Kuttey (2023 Hindi) | A Dark Comedy

0
Kuttey

ந்தியில் Dark Comedy படம் பார்த்தது இல்லை, Kuttey தான் முதல் படம். Image Credit

Kuttey

துவக்கத்தில் நக்சலைட் பிரச்சனையில் ஆரம்பித்ததும் எதோ சீரியஸான படம் போல என்று நினைத்துத் தொடர்ந்தால், பின்னரே Dark Comedy என்றே தெரிய வந்தது 🙂 .

காவல்துறையில் பணிபுரிபவர்கள் உட்படப் பலருக்கு அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காகப் பணம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் பெரிய கொள்ளையை நடத்த முடிவு செய்து முயற்சிக்கும் போது ஏடாகூடமாகப் பிரச்சனையாகி விடுகிறது.

இறுதியில் என்ன ஆனது என்பதே Kuttey.

Dark Comedy

டார்க் காமெடி கதை சீரியஸாக இருக்கும் ஆனால், சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள் செய்வது நகைச்சுவையாக இருக்கும்.

இதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழில் வந்த கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களைக் கூறலாம்.

இப்படங்களில் நகைச்சுவைக்காக கதாப்பாத்திரங்கள் செய்வதில் சிலவற்றில் லாஜிக் இருக்காது. அது எப்படிச் சாத்தியம்? என்பது போன்ற கேள்விகள் இருக்கும்.

இருப்பினும், நகைச்சுவை படத்தில் இவற்றைத் தேடுவது பயனற்றது என்பதால், அதை அனைவரும் கடந்து விடுகிறார்கள்.

கதாப்பாத்திரங்கள்

தெரிந்த முகங்களாக நஸ்ருதீன் ஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, தபு போன்றவர்கள் இருந்தாலும், தபு மட்டுமே முக்கியக்கதாப்பாத்திரமாகப் படம் முழுவதும் வருகிறார்.

எப்படியிருந்த தபு இதில் இளைத்து ஆளே மாறி விட்டார், வயதானது அப்பட்டமாகத் தெரிகிறது. எடை குறைந்தது காரணமாக இருக்கலாம்.

அர்ஜுன் கபூர் (போனி கபூர் மகன்) எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ரொம்ப சுமாரான நடிப்பு. 2 States படத்திலும் இதே போலத்தான் நடித்து இருந்தார்.

Page 3 படத்தில் நடித்த கொங்கனா சென் நக்சலைட்டாக வருகிறார்.

ஆரம்பித்திலிருந்தே இறுதியில் ஒரு திருப்பத்தை எதிர்பார்த்தேன் ஆனால், அது கொஞ்சம் முன்னாடியே பரபரப்பு இல்லாமல் நடந்து விடும்.

ஆனால், இறுதி முடிவு அனைவரையும் சிரிக்க வைக்கும் 😀 .

இக்காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்து இருக்க வாய்ப்பிருந்தும் ஏனோ ஓரளவு எளிமையாக முடித்து விட்டார்கள்.

பல இடங்களில் பின்னணி இசை ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ வில்லனுக்கு வரும் பின்னணி இசையை நினைவுபடுத்துகிறது.

யார் பார்க்கலாம்?

டார்க் காமெடி விரும்புபவர்கள் பார்க்கலாம்.

ஆகச்சிறந்த படமெல்லாம் இல்லை, நேரம் கடத்த, ஏதாவது படம் பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் முயற்சிக்கலாம்.

பரிந்துரைத்தது சூர்யா. NETFLIX ல் காணலாம்.

Directed by Aasmaan Bhardwaj
Written by Aasmaan Bhardwaj, Vishal Bhardwaj
Produced by Vishal Bhardwaj, Luv Ranjan, Ankur Garg
Starring Tabu, Arjun Kapoor, Naseeruddin Shah, Radhika Madan, Konkona Sen Sharma, Kumud Mishra, Shardul Bhardwaj
Cinematography Farhad Ahmed Dehlvi
Edited by A. Sreekar Prasad
Music by Vishal Bhardwaj
Distributed by Yash Raj Films
Release date 13 January 2023
Running time 108 minutes
Country India
Language Hindi

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here