பண்ணையாரும் பத்மினியும் [2014] A feel good movie

15
பண்ணையாரும் பத்மினியும்

குறும்படமாக வெளிவந்த கதையைப் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படமாக எடுத்து இருக்கிறார்கள்.

ஒரு பண்ணையாருக்கு தற்காலிகமாக ஒருவர் தனது பத்மினி காரைப் பார்த்துக்க கூறி கொடுத்துச் செல்ல, அதன் மீது காதலாகிறார்கள் பண்ணையாரும் அவரது ஓட்டுனரும்.

இறுதியில் பத்மினி கார் என்ன ஆனது? என்பதை ரொம்ப அழகாக கூறி இருக்கிறார்கள்.

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையார் ஜெயபிரகாஷ் மற்றும் துளசி தம்பதியினர் கிராமத்தில் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக இருப்பவர்கள். Image Credit

கதை கொஞ்ச காலம் பின்னாடி நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. கிராமத்தில் எதையுமே இவர் தான் முதலில் வாங்கி அறிமுகப்படுத்துவார்.

இப்படிப் பட்டவர் வீட்டிற்கு பத்மினி காரைப் பார்த்துக்க கூறி அவரது உறவினர் கொடுத்து விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.

இதற்கு ஓட்டுனராக வருபவர் தான் விஜய்சேதுபதி. திரும்ப ஒருமுறை கதையின் நாயகனாக வந்து இருக்கிறார். ரம்மியில் விட்டதை இதில் பிடித்து விட்டார்.

ஜெயபிரகாஷ் விஜய்சேதுபதி

இவரும் ஜெயபிரகாஷும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.

இரண்டு பேருமே காரின் மீது ரொம்ப பிரியமாக இருப்பார்கள். படம் பார்க்கப் பார்க்க நாமும் அந்தக் காரின் மீது காதலாகி விடுவோம் என்பது இதன் திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.

அந்த மேஜிக்கை இந்தப் படத்தின் திரைக்கதை கொண்டு வருகிறது.

ஜெயபிரகாஷ் கார் ஓட்டப் பழக விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கோ எங்கே இவர் பழகினால் நம்மை ஓட்டுனராக இருப்பதிலிருந்து கழட்டி விட்டு விடுவாரோ என்று வேண்டும் என்றே கார் ஓட்டப் பழக்குவதை தாமதப் படுத்துவார்.

ஒரு காட்சியில் ஜெயபிரகாஷ் கார் ஓட்டிப் பழகும் போது ஒரு பாறையில் மோதி விடுவார்.

உண்மையிலேயே அவர்களை விட படம் பார்த்தவர்கள் தான் பதட்டம் ஆகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், நான் உட்பட 🙂 .

முதுமைக்காதல்

ஜெயபிரகாஷ், துளசி அன்பு காதல் படத்தின் பலம்.

கல்லூரிக் காதல், பள்ளிக்கூட காதல் என்று போய்க்கொண்டு இருக்கும் காலத்தில் இவர்களின் காதல் படம் பார்க்கும் எவரையும் ரசிக்க வைக்கும்.

இருவரின் அன்பையும் காதலையும் அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தெரியாதது போல அன்பை வெளிப்படுத்துவது அருமை.

விஜய் சேதுபதி ஒரு ஓட்டுனர் என்பது மட்டுமல்ல, முதலாளி ஜெயபிரகாஷை விடக் காரை அதிகமாக காதலிப்பார்.

காரின் சொந்தக்காரர் வந்து கேட்டு விட்டால் என்ன பண்ணுவது என்று இருவரும் கவலைப்படுவது, ரொம்ப எதார்த்தமான நடிப்பு.

ஜெயபிரகாஷ் பெண்ணாக நீலிமா. இவருக்கு வேலையே ஒவ்வொருமுறை கணவருடன் வரும் போதும் ஏதாவது ஒரு பொருளை இங்கே இருந்து கேட்டுப் பெறுவது தான்.

எனக்குப் பெரிய சந்தேகம்?! இந்த நீலிமாக்கு வயசே ஆகாதா!!

ஜெயபிரகாஷ் பண்ணையில் வேலை செய்யும் நபருமாக கார் க்ளீனருமாக!!! வரும் ஒரு நபர் பட்டப் பெயர் பீடை.

இவர் என்ன வாழ்த்தினாலும் புட்டுக்கும் 🙂 . நகைச்சுவைக்கு இவர் தான். நன்றாக நடித்து இருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவி இருக்கிறார்.

ஐஸ்வர்யா

விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யா (ரம்மி கதாநாயகி), நல்ல பொருத்தம். இவர்களின் பகுதியும் ரசிக்கும் படி இருக்கிறது. பாவாடை தாவணியில் இவரைப் பார்க்க ரொம்ப நன்றாக உள்ளது.

சினேகா நட்புக்காக சில நிமிடங்கள் வந்து செல்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் ரொம்ப நன்றாக நடித்து இருந்தார், அனுபவம் பேசுகிறது.

