விரைவில் Drishyam படத்தின் தமிழ் உருவாக்கம் கமல் நடித்த “பாபநாசம்” வெளியாக இருப்பதால், இதன் பிறகு எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்று தற்போது எழுதுகிறேன். Image Credit
Drishyam
குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்னையை அனைவரும் இணைந்து ஒற்றுமையாக அந்தப் பிரச்னையைத் தாண்டி வருவது தான் “த்ரிஷ்யம்” என்ற எளிமையான படத்தின் கதை.
மோகன்லால் மீனா தம்பதியினரின் பெண் குளிப்பதை ஒருவன் படம் எடுத்து மிரட்ட அந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை எதார்த்தம் மீறாமல் நம்பும்படி கொடுத்து இருப்பதே படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.
மோகன்லால்
கேபிள் தொலைக்காட்சி நடத்துபவராக வரும் மோகன்லால் தேடினாலும் கிடைக்காத மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் நின்று விடுகிறார்.
ஒரு சாராசரி நடுத்தரக் குடும்பத்தின் மன உணர்வுகளை எண்ணங்களைப் பிரதிபலிப்பவராக வருகிறார்.
நடுத்தர வகுப்பு குடும்பத் தலைவர் செலவுக்குப் பயப்படும் நிலையையும் அதிர்ச்சிகளையும் இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
சுருக்கமாக எந்தப் பெரிய ஆசையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்தும் லட்சக்கணக்கான மக்களுள் ஒருவராக வருகிறார்.
இவருக்குப் பொருத்தமாக மீனா மற்றும் அவர்களது இரு மகள்கள். இந்தப் படத்தில் பொருந்தாமல் உறுத்தும் ஒரே விசயம் மீனாவின் லிப்ஸ்டிக்.
தேடித் தேடிப்பார்த்தாலும் இதைத் தவிர வேற ஒன்றுமே குறையாகத் தெரியவில்லை.
உண்மை பேசுபவருக்கு எந்தக் கவலையுமில்லை ஆனால், பொய் பேசுகிறவர்களுக்கு அதைச் சரியாக ஒவ்வொரு முறையும் கூற வேண்டும்.
இது போல ஒரு நிலையில் தான் இவர்கள் அனைவரும் இருப்பார்கள்.
பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்று மோகன்லால் கூறி அதற்குப் பயிற்றுவிக்கும் போது படம் பார்ப்பவர்களுக்குப் பதட்டத்தைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் காவல் துறை குழப்பிக் கேள்விகள் கேட்கும் போது தவறாகக் கூறி விடுவார்களோ என்ற உதறல் இருந்து கொண்டே இருக்கிறது.
சாதாரணமான கதை ஆனால், இதில் கொடுக்கப்பட்டுள்ள யோசனைகள், திருப்பங்கள், அட! இப்படியும் யோசிக்கலாமா! என்ற முக்கியக் காட்சிகள் தான் நான்கு மொழிகளில் எடுக்க வைக்கும் அளவிற்கு மிரட்டி இருக்கிறது.
திரைப்படங்களில் வரும் காட்சிகளையே மோகன்லால் தன் சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதால், ஒரு சாதாரண நபர் எப்படி இது போல யோசிக்க முடியும் என்ற லாஜிக்கான கேள்வி அடிபட்டு விடுகிறது.
ஆஷா சரத்
காவல் (IPS) அதிகாரியாக வரும் ஆஷா சரத் மிக மிகப் பொருத்தமான கதாப்பாத்திரம். அவரின் மிரட்டலான முகமும் அதிகாரிக்கே உண்டான மிடுக்கும் சிறப்பாகப் பொருந்தி இருக்கிறது.
மோகன்லால் குடும்பத்திற்குச் சம்பந்தம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் இடம் அசத்தல்.
உணர்ச்சிக்கு அடிமையாகாமல் அதிகாரிக்கே உண்டான யோசனை, கணக்குகள் மூலம் கண்டுபிடித்தாலும் நிரூபிக்க முடியாமல் திணறுவது என்று நடிக்க வாய்ப்பு.
கான்ஸ்டபிளாக வரும் கலாபவன் ஷஜோன், மோகன்லால் மீது இருக்கும் வன்மத்தை இதில் தீர்க்க முயல்வதும், தனக்கு வாய்ப்புக் கிடைத்து விடாதா என்று பரிதவிப்பதும் மோகன்லால் மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் இவரது முகம் பிரகாசம் ஆவதும் என்று கலக்கி இருக்கிறார்.
குடும்ப விசயத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது நல்லது என்றாலும் சில விசயங்களை ரகசியமாக வைத்து இருப்பது குடும்பத்திற்கு நல்லது என்பதை இந்தப் படம் விளக்கும். இதில் எனக்கு உடன்பாடுண்டு.
மோகன்லால் மறைக்கும் விசயம் தான் படத்தின் அதிரடியான திருப்பம்.
