குறிப்பு: இது மிகப்பெரிய கட்டுரை எனவே, உங்களுக்கு நேரம் இருக்கும் போது பொறுமையாகப் படிக்கவும்.
மனுஷ்யபுத்திரன்
“மனுஷ்யபுத்திரன்” இவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவர் இலக்கியவாதியா / முழு நேர எழுத்தாளரா என்றெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது.
சின்மயி விவகாரமோ எதிலோ கருத்துக் கூற ஆரம்பித்து (இதற்கு முன்னரும் இப்படி கூறிக் கொண்டு இருந்தாரா என்பதும் எனக்குத் தெரியாது).
பின் கருத்து கந்தசாமியாகி facebook ல் ஸ்டேடஸ் மேல் ஸ்டேடஸ் ஆக போட்டு வருகிறார்.
அது அவருடைய சுதந்திரம், அதில் தலையிட எனக்கு உரிமையில்லை. உன்னை யார் அவர் ஸ்டேடஸ் படிக்க சொன்னது? என்று நினைக்கிறீர்கள்.. சரியா!
நான் அவரைப் பின் தொடரவில்லை ஆனால், அவரைப் பின் தொடரும் என் நண்பர்கள் அவரது ஸ்டேடசை லைக் / கமெண்ட் போட்டதால் அது என் டைம் லைனில் வந்தது. Image Credit
இவர் தன்னை நடுநிலைவாதி போலக் காட்டிக்கொண்டு இந்துக்களை சிறுமைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்.
இது தான், என் பொறுமையை சோதித்துக்கொண்டு இருக்கிறது.
நடுநிலை
மத விசயங்களில் கருத்துச் சொல்கிறேன் என்று சும்மா இருப்பவனை எல்லாம் உசுப்பேத்தும் வேலையைத் தான் இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தன் நடுநிலையை பேலன்ஸ் செய்ய, அனைத்து மதத்தைப் பற்றியும் மாற்றி மாற்றி கூறி ஆக வேண்டிய கட்டாயம்.
இதுவே மேலும் பிரச்சனைகளை அதிகரிக்கிறது. உண்மையில் இந்த நடுநிலையாளர்களே மதவாதிகளை விட ஆபத்தாக இருக்கிறார்கள்.
கலைஞர், வீரமணி போன்றவர்கள் எல்லோருக்கும் இந்து மதம் என்றால் நக்கலாக போய் விட்டது. எவ்வளவு அடித்தாலும் தாங்குவாணுக என்கிற தைரியத்தில் தான் இது போல நடந்து கொண்டுள்ளார்கள்.
இல்லை என்றால், இந்து மதத்தை காட்டுமிராண்டித்தனம், ராமன் காலேஜ் போனாரா என்றெல்லாம் கலைஞர் போல நக்கல் அடிக்க முடியுமா!
இளிச்சவாய மதம்
கலைஞர், வீரமணி போன்ற பகுத்தறிவாதிகளுக்கு இளிச்சவாய மதம் என்றால் அது இந்து மதம் தான்.
எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் அடிக்கலாம், எவனும் கேட்க மாட்டான் என்ற தைரியம் தான்.
இவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை, இதன் பெயர் சகிப்புத் தன்மை.
இந்து மதம் உங்களுக்கு கொடுத்து இருக்கும் சுதந்திரம். உலகில் இந்து மதம் மட்டும் தான் தவறுகளைச் செய்கிறதா! வேறு எந்த மதமும் செய்வதில்லையா.
Blog ல ஒரு இந்துப் பண்டிகை விடாமல், என்ன வந்தாலும் அதைத் திட்டி விமர்சிக்கும் “ஓவியா” என்னும் பகுத்தறிவாளர் என்னைக்காவது தில்லா மற்ற மதத்தை விமர்சித்து இருக்காரா!
அப்படியே விமர்சித்து இருந்தாலும் பம்மிட்டே தான் இருக்கும்.
சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக இந்த அரசியல்வாதிகள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தை மட்டும் நக்கல் அடித்து வருகின்றனர்.
பகுத்தறிவாளர்களுக்கு தான் சாதி மதமே இல்லையே அப்புறம் என்ன! அனைத்து மதத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டியது தானே!
மனுஷ்ய புத்திரன் கருத்து
சரி! விசயத்திற்கு வருகிறேன் பின்வரும் கருத்தை “மனுஷ்ய புத்திரன்” கூறி இருக்கிறார்.
முதல் கருத்தைக் கூறி சில நாட்கள் ஆகி விட்டது. பின் திரும்பச் சமீபத்தில், இவர் கூறியதைக் கேட்டுக் கடுப்பானதால் இந்தப்பதிவு.
“நான் துப்பாக்கி படம் தொடர்பாகவும் கசாப்பிற்கு விதிக்கபட்ட மரண தண்டணை தொடர்பாகவும் நான் எடுத்த நிலைபாடுகளுகாக இஸ்லாமிய அன்பர்கள் முகநூலில் என்னைக் கொண்டாடினார்கள்.
இந்துத்துவா வெறியர்கள் என்ன கடுமையாக தாக்கினார்கள்.
ஆனால் சவுதியில் ஒரு இளம்பெண்ணிற்கு விதிக்கபட்ட மரண தண்டணை தொடர்பாக நான் நேற்றிரவு எழுதிய பதிவிற்கு இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து கிடைத்திருக்கும் எதிர்வினைகளை படிக்கும்போது ஒன்று தெளிவாக தெரிகிறது.
உங்களுக்கு நாகரிக சமூகத்தின் எந்த அறவியல் கோட்பாட்டின் மேலும் நம்பிக்கை இல்லை. உங்களுடன் நான் ஏன் விவாதிக்க வேண்டும்?
மரண தண்டணை உள்ளிட்ட கொடிய தண்டணைகளை எதிர்த்துப் போரிடும் உலகளாவிய இயக்கத்தின் ஒரு உறுப்பினன் என்ற முறையில் இந்துமதம், இஸ்லாம், கிறித்துவம், பொளத்தம், தேசியம்.
இனவாதம் என அனைத்துப் போர்வைகளுக்குள்ளும் இருக்கும் பாசிஸ்டுகளை எதிர்த்து தொடர்ந்து எழுதுவேன். ’நாமார்க்கும் குடியல்லோம்’“
இவர் கூறியுள்ளதைப் பாருங்கள் “இஸ்லாமிய அன்பர்கள்” ஆனால் “இந்துத்துவா வெறியர்கள்”.
இவர் “ரிசானா” விவகாரத்தில் கருத்து சொல்லப் போக, முஸ்லிம் சமுதாயத்தினர் போட்டு செமையாக கும்மி விட்டார்கள். கடுப்பாகி இந்த ஸ்டேடஸ் போட்டு இருக்கிறார்.
இவர் அதிகம் பாட்டு வாங்கியது முஸ்லிம்களிடம் ஆனால், சொல்வது “இஸ்லாமிய அன்பர்கள்” “இந்துத்துவா வெறியர்கள்”.
