இரண்டாம் உலகம் [2013]

7
இரண்டாம் உலகம்

நம் உலகத்தில் ஒரு ஆர்யா அனுஷ்கா, இன்னொரு உலகத்தில் ஒரு ஆர்யா அனுஷ்கா. இதை இரண்டையும் இணைத்து இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் இரண்டாம் உலகம். Image Credit

இரண்டாம் உலகம்

அன்பு தான் எல்லாம் என்று கூறியிருக்கிறார் ஆனால் அது அழுத்தமாக கூறப்படவில்லை.

செல்வா, அவர் சொன்னது போலவே மசாலா, குத்துப்பாட்டு எதுவுமே இல்லாமல் முற்றிலும் தமிழுக்கு புதிய உலகத்தை காட்டியிருக்கிறார்.

நிச்சயம் அதற்கு அவரை பாராட்ட வேண்டும் ஆனால், 60 கோடி போல செலவு செய்து புதிய உலகத்தை காட்டியவர் அதில் கதை என்ற ஒன்றையும் காட்டியிருக்கலாம்.

படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்றே படம் முடிந்தும் புரியவில்லை

தமிழ்

இரண்டு உலகமுமே ஒரு காட்சி முடிந்து அடுத்து என்று வந்து போவதால், எதிலுமே ஒன்ற முடியவில்லை. படத்தில் வரும் வெள்ளையர்கள் தமிழில் தான் பேசுகிறார்கள்.

வெள்ளைக்காரங்க ஒரு சில காட்சிகள் தமிழ் பேசினால் பரவாயில்லை மொத்தப் படமும் பேசினால், அது டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

விஜய் டிவி சங்கி மங்கி டப்பிங் படங்களில் வருவது போல மாமாமாஸ்ஸ்ஸ்ஸ்டர் என்று எவனாவது கத்திட்டு வந்துடுவானோ என்று நினைக்கும் அளவிற்கு இருக்கிறது.

பல வசனங்கள் கிண்டலடிக்கும்படி உள்ளன அதோடு காட்சிகளின் மீதான வீரியத்தை இது குறைத்து விடுகிறது.

இதையெல்லாம் உதவி இயக்குனர்களுடன் விவாதிக்கவில்லையா! அல்லது அவர்கள் கூறியதை இவர் கேட்கவில்லையா!

படத்தில் பாராட்ட இருப்பது கிராபிக்ஸ் வேலைகள் தான். ரொம்ப நன்றாக செய்து இருக்கிறார்கள்.

படத்தில் பெரும்பகுதி செலவு இதற்குத் தான் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் நிறைய எதிர்பார்த்தேன் ஆனால், இல்லை. ஆர்யா ஓகேவாக நடித்து இருக்கிறார்.

அனுஷ்கா டார்லிங் வயதானது நன்றாகத் தெரிகிறது. சிங்கம் II படத்திலேயே அப்படித்தான் இருந்தது.

ஒருவேளை ஒப்பனை காரணமோ என்று நினைத்தேன் ஆனால், இதிலும் அப்படித் தான் இருக்கிறார், குறிப்பாக சுடிதார் போட்டு வரும் காட்சிகளில்.

அனுஷ்காவிற்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம்.

செல்வராகவன்

செல்வா படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் அது இதிலும் உண்டு.

செல்வா படங்கள் பலருக்கு பிடிக்காது. சைக்கோ கதை, ஒரே மாதிரி எடுக்கிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உண்டு.

ஆனாலும், அதையும் மீறி படங்கள் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்.

அவருடைய கடைசிப் படமான மயக்கம் என்ன வரைக்கும் எனக்கு அனைத்துப் படங்களும் ரொம்பப் பிடித்த படங்கள் [ஆயிரத்தில் ஒருவன் பாதி மட்டுமே].

பலருக்கு பிடிக்காத மயக்கம் என்ன படத்தை நான் ரொம்ப ரசித்துப் பார்த்து இருக்கிறேன்.

இந்தப் படத்தில் திரைக்கதை சரியில்லை. படத்தோடு ஒன்ற முடியவில்லை.

