ஜில்லா (2014)

22
ஜில்லா Jilla movie

தாதாவான மோகன்லாலுக்கு வளர்ப்பு மகன் விஜய். மோகன்லாலுக்கு வலது கரம் போன்றவர். விஜய் இவர்கள் அடிதடிக்கு துணை என்றாலும், ஒரு கட்டத்தில் மோகன்லால் ஆட்கள் செய்யும் ஒரு செயலால் பலர் இறக்கிறார்கள்.

இதனால் மோகன்லாலுக்கு எதிராகத் திரும்புகிறார் விஜய். இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் படம். Image Credit

ஜில்லா

படத்தின் கதை சிறப்பாக உள்ளது, அதோடு இதில் நடித்து இருக்கும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம். மோகன்லால், விஜய், காஜல், சூரி, சம்பத், பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமைய்யா, மகத் என்று நிறைய இருக்கிறார்கள்.

இத்தனை இருந்தும் ஒரு நல்ல கதையைத் தனது சேட்டை உடல் மொழியால் விஜய் சொதப்பி இருக்கிறார்.

இதற்குக் காரணம் இயக்குனர் நேசனா நடிகர் விஜயா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

மோகன்லாலின் வயதிற்கும், அவருடைய கனத்த உடம்பிற்கும் இந்த தாதா சிவன் என்ற அழிக்கும் கடவுள் கதாப்பாத்திரம் அம்சமாகப் பொருந்துகிறது.

யாரையாவது மிரட்டும் போதும், கட்டளை பிறப்பிக்கும் போதும் தன் தேர்வுக்கு நியாயம் கற்பிக்கிறார்.

இவரது மலையாள குரல் மட்டுமே கொஞ்சம் உறுத்துகிறது, மற்றபடி இவரைக் குறை கூற எதுவுமில்லை.

அவர் வளர்ப்பில் உருவாகும் ஒருவராகச் சம்பத். அரசியல்வாதியாக வந்து மோகன்லாலுக்கு உதவும் கதாப்பாத்திரம்.

மோகன்லால்

மோகன்லால் தாதா செயல்களுக்குக் காவல்துறை நெருக்கடி கொடுக்க, அதற்காகவே விஜயை காவல் அதிகாரியாகத் தங்களின் அரசியல் பலத்தின் மூலம் கொண்டு வந்து தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட நினைக்கிறார்கள்.

இதன் பிறகு விஜயும் படித்துத் தேர்வெழுதி!! பயிற்சியில் காவல் அதிகாரியாகத் தேர்வும் ஆகி விடுகிறார்.

காக்கி உடை என்றால் விஜய்க்கு பிடிக்காது இருந்தும் மோகன்லாலுக்காக இந்த வேலைக்குச் செல்கிறார்.

இடையில் காவல் அதிகாரியான காஜல் மீது விஜய் காதல் கொள்கிறார்.

காஜல் இதில் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறார், காவல் துறை வேடம் என்பதால் கவர்ச்சி பாடலில் மட்டும் தான். காஜல் ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான் 🙂 .

உலகத்திலேயே பதவி ஏற்கும் நாளில் டி ஷர்ட், ஜீன்ஸ் உடன் பதவி ஏற்ற ஒரே காவல் அதிகாரி நம்ம விஜய் தான்.

ஏம்பா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா!

இதை விட அங்குள்ள காவல் அதிகாரியான காஜல் பின்பக்கத்தை… “போக்கிரி”யில் எதோ விளையாட்டாகச் செய்தார்கள் அதற்காக இதை ஒவ்வொரு படத்திலும் தொடர வேண்டுமா?

விஜய் எப்போது தான் தனது வழக்கமான உடல் மொழிகளை விட்டுக் கதாப்பாத்திரத்திற்கு உண்டான நடிப்பை வழங்குவார்?!

இவர் மட்டும் ஒழுங்காக நடித்து இருந்தால் காவல் அதிகாரி கதாப்பாத்திரம் மிரட்டலாக வந்து இருக்கும்.

தன் சேட்டையைக் காட்டி அதிகாரிக்குண்டான மதிப்பைக் குறைத்து விடுகிறார்.