நான் முஸ்லிம்களைத் திட்டக் கூறவில்லை, அது என் விருப்பமுமில்லை ஆனால், இந்துக்களை மட்டும் ஏன் இது போல கூறுகிறார் என்பதே என் கேள்வி?
“நாமார்க்கும் குடியல்லோம்” சார்! இதைப்படிக்கும் போது… சரி விடுங்க..!
அடுத்தது
“விஸ்வரூபம் பட சர்ச்சைய முன்னிட்டு தமிழகத்தில் முஸ்லீம்கள் மேல் மிகபெரிய வெறுப்புணர்வு தோற்றுவிக்கபட்டு விட்டது. தியேட்டரகள் தாக்கப்படுவது இந்த சூழலுக்கு வலிமை சேர்க்கின்றன.
இந்துத்துவா அமைப்புகள் தமிழ்கத்தில் காலூன்ற இதைவிட சிறந்த சூழல் இருக்க முடியாது. யாரோ விரித்த வலையில் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் விழுந்துவிட்டன.
இதைத்தான் இன்று தந்தி டிவியில் அழுத்தமாக குறிபிட்டேன்“
இவர் கூறிய “விஸ்வரூபம் படச் சர்ச்சைய முன்னிட்டு தமிழகத்தில் முஸ்லீம்கள் மேல் மிகபெரிய வெறுப்புணர்வு தோற்றுவிக்கபட்டு விட்டது. தியேட்டரகள் தாக்கப்படுவது இந்தச் சூழலுக்கு வலிமை சேர்க்கின்றன.”
இந்த வரியில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதைத் தான் பின்வரும் பகுதியில் விளக்கப் போகிறேன்.
ஆனால் “இந்துத்துவா அமைப்புகள் தமிழ்கத்தில் காலூன்ற இதைவிட சிறந்த சூழல் இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.
இருந்தால் என்ன தவறு?
ஏன் சார்? தமிழகத்தில் மட்டும் 24 முஸ்லிம் அமைப்புகள் இருக்கும் போது, இரண்டு இந்து அமைப்புகள் கால் ஊன்றினால் என்ன தவறு?
இந்த 24 அமைப்புகளும் என்ன ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்!
அவர்களுடைய மதத்தை வளர்க்கிறார்கள், அவர்கள் மதத்தினருக்கு ஏதும் பிரச்சனை என்றால் அதற்கு துணை நிற்கிறார்கள்.
சிறுபான்மையினருக்கே 24 அமைப்புகள் இருக்கும் போது பெரும்பான்மையினரான இந்துக்களுக்கு இரண்டு அமைப்புகள் இருந்தால் என்ன தவறு?
அப்படியே இந்து அமைப்புகள் இருந்தாலும், அதற்கு வழக்கம் போல தமிழகத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்காது என்பது வேறு விஷயம்.
இந்த அமைப்புகள் மத்திய அரசால் சட்டப் பூர்வமாக அனுமதிக்கப்பட்டவை தானே! தீவிரவாத அமைப்பு ஒன்றுமில்லையே.
ஏன் இவர்கள் தமிழகத்தில் கால் ஊன்றினால் என்ன தவறு? எதற்கு பயப்படுகிறீர்கள்?
இது தவறு என்றால் 24 அமைப்புகளையும் கண்டியுங்கள். நீங்க தான் நடுநிலை ஆச்சே!
தமிழகத்தில் இந்து அமைப்புகளுக்கு உண்மையில் வேலையே இல்லை என்று நினைக்கிறேன்.
அதற்குத் தான் நீங்கள், கலைஞர், வீரமணி போன்றவர்கள் இருக்கிறீர்களே! நீங்கள் இது போல பேசப்பேச இந்துக்கள் வலிமை தான் கூடும்.
இந்து வெறியர்கள்!
நான் உண்டு என் வேலை உண்டு, நான் ரசிக்கும் சினிமா உண்டு என்று இருக்கும் என்னைப் போன்றவர்களை எல்லாம் இது போல மதம் சம்பந்தமாக எழுத வைத்த பெருமை!! எல்லாம் உங்களைப் போன்றவர்களையே சாரும்.
இந்துக்களை “இந்துத்வா” “இந்து வெறியர்கள்” “காட்டுமிராண்டிகள்” என்று கூறும் பிரபலங்களே! அரசியல் தலைவர்களே!! தில் இருந்தால் மற்ற மதங்களைக் கூறிப் பாருங்கள்.
யார் அதிக சகிப்புத் தன்மை உள்ளவர்கள் என்பது புரியும். யார் மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கிறவர்கள் என்று புரியும்.
இதெல்லாம் உங்களுக்கு தெரிந்ததால் தான் “வெறியர்கள் அன்பர்கள்” எல்லாம் சரியாக வருகிறது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
சார்! சிறு ஆலோசனை… உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் / இலக்கியவாதிகள் / பிரபலங்கள் எல்லாம் எழுத்துப் பிழையுடன் எழுதினால் என்னாவது!
நீங்கள் எழுதும் ஸ்டேடஸ் ல் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்.
கருத்துப் பிழைகள் தான் உங்களால் தவிர்க்க முடியவில்லை என்றால், எழுத்துப் பிழைகளையாவது சரி செய்யுங்கள்.
“விஸ்வரூப” விவகாரத்தின் பின் விளைவுகள்
முஸ்லிம் அமைப்புகள் “விஸ்வரூபம்” படத்திற்கு அளவுக்கு மீறிய எதிர்ப்பு தெரிவித்ததால் சாதித்த விஷயங்கள் இரண்டு.
1. இனி முஸ்லிம் குறித்து படம் எடுக்கப்போகும் இயக்குனர்கள் ஒரு வாட்டிக்கு நாலு வாட்டி யோசிப்பாங்க, அதை வாங்கும் விநியோகஸ்தர்களும் தயங்குவாங்க.
இது முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஒரு நல்ல விஷயம்.
2. விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழிகள் என்று, கொஞ்சம் கூட நியாயமற்ற முறையில் படத்தையே தடை செய்ய வேண்டும் என்று வீம்பு பிடித்து அதற்கேற்றாப் போல நடந்து கொண்டதால், இது வரை இந்து மதம் என்ற எந்தப் போர்வையும் இல்லாமல் இருந்த சாதாரணமானவர்களைக் கூட தீவிர இந்துக்களாக மாற்றியது.
அதை விட முக்கியமாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை வர வைத்தது.
இந்த இரண்டும் தான் இந்த போராட்டங்கள் மூலம் நடந்த விஷயங்கள். முதலில் நடந்தது நல்ல விஷயம் என்றால் இரண்டாவது, முதல் விஷயத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டதே உண்மை.
முஸ்லிம் அமைப்புகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நினைப்பது போல இந்தப்படம் பார்த்துத் தான் மற்ற மதத்தினர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக நினைப்பார்களா!
நினைக்கிறவன் எப்படி இருந்தாலும் நினைப்பான், அதை உங்களால் என்றுமே தடுக்க முடியாது.