அவதார் படமும் இது போல வேறு உலகம் தான் [இரண்டுமே இது போல மாறி மாறி வரும்] ஆனாலும், நம்மை வேறு எதையும் யோசிக்கவிடாமல் பார்க்க வைத்து இருப்பார்கள்.

திரைக்கதை

படம் முடிந்து வெளியே வந்த பிறகு நமக்கு பல கேள்விகள் தோன்றும் ஆனால், படம் பார்க்கும் போது திரைக்கதை விறுவிறுப்பில் நமக்கு குறைகளே தோன்றாது.

இந்த விஷயம் தான் இந்தப் படத்தில் இல்லை. படம் பார்க்கும் போது சாவகாசமாக அனைத்தையும் யோசிக்க முடிகிறது.

செல்வா படங்களில் வரும் கிண்டலான வசனங்கள், காட்சிமைப்புகள் அதிகம் இருக்கும் ஆனால், இதில் குறைவு.

நிகழ்கால ஆர்யா அனுஷ்கா நண்பர்களாக வரும் இருவரும் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிக்கும் படி செய்து இருக்கிறார்கள்.

அனுஷ்கா நண்பி ஆர்யாவைப் பார்த்து மார்க் போடுவதிற்கு செம விசில் 🙂 .

இசை

செல்வா படங்களில் இசை எப்பவுமே அசத்தலாக இருக்கும் ஆனால், பாடல்கள் வழக்கமான செல்வா படம் போல இல்லை. படத்தில் இசை ஹாரிஸ் என்றாலும் அது பாடல்களுக்கு மட்டும் தான்.

அதற்குள் செல்வா ஹாரிஸ் இருவருக்கும் பிரச்சனை ஆனதால், பின்னணி இசையை அனிருத் போட்டு இருக்கிறார் [இதோடு புதிதாக இரண்டு சிறிய பாடல்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்], அவசரமாக பின்னணி இசையமைத்தது தெரிகிறது.

பின்னணி இசை இது போல பிரம்மாண்ட காட்சியமைப்புகளுக்கு மிரட்டலாக இருந்து இருக்க வேண்டும்.

சுருக்கமாக இந்தப் படத்தின் முதல் ட்ரைலரில் கடைசியில் வரும் பின்னணி இசையின் அளவிற்கு இருந்து இருக்க வேண்டும்.

குறைவான காலத்தில் பின்னணி இசை அனிருத் போட்டது கூட இந்த சொதப்பலுக்கு காரணமாக இருக்கலாம்.

ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. படத்திற்கு ஒளிப்பதிவு ராம்ஜி. பல இடங்கள் கிராபிக்ஸ் என்றாலும் அதிலும் அழகு இருக்கத் தான் செய்கிறது.

படத்தில் கிராபிக்ஸை எங்கும் என்னால் குறை கூற முடியவில்லை. ரொம்ப நன்றாக செய்து இருந்தார்கள்.

கடைசியாக, படம் திரைக்கதை சரியில்லாததால் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

எனக்கு ரொம்பப் பிடித்த இயக்குனரான செல்வா படத்தையே, இப்படி கூற வேண்டிய நிலை ஆனது எனக்கு ரொம்ப வருத்தம் அளிக்கிறது.

விரைவில் நல்ல கதை, திரைக்கதையுடன் அருமையான படத்தைத் தர அவருடைய ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்.

Directed by Selvaraghavan
Produced by Prasad V. Potluri
Story by Selvaraghavan
Starring Arya, Anushka Shetty
Music by Songs: Harris Jayaraj
Background Score: Anirudh Ravichander
Cinematography Ramji
Editing by Kola Bhaskar
Studio PVP Cinema
Release date(s) November 22, 2013
Running time 164 minutes
Country India
Language Tamil
Budget INR60 crore

கொசுறு 1

இந்தப் படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஒரு விசயத்தில் பேதி ஆனது.

அது வேறு ஒன்றுமில்லை “கோச்சடையான்” தான். இதிலும் படம் முழுக்க கிராபிக்ஸ் உள்ளது, மோசன் கேப்சரிங் வேறு. உண்மையாகவே பீதியாக உள்ளது.

