ஆர்யாக்கு சிறுவயதில் இருந்தே மறதி பிரச்சனை அதாவது ஒன்றை செய்துக்கொண்டு இருக்கும் போது இடையில் ஏதாவது கேட்கப்பட்டால் அப்படியே அதற்குச் சென்று விடுவார், செய்து கொண்டு இருப்பதை மறந்து விடுவார். Image Credit
ஆர்யா மறதி பிரச்சனை காரணமாக இவருக்குத் திருமணத்துக்குப் பெண்ணே கிடைப்பதில்லை.
இந்நிலையில் ஆர்யாவின் உதவும் எண்ணம் கண்டு சாயிஷாக்கு காதல் வந்து, பின்னர் ஆர்யா மறதி பிரச்னை தெரிய வர, இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.
கஜினிகாந்த்
விவகாரமான படங்களாகவே எடுத்து வந்த இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், மாறுதலுக்காகத் தன்னால் குடும்பப் படமும் எடுக்க முடியும் என்று காண்பித்து, வெற்றியும் பெற்று இருக்கிறார்.
ஆர்யாவின் தந்தை ஆடுகளம் நரேன் தீவிர ரஜினி ரசிகர், மகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைக்க, இவரின் மறதி காரணமாக நண்பர்கள் இவரைக் கஜினிகாந்த் என்று அழைக்கிறார்கள்.
நரேன் முதல் முறையாக நகைச்சுவை நடிப்பை முயற்சித்து இருக்கிறார். இதில் வியப்பு..! இவருக்கு இக்கதாப்பாத்திரம் செமையாகப் பொருந்தி இருப்பது தான்.
அதிலும் குறிப்பாக “டேய் உனக்குக் கல்யாணம் ஆகறதுக்குள்ள எனக்கு டைவோர்ஸ் ஆகிடும் போல இருக்கேடா” என்று அவர் அலறும் போது திரையரங்கமே வெடிச்சிரிப்புச் சிரிக்கிறது.
Bhale Bhale Magadivoy
தெலுங்கில் நானி நடித்த “Bhale Bhale Magadivoy” படத்தைத் தமிழுக்கு ஏற்றார் போல மாற்றி இருக்கிறார்கள். இன்னும் நானி படத்தைப் பார்க்கவில்லை என்பதால், ஒப்பிட முடியவில்லை.
நாயகி சாயிஷாக்கு வழக்கமான தமிழ் கிறுக்கு நாயகி வேடம்.
எதைச் சொன்னாலும் சிரிச்சிட்டே நம்பிடுவார். ஆர்யா தன்னுடைய மறதியை மறைக்க, அதற்கு ஒரு புதுக் கதை விடுவார் அதையும் சாயிஷா “ஆ” ன்னு கேட்டுட்டு இருப்பார்.
பாடல்கள் எல்லாம் திணிக்கப்பட்டதாகத் தான் இருந்தது.
சாயிஷா அப்பாவாக வரும் சம்பத்துக்கு இதில் நிறைவான வேடம். பெரும்பாலும் இவரை சிறு கதாப்பாத்திரமாகவோ, டம்மியாகவோ காட்டி விடுவார்கள்.
சரோஜா படத்துக்குப் பிறகு இவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு, சிறப்பாக செய்து இருக்கிறார்.
இயக்குநர்
“U” படம் எடுப்பதுன்னு முடிவான பிறகு மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளில் உள்ள சில இரட்டை அர்த்த வசனங்களையும் தவிர்த்து இருக்கலாம்.
அந்த வசனங்கள் எந்த வகையில் இயக்குநரை திருப்தி செய்கிறதோ?!
ஆர்யா நண்பனாக சதிஷ், கருணாகரன். இதில் சதிஷ் பல இடங்களில் கலகலப்பூட்டியுள்ளார்.
உள்ளத்தை அள்ளித்தா போல மாறு வேட காட்சிகளில் பழைய படங்களை நினைவு படுத்தினாலும், ரொம்ப மோசமில்லை. காளி வெங்கட் இடையில் வந்து சிரிக்க வைக்கிறார்.
ஆர்யா அழுதெல்லாம் நடிக்க முயற்சிக்கிறார் ஆனால், பாவம் அவருக்குப் பொருந்தவில்லை.
படத் துவக்கத்தில் இருந்து இறுதி வரை ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதாவது ஒன்று வருகிறது குறைந்த பட்சம் ஆர்யா “காலா Ringtone”.
ஆர்யாக்கு சமீப படங்கள் அனைத்தும் தோல்விப்படங்களாகவே அமைந்த நிலையில் “கஜினிகாந்த்” ஆறுதல் அளித்து இருக்கிறது.
“இது எப்படி?” என்று யோசித்தால், இது ஒரு மொக்கைப்படம் ஆனால், லாஜிக் வேண்டாம், கலகலப்பான படமாக இருந்தால் போதும் என்றால், படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
கொசுறு
இப்படம் பார்க்க இரு காரணங்கள். ஒன்று ரஜினி இன்னொன்று ஆர்யா மறதி.
எனக்குச் சமீபமாக அதிகம் மறதி ஏற்படுகிறது, குறிப்பாக பெயர்கள் நினைவுக்கு வருவதில்லை. எனவே, ஆர்யா எப்படி நடித்து இருக்கிறார் என்று பார்க்க விருப்பமாக இருந்தது.
திறன்பேசி, கூகுள், இணையம் போன்றவை தற்போதைய மக்களின் நினைவுத்திறனை காலி செய்து வருகிறது. எனக்குப் பின்னாடி இது பெரிய பிரச்சனையாக வரும் என்று தோன்றுகிறது.
இது குறித்து நண்பனிடம் பேசிய போது பின்வரும் காணொளியைப் பரிந்துரைத்தான். இதில் கூறியவற்றை முயற்சிக்கப் போகிறேன். இதனால் முன்னேற்றம் தெரிந்தால் கூறுகிறேன் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
நினைவுத் திறனை அழிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி (அவசியம் படியுங்கள் உங்களுக்கும் இப்பிரச்சனை எதிர்காலத்தில் வரலாம்)
The thirteenth floor 1999 ஆண்டு வெளிவந்த படம்
Chappie, மாயவன், criminal போல் ஒரு முறை பார்க்கலாம்.
தமிழ்படங்களை விட பிறமொழிப்படங்களைப்பற்றி பதிவிடவும்.
Triangle படத்தை யாரோ பரிந்துரைத்து இருந்தார்கள் செம படம் பெர்மூடா முக்கோனத்தை பற்றி மிக வித்தியாசமான கதைக்களம் கடைசிக்கடம் லாஜிக் மீறல் உள்ளது.
tamilrockers .cl கஜினிகாந்த் 250mb இப்போதான் download செய்றான்.
எனக்கும் ஞாபக மறதி அதிகமாக இருந்தது இப்போது பரவாயில்லை.
ஞாபக சக்தியை அதிகரிக்க இதை ப்பாருங்கள்.
எனக்கு மிக பிரயோசனமாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=QFBUpRUGAfo