படத்தில் வரும் கேரளாவின் இயற்கை வனப்பிற்கு விளக்கம் தேவையில்லை, கண்கொள்ளா காட்சிகள். மோகன்லால் மீனா வீடு இருக்கும் இடத்தைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கிறது.
பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை, உடன் இயற்கை சூழ்ந்து உள்ளது.
ஒரு எளிமையான கதையை அசாதரணமான திரைக்கதையால் அனைவரும் ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்கள்.
கேராளாவில் முதல் 50 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்று உள்ளது. மன்னன் படத்தை நான்கு மொழிகளில் அதிகபட்சமாகப் பார்த்து உள்ளேன்.
அடுத்தது “த்ரிஷ்யம்” படத்தை ஐந்து மொழிகளிலும் பார்க்கப் போகிறேன்.
Directed by Jeethu Joseph
Produced by Antony Perumbavoor
Written by Jeethu Joseph
Starring Mohanlal, Meena, Ansiba Hassan, Esther Anil, Kalabhavan Shajon, Asha Sarath
Music by Songs: Vinu Thomas, Anil Johnson
Background Score Anil Johnson
Cinematography Sujith Vaassudev
Edited by Ayoob Khan
Production company Aashirvad Cinemas
Distributed by Maxlab Entertainments
Release dates 19 December 2013 (Kerala) 20 December 2013 (Tamil Nadu & Karnataka) 27 December 2013 (Rest of India) 2 January 2014 (Overseas)
Running time 164 minutes
Country India
Language Malayalam
கன்னடம்
ரவிச்சந்திரன் நவ்யா நாயர் நடிப்பில் P வாசு இயக்கத்தில் Drishya என்ற பெயரில் வெளியானது. காவல் அதிகாரியாக ஆஷா சரத் நடித்தார்.
மலையாளத்துக்குப் பிறகு கன்னடம், தொடர்ந்து ஒரு மாதத்தில் தெலுங்கு வெளியானது.
தெலுங்கு
ஸ்ரீப்ரியா இயக்கத்தில் Drushyam என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றது. வெங்கடேஷ் மீனா மற்றும் காவல் அதிகாரியாக நதியா நடித்து இருந்தார்கள்.
மலையாள இயக்குநர் Jeethu Joseph இதற்குத் திரைக்கதை அமைத்தார்.
தமிழ்
3 ஜூலை 2015 “பாபநாசம்” வெளியாகப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
மலையாளத்தில் இயக்கிய இயக்குநர் Jeethu Joseph தமிழிலும் இயக்கியுள்ளார். இதில் கமலும் கௌதமியும் நடித்துள்ளார்கள்.
காவல்துறை அதிகாரியாக மலையாளத்தில் நடித்த ஆஷா சரத் நடித்துள்ளார். ஜிப்ரான் பாடல்கள் / இசை வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் மட்டுமே பெயர் “பாபநாசம்” என்று மாற்றுப் பெயர் இருக்கிறது. மற்ற நான்கு மொழிகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பெயர்கள் தான்.
இந்தி
இந்தியில் Drishyam என்ற அதே பெயரிலேயே ஜூலை 31 படம் வெளியாகிறது. அஜய் தேவ்கன் மற்றும் நம்ம ஸ்ரேயா 🙂 நடித்துள்ளார்கள்.
காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் தபு நடித்துள்ளார்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
I think that Kamalahasan cannot handle the movie “Drishyam” as Kamalahasan is always camera-conscious and he is always dramatic and theatrical actor. He will spoil the best film that was made in almost 5 languages. This movie will be the biggest flop of 2015.
ஹலோ #கீர்த்திவாசன் 🙂 தமிழ் இல் படம் வெளியாகிவிட்டது . கமல் அவரது நடிப்பை சிறப்பாகவே செய்துள்ளார் .பாபநாசம் தமிழ் இல் 100cr ஐ தாண்டிவிட்டதாக கூறப்படுகின்றது . 2015 இல் மிகப்பெரிய தோல்வி அடையும் என்று எதிர்பார்த்தீர்கள். ஆனால் கமல் தனியாக சிக்ஸர் அடித்து இருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும் .
சூப்பர் படம் தல drishyam மலையாளம் version
வேற மொழில (கன்னடா, தெலுங்கு ) நான் பாக்கல
விமர்சனம் நல்லா இருக்கு
மாசு, புறம்போக்கு, – இந்த ரெண்டு படமும் எப்படி இருக்கு ?
– அருண் கோவிந்தன்
Ee adutha kalathu மாதிரி நான் ரொம்பவே ரசித்த ஒரு மலையாளப் படம் த்ரிஷ்யம்… செம ங்கற வார்த்தை சாதாரணம்… இந்தப் படம் அதுக்கு மேல..
