கடந்த முறை ஊருக்குச் சென்ற போது தொழில் செய்பவர்களிடம் பேசியதில் பலரும் குறிப்பிட்டது, வட மாநில தொழிலாளர்கள் இல்லையாததால் நிறுவனத்தை, கடைகளை நடத்துவது சிரமமாக உள்ளது என்பது.
வட மாநில தொழிலாளர்கள்
தமிழகம் பொருளாதாரீதியாக உயர்ந்து விட்டதாலும், மக்களின் பொருளாதாரம் மேம்பட்டதாலும் உடல் உழைப்பை அதிகம் செலவிடும் பணிக்குச் செல்வதில் தமிழக மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. Image Credit
தமிழகம் என்றில்லை வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் எந்த மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பொருந்தும் ஒன்றாகும்.
இந்தி கற்றால் சம்பாதிக்கலாம் என்று கூறப்படும் நாட்டில் தான், இந்தி மட்டுமே கற்றவர்கள் தென் மாநிலங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
காரணம், அவர்களின் மாநிலத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை, வேலை கிடைப்பதில்லை, வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, பாதுகாப்பில்லை.
எனவே, இதெல்லாம் கிடைக்கும் தென் மாநிலங்களுக்குக் குறிப்பாகத் தமிழகத்துக்கு வருகிறார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் பாதுகாப்பான, வன்முறையற்ற மாநிலமாக உள்ளது.
எனவே, இங்கே தமிழர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தை விட இவர்களுக்குக் குறைவாகவும், அதிக உழைப்பைக்கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், அவர்கள் மாநிலத்தை ஒப்பிடும் போது இலாபகரமானதாகவே உள்ளது.
தமிழக நிறுவனங்கள் / கடைகள் / விவசாயிகள்
தமிழக மக்கள் குறைந்த வேலை நேரம், அதிக ஊதியம் கேட்பதாலும் வட மாநில தொழிலாளர்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
ஒருவர் கூறியது,
‘சார்! 4 மணியானால் வாட்சை பார்க்கிறான், போறேன்னு சொல்றான், டீ / காபி /ஸ்னாக்ஸ் வேணுங்குறான்! எங்களுக்கு இதெல்லாம் தற்போதைய நிலையில் கட்டுப்படியாவதில்லை. எனவே, தான் வட மாநில தொழிலாளர்களிடம் செல்கிறோம்.‘
சிலர் வட மாநில தொழிலாளர்களைக் கொத்தடிமை போல நடத்துவதும் நடைபெறுகிறது. அங்கே பிரச்சனை, வாழ வழியில்லை என்று இங்கே வருபவர்களைச் சக்கையாகப் பிழிகிறார்கள்.
தமிழருக்கே தமிழகப் பணி
அரசியல் கட்சிகள் இதைத்தான் கூறிக்கொண்டு உள்ளார்கள். வேலை இருந்தும் வேலை செய்யத் தயாராக இல்லை என்பதே தற்போதைய நிலவரம்.
ஊரடங்கு தளர்வு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மதுரை ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப்பணிகள், பணியாளர்கள் பற்றாக்குறையால் முடங்கியது. காரணம், இதைச் செய்துகொண்டு இருந்த வட மாநில தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றதால்.
இங்கே உள்ளவர்களுக்கு ஏராளமான பணிகள் இருந்தன, இருக்கின்றன ஆனால், எவரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் வேலை நடக்க வேண்டும் ஆனால், தமிழரையே பயன்படுத்த வேண்டும் என்றால் எப்படி நடக்கும்?
தமிழர்க்கே தமிழக வேலைகள் என்பது அரசியலாக்க நன்றாக இருக்கும் ஆனால், நிதர்சனத்தில் அதற்கு வாய்ப்பில்லை.
எனவே தான் நிறுவனங்கள், கடைகள், விவசாயிகள் வட மாநில தொழிலாளர்களை நோக்கிச் சென்று விட்டார்கள். இவர்கள் இல்லாத இடமே இல்லை.
குற்ற செயல்கள்
வட மாநில தொழிலாளர்கள் பலர் அப்பாவிகள் என்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மிகவும் மோசமான வன்முறையாளர்கள்.
வன்முறை அவர்கள் ரத்தத்திலேயே ஊறியது.
இவர்கள் வந்த பிறகு தமிழகத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆள் கடத்தல், கொலை போன்றவையும் அதிகரித்து விட்டது.