கான்ஸ்டபிளாக வரும் சூரிக்கு “முக்கியமான” இடத்தில் அனைவரிடமும் அடி வாங்குவதே வேலையாக இருக்கிறது. சூரியை சரியாகப் பயன்படுத்தவில்லை.

பாடல்கள்

ஜில்லா பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

இமான் பின்னணி இசையிலும் சிறப்பாகச் செய்து இருக்கிறார். ஒரே ஒரு பாடல் மட்டும் கும்கி பாடல் போல உள்ளது, மற்றபடி மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை.

மோகன்லாலுடன் முதல் பாடல் மாஸ் என்றால், அதன் பிறகு வரும் பாடல்கள் எல்லாமே ரசிக்கும்படி உள்ளது.

“ஜிங்குனமணி” பாட்டுக்கு ஆடுற ஃபிகர்கள் எல்லாம் யாரு? இந்த வெட்டு வெட்டுகிறார்கள்.

கொஞ்சம் நளினம் காட்டி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். விஜய் பாடிய, கண்டாங்கி பாடல் ஜப்பானில் எடுத்து இருக்கிறார்கள். நன்றாக இருந்தது.

பலரின் புகாரால் படத்தின் 10 நிமிட நீளத்தை குறைத்து இருப்பதாகக் கூறி இருக்கிறார்கள்.

நல்ல கதையை மிகப்பெரிய மாஸ் வெற்றிப் படமாக வர வேண்டிய கதையைச் சொதப்பி இருக்கிறார்கள்.

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் வசூலில் குறை வைக்காது. ஜில்லா படத்தை விஜய் ரசிகர்கள் ரசித்துப் பார்க்கலாம், மற்றவர்கள் பொறுமை இருந்தால் பார்க்கலாம்.

Directed by R.T.Neason
Produced by R. B. Choudary
Written by R.T.Neason
Starring Mohanlal, Vijay, Kajal Aggarwal, Mahat Raghavendra, Niveda Thomas
Music by D. Imman
Cinematography Ganesh Rajavelu
Editing by Don Max
Studio Super Good Films
Distributed by Gemini Film Circuit, Maxlab Entertainments, Ayngaran International, FiveStar International, ATMUS Entertainments
Release dates January 10, 2014
Running time 182 minutes
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

22 COMMENTS

  1. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி. ரம்மி இந்த மாதம் 24 வெளி வருவதாக நண்பன் கூறினான். அடுத்த மாதம் முதல் வாரத்தில் பண்ணையாரும் பத்மினியும் வெளி வரும் என நினைக்கிறேன். பாலு மகிந்திரா இயக்கத்தில் வெளி வந்த தலைமுறைகள் படம் பார்த்து இருந்தால் அதை பற்றி சிறிய அளவில் எழுதவும்…..கடைசி வரை தாஜ்மஹால காட்டவே இல்ல (ஓநாயும் ஆட்டு குட்டியும் படத்த பற்றி சொல்லவே இல்ல, எழுதவும் இல்ல????) படம் இன்னும் பார்கவில்லையா என்ன???

  2. //இங்கே [சிங்கப்பூர்] தியேட்டர் எல்லாம் நன்றாக இருக்கும்.

    நான் பார்த்தவரை கோல்டன் தியேட்டர் கன்றாவிய இருக்கும் .

  3. @யாசின் தகவலுக்கு நன்றி. தலைமுறைகள் படம் இங்கு வெளியாகவில்லை.

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி நான் ஏன் எழுதவில்லை?! படம் பார்த்து விட்டேன். படம் வெளியான சமயத்தில் நிறைய இதைப் பற்றி எழுதினார்கள் அதனால் ஒருவேளை எழுதி இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். படம் ரொம்ப நன்றாக இருந்தது.

    @கமலக்கண்ணன் நீங்கள் கூறுவது சரி தான். நான் ஆங்கிலப் படங்கள் வெளியாகும் Cathay திரையரங்களை மனதில் வைத்துக் கூறினேன். கோல்டன் நான் செல்வதை தவிர்த்து விட்டேன். நண்பர்கள் இதில் வெளியான ஜில்லா அழைத்த போது கூட வர மாட்டேன் என்று கூறி விட்டேன். மிகவும் பழமையான திரையரங்கம்.

