Escape from Alcatraz (1979) | முடிந்தால் தப்பித்துப்பார்!

4
Escape from Alcatraz

சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் படங்களில் உலகளவில் பிரபலமானது The Shawshank Redemption (1994). இதற்கு முன்னரே வந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் Escape from Alcatraz. Image Credit

Escape from Alcatraz பாதிப்பு The Shawshank Redemption படத்திலும் காணப்படும்.

Escape from Alcatraz

பல சிறைகளிலிருந்து தப்பிய Clint Eastwood யை மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட, தப்பிக்கவே முடியாத சிறையான Alcatraz தீவில் உள்ள சிறைக்கு மாற்றுவார்கள்.

இங்கே இருந்து Clint Eastwood தப்பித்தாரா என்பதே Escape from Alcatraz.

கட்டுப்பாடுகள்

பழைய படமாக இருந்தாலும், இதில் காண்பிக்கப்படும் காட்சிகளும், தொழில்நுட்பங்களும் இக்காலத்திலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வார்டனாக வருபவர் Clint Eastwood யைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். ஏற்கனவே பல சிறைகளில் தப்பித்து இருப்பதால், அந்த வேலையை இங்கே செய்ய முடியாது என்று கூறி வருவார்.

Clint Eastwood அமைதியாக இருந்தாலும், தப்பிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருப்பார்.

சக சிறைக்கைதிகள்

சிறைச்சாலை என்றாலே பல வகையான கைதிகள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள்.

எனவே, சிறையில் இருப்பதை விட அனைவரையும் சமாளிப்பது தான் பெரிய சவால்.

இது எந்தச் சிறைக்கும் பொருந்தும்.

சக கைதிகள் தொல்லைகள் தாங்காமல் சிலர் தற்கொலை கூடச் செய்து கொள்கிறார்கள். இதிலும் அது போன்றவர்கள் வருகிறார்கள்.

அதே போல அப்பாவி கைதிகளும் இருப்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களைத் தொல்லை செய்யாமல் தங்கள் விருப்ப செயல்களில் மட்டும் ஈடுபடுவார்கள்.

தப்பிப்பது எளிதல்ல

கடுமையான பாதுகாப்பு உள்ள சிறையிலிருந்து தப்பிப்பது எளிதான செயல் அல்ல. அதற்கான முன் முயற்சிகள் சவாலானவை.

இதற்கான வேலைகளை யாருக்கும் சந்தேகம் வராதபடி செய்ய வேண்டும். மற்றவர் உதவியில்லாமல் எளிதாகச் செய்து விட முடியாது.

மிக அதிகத் தைரியம் வேண்டும் காரணம், மாட்டினால் கதை முடிந்தது.

தப்பிக்க எடுக்கப்படும் முன் முயற்சிகளும், அதைத் தொடரும் போதும் பரபரப்பாக உள்ளது.

என்ன ஆகுமோ! என்ற பயம் இருந்து கொண்டே பதட்டமாகவே இருந்தது 🙂 .

பிற சிறைச்சாலை படங்கள்

க்ளாஸிக் படம் என்றால் The Shawshank Redemption. புத்திசாலித்தனம், அன்பு, பழிவாங்கல் என்று அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான படம்.

சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு நடித்த Escape Plan நன்றாக இருக்கும்.

இன்று வரை இதயத்துடிப்பை எகிற வைத்து, கதிலங்க வைத்தது Prison Break Season 1 தான். நெஞ்சு வலி வர வைத்து விடுவார்கள் 🙂 .

இது போன்ற ஒன்றை இனி இயக்கவே முடியாது. ஆகச்சிறந்த இயக்கம்.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள்.

Escape from Alcatraz பல வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். திரும்பப் பார்த்ததால், இந்த விமர்சனம் 🙂 .

NETFLIX ல் காணலாம்.

Directed by Don Siegel
Screenplay by Richard Tuggle
Based on Escape from Alcatraz by J. Campbell Bruce
Produced by Don Siegel, Robert Daley
Starring Clint Eastwood, Patrick McGoohan
Cinematography Bruce Surtees
Edited by Ferris Webster
Music by Jerry Fielding
Distributed by Paramount Pictures
Release date June 22, 1979
Running time 112 minutes
Country United States
Language English

தொடர்புடைய விமர்சனம்

Prison Break | Terrific Thriller Series

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, இது போல யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களின் காதலன் நான்.. நான் முன்பே பல முறை குறிப்பிட்டு இருப்பது போல் The Shawshank Redemption என்னுடைய ஆல் டைம் விருப்ப படம் இது தான்.. படத்தில் ஏதோ ஒரு விஷியத்தோடு என் மனது ஒன்றி விட்டதாக நினைக்கிறேன்.. குறிப்பாக மோர்கன் பிரீமேன் பாத்திரம், நான் என் நண்பர் சக்தியுடன் ஒப்பிட்டு பார்ப்பேன்.. ஒரு வேளை நான் படத்தை ரொம்பவும் நேசிக்க இது கூட காரணமாக இருக்கலாம்.

    நீங்கள் குறிப்பிட்ட படத்தை பற்றி இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை, படத்தை பார்க்கவும் இல்லை. (பழைய படமாக இருந்தாலும், இதில் காண்பிக்கப்படும் காட்சிகளும், தொழில்நுட்பங்களும் இக்காலத்திலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆங்கில படங்களில் குறிப்பாக நான் மிகவும் ரசிப்பது இதை தான்). பொய் சொன்னாலும் அதை பொருந்தும் படியாக சொல்வார்கள்.

    தமிழில் சிறைச்சாலை படம் மிகவும் பிடித்த படம்.. நான் முதன்முதலில் பார்த்த போது, படத்தை உள்வாங்கி கொள்ளும் அளவுக்கு வயதும் பக்குவமும் இல்லை.. அதே படத்தை சில ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது மிரண்டு விட்டேன். இயக்குனர் பிரியதர்ஷன் படத்தை நன்றாக எடுத்து இருப்பார். குருதிப்புனல் படமும் எனக்கு கிட்டத்திட்ட இதே அனுபவத்தை தான் கொடுத்தது.

    பள்ளி பருவத்தில் நண்பன் கமல் சார் ரசிகன் ஒருவன் படத்தை பார், பார் சொல்லி படத்தை பார்க்க வைத்தான் (நான் அப்போது விஜயகாந்த் சார் ரசிகன்) படத்தை பார்த்து விட்டு நானும் மற்ற நண்பர்களும் “நண்பன் கிட்ட போவியா அங்கிட்டு” படம் மொக்க!!! படத்துல உங்க ஹீரோ செத்து போய்ட்டார்.. அப்ப நாசர் சார் தான் ஹீரோ.. பேசாம நீ அவர்க்கு ரசிகனா மாறி விடு, அப்படினு சொல்லி எல்லாம் நன்றாக காலச்சி விட்டோம்.அதே படத்தை சில ஆண்டுகளுக்கு பின்பு பார்க்கும் போது, மிரட்சியின் உச்சத்துக்கு சென்று விட்டேன்.. ஆனால் தற்போது வரை இந்த உண்மையை நண்பனிடம் ஒத்து கொள்ளவேயில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. This movie very interesting.Most of Clint wood movies are Different.When they Make paper mesh head very interesting. some times truth is stranger than fiction.

  3. @மணிகண்டன் பார்க்க முயற்சிக்கிறேன்.

    @யாசின்

    “The Shawshank Redemption என்னுடைய ஆல் டைம் விருப்ப படம் இது தான்”

    இப்படம் பற்றி பேசினாலே உங்கள் நினைவு வந்து விடும். பலமுறை கூறியுள்ளீர்கள்.

    “தமிழில் சிறைச்சாலை படம் மிகவும் பிடித்த படம்..”

    செம்ம படம். தமிழில் சிறந்த முயற்சி.

    “அதே படத்தை சில ஆண்டுகளுக்கு பின்பு பார்க்கும் போது, மிரட்சியின் உச்சத்துக்கு சென்று விட்டேன்..”

    குருதிப்புனல் பின்னணி இசை, உருவாக்கம், கமல் நாசர் நடிப்பு ஆகியவை அட்டகாசமாக இருக்கும்.

    குருதிப்புனல் வந்த போது உடன் தலைவர் முத்து படம் வந்து இருந்தது 🙂 .

    @Vijayakumar Agreed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!