Garudan (2023 மலையாளம்) | புலன் விசாரணை

3
Garudan movie

புலன் விசாரணை கதையாக Garudan. Image Credit

Garudan

ஒரு பெண்ணை வல்லுறவு செய்ததாகக் கைது செய்யப்படும் பிஜு மேனன் குற்றத்தை மறுக்கிறார் ஆனால், சாட்சி அவருக்கு எதிராக உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கோமாவில் இருப்பார்.

நீதிமன்றமும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறது ஆனாலும் தான் குற்றமற்றவர் என்றே பிஜு மேனன் கூறுகிறார்.

இவ்வழக்கை விசாரிப்பவராகவும், பிஜு மேனனுக்கு தண்டனை வாங்கித்தரும் காவல் அதிகாரியாக சுரேஷ் கோபி வருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே Garudan.

புலன் விசாரணை

ஒப்பீட்டளவில் மலையாளத்தில் ஏராளமான புலன் விசாரணை படங்கள் வருகின்றன, வருபவை ஒவ்வொன்றும் சிறப்பானதாக அமைகிறது, அதில் ஒன்றாக Garudan.

குற்றத்தை யார் செய்தது என்று எந்தத் துப்பும் சுரேஷ் கோபிக்குக் கிடைக்காமல், திணறும் போது ஒரு வாய்ப்புக் கிடைத்து அதன் வழியாகத் தொடர்கிறார்.

சுரேஷ் கோபி பணி ஓய்வு பெறும் நிலையில் இந்த வழக்கின் இரண்டாம் பகுதி நடக்கும், அதோடு உடன் அரசியல்வாதி ஒருவரின் வழக்கும் விசாரணைக்கு வரும்.

அரசியல்வாதியைப் பகைத்துக்கொண்டு ஒரு வழக்கில் அவர்களுக்கு எதிராகத் தொடர்வது எளிதல்ல காரணம், அவர்களிடம் உள்ள ஆள் மற்றும் பண பலம்.

சுரேஷ் கோபியும் அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருப்பார்.

பிஜு மேனன் வழக்கு காரணமாக சுரேஷ் கோபிக்குப் பிரச்சனைகள் ஏற்படும். இவற்றை எப்படிக் கையாண்டு இறுதிக்கு வருகிறார் என்பது விறுவிறுப்பாக உள்ளது.

த்ரில்லர்

பெரும்பாலான மலையாளப்படங்கள் குடிப்பதை இயல்பாக வைத்துள்ளார்கள். சில நேரங்களில் நாமே போதையில் இருப்பது போலவே ஒரு உணர்வு.

மலையாள இயக்குநர்கள் குடியைப் படங்களில் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இதில் குடியும் ஒரு முக்கியமான பங்காக வருவதால், முற்றிலும் தவிர்க்கவும் முடியாது.

சுரேஷ் கோபி குடித்து விட்டு நடந்து கொள்வது பேசுவது இயல்பாக இல்லை. இக்காட்சிகளில் நடிப்பு ரொம்ப செயற்கையாகவும், எரிச்சலாகவும் இருந்தது.

விசாரணை படங்களில் கதையை அல்லது கதை செல்லும் பாதையைக் கூற முடியாது. கூறினால், அது தொடர்பான விஷயங்களைக் கூற வேண்டியது வரும்.

அப்படிக்கூறினால், கதையின் சுவாரசியத்தையும் கூற வேண்டியது வரும். அதைக்கூறினால் படம் பார்க்கும் போது விறுவிறுப்பாக இருக்காது.

இதற்கு மேல் எதையும் கூற விரும்பவில்லை. என்ன கூறினாலும், கதையின் முக்கிய திருப்பத்தைக் கூற வேண்டியதாக உள்ளது. எனவே, இதுவே போதுமானது.

ஒரே ஒரு மான்டேஜ் பாடல் மட்டுமே! இறுதி ட்விஸ்ட் எதிர்பாராதது.

யார் பார்க்கலாம்?

விசாரணை படங்களில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம், ஏமாற்றாது.

பரிந்துரைத்தது சூர்யா & ஸ்ரீனிவாசன். Amazon Prime ல் காணலாம்.

Directed by Arun Varma
Screenplay by Midhun Manuel Thomas
Story by Jinesh M
Produced by Listin Stephen
Starring Suresh Gopi, Biju Menon
Cinematography Ajay David Kachappilly
Edited by Sreejith Sarang
Music by Jakes Bejoy
Release date 3 November 2023
Running time 138 minutes
Country India
Language Malayalam

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி.. இந்த படத்தை அலுவலக மலையாள நண்பர் ஒருவர் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.. ஆனால் நான் இன்னும் இதுவரை பார்க்கவில்லை. ஐயப்பனும் கோஷியும் படத்துக்கு பின்பு நான் பிஜு மேனனின் ரசிகனாகி விட்டேன்.. அவரின் பழைய படங்களை அவ்வப்போது தேடி பார்த்து வருகிறேன்.. சுரேஷ் கோபியும் ஒரு தரமான நடிகர்.. வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன்..

  2. கிரி.. பொதுவாக மலையாள மொழி படங்களை பார்க்கமாட்டேன். அவர்களின் உரையாடல் வேகமாக இருக்கும்.மொழி புரியாததால் subtitle உடன் பார்ப்பது எனக்கு சற்று சிரமமாக உணர்வேன். ஆனாலும் இந்த படத்தை குடும்ப உறுப்பினர் பார்த்தபோது நானும் உடன் இருந்து பார்த்ததில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. முழுமையாக பார்த்து முடித்தேன். நன்றாக இருந்தது.

  3. @யாசின்

    ஐயப்பனும் கோஷியும் பிஜு மேனனது ஆகச்சிறந்த படமாகக் கூறலாம். சிறப்பான நடிப்பு & இயக்கம்.

    @பயபுள்ள

    🙂 சில படங்கள் பார்க்கும் ஆர்வம் இல்லையென்றாலும், பார்க்க வேண்டி வரும் போது முழுவதுமாக பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!