நினைக்காதவன் எப்படி இருந்தாலும் நினைக்க மாட்டான். தற்போது நீங்கள் செய்த காரியம், நினைக்காதவனையும் வம்படியாக முஸ்லிம் என்றால் இந்துக்களுக்கு எதிரி என்று நினைக்க வைத்ததே ஆகும்.
இதற்கு முழுப் பொறுப்பு போராட்டத் தலைவர்கள் மற்றும் இதை முன்னெடுத்து இணையத்திலும் & வெளி இடங்களிலும் நடத்திய அவர்கள் குழுவினரே!
இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் அல்ல.
இந்த அமைப்பினர் செய்த தவறால் அதிகம் பாதிக்கப்படப்போவது அப்பாவிகள் தான்.
ஜனநாயக முறை
போராட்டத்தில் ஆர்வம் இல்லாதவர்கள், மற்றவர்களுடன் இயல்பாக இருக்கும் படி (ஆனால் இல்லை, சிலரே நார்மலாக இருக்கிறார்கள்) பேச வேண்டும் படி ஒரு தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியது இவர்களே!
முன்பு போல எளிதாக இந்து மத நண்பர்களுடன் விவாதத்தில் கலந்து கொள்ள முடியாமல், தங்கள் கருத்துகளை முன்பு போல சகஜமாக கூற முடியாமல், தவிக்கும் நிலைக்குத் தள்ளியது இவர்களே.
(இது பின்னாளில் மாறும் என்றாலும் என்று வேண்டும் என்றாலும் தன் முகத்தைக் காட்டும்) இவர்கள் என்ன தவறு செய்தார்கள்?
சர்ச்சைக்குரிய காட்சிகளை, வசனங்களை மட்டும் நீக்கி, மியூட் செய்து ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் இருக்கும்.
இது பற்றியே கண்டு கொள்ளாமல் விட்டு இருந்தால் படம் நல்லா இருந்தால் பாராட்டி விட்டு நன்றாக இல்லை என்றால் கண்டு கொள்ளாமல் போய் இருப்பார்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தும் கடைசியில் என்ன நடந்தது? சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கி இருக்கிறீர்கள், இதை முதலிலேயே செய்து இருக்கலாமே!
தற்போது ஏகத்திற்கும் பிரச்சனை செய்து படம் பார்க்காதவனையும் பார்க்க வைத்து / உங்கள் மீதும் வெறுப்பு வர வைத்து நீங்கள் சாதித்தது என்ன?
தற்போது ஒன்றும் இல்லாமல் போய் இருக்க வேண்டிய விஷயத்தைப் பெரிதாக்கி அனைவருக்கும் கொண்டு சென்றதே நீங்கள் தான்.
மூடி இருப்பதை தான் எவனும் திறந்து பார்க்கணும் என்று நினைப்பான். இதைத்தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.
அறிவிக்கப்படாத விஸ்வரூப விளம்பர பிரிவாகத் தான் நீங்கள் செயல்பட்டு இருக்கிறீர்கள். இதை புரிந்துகொள்ளப் போவதே இல்லை.
தற்போது நீங்கள் நினைத்ததும் நடக்கவில்லை (தமிழகத்தில் மட்டும் சில காட்சிகள் வெட்டப்பட்டது), நடக்கக் கூடாது என்று நினைத்தது அதை விட பல மடங்கு நடந்து விட்டது.
தற்போது கூறுங்கள், இத்தனை போராட்டங்கள் செய்து நீங்கள் பெற்றது என்ன?
தீவிரவாதம்
ஆயிரம் தான் விளக்கம் / சமாதானம் கூறினாலும் உலகில் தீவிரவாதிகள் பெரும்பான்மையோர் முஸ்லிம்களாக இருப்பது உண்மை தான்.
இதை நீங்களே மறுக்க முடியாது, வீம்புக்கு வேண்டும் என்றால் மறுக்கலாம். எனவே பொதுப்புத்தியை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது.
தீவிரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தானில் தற்போது தினமும் குண்டு வெடிக்கிறது. கடந்த வாரம் கூட இரு முஸ்லிம் தீவிரவாத குழுக்களுக்குள் நடந்த கோஷ்டி சண்டையில் 100 பேர் இறந்தார்கள்.
“இந்து” தீவிரவாதம், பயங்கரவாதம் என்று உங்களால் மலேகான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத், குஜராத், பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்களை மட்டுமே திரும்பத் திரும்ப உதாரணமாக காட்ட முடிகிறது ஆனால், முஸ்லிம் தீவிரவாத செய்திகள் பற்றி தினமும் செய்திகளில் வருகிறது.
இதைப் எப்படி பொதுப் புத்தியில் இருந்து மாற்ற முடியும்?
தமிழகத்தில் போலிச்சாமியார் 90 % இந்துக்கள் தான். ஏன் முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களில் போலிகள் இல்லையா! இருக்கிறார்கள் ஆனால், அளவில் குறைவு.
எனவே தான் திரைப்படங்களில் போலிச்சாமியார் என்றால் அது இந்துக்களை தான் காட்ட வேண்டி வருகிறது.
மெஜாரிட்டி யாரோ அவர்களை அந்தக் கதாப்பாத்திரங்களாக காட்டுவது இயல்பு. மக்கள் கோபப்பட வேண்டும் என்றால் அது சாமியார்கள் மீது தானே தவிர படம் எடுப்பவர்கள் மீதல்ல.
போலிச் சாமியார் என்றால் இந்துக்களை தானே கூறுகிறார்கள் முஸ்லிம் / கிறிஸ்தவர்களை அல்லவே! இதெல்லாம் தற்போது மாறக்கூடிய விசயங்களே அல்ல.
எப்போது தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் பெரும்பாமையோர் இல்லாமல் இருக்கிறார்களோ அன்று தான் மாற்றம் வரும்.
அது கூட அப்பவே அல்ல இரண்டு தலைமுறை ஆகும். எத்தனை தடை போட்டாலும் போராட்டம் செய்தாலும் மாறாது, இது தான் நிதர்சனம்.
நியாயமாக நீங்கள் கோபப்படவேண்டியது தலிபான்கள் / முஸ்லிம் தீவிரவாதிகள் மீது தான். இவர்கள் தான் இஸ்லாமை அவமதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களை எதிர்த்துத் தான் நீங்கள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும்.
இவர்களைப் பார்த்து தான் உங்களையும் தீவிரவாதிகள் என்று மற்ற மதத்தினர் நினைக்கிறார்கள் / கூறுகிறார்கள்.
உங்களைத் தீவிரவாதிகளாக மற்றவர்கள் நினைப்பதற்குக் முழுக் காரணமும் உங்கள் இனத்தவர்களே தானே தவிர, மற்றவர்கள் அல்ல.
எனவே, உங்கள் கோபத்தை இவர்கள் மீது திருப்புவது தான் நியாயம் / தர்மம்.
இது போலப் படங்களைத் தடை செய்து மக்கள் மனதை மாற்ற நினைப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.
இது போலச் செய்வதெல்லாம் சீப்பை ஒளித்து வைத்து விட்டால், திருமணம் நின்று விடும் என்று கூறப்படும் காமெடிக்கு நிகரானது.