ஒரே வித்யாசம் இது படம் முழுக்க ஒரே மாதிரியாக வரும், இரண்டாம் உலகம் போல பாதி வேறு உலகம், பாதி நமது உலகம் என்று வராது.

படத்தில் ரவிக்குமார் திரைக்கதை, ரகுமான் இசை மற்றும் தலைவரின் குரல் மீது மட்டுமே நம்பிக்கையுள்ளது.

கிராபிக்ஸ் டேமேஜை சரி செய்து விடும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் வெளியாகி அடுத்த படம் எப்போது துவங்கும் என்று யோசனையாக இருக்கிறது.

B C சென்டர்களில் சர்வ சாதரணமாக “என்னப்பா! ரஜினி படம் என்று வந்தால் கார்ட்டூன்!! படமா இருக்கிறது” என்று கூறி விட வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக எங்கள் ஊரில் உள்ள மொக்கைத் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒன்றுமே விளங்காது.

என்னமோ போங்க! படம் வெளியாகும் வரை கலவரமாகத் தான் இருக்கும். இந்தப் பொங்கலுக்கும் படம் வருமா என்பது படம் வெளியானால் மட்டுமே உறுதி.

கொசுறு 2

சமீபமாக பார்த்த படங்களில் “பாண்டிய நாடு” படம் ரொம்ப நன்றாக இருந்தது. பல தோல்விகளுக்குப் பிறகு விஷால் கொடுத்த வெற்றிப் படம்.

பாரதிராஜா நடிப்பு அருமை குறிப்பாக இறுதியில் தொலைக்காட்சியில் வரும் அறிவிப்பை பார்த்து ஆச்சர்யம் கலந்த சந்தோசத்துடன் உணர்ச்சியை வெளிப்படுத்துவது செம.

விஷால் எந்த ஹீரோயிசமும் செய்யாமல் இயல்பாக அளவாக வந்து சென்று இருக்கிறார்.

கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர், இயக்குனர் சுசீந்திரன் என்னோட கதையைத் திருடி விட்டார் என்று புகார் கூறி இருக்கிறார்.

சுசீந்திரன், படத்தின் க்ளைமாக்ஸ் மட்டுமே இவரோடது மற்றபடி கதை என்னுடையது என்று கூறுகிறார். அடப் போங்கய்யா!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. எப்படி எடுத்திருக்கிறார் என்பதற்காக படம் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன் கிரி

  கோச்சடையான் படம் பற்றி நகம் கடிக்க வைக்கும் டென்சன் இருக்கு

  பாண்டிய நாடு படம் ரொம்ப ரசிச்சேன்

 2. இவரின் படங்களைப் பார்க்கும் பொழுது இளமைப் பருவத்தில் பல விசயங்களில் புறக்கணிக்கப்பட்டு, வாழ்கையை நொந்து போய் வாழ்ந்துருப்பாரோ என்று கூட நினைத்ததுண்டு. நிச்சயமாக குழந்தைகளுடன் பார்க்கவே முடியாத அளவுக்கு தனது தனித்திறமையை காட்டியிருப்பார். இந்தப்படம் தோல்வி என்பதை விட இந்தப படத்தினால் உருவான பஞ்சாயத்தில் ஏறக்குறைய நூடுல்ஸ் ஆகி விட்டார். திருந்துவாரா? என்று தெரியவில்லை. சமீபத்தில் தான ஞானவேல் ராஜா கொடுத்த முன்பணத்திற்காக தான் வாங்கிப்போட்டுருந்த அடுக்கு மாடி குடியிருப்பை கொடுத்து சமன் செய்துள்ளார். இன்னும் ஒருவருக்கு கொடுக்க வேண்டியுள்ளது. மற்றொருவர் ஆந்திர சங்கத்தில் பேசி வாங்கிக் கொள்ளுங்க என்று கேயார் கூறிவிட்டாராம்.

  அடுத்தவன் பணமென்றால் அல்வா துண்டு தான்.