இவரைப் போல அட்டகத்தி தினேஷ். இவரின் கதை கூறுவதில் தான் படமே தொடங்குகிறது.

கடைசியில் சில நிமிடமே வருகிறார் ஆனால், அந்த சில நிமிடங்களிலும் பல முகபாவனைகளைக் காட்டி பச்சக்குன்னு மனதில் ஒட்டிக்கொள்கிறார். நிஜமாகவே!

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக இருந்தது. நான் பார்த்தது பெரிய திரையரங்கம் என்பதால், ரொம்ப ரசித்துப் பார்த்தேன்.

பாடல்களை நான் முன்பு கேட்கவில்லை என்பதால் இது பற்றிக் கூற முடியவில்லை. பின்னணி இசை இரைச்சலாக இல்லாமல் இருந்தது.

படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால், இன்னும் நன்றாக இருந்து இருக்கும். காட்சிகள் எளிதாக ஊகிக்க முடிகிறது.

திரைக்கதை தான் படத்தின் பலம். வெறும் காரை மட்டும் வைத்துக்கொண்டு சுவாரசியமாக ஒரு படத்தைக் கொடுப்பது என்றால் சாதாரண விசயமில்லை.

ஆபாசமில்லை, குத்துப் பாடல்கள் இல்லை, வெறுப்பான காட்சிகள் இல்லை, கடுப்பான நகைச்சுவை இல்லை, ஹீரோயிசம் இல்லை, வெளிநாட்டுப் பாடல்கள் இல்லை, ஹீரோயினை மோப்பம் பிடிக்கும் வேலை இல்லை. கதை உள்ளது, அருமையான திரைக்கதை உள்ளது, படம் நெடுக அன்பு உள்ளது, ரசிப்புத் தன்மை உள்ளது, கதையோட நகைச்சுவை உள்ளது. இதுக்கு மேல வேற என்னங்க வேண்டும்?

குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். கார் வைத்துள்ளவர்கள் குறிப்பாக காரை ரசித்துப் பராமரிக்கிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Directed by Arun Kumar
Produced by M R Ganesh
Screenplay by Arun Kumar
Story by Arun Kumar
Starring Vijay Sethupathi, Jayaprakash Iyshwarya Rajesh
Music by Justin Prabhakaran
Cinematography Gokul Benoy
Editing by A. Sreekar Prasad
Studio Magicbox Films
Release dates February 7, 2014
Country India
Language Tamil

கொசுறு

சிங்கப்பூர் ரெக்ஸ் திரையரங்கில் தான் இந்தப் படம் பார்த்தேன். AC குளிர் தாங்க முடியவில்லை.

இங்கே படம் பார்ப்பது என்றால் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு தான் வர வேண்டும் போல இருக்கிறது. படம் முடிந்து சிலர் கை தட்டினார்கள்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

15 COMMENTS

  1. உங்க ரிவியூ அருமை. விமர்சனம் எழுதுவதிலும் அதில் உங்கள் கருத்தையும் அவ்வப்போது ஏற்றுவதிலும் உங்கள் திறமை பளிச்.. வாழ்த்துகள் – உங்களுக்கும் ப.ப. குழுவினருக்கும்.

  2. நான் ஏற்கனவே குறும்படம் பார்த்துருக்கேன். மிகவும் அருமையான படம். அதுவே என்னை மிகவும் கவர்ந்த படமும் கூட . கார் , பைக்கை ரசிச்சி குழந்தைபோல் வச்சி ஓட்டுபவர்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும். வெகு விரைவில் பார்பேன். விஜய் சேதுபதிக்கும் சேர்த்து பார்பேன் 🙂 . இந்த படத்தின் இசை பாராட்டப் படக்கூடியது . இளையராஜா இசை போல் இருக்கும் .

  3. கிரி. படத்தை பார்க்கவில்லை, எப்போ பார்ப்பேன் என்றும் தெரியவில்லை. ஆனால் பதிவை படித்த பின் மனம் தெளிந்த நீரோடோடையை போல் உள்ளது. (சினிமாவில் வெற்றி பெறுவது எளிதான ஒன்று. ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள்.)

    =============================

    ஆபாசமில்லை, குத்துப் பாடல்கள் இல்லை, வெறுப்பான காட்சிகள் இல்லை, கடுப்பான நகைச்சுவை இல்லை, ஹீரோயிசம் இல்லை, வெளிநாட்டுப் பாடல்கள் இல்லை, ஹீரோயினை மோப்பம் பிடிக்கும் வேலை இல்லை. கதை உள்ளது, அருமையான திரைக்கதை உள்ளது, படம் நெடுக அன்பு உள்ளது, ரசிப்புத் தன்மை உள்ளது, கதையோட நகைச்சுவை உள்ளது. இதுக்கு மேல வேற என்னங்க வேண்டும்?