தடை
இது போல உலகில் தினமும் நடக்கும் சம்பவங்களைக் வீட்டிற்க்கே கொண்டு வரும் செய்தித்தாள்களையும், தொலைக்காட்சிகளையும், இணையத்தையும் தடை செய்ய முடியுமா?
இதற்கு மூல காரணம் என்னவோ அதைத் தான் சரி செய்ய போராட வேண்டும்.
ஒரு படம் எடுக்கும் போது காட்சிகள் தவறாக இருந்தால் அதை எடிட் செய்யலாம் / மியூட் செய்யலாம் / ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
அதை விட்டு விட்டுச் சென்சார் செய்யப்பட்ட படத்தையே தடை செய்ய வேண்டும் என்றால் எப்படி?
இரு தரப்பும் சமரசமாக போனால் தான் / விட்டுக்கொடுத்தால் தான் பிரச்னைக்கு முடிவு காண முடியும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கமலும் நீங்களும் விடாப்பிடியாக இருந்தால் எப்படி பிரச்சனை தீரும்? சரி! நீங்கள் அப்படி இருந்தும் தற்போது சாதித்தது என்ன?
படம் வெளியான பிறகு அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால், மேற்கூறிய முறையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
படம் வெளிவரும் முன்பே போராட்டம் / படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதெல்லாம், எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இது உங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மத அமைப்புகளுக்கும் பொருந்தும்.
உங்கள் கருத்துக்களில் / போராட்டங்களில் / பிரச்சாரங்களில் நீங்கள் முனைப்பாக உள்ளதால் இன்னொன்றையும் கூற விரும்புகிறேன்.
வெறுப்பு பதிவுகள்
தற்போது பதிவுலகில் [Blog] இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக தீவிரமாக பலர் எழுதி வருகிறார்கள்.
அதிலும் ஒருவர் இதே வேலையாக இந்துக்களை திட்டியும், இந்தியாவை அவமதித்தும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவர் போன்றவர்கள் இஸ்லாம் மதத்தில் இருப்பவர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கலாம்.
ஆனால், மற்ற மதத்தினருக்கு குறிப்பாக இந்துக்களுக்கு முஸ்லிம் மதத்தினர் மீது வெறுப்பு வரும்படி தீவிரமாக உழைத்துக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.
நீங்க “இந்துத்வா” என்று சொல்கிறீர்களே அந்த அமைப்புகளுக்கு வேலையே வைக்காமல், இவரே அவர்களுக்காக மார்க்கெட்டிங் வேலையைச் செய்து வருகிறார்.
இதை அவரும் எக்காலத்திலும் சத்தியமாகப் புரிந்து கொள்ளப்போவதில்லை.
நான் மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் கமெண்ட் போட மாட்டேன்.
ஆனால், இவர் இந்தியாவைப் பற்றி தொடர்ந்து கேவலமாக எழுதிக்கொண்டு இருந்ததை கண்டு (இந்துக்கள் பற்றி எழுதியது கூட இல்லை) ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், நாகரீகமான முறையில் அவர் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் இட்டேன் ஆனால், அதை அவர் வெளியிடவே இல்லை.
இவரைப் போன்றவர்கள் இஸ்லாமிற்கு பலமல்ல என்பதை, எப்போது நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ளப்போகிறீர்களோ!
இஸ்லாம் மீது மற்ற மதத்தினர் வெறுப்பை வளர்க்கவே இவர்கள் துணை புரிகிறார்கள்.
ரஜினி ரசிகன்
நான் ரஜினி ரசிகன் என்பதால், ரஜினி என்ன செய்தாலும் அதை நான் பாராட்டிக்கொண்டு / புகழ் பாடிக்கொண்டு / மற்ற நடிகர்களைத் திட்டி எழுதிக் கொண்டு இருந்தால், ரஜினி ரசிகனாக இல்லாமல் இருப்பவருக்குப் படித்தால் கடுப்பு தான் வருமே தவிர, வேறு ஒரு பயனும் இல்லை.
ரஜினி ரசிகர்களுக்கு வேண்டும் என்றால் படிக்க இனிப்பாக இருக்கும் (அதுவே சந்தேகம்!).
இதே, தேவைப்படும் நேரத்தில் மட்டும் எழுதிக்கொண்டு இருந்தால், படிப்பவர்களும் கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
சரி! இவன் என்ன தான் சொல்றான் என்று கேட்க நினைப்பார்கள்! இந்த முறை எதற்கும் பொருந்தும். “SIMPLE LOGIC”. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்.
குரான் பகவத்கீதை
இந்து மதத்தைச் சார்ந்தவன் என்றாலும் நீங்கள் குரானை அப்படியே வரிக்கு வரி பின்பற்றுவது போல, நான் கீதையை பின்பற்றுவதில்லை.
இன்னும் கூறினால் எனக்கு முதலில் இந்து மதத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை ஆனால், என் மதம் பிடிக்கும் அவ்வளோ தான்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை நான் கொஞ்சம் கூடப் படித்தது கிடையாது.
அதனால், உங்களைப் போல வரிக்கு வரி குரானிலிருந்து எடுத்துக்காட்டு கூறுவது போலக் கீதையில் காட்டுவது என்னால் சாத்தியமே இல்லாதது.
கீதையில் எனக்கு தெரிந்த ஒரே விஷயம் “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது…..” இது மட்டும் தான்.
இது முஸ்லிம்களான உங்களுக்கே தெரியும்.
இது கூட நிறைய இடத்தில் பலர் ஒட்டி வைத்து இருப்பதால் தான், இல்லைனா அது கூடத் தெரியாது.
பகவத் கீதையை முழுவதுமாக படிக்கப் பொறுமையும் / ஆர்வமும் இல்லை. இந்த அளவில் தான் என் இந்து மத அறிவு / ஆர்வம்.
எனவே, எனக்கு பகவத் கீதை போன்ற கடினமான புத்தகங்கள் சரிப்பட்டு வராது. கண்ணதாசன் எழுதிய “அர்த்தமுள்ள இந்து மதம்” புத்தகமே சரியானது.
இதைப் படிக்கவேண்டும் என்று பல நாள் நினைத்துள்ளேன் ஆனால், எனக்கு ஆர்வம் வந்ததில்லை ஆனால், தற்போது இதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கிறது.
எதனால் என்று உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லை என்றால் ரொம்பக் கஷ்டம்.
பிற்சேர்க்கை – அர்த்தமுள்ள இந்து மதம்
“இந்து” மத சுதந்திரம்
என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது / இதைத் தான் நீ செய்ய வேண்டும் என்று கட்டளை இட முடியாது / நான் செய்வதை சரி / தவறு என்று வரையறைக்குள் கொண்டு வர யாருக்கும் உரிமை கிடையாது.
இந்து மதத்திற்கு என்று எந்தத் தலைவரும் கிடையாது / நீ “இந்து” மதத்திற்கு எதிரான செயல் புரிந்து விட்டாய் என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது (நான் அநாகரீகமாக நடந்து கொள்ளாத வரை).