 3. படம் எனக்கு ரொம்ப புடிச்சது
  சைகோ படம் ஸ்டைல் ல விட்டு செல்வா வந்ததே எனக்கு சந்தோசம் தான்
  இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி எல்லாரும் ஒவ்வொரு கதை சொன்னோம் படம் முடிஞ்சதும்

  கோச்சடையான் சௌந்தர்யா வ நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்கு. ரஜினி கு ஒரு படம் ஒடலேனா அது என்னோட தோல்வி மாதிரி நான் சின்ன வயசுல எடுத்துப்பேன்
  இப்ப அப்படி இல்லேனா கூட ரஜினி தோத்தா உடனே மனசு வலிக்கும். ஆனா எனக்கு உள்ள பயம் கூட சௌந்தர்யா கு இருக்குற மாதிரி தெரில அது தான் ரொம்ப வருத்தமா இருக்கு. போதா குறைக்கு துக்கடா பசங்க படம் வேற வருது பொங்கலுக்கு
  அந்த படங்களும் அனிமேஷன் படமும் சம்பந்தம் இல்லேனா கூட ரஜினி கு மவுசு இல்லேனா சொல்லுவாங்க அது கேக்கவே கஷ்டமா இருக்கும் . சௌந்தர்யா அது இது நு அயீரம் குறை இருந்தாலும் “என் ரஜினி” நு வரும் போது ஆண்டவன் என்னிக்கும் கை கொடுபார் நு நம்புறேன். ரஜினி யோட நல்ல மனசு கு என்னிக்கும் நான் பரம ரசிகன் அந்த நல்ல மனச பாத்து என்னை நானே மாத்திக்கிட சந்தர்ப்பம் அதிகம் அதனால யார் ஜெயிச்சாலும் ரஜினி யும் ஜெயிக்கணும் நு மனசு ஆசை படுது. பாக்கலாம்

  பாண்டிய நாடு ரெண்டு டைம் பாத்துட்டேன் கலக்கல் படம்

  – அருண்

 4. மசாலா இல்லாத படங்களான ஆடுகளம் , ஆட்டோகிராப் , சூது கவ்வும் , அஞ்சாதே மாதிரி படங்கள் அருமையா இருக்கும்.. பட், செல்வாவுக்கு இப்ப இந்த மாதிரி படங்கள் அமையல….. 🙁 🙁

 5. கவலை படாதீர்கள் அருண் , தலைவர் ரசிகர்களை என்றைக்கும் ஏமாற்றியதில்லை .பொங்கலுக்கு கோச்சடயான் நிச்சயம் வருமேயானால் படம் கண்டிப்பாக வெற்றிதான் பெரும் .ஏனெனில் இவர்கள் படங்களுடன் போட்டி போடும்போதே தெரிகிறது .தலைவருக்கு தெரியாதா படம் இந்த சமயத்தில் போட்டி போட்டு தோல்வி அடைந்தால் அடுத்து இவர்கள் என்ன பேசுவார்கள் என்று ,ஆகவே சொல்கிறேன் படம் நிச்சயம் ஹிட்.நீங்கள் ஒருமுறை பாடலையும் ,ட்ரைலரையும் ear போனில் போட்டு பார்க்கவும்.பிறகு புரியும் ar ரஹ்மான் போட்டுள்ள அற்புதமான இசையை .

 6. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜோதிஜி நீங்கள் கூறியது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  @அருண் படம் உங்களுக்கு பிடித்ததா!!! ம்ம்ம் ரைட்டு

  கோச்சடையான் நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. தாமதம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

  @ராஜேஷ் என்னைப் பொறுத்தவரை செல்வா எடுத்த படங்களிலேயே மோசமான படம் என்றால் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

  @வரது 🙂

 7. இது தமிழுக்கு புது களம். may be பல படங்கள் இந்த மாதிரி வரும்போது, நம்ப directors இத பெர்பெக்ட் பனிருவாங்க. எப்படி இருந்தாலும் ஆயுரத்தில் ஒருவன் மாதிரி புதுசா செல்வா try பண்ணினதுக்கு பாராட்டியே தீரனும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here