‘த்ரிஷ்யம்’ மலையாளத்தில் மோகன் லால்-ன் நடிப்பு மிக அருமை. மீனா, ஆஷா சரத், மிக அழகான நடிப்பை கொடுத்திருந்தனர். கமல் நடிப்புலக நாயகன் தான். ஒருவேளை , ஒப்பிடும் போது மோகன் லால் இயல்பான நடிப்பால் ஜெயித்து விடுவாரோ என்ற அச்சமும் இருக்கிறது. ( 36 வயதினிலே-மலையாளம் வேர்சின் ( HOW OLD ஆர் யு ) – ஐ பார்த்தவர்களுக்குத் தெரியும்…மஞ்சு வாரியார் என்ன அழகாக, நுணுக்கமான நடிப்பை வெளிபடுதியிருப்பார் என்று…)
Drishyam படத்தின் தமிழ் உருவாக்கம் கமல் நடித்த “பாபநாசம்” வெளியாக இருப்பதால், இதன் பிறகு எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்று தற்போது எழுதுகிறேன்.
thiru .Rajinkanth avargal nadikkum padam veliyagum muunaalu..
idhu pola eluthuveergall Giri!!! avatrirku original padangal undu…
விமர்சனம் ரொம்ப நன்றாக இருக்கிறது… நண்பன் ஒருவன் பார்த்து விட்டு முன்பு கூறினான் “இந்த படம்” நன்றாக இருக்கிறது என்று.. இருப்பினும் படத்தை பார்க்கும் ஆர்வம் அப்போது இல்லை.. உங்கள் விமர்சனத்தை படித்த பின் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி…
@கீர்த்திவாசன் இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது எனவே தோல்வி அடைய வாய்ப்பில்லை. அதோடு படத்தின் திரைக்கதை மிகச் சிறப்பானது. எந்த மொழியில் எடுத்தாலும் வெற்றி பெறும்.
@அருண்
மாசு – எனக்குப் பிடிக்கல. வெங்கட் பிரபு சூர்யாவை வீணடித்து விட்டார். இரண்டாம் பாதி பரவாயில்லை. பேயாக வரும் சூர்யா நடிப்பு நன்றாக இருந்தது.
புறம்போக்கு – இந்தப் படத்தின் மையக்கருத்திற்கு நான் எதிரானவன். அதாவது நான் தூக்குத்தண்டனைக்கு ஆதரவாளன் அதோடு தீவிரவாத செயல் யார் செய்தாலும் அதற்கு நான் எதிர்ப்பு.
இதில் குண்டு வைப்பதையும் கொல்வதையும் நியாயப்படுத்தி இருக்கிறார். எனக்கு இதில் உடன்பாடில்லை. இவர்கள் கொள்கையின் படி இவர்கள் கோரிக்கைக்காக எவரையும் கொல்லலாம் ஆனால், தூக்குத் தண்டனை தவறு. என்ன லாஜிக்குன்னே புரியலை.
படம் சரியாக ஓடவில்லை காரணம் வெகு ஜன கருத்தில் இருந்து விலகி இருந்ததால் ஆனால், படத்தின் உருவாக்கம், விஜய் சேதுபதி நடிப்பு நன்றாக இருந்தது.
@ராஜேஷ் & சேவியர் 🙂 ரைட்டு
@Giriramadash நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
@யாசின் பாருங்க நன்றாக இருக்கும்.
நீங்கள் எழுதியது
“கமல் நடித்த “பாபநாசம்” வெளியாக இருப்பதால், இதன் பிறகு எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்று தற்போது எழுதுகிறேன்””
நீங்கள் ரஜினி நடிக்கும் படத்தின் வெளியீடுக்கு முன்னால் இப்படி
கதை (அப்படி ஒன்னு இருக்காது, ஒரே கதை தானே எப்போதும் ) சொல்லமுடியுமா !!!!
உங்கள் நோக்கம் தெளிவு !!!
கமல் படம் பார்ப்பவர் படத்தை ரசிக்காமல் ,
ஹி!! ஹி!!
மோகன்லாலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்!!!
நல்ல எண்ணம் !!! வாழ்க !! வளமுடன்!!!
இதுக்கு பேர் இங்க்லிச்ல “சாப்ட் புஷ் “
இப்படியும் கூட குதர்க்கமாக யோசிக்க முடியுமா! என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
எல்லாவற்றிலும் குறை கண்டு பிடிக்கும் எண்ணத்தை விட்டொழியுங்கள்.
நீங்கள் ஒரு ரஜினி ரசிகன் என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டிருக்கீர்கள் கிரி :/ .
உங்களது நோக்கம் என்ன என்று இங்கு இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் 🙁 .
irzath இதற்கு நிறைய கூறனும் என்று நினைத்தேன்… சரி விடுங்க. எதையோ நினைத்துக்குங்க.. புரிந்து கொள்ளாதவர்கள் என்ன கூறியும் புரிந்து கொள்ளப்போவதில்லை.
அனைவரையும் திருப்தி செய்வது என் வேலையல்ல.
மாசு, புறம்போக்கு – விமர்சனத்துக்கு நன்றி தல
– அருண் கோவிந்தன்