, அவர்களால் தங்கத்துக்காகத் தாக்குதலுக்குள்ளாகிறார் Joma.

இறுதியில் என்ன ஆனது? தங்கத்தைக் காப்பாற்ற முடிந்ததா? என்பதே Sisu.

அதிரடி சண்டை

இப்படம் சண்டைக்காட்சிகளை மனதில் வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. எனவே, படம் முழுக்கவே சரவெடி சண்டைக்காட்சிகளாக உள்ளது.

Joma வயதானவராக இருந்தாலும், சண்டையில் வெளுத்து வாங்குகிறார். அவரது தாடியுடனான தோற்றமும் பார்க்கவே மிரட்டலாக, மாஸாக உள்ளது.

ஜெர்மன் கேப்டன் துவக்கத்தில் பாவம் பார்ப்பவர் போலத் தோன்றினாலும் கருணையே இல்லாத நபராக இறுதி வரை மிரட்டுகிறார்.

போர் என்றாலே பாவம் புண்ணியம் கிடையாது. நினைத்தால் கண்ணில் எதிர்ப்படுபவர்களைக் கொல்லலாம், யாரும் எதுவும் கேட்க முடியாது.

இரண்டாம் உலகப்போர் போன்ற காலங்களில் நடந்தவற்றை வரலாறு அறியும். பாலியல் தேவைகளுக்காகவே பெண்களையும் ஒரு ட்ரக்கில் கடத்தி வருவார்கள்.

கருணையே இல்லாத இவர்களிடமிருந்து தங்கத்தை அதுவும் தனி ஒருவராக எப்படிக் காப்பாற்றுவது? இவர்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் என்ன ஆனார்கள்?

இவற்றுக்கான பதில் சுவாரசியமாக உள்ளது.

நம்புற மாதிரி இல்லையே!

படம் முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் இருந்தாலும், Joma சண்டைக்காட்சிகள் நம்ப முடியாததாக உள்ளது.

தமிழில் அதிசய மனிதன் என்ற ஒரு படம் வந்தது. என்ன செய்தாலும் சாக மாட்டார் அஜய் ரத்தினம். அது மாதிரி கதாபாத்திரமாக Joma உள்ளார் 🙂 .

ஏங்க! இதெல்லாம் நம்புறமாதிரியாங்க இருக்கு?! என்று தான் தோன்றுகிறது.

இப்படம் விமர்சன ரீதியாகப் பலரைக் கவர்ந்துள்ளது ஆனால், வசூலில் பெரியளவில் சாதிக்கவில்லை. அதற்குக் காரணம், மேற்கூறியதே.

இந்தளவுக்கு நம்ப முடியாத மாதிரி எடுத்ததற்கு, காட்சிகளில் மாற்றம் செய்து இருந்தால், மேலும் பலரைக் கவர்ந்து இருக்கும்.

படத்தின் ஒளிப்பதிவு அற்புதமாக உள்ளது. 1944 காலம் என்பதால், அதற்குண்டான சூழ்நிலையைக் காட்சிகள் பிரதிபலிக்க வேண்டும்.

இது போர் படம் அல்ல ஆனால், இராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் ஒரு நபரின் கதை. இருப்பினும், விமானம், குற்றங்கள், டாங்கி, கண்ணி வெடிகள் போன்றவை போர்க் காலத்தைக் கண் முன்னே நிறுத்துகிறது.

யாருடைய தொந்தரவும் இல்லாமல், அமைதியான இடத்தில் சத்தம் வைத்துக் கேட்டால், பின்னணி இசை அசத்தலாக இருக்கும்.

யார் பார்க்கலாம்?

சண்டைக்காட்சிகளை விரும்பிப் பார்ப்பவர்கள் தவறவிடக்கூடாத சுவாரசியமான படம் ஆனால், லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது.

Amazon Prime ல் உள்ளது ஆனால், Rent ₹99. அமேசான் தற்போது பல படங்களை Rent ஆக்கி மொள்ளமாரித்தன வேலை செய்து வருகிறது.

₹1499 பணத்தையும் வாங்கிக்கொண்டு, பல வெளிநாட்டுப் படங்களைக் கட்டணம் செலுத்திப் பார்க்கும்படி மாற்றி விட்டது.

பரிந்துரைத்தது யாசின்.

Directed by Jalmari Helander
Written by Jalmari Helander
Produced by Petri Jokiranta
Starring Jorma Tommila, Aksel Hennie, Jack Doolan,
Cinematography Kjell Lagerroos
Edited by Juho Virolainen
Music by Juri Seppä, Tuomas Wäinölä
Release dates 9 September 2022 (TIFF) 27 January 2023 (Finland)
Running time 91 minutes
Countries Finland, United States
Languages English, Finnish

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. என்னை பொறுத்தவரை படம் வெற்றி படமா? பெரிய ஹீரோவா? படத்தின் வசூலா? என்ற பாகுபாடு எப்போதும் இல்லை.. படத்தை பார்த்து முடிக்கும் போது ஒரு உணர்வு ஏற்பட வேண்டும்.. அது மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, கண்ணீராகவோ, சிரிப்பாகவோ, இறுகிய மனநிலையையோ, ஏற்படலாம்..