    கலக்கிட்டீங்க கிரி

    ============================
    விஜய் சேதுபதியுடன், ஜெயபிரகாஷ் இனைந்து நடித்து இருப்பது இன்னும் சிறப்பான ஒன்று. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  4. ஆபாசமில்லை, குத்துப் பாடல்கள் இல்லை, வெறுப்பான காட்சிகள் இல்லை, கடுப்பான நகைச்சுவை இல்லை, ஹீரோயிசம் இல்லை, வெளிநாட்டுப் பாடல்கள் இல்லை, ஹீரோயினை மோப்பம் பிடிக்கும் வேலை இல்லை. கதை உள்ளது, அருமையான திரைக்கதை உள்ளது, படம் நெடுக அன்பு உள்ளது, ரசிப்புத் தன்மை உள்ளது, கதையோட நகைச்சுவை உள்ளது. இதுக்கு மேல வேற என்னங்க வேண்டும்?

    -அருமையான விமர்சனம் கிரி.. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் படிக்கும்போதே எழுகிறது.
    நேர்த்தியான விமர்சனம்.

  5. விமர்சனம் நன்றாக உள்ளது கிரி அவர்களே.. பல கார்களை அடித்து நொறுக்கி போடும் படங்கள் தொடர்ந்து பார்த்து வரும் மக்களுக்கு இந்த ஒற்றை காரின் கதை நிச்சயம் புது அனுபவமாகவே இருக்கும்.

  6. நல்ல படம். பீடையாக நடித்திருப்பவர்தான், குறும்படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் நடித்திருப்பார்…

  7. எப்பவும் போல அருமையான விமர்சனம் கிரி.
    போங்க பாஸ், இப்படி சொல்லி சொல்லி எனக்கே போர் அடுசுடுச்சு. இனிமேல் நீங்க நல்ல விமர்சனம் பன்னலீன மட்டும்தான் நான் கமெண்ட் போடுவேன் 🙂
    you Continue….

  8. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் நீங்கள் இருக்கும் இடத்தில் படம் வெளியாகவில்லையா? அப்புறம் நீங்க.. விஜய் சேதுபதி ரசிகரா?

    @சரத் 🙂 உங்க கமெண்ட் செம

    அப்புறம் “அவர்களே” ன்னு தயவு செய்து சொல்லாதீங்க .. கிரியே போதும்.

    @கௌரிஷங்கர் ரைட்டு

  9. கிரி, மாஸ் ஹீரோக்களை பொறுத்தவரை சூர்யாவை (நந்தா படத்துக்கு பின்) பிடிக்கும். விஜய் சேதுபதி சாதாரண நிலையில் இருந்து, இன்று உயர்ந்து இருப்பது, நமக்கு தெரிந்த ஒரு நண்பன் முன்னேறியது போல் உள்ளது. அதனால் ஒருவித பற்று, ரசிப்பு, ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.

  10. முக்கியமா படத்தில் ஒரு இடத்தில் கூட தண்ணி அடிக்கிற சீன் வரல பாத்டிக்கிங்க்களா … நான் நல்லா என்ஜாய் பண்ணி பார்த்தேன் அண்ணா
    சென்னை எஸ்கேப் சினிமாவில் பார்த்தேன் … நல்ல தியேட்டரில் நல்ல படம் பார்த்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது .. நான் போனது காலை ஒன்பது மணி காட்சிக்கு .. இதற்கு முன் எட்டு ஐம்பதுக்கு “இது கதிர்வேலன் காதல் ” பக்கத்து ஸ்கிரினில் ஓடியது ஆனால் அதுக்கு சுமாரான கூட்டம் தான் வந்தது .. இத்தனைக்கும் அன்று ஞாயிறு வேறு .. ஆனால் இந்த பண்ணையாரும் பத்மினிக்கு ஹவுஸ்புல் ஆனது .. அதிகம் குடும்பத்தினரும் சில வயதான நண்பர்களும் (எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து இருந்தனர்.வயதான நண்பர்கள் இருவர் ஒன்றாக காலைகாட்சிக்கு வருவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது )

  11. @சரவணன் & யாசின் ரைட்டு

    @கார்த்திகேயன் வயதான நண்பர்கள் என்றால் 55+ வயது இருக்குமா? BTW நீங்க சென்னையில் தான் இருக்கீங்களா?

  12. @கிரி
    அவர்களுக்கு 60 இருக்கும் அண்ணா .. நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் நண்பர்கள் போல … அவர்கள் மேனரிசம் நடை உடை பாவனை அப்படி இருந்தது

    நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன் அண்ணா
    அடிக்கடி சென்னை சென்று வருவேன் அப்படியே சத்யம் எஸ்கேப் ஏ ஜி எஸ் தேவி இந்த மாதிரி நல்ல திரையரங்குகளுக்கு சென்று நல்ல படங்களை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஏற்கனவே பார்த்த படமாக இருந்தாலும் இந்த திரையரங்குகளில் காண்பதற்கு நேரம் கிடைத்தல் பார்த்துவிடுவேன் ….அண்ணா

  13. திருவண்ணாமலை.. ரைட்டு. இங்கே ஒரு முறை வர வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். பார்ப்போம் எப்ப வர முடிகிறது என்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!