இந்த “இந்து” மத சுதந்திரம் எனக்கு பிடித்து இருக்கிறது. இது எனக்குப் போதுமானது.
7 வருடமாக எழுதுகிறேன் இது வரை எந்த மதத்தையும் அவமதித்தோ கிண்டலடித்தோ எழுதியதில்லை, அப்படி செய்யவேண்டிய அவசியமும் எனக்கில்லை.
எனக்கு பிடித்த விசயங்களை எழுதுவேன் பிடிக்காத விசயங்களைக் கண்டு கொள்ள மாட்டேன்.
என் மதத்தை யாரும் தவறாகக் கூறினால், எதிர்க்கும் சராசரி இந்து நான், நீங்கள் நினைக்கும் “இந்துத்வா” இல்லை.
7 வருட காலத்தில் மத சம்பந்தமாக நான் எழுதியது ஒரே ஒரு பதிவு தான்.
Read: ஹீசைன் படங்களை விமர்சித்தால் அவர் இந்து வெறியரா!
இப்படிப்பட்ட என்னையே சமீப நிகழ்வுகள் மாற்றிக்கொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம், சமீபத்திய உங்களுடைய மூர்க்கமான போராட்டங்கள் / பரப்புரைகள் தான்.
இந்துத்வா
உங்கள் பலத்தைக் காட்டியதாக பெருமைப் பட்டுக்கொள்ளலாம் ஆனால், உங்கள் எதிர்ப்பாளர்களை மறைமுகமாக நீங்கள் அதிகரித்துள்ளீர்கள் என்பதே உண்மை!
தமிழக முஸ்லிம் அமைப்புகளும் மற்றும் இணையத்தில் உள்ள சிலரும் என்னைப் போன்றவர்களை “இந்துத்வா” ஆக்காமல் ஓய மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு எது சாதனை என்று! உங்கள் பலத்தைக் காட்டியதா / உங்கள் எதிர்ப்பாளர்களை அதிகரித்துக்கொண்டதா!
இனி வரும் காலங்களில் உங்கள் பலத்தைக் காட்டுவதாகக் கருதி இது போல அடாவடியான / பிடிவாதமான போராட்டங்கள் செய்தால், அது உங்கள் பலத்தை மட்டும் காட்டாது, உடன் கூடுதல் எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்துத் தரும்.
அது இஸ்லாம் மக்களுக்கு மட்டுமல்ல, எந்த மதத்தினருக்குமே நல்லது அல்ல, குறிப்பாக தமிழகத்திற்கு நல்லதல்ல.
என் எண்ணங்கள் மாறுவதற்குக் காரணம், “இந்து” அமைப்புகள் நிச்சயம் கிடையாது, என்பதை அறுதியிட்டுக் கூறுகிறேன்.
இதற்கு முழுக்காரணமும் நடுநிலை என்ற பெயரில் உளரும் பிரபலங்களும், ஓட்டு வங்கிக்காகப் பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுமே!
ஆனால், நிச்சயம் என்னால் உறுதி கூற முடியும். நான் என்ன மாறினாலும், மற்ற மதத்தைப் பற்றி (மட்டுமல்ல யாரைப் பற்றியும்) அநாகரீகமா எழுத மாட்டேன் என்று.
இதை என் ஒருவனின் குரலாக நினைக்க வேண்டாம். நான் வெளிப்படையாகக் கூறி விட்டேன், மற்றவர்கள் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
செம தல
கலக்கல் பதிவு
– அருண்
கிரி ,
என்னை போல உங்களைபோல உள்ளவர்கள் “இந்துத்வா” வாக மாறினால் என்ன ஆகும் என்பதையும் சொன்னால் மிரட்டல இறுக்கும்…..
ஒஹ் நான் “இந்துத்வா” வாக மறிடேனோ ????
நாம் எல்லாம் மனிதர்களாக இருந்தால் போதும் கில்லாடி. நமக்கு எந்த போர்வையும் வேண்டாம்.
சரியாகக் சொல்லி இருக்கிறிர்கள் கில்லாடி. என்னுடைய நிலைப்படும் அப்படித்தான். யார்பக்கம் பேசுவது என்று இதில் மாட்டிகொண்டு கஷ்டபடுவது நம்முடைய முஸ்லிம் நண்பர்கள் தான்.
சரியாக சொன்னீர்கள் கிரி. அனைவரும் ஒற்றுமையாக வாழ முயற்சி செய்யுங்கள். அதுதான் நமது தேசத்திற்கு இன்றைய சூழலில் இன்றியமையாதது. மத சார்பற்ற நாட்டை மத சார்பற்ற நாடாகவே தொடர வேண்டுமென்றால் அமைதி மிக அவசியமானது. நாம் அனைவரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். ஆகவே சகோதரனாக வாழ முயல்வோம்.
அருமையான பதிவு கிரி….Hats off….
வரிக்கு வரி உடன்படுகிறேன்…நான் மனசுக்குள்ள நினைச்சு நினைச்சு புழுங்கிட்டு இருந்ததை நீங்க பதிவா கொண்டு வந்துடீங்க….
இன்றைய தேதிக்கு முஸ்லிம் பதிவர்களை, கண்டாலே கோவம் தான் வருது.. அது இவர்களா ஏற்படுத்தி கொண்டது…
நீங்க சொல்லுற அந்த முஸ்லிம் பதிவர் பேரை கேட்டாலே கொலை வெறி கோவம் வருது. என்னால இனி மேல் அவங்க கூட இனி மேல் சகஜமா பழக முடியுமான்னு தெரியல…
Boss it is real fact. Well said
இந்த 24 இஸ்லாமிய மத தலைவருள் ஒருவர் பேசிய வீடியோ கண்டேன்.
அதில் சில.
“இந்த உலகில் அனைவரும் அசைவம் தான். ஏன் எனில், நாம் குடிக்கும் தண்ணீரில் கோடி கணக்கான பக்டீரியா இருக்கிறது.
அகவே அசைவம்.
அந்த நீரை கொதிக்க வைத்து குடித்தால், அது பக்டீரியா சூப் ஆகிறது.
அதுவும் அசைவம் தான்.”
ஆக ஒரு மாட்டினை கொல்வதும், தண்ணீர் குடிப்பதும் ஒன்றே என்பது இவர் கண்டுபிடிப்பு.
இதை அறியாமை என விட்டு தள்ளலாம்.
ஆனால் இதே இஸ்லாமிய மத தலைவர், மாற்று கருத்து உள்ளவர்களை பற்றி இவ்வாறு பேசுகிறார்.
“… என்பருக்கு எயிட்ஸ் உள்ளது. இவர் தாய் ஒழுக்கம் இல்லாதவர். அகவே இவர் தாய் வழியே இவருக்கு எயிட்ஸ் வந்துள்ளது”
“… என்பவருடைய மனைவி, மகள் என அனைவரும் ‘தவறான தொழில்’ செய்கின்றனர்”
“… என்பவர் தன் மகளுடன் தவறாக பழகுகின்றார்”
இந்த இஸ்லாமிய மத தலைவர் மேலே உள்ள கருத்தை வீதியில் நின்று பேசுகிறார். இதை கேட்பவர்கள் ஆண்களும், பெண்களும்.