    Bugis ல் உள்ள shaw கூட பழமையானது தான்.. ஆனால் ஓரளவு நன்றாக இருக்கும்.

    • கிரி, சொன்னா கொஞ்சம் ஓவரா இருக்கும், இருந்தாலும் சொல்லாம இருக்க முடியில…. எத்தனை பெரிய ஹோட்டல சாப்பிட்டாலும் அம்மாவின் கையில சாப்பிட்டது போல் வருமா?? என்ன??? அது போல தான் உங்க எழுத்தும் என்னை பொறுத்தவரை… யார் எழுதினாலும் உங்களின் கருத்தை எப்போதும் தெரிந்து கொள்ள விரும்புவேன் சில குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும்… தவறாக என்ன வேண்டாம்.

  4. நீங்கள் ஒருமுறை போஸ்ட் செய்திருந்த எழுத்தாளர் சுஜாதா மனைவியின் பேட்டி பற்றிய கட்டுரை தற்செயலாக நான் வாசிக்க நேர்ந்தது. என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கட்டுரையை பத்திர படுத்தியும் வைத்திருக்கிறேன். உடனேயே ஆர்வத்துடன் உங்களுடைய மற்ற போஸ்ட் எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் பெரிய ஏமாற்றம். உங்களுடைய ஒரே ஒரு போஸ்டின் ரசிகன் என்ற நட்பின் அடிப்படையில் தான் இந்த கமெண்ட்.
    விஜய் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதை நீங்கள் நிறுத்தி கொள்ளலாமே நண்பா! உங்களுக்கு பிடித்த அஜித், ரஜினி, சூர்யா மற்றும் விஜய் சேதுபதி etc etc வுக்கு மட்டும் விமர்சனம் எழுதினால் போதுமே. விஜய் என்றால் எந்த அளவுக்கு உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறதோ அதை விட பதின் மடங்கு ரஜினி அஜித் கோணங்கி உடல் சேஷ்டைகள் மற்றவர்களுக்கும்தான் அருவருப்பை ஏற்படுத்துகிறது. விஜய் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதி யாக இருந்து விடலாமே. ஒருவரை தரக்குறைவாக விமர்சிக்க உங்களுக்கு என்னஉரி மை. நானும் ரஜினியை ரசிப்பவன் தான். ஆனால் அதற்காக விஜய் பற்றி அல்லது கமல் பற்றி தரக்குறைவாக எழுத வேண்டியதில்லை. விஜய் யை உலகில் லட்ச லட்சமான மக்கள் ரசிக்கிறார்கள். நீங்கள் ஒருவர் ரசிக்க வில்லை என்பதால் எந்த நஷ்டமும் இல்லை. உங்கள் எழுத்துகள் உங்கள் குறுகிய மனபான்மையையும் தரம்கெட்டதனத்தையும் மட்டுமே காட்டுகிறது.
    விஜய் பற்றி குறை எழுதுவதை விட்டு விட்டு உங்கள் குறைகளை உணர்ந்து திருத்தி கொள்ள முயற்சி எடுக்கலாமே. முதலில் உங்கள் தரத்தை உங்கள் எழுத்துகளின் தரத்தை உயர்த்தலாமே. தயவு செய்து அடுத்த விஜய் படத்துக்கு நீங்கள் விமர்சனம் எழுதாதீர்கள் நண்பா.

    • நண்பரே நீங்கள் விஜய் ரசிகரா? என் இவ்வளவு கோபம் உங்களுக்கு.இதில் ரஜினி ,அஜித் மற்றும் பலரை ஏன் இழுக்குறீர்கள் .தரம்கெட்ட வார்த்தைகள் உங்கள் எழுத்துக்களில்தான் உள்ளது.கிரி அவர்கள் சொன்னது உண்மையே .விஜயின் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பில் கோணங்கி சேட்டை மற்றும் திமிர்த்தனம் அதிகம் இருக்கும்.இதை தவிர்த்து அவர் நடித்தால் நாங்களும் அவருடைய படத்தை பார்ப்போம் ,ரசிப்போம். அவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அதுபோல்தான் செயல்படுகிறார்.

