எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து, அசரடித்த படம் ஓ! பேபி.
ஓ! பேபி
பாட்டியான லட்சுமி, குடும்பத்தில் ஏற்பட்ட சில மனவருத்தங்களால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
தன் இளம்பருவத்தைத் திடீர் என்று பெற்று, இளம் வயது சமந்தாவாக மாறுகிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
கதை அதகளமாக இருக்கிறது. உண்மையிலேயே சிறப்பான கற்பனை.
சமந்தா தோற்றத்துக்கு இளமையாகவும் நடையில், எண்ணத்தில் இன்னும் அதே லட்சுமியாக இருப்பது கலகலப்பு. குறிப்பாகச் சமந்தா, வயதான லட்சுமி நடப்பது போல நடப்பது செம்ம 🙂 .
தன் பேரனே தன்னை (சமந்தா) காதலிக்க முயல்கிறானோ என்று திகிலடைவது நகைச்சுவை. எதிர்பார்த்தது தான் நடந்தது என்றாலும் சுவாரசியமாக இருந்தது.
மற்றவர்கள் இவரை இளம் பெண்ணாக நினைத்துப் பேச, பழக அவரோ வயதான பெண்ணின் முதிர்ந்த மனநிலையிலிருந்து பேசுவது செம்ம நகைச்சுவை.
திரையரங்கில் பார்த்து இருந்தால், இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.
வயதானவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை கால் வலி, நடக்க முடியாதது. லட்சுமி, சமந்தாவானதும் ஓடி ஓடி மகிழ்ச்சியடைவது செம்ம ரகளை 😀 .
கற்பனைக் கதை
இந்தக் கற்பனைக் கதையை எவரும் செய்யலாம். அதாவது இதை எவர் யோசித்து இருந்தாலும், சுவாரசியமான திரைக்கதையாக்கி இருக்க முடியும்.
எளிமையான, ஏன் இதை யாருமே முன்னர் யோசிக்கவில்லை என்று நினைக்கும் கதை. இப்படம் தென் கொரிய படமான ‘Miss Granny’ யின் மறு உருவாக்கம்.
ஒரு பாட்டி, இளம் பெண்ணாகிறார் என்ற ஒரு வரி போதும், கற்பனைகளில் புகுந்து விளையாடலாம் ஆனால், இந்த (கொரிய) இயக்குநருக்குத் தோன்றி இருக்கு பாருங்க..! அசத்தல்.
சமந்தா நடிப்பில் கலக்கி இருக்கிறார். அவருக்கு இந்த வேடம் நன்றாகப் பொருந்தியுள்ளது. அதைவிட இவர் மிகை நடிப்பு இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.
தெலுங்கு பட டப்பிங் என்றாலே, அதற்கு ஊசி பாசி விற்பவர்களைப் போலவே பேசும்படியான டப்பிங் செய்வதேன்? எனக்கு இது புரியாத புதிர்!
இயல்பான உரையாடலிலேயே படத்தை டப்பிங் செய்யலாமே!
இது மட்டுமே கொஞ்சம் கடுப்பாக உள்ளது, மற்றபடி அசத்தலான படம்.
லாஜிக் எல்லாம் தேடி புத்திசாலியாக யோசிக்காமல், இரண்டரை மணி நேரங்கள் கலகலப்பாக இருக்க இப்படம் உத்தரவாதம் தருகிறது.
ரொம்ப நாளைக்குப் பிறகு நான் திருப்தியாகப் பார்த்த படம் ஓ! பேபி. ஊருக்குச் செல்லும் போது அம்மாக்கு இப்படத்தைக் காண்பிக்க வேண்டும். ரொம்ப ரசிப்பார்கள்.
அம்மா கூட இச்சம்பவம் போல நடந்தால், முழங்கால் வலியுள்ள நிலையில், எல்லாப் பக்கமும் ஓடி, ஏறி மகிழ்ச்சியடைவார்கள் என்று நினைக்கிறேன் 🙂 .
அனைவரையும் தவறாமல் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் பாசத்தையும் ஓ! பேபி அழகாக விளக்குகிறது.
Directed by B. V. Nandini Reddy
Produced by D. Suresh Babu, Sunitha Tati, T.G.Vishwa Prasad, Hyunwoo Thomas Kim
Written by Lakshmi Bhupala (dialogues)
Screenplay by B. V. Nandini Reddy
Based on Miss Granny by Shin Dong-ik Hong Yun-jeong Dong Hee-seon
Starring Samantha Akkineni, Lakshmi, Naga Shaurya, Rajendra Prasad
Music by Mickey J. Meyer
Cinematography Richard Prasad
Edited by Junaid Siddique
Release date 5 July 2019
Running time 161 minutes
Country India
Language Telugu
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நான் தெலுங்கு படத்தோடு இங்கிலீஷ் subtitle உடன் பார்த்தேன்
நன்றி கில்லாடி.
கண்டிப்பா படம் பார்த்துடுவோம் 🙂 படம் விமர்சனம் இப்போ கம்மி ஆகிடுச்சு 🙁
மனைவி, பையன் ஊருக்கு போனதற்கு பிறகு கிரிக்கெட்க்கு பின் உள்ள ஒரே பொழுதுபோக்கு படங்கள் பார்ப்பது.. நண்பர் ஒருவருக்கு எல்லா படங்களையும் பார்த்தே ஆக வேண்டும்.. குடும்பம் இருக்கும் போது அடிக்கடி கூப்பிட்டாலும் நான் எதாவது காரணம் சொல்லி தட்டி கழிப்பேன்..
தற்போது சொல்ல எந்த காரணமும் இல்லை… நேர் கொண்ட பார்வை, காப்பான், அசுரன், கைதி.. என் தொடர்ந்து படங்களை பார்த்து விட்டேன்.. 12 வருசத்துல 4 படம் தொடர்ந்து திரையரங்கில் பார்த்ததே இல்லை.. பேபி படமும் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.. முக்கிய காரணம் வித்தியாசமான கதை களத்துக்காக மட்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
//திரையரங்கில் பார்த்து இருந்தால், இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.//நீங்கள் எதில் பார்த்தீர்கள்.?!
@பார்த்தசாரதி முடிந்தால் தமிழிலும் பாருங்கள்.. நன்றாக இருந்தது. டப்பிங் மட்டும் கொஞ்சம் எரிச்சல்.
@விஜய் கண்டிப்பாக பாருங்க.
ஆமாம் கேப்டன். படம் பார்க்க நேரமில்லை. வார இறுதியில் சில வாரம் ஊருக்கு சென்று விடுகிறேன்.. அதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் வார இறுதியில் தான் பார்ப்பேன்.
@யாசின் பெரிய விஷயம்.. படமெல்லாம் பார்க்க ஆரம்பித்துட்டீங்க 🙂
@தேவா Einthusan தளம். இதில் நான் கட்டணம் செலுத்தி இருக்கிறேன். இது அல்லாமல் NETFLIX, Prime Video , Hotstar அனைத்திலும் உறுப்பினராக உள்ளேன்.