இந்த நபர் இஸ்லாமில் இருந்து எந்த நன்மையையும் பெறவில்லை, பெறபோவதும் இல்லை.
இத்தகைய நபர்கள் இஸ்லாத்துக்கு ஆபத்தானவர்கள்.
//இதை என்னுடைய ஒருவனின் குரலாக நினைக்க வேண்டாம். நான் வெளிப்படையாகக் கூறி விட்டேன், மற்றவர்கள் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.//
சரியாகச் சொன்னீர்கள் கிரி..சமீபத்தில் என் நண்பரிடம் பேசியபோது, ‘மோடி வந்தாத்தான் சரியா வருமோ?’ என்றார். இத்தனைக்கும் அவர் நம்மைப்போல்’சொரணை கெட்ட’ இந்து. இப்படி பலரையும் இந்துத்வாவை நோக்கித் தள்ளுவது தான் இவர்களின் சாதனை. மம்மியும் அதனால்தான் ஆதரிக்கிறாரோ, என்னவோ!
//அதிலும் ஒருவர் இதே வேலையாக இந்துக்களை திட்டியும், இந்தியாவை அவமதித்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவர் போன்றவர்கள் இஸ்லாம் மதத்தில் இருப்பவர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கலாம்//
நான் ஆரம்பத்தில் எல்லா பதிவுகளையும் மிகவும் ஆர்வத்துடன் படித்து வந்தேன்.இப்போதெல்லாம் சில பதிவுகளை கிளிக் செய்வதையே,நரகலில் கை வைத்து விடுவோம் என்ற உணர்வுடன்,தவிர்த்து விடுகிறேன்.இது போன்ற நாற்றமெடுத்த பதிவுகளை படிக்காமல் செல்வது மனத்தூய்மையை அதிகரிக்கும்.
பதிவு பெரிதாக இல்லை;கருத்துக்கள் நிறைய உள்ளன.பதிவின் கடைசிவரிகள் எனக்கும் சரியென்றே தோன்றுகிறது. நன்றி.
“வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்”….இங்க இருக்கிரவனுக்கே TROUSER கிழியுது….
கிரி…பட்டாசான பதிப்பு…நிறைய கமெண்ட்ஸ் போட தோணுது…ஆனா எனக்குள்ள இருக்கிற அந்த சிங்கத இன்னும் கொஞ்ச நாட்கள் தூங்க வைக்க போறேன்…
ஆனா ஒன்னு (ஆனா ஒன்னு தாங்க, ஆவன்னாதான் ரெண்டுன்னு சொல்லாத…)…கமல் சொன்ன மாதிரி, எதிர்காலத்துல கோவில அல்லது சர்ச் அல்லது மசூதிய இடிக்கறவன் நாத்தீகனா இறுக்கமாட்டான்…
மிக அருமையான பதிவு,மிக மிக அர்த்தமுள்ள கருத்துக்கள்.
/* உங்கள் எதிர்ப்பாளர்களை மறைமுகமாக நீங்கள் அதிகரித்துள்ளீர்கள் என்பதே உண்மை! */
100% உங்களுடன் ஒத்துப்போகிறேன்.
நாம பேசாம இருக்கிறதால பயந்திட்டு இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள் போல!
சூப்பர் சார், இது எல்லா இந்துக்களின் குரலாக ஒலிகின்றது .
நான் உங்களது blog-கை தான் Continuous-ச படிக்கிறேன். infact நான் உங்க blog-க மட்டும்தான் படிகேறேன் இப்போயெல்லாம்.
அதுக்கு என்ன காரணம்னு தெரியல. நீங்கள் எழுதிய பல பதிவுகளில் இருக்கும் கருத்துகளில், எனக்கு பல மாற்று கருத்துகள் இருக்கும். சரி, அது அவரது கருத்து, நாம் என்ன சொல்லரத்துக்கு இருக்கு என்று இருந்துவிடுவேன். நீங்கள் எழுதிய இந்த பதிவின் கருத்துக்களுக்கு நான் 100% ஒத்துக்குறேன். நீங்க சொல்றது 100% கரெக்ட். இந்த போராடங்கலனால, தமிழகத்துல ஒத்துமைதான் குழயபோகுது. என்னத்த சொல்றது, இதெல்லாம் எங்க கொண்டுபோய் முடியுமோ தெரியல.
தங்களுடைய கருத்தை நடுநிலையாக பார்க்க முடியவில்லை. தங்களைப் போன்றே இன்னும் சிலரும் கூறுவதை கேட்கிறேன். இதெல்லாம் வெளிப்படையாக இந்துத்வத்தின் (அல்லது இஸ்லாமிய எதிர்ப்பின்) பக்கம் சாயமுடியாமல் இருந்தவர்களின் சந்தர்ப்பவாதமாகவே எனக்குப்படுகிறது. இன்றைக்கு விஸ்வரூபம் படத்தை எதிர்த்துவிட்டார்கள் என்பதற்காக இவ்வளவு தூரம் நியாயம் பேசுகிறீர்களே, 20 வருடத்திற்கு முன்பே மணிரத்தினம், பாம்பே படத்தை பால்தாக்கரேவிற்கு போட்டுக்காட்டி அவர் நீக்க சொன்ன காட்சிகளை நீக்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முஸ்லிம்கள் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு இதுவரை தடை கோரியிருப்பது போலவும், இதற்கு முன் அப்படி எதுவும் நடக்காதது போலவும் ஏன் காட்டிக் கொள்கிறார்கள்? ஒருவேளை அரசு முஸ்லிம் அமைப்புகளீன் கோரிக்கையை ஏற்காமல் இருந்திருந்தால் படம் வெளியாகி சில பல ஆர்ப்பாட்டங்களுடன் எல்லாம் ஓய்ந்து போயிருக்கும், அப்போது உங்கள் பார்வை எப்படி இருந்திருக்கும்?
முஸ்லிம் அமைப்புகள் செய்வது சரியென்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் உங்கள் கருத்தே எனதும். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே இப்படி நடந்து கொள்கின்றன என்ற கருத்து தவறானது. இந்த விஷயத்தில் இந்து அமைப்புகளும் இப்படித்தான் நடந்து கொள்ளும், நடந்து கொண்டிருக்கின்றன.
அமைதியான மாநிலமாக தோற்றமளிக்கும் தமிழகத்தில் கூட சென்னையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது தீவீரவாதம் என்றால் என்னவென்று அறிந்திராத 90-களின் முதல்பாதியிலேயே இருந்தது என்பதை அறிவீர்களா? இன்றைக்கு பொது இடங்களில் முஸ்லிம்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வையை அறிவீர்களா? சாதாரண வழக்குகளில் போலீசில் மாட்டினால் கூட முஸ்லிம்களை நிலை என்னாகிறது என்று புரிந்து கொள்வீர்களா?