  5. தயவு செய்து உங்களுக்கு இனி நிம்மதி தரும் விசயங்களைக் கூறும், உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காத தளங்களை மட்டும் படியுங்கள் என்று என்று பரிந்துரைக்கிறேன். தரத்தைப் பற்றி எனக்கு நீங்கள் எனக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னுடைய தளத்தில் எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டியது நான், நீங்கள் அல்ல.

    நன்றி

    • சூப்பர் கிரி. நான் “crimson chat”-க்கு என்ன reply பண்ணனும்னு நினைச்சேனோ அதே நீங்க செஞ்சுடீங்க.
      நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, சீக்கிரம் விஜய் படங்களுக்கும் நீங்க விமர்சனம் பண்றதுக்கு கதம் கதம் சொல்லவேண்டிருக்கும்னு நினைக்கிறேன் 🙂

  6. அன்புள்ள நண்பரே ,

    தங்கள் ப்ளாக் பார்த்தேன் . மகிழ்ச்சி .
    தயவு கூர்ந்து இலக்கிய ஆய்வுகளை தங்கள் செய்தல் மகிழ்வேன்

    அன்புடன்
    BT அரசு

  7. எனக்கு ரஜினியா…கமலா…விஜயா..அஜித்தா என்றால் ரஜினி மட்டுமே தெரிவார். ரஜினிக்கு முன்னாள் இவர்கள் ஒன்றுமே இல்லை. இதுவரை விஜய், அஜித் படங்களை தி ஈ ஈ ஈ யீட்டரில் சென்று பார்த்தது கிடையாது. அந்த அளவிற்கு அந்தப்
    …படங்கள் ஒரத் இல்லை. விஜய் படத்தைக் கூட முழுமையாக டிவியில் பார்க்கும் தைரியம் இருக்கு. ஆனா அசித்து நடித்த படத்தை ஒரு பத்து நிமிடம் பார்க்கவே செத்துப்போவேன் . நல்..ல்லா இருங்க ராசா……

  8. தயவு செய்து உங்களுக்கு இனி நிம்மதி தரும் விசயங்களைக் கூறும், உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காத தளங்களை மட்டும் படியுங்கள் என்று என்று பரிந்துரைக்கிறேன். தரத்தைப் பற்றி எனக்கு நீங்கள் எனக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னுடைய தளத்தில் எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டியது நான், நீங்கள் அல்ல.

    @கிரி – மிக சரியாக சொன்னீர்கள். ஒவ்வொருவருக்கும் பிடித்த மாதிரி எழுத வேண்டும் என்றால், அவர்களே எழுதி படித்து கொள்ள வேண்டியது தான் 🙂

  9. ஒரு நல்ல கதையை தனது கோணங்கி சேட்டை உடல் மொழியால் விஜய் சொதப்பி இருக்கிறார். இதற்குக் காரணம் இயக்குனர் நேசனா நடிகர் விஜயா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.(இ லைக் THIS கமெண்ட்)

  10. @அரசு

    உங்கள் அன்பிற்கு நன்றி. உண்மையில் எனக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம், பின் நவீனத்துவம் என்றால் காத தூரம் ஓடுபவன் 🙂 . அனைவருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்பது மட்டுமே நான் தொடர்ந்து பின்பற்றுவது.

    @ ராவணன் ரைட்டு விடுங்க 🙂

    @யாசின் வாழ்க்கை நல்லது கெட்டது நிறைந்தது என்பது போல, Blog திட்டுகளும் பாராட்டுகளும் நிறைந்தது. அதை சரியாக நிரூபிக்க இந்தப் பதிவின் பின்னூட்டங்களே போதும். உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகளே என்னை இன்னும் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

    நான் ஒரு பழைய படத்தின் விமர்சனத்தை [தமிழ் படமல்ல] இன்னும் இரு வாரங்களில் எழுதுவேன். உங்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் கருத்தை விரிவாக எதிர்பார்க்கிறேன்.