எனவே, இங்கு வரும் மற்ற மாநில தொழிலாளர்களுக்கு, கட்டுப்பாடுகள், அவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தவில்லையென்றால், எதிர்காலத்தில் தமிழகம் மிகப்பெரிய சிக்கலை எதிர்நோக்கும்.
அதிகரிக்கும் எண்ணிக்கை
ஆயிரக்கணக்கில் வட மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். வருடாவருடம் இலட்சக்கணக்கில் தமிழகத்தில் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சங்கம் அமைப்பார்கள். இவர்களுக்கென்று வேண்டுகோளை வைத்து ஆதிக்கம் அதிகரிக்கும்.
இன்று தமிழன், தமிழகம் என்று கொந்தளிக்கும் அரசியல்வாதிகள், பின்னாளில் இவர்களின் வாக்குகளுக்காகத் தமிழர்களையே புறக்கணிக்கும் நிலையும் வரும்.
நாளை இவர்கள் குரல் உயரும். தமிழக மக்கள் தங்களின் அமைதியான சுபாவத்தால் நெருக்கடிக்கு ஆளாவார்கள். எதிர்காலத்தில் பெரிய சிக்கலாக உருவெடுக்கும்.
என்ன தான் மாற்றங்கள் நடந்தாலும், வட மாநில மக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பதை தடுக்க, தவிர்க்க முடியாது.
என்ன தான் தீர்வு?!
தமிழக மக்கள் அதிகம் உடல் உழைப்புச் சார்ந்த பணிகளுக்கு இனி ஆர்வம் காட்டமாட்டார்கள். எனவே, ஒரே வழி வட மாநில தொழிலாளர்கள் தான்.
எனவே, தொழிலாளர்களை, பணிகளை முறைப்படுத்துவது மட்டுமே சிக்கலைக் குறைக்கும் (தடுக்காது).
தமிழகத்துக்கு இந்தியை பிடிக்கிறதோ இல்லையோ இனி இந்திக்காரர்கள் இல்லாமல் தமிழகம் இல்லை, இது தான் நிதர்சனம்.
கொசுறு
ஆறு வருடங்களுக்கு முன்பு (2020*) இதே மையக்கருத்தில் சிங்கப்பூரை ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். தற்போதும் இதே நிலைப்பாட்டில் உள்ளேன்.
கிரி , இந்த வட மாநில தொழிலாளர்களின் பிரச்சனை எனக்கு தெரிந்த வரை 20 வருடங்களுக்கு மேலாக இருந்து கொண்டு வருகிறது.. (அதிகரிக்கும் எண்ணிக்கை) இந்த பாராவில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகள் வெகு அருகில் நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.. ஆரம்பத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை திருப்பூர், கோவை பகுதியில் மட்டும் அதிகம் இருந்தது.. தற்போது எல்லா பகுதியிலும் காண முடிகிறது..
வந்தோம், வேலை பார்த்தோம், சென்றோம் என்றால் பிரச்சனையில்லை .. இவர்களின் மன நிலையை புரிந்து கொள்வது சற்று கடினம்.. குறிப்பாக கல்வியறிவு குறைவான மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்கள், பழக்கமே வேறு மாதிரி இருக்கும் … என் அனுபவத்தில் நான் இவர்களிடம் பழகி இருக்கிறேன் ..
நான் 15 ஆண்டுகளுக்கு முன் கோவையில் இருந்தபோது அப்போதே இவர்களின் எண்ணிக்கை அதிகம்.. குறிப்பாக இரும்பு உருக்கு ஆலைகளில் இவர்கள் தான் அதிகம் பணி புரிந்து வந்தனர்.. நிறுவன மேலிடமே சில சமயங்களில் இவர்களிடம் வேறு வழியில்லாததால் சமரசமாக தான் செல்லும்.. (காரணம் நம்மவர்கள் இவர்கள் செய்யும் வேலையை செய்ய முடியாது).
(என்ன தான் தீர்வு?!) இது குறித்து தமிழக அரசு சரியாக திட்டமிட்டு எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.. இல்லையெனில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏழ வாய்ப்பு இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@Ashiba I’m not allowing the Guest posts since its against my policy. If I change my mind later.. will let you know. Thank You
@யாசின் தற்போது எங்க கிராமத்திலேயே 1000 பேருக்கு மேல் இருக்கிறார்களாம். எதிர்காலத்தில் நிச்சயமாக இது கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவை தவிர்க்க முடியாதது என்பது கசப்பான உண்மை.
சிங்கப்பூர் போல, வெளிநாட்டவர்களை அனுமதித்தாலும் அதில் கட்டுப்பாடு வைத்து பராமரிப்பது போல செய்தாலே பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.