  இந்த உணர்வுகளின் வெளிப்பாடு தான் எனக்கு முக்கியம். பொதுவாக எந்த படம் தொடங்கியும் 10 நிமிடம் கடந்து ஒரு ரசிகன் படத்தோடு ஒன்றிவிட்டால் படம் வெற்றி என்பது திரைத்துறையில் இயல்பான கருத்து.

  ஒரு ரசிகனின் பார்வையில் இயல்பாக தன்னால் செய்ய முடியாத ஒன்றை ஒரு ஹீரோ திரையில் செய்கிறான்.. குரல் கொடுக்கிறான் எனும் போது அதை ஏற்று கொள்ளமுடிகிறது.. இதில் லாஜிக் எல்லாம் பார்பதில்லை.. எப்படியும் ஹீரோ எவ்வளவு அடி வாங்கினாலும் இறுதியில் வெற்றி பெற்று விடுவான் என்பதை படம் பார்க்கும் போது தெரிந்தாலும், அதை திரைக்கதையில் கொண்டு வரும் சுவாரசியம் தான் இயக்குனரின் வெற்றி..

  SISU படம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்க தொடங்கி, படத்தோட 5 ஆவது நிமிடம் நான் படத்தோட ஒன்றி விட்டேன்.. அதுவும் உலக போர் காலகட்டம்.. படத்தோட காட்சியமைப்பு, இடங்கள் எல்லாம் செம்மையாக இருந்தது.

  படத்தோட இயக்குனருக்கு, ஹீரோ மச்சான் என்பதால் சும்மா சண்டை காட்சிகளில் சமரசமில்லாமல் எடுத்து இருக்கிறார். இந்த ஆண்டில் நான் பார்த்த படங்களில் முதலிடத்தை இந்த படத்திற்கு கொடுக்கிறேன்.. மேலும் அடிக்கடி பார்க்க வேண்டிய பட்டியலிலும் சேர்த்து விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேபாள படமும் / செங்கிஸ்க்கான் வாழ்க்கை வரலாற்று படமும் பார்த்தேன்.. எப்பா என்ன படம் கிரி..!!!! ஒரு துறவி வாழ்வை துறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி செல்லும் மனிதனை குறித்த படம்.. மீண்டும் பல முறை முயற்சித்தும் என்னால் இரு படங்களின் பெயர்களை நினைவில் கொள்ள முடியவில்லை.. செங்கிஸ்கான் வாழ்க்கை குறித்து பல படங்கள் இருப்பதால் நான் பார்த்த படம் எது என்பதை என்னால் கண்டு கிடைக்க முடியவில்லை.. படம் மட்டும் நினைவில் இருக்கிறது..

 2. @யாசின்

  “பொதுவாக எந்த படம் தொடங்கியும் 10 நிமிடம் கடந்து ஒரு ரசிகன் படத்தோடு ஒன்றிவிட்டால் படம் வெற்றி என்பது திரைத்துறையில் இயல்பான கருத்து.”

  சில படங்கள் துவக்கத்தில் சிறப்பாக இருக்கும், பின்னர் சலிப்பாக இருக்கும். இது போன்ற படங்களே இறுதி வரை பரபரப்பாக உள்ளன.

  “இதில் லாஜிக் எல்லாம் பார்பதில்லை.. எப்படியும் ஹீரோ எவ்வளவு அடி வாங்கினாலும் இறுதியில் வெற்றி பெற்று விடுவான் என்பதை படம் பார்க்கும் போது தெரிந்தாலும், அதை திரைக்கதையில் கொண்டு வரும் சுவாரசியம் தான் இயக்குனரின் வெற்றி..”

  நானும் சில படங்களில் லாஜிக் பார்ப்பதில்லை ஆனால், இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டு.

  எடுத்துக்காட்டுக்கு இப்படத்தையே எடுத்துக்கொண்டால், நம்ப முடியாத காட்சிகளை வைக்கலாமலே சுவாரசியமாக கொண்டு சென்று இருக்க முடியும்.

  ஆனால், அவர்கள் முயற்சிக்கவில்லை.

  “மேலும் அடிக்கடி பார்க்க வேண்டிய பட்டியலிலும் சேர்த்து விட்டேன்.”

  நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் Taken & equalizer

  “செங்கிஸ்கான் வாழ்க்கை குறித்து பல படங்கள் இருப்பதால் நான் பார்த்த படம் எது என்பதை என்னால் கண்டு கிடைக்க முடியவில்லை.”

  🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here