இதற்கெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகளே மிக முக்கியமான காரணம் என்றாலும், இத்தகைய அடையாளப்படுத்துதல் பெரும்பான்மையான அப்பாவி முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்து விட்டிருப்பதை அறிவீர்களா? தீவிரவாத சம்பவங்கள் நடக்கும் போது மீடியாக்கள் இத்தகைய அடையாளப்படுத்தல் நடைபெறுகிறது, அந்த நேரத்தில் சகநண்பர்கள் மத்தியில், அலுவலகங்கள், பொது இடங்களில் முஸ்லிம்கள் எவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அது போன்ற நிகழ்வில் இருந்து இயல்பிற்கு திரும்ப சிலநாட்களாவது ஆகிறது.
இது போன்ற சங்கடம் தரும் சூழல்களை ஏன் திரையில் மீண்டும் மீண்டும் உருவாக்குகிறீர்கள் என்பதே என் கேள்வி.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சகமுஸ்லிம் நண்பனை யாரும் தவறாக நினைத்துவிட போவதில்லைதான். ஆனால் முகம் தெரியாத ஒரு முஸ்லிமிடம் எப்படி நடந்து கொள்வீர்கள்? ரயிலில் இஸ்லாமிய அடையாளத்துடன் ஒருவர் உங்கள் அருகில் வந்து அமர்ந்தால், அவரை நீங்கள் தீவிரவாதி என்று எண்ணாவிட்டாலும் மனதில் ஒரு சலனம்கூட உருவாகாது என்று கூற முடியுமா? முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படங்களைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? பிற்காலத்தில் முஸ்லிம்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?
நாம் ஒரு முதிர்ச்சியான சமூகமாக அமையும் வரை நாம் நமக்கு சில கட்டுப்பாடுகளை வைத்திருத்தல் நலம் என்பதே எனது கருத்து. அது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருந்தாலும் தேவைதான். அந்த நோக்கில்தான் சென்சார் போர்டு என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. (100% கருத்து சுதந்திரம் தேவையென்றால் சென்சார் போர்டே தேவையில்லை, நாம் சென்சார் போர்டு என்ற ஒரு அமைப்பை ஒத்துக் கொள்கிறோம் என்றாலே கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை ஆதரிக்கிறோம் என்றாகிறது என்பது நினைவிருக்கட்டும்). முஸ்லிம் அமைப்புகள் ஆட்சேபிக்கும் காட்சிகளை சென்சார் போர்டே செய்திருந்தால் சிறு செய்தியாக முடிந்திருக்கும். ஆனால் தனி அமைப்புகளுக்கு போட்டுக்காட்டி தடை செய்து, பின்பு பேச்சுவார்த்தை நடத்துவது மிக மிக தவறானது. ஆனால் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய வெறுப்பு திட்டமிட்டே பரப்பப்படுவது அதைவிட மிகவும் தவறானது. இதில் சில முற்போக்குவாதிகளும் (என்று காட்டிகொள்பவர்கள்) இருப்பது வியப்பாக இருக்கிறது. ஒரு படம் தடை செய்யப்பட்டதற்காக இவ்வளவு வெறுப்பா என்று திகைப்பாகவும் இருக்கிறது. இவ்வளவு இங்கே எத்தனை வெறுப்பை விதைத்தாலும் நாம் முஸ்லிம்களுடன் சேர்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பு வெறுப்பிற்கே வழிகோலும். வெறுப்பு எதற்குமே தீர்வாகாது.
கிரி,
மிக அர்த்தமும், தார்மீக கோவமும் கொண்டு வழக்கம் போலவே உங்களின் எளிய நடையில் யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதியுள்ளீர்கள் இப்பதிவை. மிக சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.
இவர்கள் எல்லாம் ஒன்றை மறந்து விட்டவர்கள். இந்திய குடியரசு மத சார்பற்ற நாடு என்று இருப்பதே, மெஜாரிட்டி மக்கள் ஹிந்துக்களாக இருப்பதால்தான் என்பதை ஏனோ வசதியாக மறந்து விட்டு ஹிந்துக்களையே கிண்டலும், கேலியும், திட்டியும் பேசுகிறார்கள். கஜினி முகமது, கோரி முகமது, அவுரங்கசேப் போன்ற அரக்கர்களிடமே சிக்கி அழியாத ஹிந்து மதமா இந்த மாதிரி அறிவிலிகளிடம் அழிந்து விடும்? நீங்கள் சொல்வது போல், “தான் உண்டு, தன் வேலை உண்டு” என்று போகின்ற உங்களை போன்றவர்களையும், இது போன்ற “மத சார்பற்ற” நடுநிலைவாதிகளுக்கும், மற்ற மதவாதிகளுக்கும் எதிராகவாவது, இந்து மதத்தை காக்கும் விதமாக கோதாவில் இறங்க வைக்க போகிறதே தவிர அது சாதித்தது வேறு எதுவும் இல்லை.
நான் இன்னும் “அர்த்தமுள்ள இந்து மதம்” படித்ததில்லை. ஆனால், “Autobiography of A Yogi” என்ற புத்தகத்தின் Audio Book (கொஞ்சம் பெரியது) காரில் போய், வருகையில் 2, 3 முறை கேட்டிருக்கிறேன். நீங்களும் முடிந்தால் அதனை கேட்க/படிக்க முயற்சிக்கவும். பிறகு, மதத்தை பற்றிய நம் அணுகு முறையே நல்ல விதத்தில் மாறி விடும். இந்த புத்தகம் தலைவர் மிகவும் விரும்பி வாசித்து, மற்றவர்களுக்கும் பரிசாக அளித்தது. பரமஹம்ச யோகானந்தா என்ற துறவி (1950 களில் இவர் இயற்கை எய்தினார்), தன்னுடைய வாழ்கையையும், தான் துறவி ஆனதையும், தன்னுடைய அனுபவங்களையும் மிக சிறந்த முறையில் கூறி உள்ளார். Audio book ஆங்கிலத்தில் Ben Kingsley (காந்தி படத்தில் காந்தியாக நடித்தவர்) அவர்களால் பேசப்பட்டுள்ளது. Please try to either read or listen to this book. You will never regret the time you spent on this.
மறுபடியும் ஒரு சிறந்த பதிவு எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அருண்
உண்மையில் நீங்கள் அப்பாவி பெரும்பான்மை முஸ்லிம்களைப் பற்றி அக்கரை கொண்டால் என்று நினைத்தால் நீங்கள் புறக்கணிக்க வேண்டியது மதவாதிகளையே தவிர இந்துத்துவத்தை ஆதரிப்பது அல்ல.
