ஆங்கிலப்படங்களைப் போல ஒரு முயற்சியில் சூப்பர் ஹீரோ முயற்சியாக மலையாளத்தில் குறைந்த முதலீட்டில் எடுத்து உள்ளதே Minnal Murali. Image Credit
Minnal Murali
மின்னல் விபத்தில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவருக்கும் சக்தி கிடைத்து விடும்.
ரோமியோவாகச் சுற்றிக்கொண்டு இருக்கும் டொவினோ தாமஸ் நல்லவராகவும், வாழ்க்கையைச் சுவாரசியம் இல்லாமல் வாழும் குரு சோமசுந்தரம் வில்லனாகவும் மாறி விடுவார்கள்.
சூப்பர் ஹீரோ கதை என்றால், வெகுஜன மக்களிலிருந்து விலகி இருப்பது போலத்தான் இதுவரை இந்தியாவில் படங்கள் வந்துள்ளது.
அதோடு மக்களால் இது போன்ற கதைகளை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை ஆனால், இப்படம் அதை மாற்றியுள்ளது.
ஒரு சாதாரண நபர் மின்னல் தாக்கிச் சக்தி பெறுகிறார் என்பது ஏற்றுக்கொள்ளும்படியுள்ளதால், பலரின் பாராட்டைப்பெற்றுள்ளது.
ஸ்பைடர் மேன் கதை அமைப்பு போல உள்ளது. அதில் பிரம்மாண்டமாக இருக்கும், இதில் குறைந்த முதலீட்டில் அவர்களுக்கு ஏற்ற அளவில் செய்துள்ளனர்.
குறைந்த முதலீடு என்றாலும், கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன, எந்த இடத்திலும் குறை கூறும்படியில்லை.
கதாப்பாத்திரங்கள்
கீழே விழும் பாத்திரத்தை டொவினோ காலில் தட்டி அவரே அறியாமல் மேலே வைக்கும் காட்சியில் மிக இயல்பான முகப் பாவனையை வெளிப்படுத்தியிருந்தார்.
அதாவது நமக்கே தெரியாமல் நடந்து, அதனால் நமக்குச் சிறு பெருமை என்றால், அதை முகத்தில் பிரதிபலிப்போம் அல்லவா! அதை அருமையாகக் கொண்டு வந்துள்ளார்.
டொவினோ இக்கதாப்பாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு.
குரு சோமசுந்தரம் சிறந்த நடிப்பு என்றாலும், இக்கதாப்பாத்திரம் அவருக்குப் பொருத்தமானதாக இல்லை.
வயது குறைந்தவரை இக்கதாப்பாத்திரத்துக்குத் தேர்வு செய்து இருக்கலாம் அல்லது இன்னும் உடற்தகுதியோடு இருப்பவரைத் தேர்வு செய்து இருக்கலாம்.
சண்டைக்காட்சிகளில் வேட்டியை கட்டிக்கொண்டு இவர் சூப்பர் மேன் சண்டைகள் செய்வதை மனம் எனோ ஏற்க மறுக்கிறது, பொருத்தமாகவும் இல்லை.
குரு சோமசுந்தரம் வில்லன் என்றாலும் அவருக்குள்ளும் காதல், பாசம் என்று கொண்டு செல்கிறார்கள்.
திரைக்கதை
எதனால் குரு சோமசுந்தரம் மீது ஊர் மக்கள் ஆக்ரோஷமாகிறார்கள் என்பதற்கு அழுத்தமான காரணம் இல்லை.
இறுதியில் ஊரைக் காக்கும் நபராக முன்னிறுத்தப்படும் டொவினோ கதாப்பாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடுகிறது.
அந்தக் கிராமத்தில் 1000 பேர் கூட இருக்க மாட்டார்கள் போல, அங்கே அவர்களுக்கு என்ன ஆபத்து வந்து விடப்போகிறது?!
யாரை எதிர்த்து நிற்கப்போகிறார் என்ற கேள்வி வருகிறது.
பெரிய நகரம் என்றால், அதற்குப் பல்வேறு வகையில் பிரச்சனைகள் வரும். எனவே, இது போன்ற காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும்.
இங்கே டொவினோ எதோ வெட்டியா நின்று கொண்டு இருப்பது போல உள்ளது 🙂 .
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவு ரசிக்கும்படியுள்ளது. இது போன்ற சூப்பர் மேன் கதைகளில் ஒளிப்பதிவின் பங்கு முக்கியம்.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் Minnal Murali பார்க்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாகக் குழந்தைகள் ரொம்ப ரசிப்பார்கள்.
NETFLIX ல் காணலாம்.
வழக்கமாகச் சொதப்பலான தென்னிந்திய படங்களையே தேர்வு செய்து திட்டு வாங்கும் NETFLIX சமீபமாக நல்ல படங்களைத் தேர்வு செய்து வருகிறது.
Directed by Basil Joseph
Written by Arun Anirudhan, Justin Mathew
Produced by Sophia Paul
Starring Tovino Thomas, Guru Somasundaram
Cinematography Sameer Thahir
Edited by Livingston Mathew
Music by Score: Sushin Shyam
Songs: Shaan Rahman, Sushin Shyam
Distributed by Netflix
Release date 16 December 2021 (Mumbai Film Festival)
24 December 2021 (Netflix)
Running time 159 minutes
Country India
Language Malayalam
தொடர்புடைய திரை விமர்சனம்
Kala (2021 மலையாளம்) | நாய்க்காக ஒரு பழிவாங்கல்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
படத்தில் கொஞ்ச காட்சிகளை வெட்டி எறிந்தால் நன்றாக இருக்கும். ஏதோ ஒரு நாள் முழுவதும் பார்ப்பது போல உணர்வு. குரு சோமசுந்தரம்தான் பிடித்திருந்தது. எதிர்பாரதவர் வலிமை பெறுவதுதான் என்னை போன்ற சமானியர்களுக்கு பிடிக்கும். வில்லன் இறந்திருக்கமாட்டார். அடுத்த பகுதியில் வருவார். அப்போது மின்னல் முரளி அந்த கிராமத்தை காக்க வரவேண்டுமில்லையா.
@பிரியா
“ஏதோ ஒரு நாள் முழுவதும் பார்ப்பது போல உணர்வு. ”
அப்படியெதுவும் எனக்குத் தோன்றவில்லை.
“குரு சோமசுந்தரம்தான் பிடித்திருந்தது. எதிர்பாரதவர் வலிமை பெறுவதுதான் என்னை போன்ற சமானியர்களுக்கு பிடிக்கும்.”
இக்கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற காட்சிகள் பொருத்தமாக இல்லையென்பது நான் கூற வருவது. குருசோமசுந்தரம் பற்றி அல்ல.
“அப்போது மின்னல் முரளி அந்த கிராமத்தைக் காக்க வரவேண்டுமில்லையா.”
அது ஓகே.. நான் கூற வருவது எப்போதோ வருவதற்காக இப்போதிருந்தே காத்துகொண்டு இருப்பதை கூறுகிறேன்.
யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல.