குறைந்த முதலீட்டில் வெளிவரும் படங்களில் ஒன்றே Night Drive. Image Credit
Night Drive
காதலர்களான அன்னா பென் & ரோஷன் இருவரும் காரில் Night Drive செல்லும் போது சோதனைக்காக நிறுத்தும் காவல் அதிகாரியுடன் பிரச்சனையாகி விடுகிறது.
அதை முடித்துக் கோபத்தில் செல்லும் போது விபத்து நேர சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இதனோடு தங்கக்கடத்தல் பிரச்சனையில் அரசியல்வாதி தலையீடும் நேர்கிறது.
இறுதியில் என்ன ஆகிறது என்பதே Night Drive.
அன்னா பென் / ரோஷன்
அன்னா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் ரோஷன் உபேர் ஓட்டுநராகவும் இருப்பார்கள்.
ரோஷன் மீது அதிக அன்பை கொண்டவராக அன்னா வருகிறார். எதனால், அவர் மிக அன்பாக இருக்கிறார் என்பதற்கான காரணம் இறுதியில் தெரிய வருவது செம மாஸ்.
செய்தியாளர் என்பதாலையே அன்னா வாய் துடுக்காக நடந்து கொள்வார். இதனாலயே இவர்கள் பிரச்சனை அதிகரிக்கும்.
ஒரு காட்சியில் “உனக்குப் பிரச்சனை என்றவுடன் அமைதியாக இருந்தே ஆனால், பிரச்சனையில்லை என்று தெரியவந்தவுடன் திரும்பத் துடுக்கா பேச ஆரம்பித்துட்டே” என்று ரோஷன் கூறுவது சூப்பர் 🙂 .
காவல்துறை அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசியல்வாதிக்குத் துணையாக இருப்பதால் இவர்கள் இருவருக்கும் மேலும் சிக்கல் அதிகரிக்கும்.
ஊகிக்கக்கூடிய காட்சிகள்
துவக்கத்திலிருந்து கிட்டத்தட்ட இறுதிவரை அனைத்துமே ஊகிக்கக்கூடிய காட்சிகளாக இருப்பது திரைக்கதையின் பலவீனம்.
அதே போல இதெப்படி சாத்தியம் என்பது போலக் காட்சிகளும் உள்ளது.
பதற்றமாகக் கொண்டு சென்று இருக்க வேண்டிய காட்சிகளைக் கொஞ்சம் நகைச்சுவையுடன் நகர்த்தியதால், த்ரில்லர் என்பதற்கான வீரியம் குறைந்து விடுகிறது.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் நன்றாக உள்ளது, குறிப்பாக ஒளிப்பதிவு.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கலாம்.
ஆகச்சிறந்த படம் என்றெல்லாம் கூற முடியாது. அலுப்புத் தெரியாமல் சுவாரசியமாகக் கொண்டு செல்கிறார்கள் அவ்வளவே.
உங்களுக்குப் பொழுது போகவில்லையென்றால் இப்படத்தைப்பார்க்கலாம், ஏமாற்றமளிக்காது.
ஏற்கனவே ஊகிக்கக்கூடிய கதையென்பதால், மேலும் கூறினால் பார்க்கச் சுவாரசியமாக இருக்காது என்பதால், விரிவாகக் கூறவில்லை.
அன்னா பென், ரோஷன் இருவரும் ஏற்கனவே Kappela என்ற த்ரில்லர் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
NETFLIX ல் காணலாம்.
Directed by Vysakh
Produced by Neeta Pinto, Priya Venu
Written Abhilash Pillai
Starring Anna Ben, Roshan Mathew, Indrajith Sukumaran, Kalabhavan Shajon
Music by Ranjin Raj
Cinematography by Shaji Kumar
Editing by Sunil S. Pillai
Art Direction by Shajie Naduvil
Release date March 11, 2022
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உண்மையிலே மலையாள திரையுலகம் முற்றிலும் வேறு புதிய பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.. கடந்த சில மாதமாக கிரிக்கெட் விளையாடுவதில் அதிகம் நேரம் செலவிடுவதால், ஐபில் போட்டிகளை பார்த்தாலும் , எந்த படத்தையும் உடனடியாக பார்க்க முடியவில்லை..