    @சண்முகசுந்தரம் 🙂 உண்மை.

  11. கிரி. புதிய படங்களை காட்டிலும் பழைய தமிழ் படங்களை (1960/1970/1980) மட்டும் நான் அதிகம் விரும்பி பார்ப்பவன் (எனக்கு பிடித்த கிரிக்கெட் போட்டியும் உட்பட). மற்ற மொழி படங்கள் அதிகம் பார்ப்பவன் அல்ல. நான் விரும்பி பார்த்த பழைய ஆங்கில படம் பென்ஹர். நீங்கள் எழுத போகும் படம் நிச்சயம் நான் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. நான் படத்தை பார்த்த பின் எனது கருத்தை கூறுகிறேன். இதோட இப்ப முடிச்சிகிறேன், அடுத்த பதிவுல சந்திக்கிறேன்.

  12. நெகடிவ் விமர்சனங்களுக்கு சரியான சாட்டையடி… மாஸ் ஹிட் ஜில்லா.. பொங்கல் வசூலில் முதலிடம்.

  13. @யாசின் பாய்ஸ் படத்துல வர மாதிரி நான் விரும்பிப் பார்த்த ஆங்கிலப் படம் ஷோலே என்று சொல்லிடுவீங்களோ என்று நினைத்து விட்டேன் 🙂 🙂 நான் கூறியது ஆங்கிலப் படமல்ல. அப்புறமா படிச்சுட்டு சொல்லுங்க.

    @முத்து இன்னும் பார்க்கல

    @பாக்யராஜ் நான் எப்ப பாஸ் கமெண்ட் கொடுத்தேன் உங்களுக்கு…! நான் ஒரு உதாரணத்திற்கு தான் கூறினேன்..திருத்தி விடுகிறேன். நன்றி

    @ஸ்ரீகாந்த் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். பொங்கலை சிறப்பாக கொண்டாடுகள் 🙂

    @ராஜ் நானும் வசூல் ஆகும் என்று தானே கூறி இருக்கிறேன் 🙂 . தொடர்ந்து விடுமுறை நாட்கள் ஜில்லா மட்டுமல்ல வீரமும் பெரிய வசூலைப் பெறும். உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

  14. கிரி அண்ணா அவர்களுக்கு ,,,

    நான் உண்மையிலே வீரத்தை விட ஜில்லாவை அதிகம் ரசித்து பார்த்தேன் காரணம் என்ன வென்று தெரியவில்லை ,, மேலும் இதுவரை என் வாழ்க்கையில் முதன் முறையாக இந்த ஜில்லா படத்தை மட்டும் தியேட்டருக்கு சென்று 17 முறை பார்த்து இருக்கிறேன் …. இதற்காக நான் செலவழித்த தொகை தோரயமாக பத்தாயிரம் ரூபாயாவது இருக்கும் .. ஒவ்வொரு முறையும் நான் ஒவ்வொரு தியேட்டருக்கு செல்வேன் ஏற்கனவே சென்ற திரையரங்க்க்கு நான் செல்வதில்லை ,, சென்னை , கோவை , திருவண்ணாமலை , வேலூர் , ஆகிய ஊர்களில் பார்த்து இருக்கிறேன்

    இத்தனை முறை பார்த்தாலும் எனக்கு அலுப்பு தட்ட வே இல்லை ..
    நீங்கள் கூறிய விசையின் கோணங்கி தனம் நான் அதிகம் ரசித்து பார்த்துகொண்டு இருக்கிறேன் ,, (அதற்கு பினனணி இசையும் ஒரு காரணமா இருக்கலாம் ) என நினைக்கிறேன் ..
    ஆனால் வீரம் முதல் முறை பார்த்ததோடு சரி அடுத்த முறை பார்க்க ஆர்வம் வரவில்லை அதற்கு முக்கிய காரணம் தமன்னா .. கொஞ்சம் கூட அஜித்துக்கு பொருத்தம் இல்லாத ஜோடி .. இதில் காஜல் வாந்தி வராத குறை ..
    என்ன ஒரு ஒற்றுமை இந்த இரு படங்களிலும் ,,,

    ரஜினி ரசிகர்களுக்கு அவர் போல யார் மாஸ் காட்டினாலும் பார்க்க மாட்டிர்கள் ,, ஆனால் நாங்கள் எந்த படம் நல்லா இருந்தாலும் ஆதரவு தரும் நடுத்தரமானவர்கள் ,, நான் நீங்களும் அப்படிதான் இருப்பீர்கள் என நினைத்தேன் ஆனால் எனக்கு பெரும் ஏமாற்றம் ,, உங்கள் வீரம் விமர்சனத்தில் அந்த படத்தை புகழ்ந்து எழுதினர்கள் ..
    உண்மையை சொல்லுங்கள் மங்காத்தா பில்லா வை விட இந்த படம் நல்லா இருக்கா சொல்லுங்க ,,

    அதுவும் அஜித்தை அந்த தலையுடன் பார்க்க கடுப்பா இல்ல ,,

    .. இந்த கமெண்டிற்கு நீங்கள் எப்படியும் திட்டுவிர்கள் என்று மேல உள்ள பல கருத்துகள் மூலம் தெரிகிறது .. இருந்தாலும் உங்கள் தளம் என்னுடைய விருப்பமானது ஒன்று என்பதால் ,, நீங்கள் இது போல ஒரு சில விசயங்களில் நடு நிலைமையை சற்று தவற விடுவதா க ஒரு சிறிய எண்ணம் இப்போதும் நரேந்திர மோடியை ஆதரிக்க காரணம் என்ற பதிவும் சற்று ஏற்படுத்துகிறது ,, (அந்த பதிவில் நான் எந்த கருத்தும் நேரம் இல்லாததால் தெரிவிக்க வில்லை என்பதால் குறை கூற தகுதி இல்லை )

  15. @கார்த்திகேயன் எனக்கு உண்மையிலேயே பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஜில்லா 17 முறை பார்த்தது உங்கள் தனிப்பட்ட ரசனை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை எனவே நான் அதில் கருத்துக் கூற எதுவுமில்லை. நடுநிலை என்ற ஒன்று எங்கேயும் இல்லை. எனவே என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் அதற்கு நான் அதற்கு தகுதியானவனும் அல்ல.

    ஆனால் 10000 ருபாய் செலவழித்தது என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எவருக்கும் ரசிகனாக இருப்பது தவறில்லை அதற்காக இவ்வளவு பணம் செலவழித்தது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை ஒரு அக்கறையுள்ள விஜய் ரசிகரே ஏற்றுக்கொள்ள மாட்டார்.

    படத்தை ரசியுங்கள், கொண்டாடுங்கள் அதற்காக இந்த அளவிற்கு செல்ல வேண்டாம். நான் ரஜினி ரசிகன் தான் ஆனால், நிச்சயம் இது போல நடந்து கொள்ள மாட்டேன். நான் நிறைய முறை பார்த்து இருப்பேன் அது இணையத்தில் பார்த்து இருப்பேன் அல்லது தொலைக்காட்சியில் போடும் போது பார்த்து இருப்பேன்.

    உங்கள் மீது அக்கறை வைத்துள்ள ஒரு அண்ணனாக கூறுகிறேன் தயவு செய்து இது போல மீண்டும் ஒரு படத்திற்காக செலவு செய்து விடாதீர்கள். உண்மையில் கவலையாக இருக்கிறது 🙁 . உங்களுக்கு தற்போது இது தவறு என்று தெரியவில்லை என்றாலும்.. அனுபவம் பெறும் போது உணர்வீர்கள் ஆனால் காலம் கடந்த செயலாக இருக்கும்.

  16. அன்புள்ள கிரி அண்ணாவுக்கு ,,,

    தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றிகள் ,, நான் நிச்சயம் இதை இனி கடைபிடிப்பேன் ,, ஏனென்றால் தாங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் அனுபவச்சாலி என்பதால் ,,

    இனி வரும் நல்ல படங்களை அதிக முறை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதை தவிர்ப்பேன் அண்ணா நன்றி

    இதை கடைபிடிப்பேன் என்றும் வாக்குறுதி தருகிறேன் அண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here