எனக்கு படத்தை பார்க்க ஒரு வித மனநிலை நிச்சயம் வேண்டும்..அந்த மனநிலை இருக்கும் போது மட்டும் படங்களை தொடர்ச்சியாக பார்ப்பேன். இல்லையென்றால் படங்களை தவிர்த்து விடுவேன்.. உங்களை போன்று தொடர்ச்சியாக படத்தை பார்க்க விருப்பம் இல்லாதவன் நான்..
ஆனால் மலையாள படம் என்னுடைய ஆர்வத்தை தூண்டி கொண்டே இருக்கும்.. காரணம் கதைக்களம்.. இதெல்லாம் எப்படிடா?? யோசித்து படமாக உருவாக்குகிறார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும், பிரமிப்பாகவும் இருக்கும்.. அதிலும் குறிப்பாக புதிய இயக்குனர்கள்.. இவர்கள் எப்படி கதையை சொல்லி அதை தயாரிப்பாளர்களும் ஓகே செய்கிறார்கள்.
Kappela உம் என்னை வியக்க வைத்த படங்களில் ஒன்று.. சாதாரணமாக செல்லும் ஒரு படம் நாம் எதிர்பார்க்காத திருப்பமாக மாறும் போது, உண்மையில் படத்தோட நம்மை மிரள வைத்து விடுகிறது.. ரோஷன் யதார்த்தமாக சிரிப்பு பார்க்க நன்றாக இருக்கும்..
The Great Indian Kitchen படத்தின் கதை நாம் எல்லோரும் தினசரி வாழ்க்கையில் கடந்து போகின்ற விஷியம்..ஆனால் அதை படமாக்கிய விதம் செம்ம!!! படத்தின் நாயகி Nimisha Sajayan நடிப்பு மிகவும் சிறப்பு..இவர் தற்போது நடிக்கும் படங்களில் தன்னை நிரூபித்து கொண்டே வருகிறார்.. நல்ல அற்புதமாக நடிகை..
மலையாள சினிமா போல் மிக சிறந்த கதையமைப்பை கொண்ட படங்கள் தமிழிலும் வர வேண்டும் என்பது என் விருப்பம்.. 70% பெரிய படங்களும் 30% சிறிய படங்கள் வந்தாலும் ஓகே தான்.. நிச்சயம் தமிழில் நல்ல புதிய இயக்குனர்கள் இருக்கின்றனர்.. ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள் தான் பிரச்சனை.. சிறிய முதலீட்டில் படத்தை எடுத்தால் படம் வெளியிட திரையரங்கு கிடைக்காமல் போகி விடுமோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..இந்த நிலை மாற வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“எனக்கு படத்தை பார்க்க ஒரு வித மனநிலை நிச்சயம் வேண்டும்..அந்த மனநிலை இருக்கும் போது மட்டும் படங்களை தொடர்ச்சியாக பார்ப்பேன்.”
எனக்கும் அதே 🙂
“தெல்லாம் எப்படிடா?? யோசித்து படமாக உருவாக்குகிறார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும், பிரமிப்பாகவும் இருக்கும்.”
நானும் நினைத்ததுண்டு.
“ரோஷன் யதார்த்தமாக சிரிப்பு பார்க்க நன்றாக இருக்கும்..”
சரியாக கூறினீர்கள் 🙂 வசீகரமான சிரிப்பு.
“The Great Indian Kitchen”
பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
“மலையாள சினிமா போல் மிக சிறந்த கதையமைப்பை கொண்ட படங்கள் தமிழிலும் வர வேண்டும் என்பது என் விருப்பம்”
தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு வேறு மாதிரியானது. மலையாளமும் தெலுங்கும் கலந்த கலவை தமிழ்.
இதைப்புரிந்து படம் எடுப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.