///ஏன் சார்? தமிழகத்தில் மட்டும் 24 முஸ்லிம் அமைப்புகள் இருக்கும் போது, இரண்டு இந்து அமைப்புகள் கால் ஊன்றினால் என்ன தவறு? ///
அப்போ இதுவரை எந்த இந்து அமைப்புமே இங்கே காலூன்றவில்லையா? ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் உண்மையான நோக்கம் என்ன என்று யோசித்தது உண்டா? வருடாவருடம் விநாயகர் சதுர்த்தி நடத்தப்படுகிறதே, அதுவும் மசூதிகள் வழியாகத்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து நடத்தப்படுகிறதே அது யாரால்? உங்களுக்கு இது சிறு செய்தியாக இருக்கலாம். ஆனால் அந்தப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களை யோசித்து பாருங்கள். 98-ல் கோவையில் காவலர் செல்வராஜ் அல்-உம்மா என்ற முஸ்லிம் அமைப்பினரால் வெட்டிக் கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவையில் வாழும் முஸ்லிம்கள், அவர்கள் வீடுகள், வணிக நிறுவனங்களைக் குறிவைத்து பெரிய கலவரம், ராணுவத்தை வரவழைக்கும் அளவிற்கு நிகழ்த்தப்பட்டதே, அது யாரால்?
1947-ற்கு முன்பிருந்தே இந்து அமைப்புகளால் முஸ்லிம்களைக் குறிவைத்து திட்டமிட்ட கலவரங்கள் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. எந்த ஊரில் முஸ்லிம்களின் வணிகம் சிறப்பாக நடக்கிறதோ அங்கெல்லாம் இது நடத்தப்பட்டு முஸ்லிம்கள் தலையெடுத்து விடாமல் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்ற கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீதான சட்டரீதியான நடவடிக்கை மிக மிக குறைவு, ஓரிரண்டு கலவரங்களைத்தவிர, கிட்டத்தட்ட நடவடிக்கையே இல்லை என்றே சொல்லலாம். இவ்வளவு ஏன் பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் மும்பையில் நிகழ்த்தப்பட்டதே கலவரம், அதில் ஈடுபட்ட சிவசேனையினர் (பால்தாக்கரேவும்), காவல்துறை அதிகாரிகள், யாரையாவது இதுவரை தண்டிக்க முடிந்ததா? அதே நேரத்தில் பெரும்பாலான குண்டுவெடிப்பு வழக்குகள் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டன என்று அறிவீர்கள். ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு சிறையில் பலவருடம் கிடந்து பின் விடுதலை செய்யபப்ட்ட சம்வங்கள் ஏராளம் உண்டு.
குஜராத் கலவரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர், அதாவது இந்துக்கள் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இத்தனை எண்ணிக்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் உலகம் முழுமைக்கும் கூட இருப்பார்களா? குஜராத் கலவரத்திற்குப் பின்னர், அதனை முழுமையாக ஆதரிக்கும் விதமாக மோடியை குஜராத் மக்கள், அதாவது பெரும்பான்மை இந்துக்கள் தேர்ந்தெடுத்தார்களே, இது போல ஒரு சம்பவம் முஸ்லிம்கள் செய்திருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள்? குஜராத் தேர்தல் முடிவுகளை (கலவரத்திற்குப் பின் வந்த தேர்தல் மட்டும்) முஸ்லிம்களை கொல்வது சரி என்று குஜராத் மக்கள் தீர்ப்பளித்திருப்பதாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டும்? இதை எப்படி எடுத்துக் கொள்வது?
நீங்கள் மனுஷ்ய புத்திரனுக்கு மட்டும் பதில் சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தடை கோரியது என்னை இந்துத்துவத்தின் பக்கம் தள்ளுகிறது என்று சொன்னதாலேயே எனது கருத்துக்களை இப்படி சொல்லவேண்டியதாகிவிட்டது. நன்றி வணக்கம்.
நிங்கள் சொல்வது சரிதான் ஆனால் மோடியை முதலமைசர் ஆக்கவில்லை என்றால் குஜராத்திர்க்கு இன்று கிடைத்த உலகளாவிய பெயர்,புகழ்,பார்வை, மானிலத்தின் வலம் எப்படி இருக்கும். சற்று யோசித்து பாருங்கள் அன்பரே. உலகம் முழுவதும் இந்து சிறுபான்மையினர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் என்ன இப்படியா செயல் படுகிறார்கள். ஏன் அனேக ஆங்கில படங்களில் முஸ்ஸிம் அமைப்புக்களையே….. ஏன் அங்கும் இந்துக்கள் இல்லையா அவர்களை ஏன் தீவிரவாதிபால் எடுப்பதில்லை. என் சோந்த அனுபவம். பல முஸ்லிம் நான்பர்கள் எமாற்றி இருக்கின்றனர் ஆனால் உதவி செய்தவர் என்வாழ் நாளில் ஒருவர் மட்டுமே. அதற்காக நான் முஸ்ஸிம்மையெ குறை சொல்லவில்லை என்னென்றால் அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்று விட்டுவிட்டேன். ஆனால் இப்பொழுது இதை சகித்து கொள்ள வேண்டுமா என்று எண்ணுகிறேன். இந்த மனமாற்றத்திற்கு காரணம் அவர்களே.
இந்துக்களின் பலம் சகிப்புத்தன்மையே. அதை பலவீனமாக்கிவிடாமல் சரியாக புரிந்து கொண்டு நடப்போம். மத நடைமுறைகளில் இந்துமதம் தந்திருக்கும் சுதந்திரம் வேறு எங்கும் இல்லை. மற்ற மதங்கள், மதவாதிகளின் பிடியில் இருக்கின்றன. அவர்கள் நிறுவனமயமாகிவிட்டனர். அதனாலேயே மற்ற மதங்களில் பெரும்பான்மையாக இருக்கும் அப்பாவிகளின் குரல் வெளியே கேட்பதில்லை. இது போன்ற ஒரு சூழலுக்கு வழிகோலிவிடாமல், மதவாதம் எங்கிருந்தாலும் எதிர்க்க முனைவோம். மதவாதத்தை தனிமைப்படுத்தினாலே, பெரும்பான்மை அப்பாவிகள் வெளியே வந்துவிடுவார்கள். ஒன்றுபட்ட சமூகத்திற்கு அதுவே நல்லது.
கிரி
அற்புதமான பதிவு…. உங்களின் நியாயமான கோபம் அழகாக விளக்கப் பட்டு இருக்கிறது….
அர்த்தமுள்ள இந்து மதம் படியுங்கள்…. இல்லையேல் நெட்டில் இலவச ஆடியோ தரவிரக்கம் இருக்கிறது…. கேட்டுப் பாருங்கள்…. அற்புதமாக இருக்கும்….
வெட்டி வீணர்களின் பேச்சை புறம் தள்ளுங்கள்…..
Super
Head shot Giri. Sooper article.
அருமையான பதிவு.தாங்கள் அனுமதித்தால் இந்த பதிவை எங்கள் தளத்தில் நாங்கள் ஷேர் பண்ணலாமா?
கிரி,
உங்கள் எண்ணம் , அதிலுள்ள நியாயம் புரிகிறது ..ஆனால் பல புரிதல்கள் தான் மாறுபாடாக இருக்கிறது .. தொடக்கத்தில் மனுஷயபுத்திரனை ஏதோ பேஸ்புக் பிரபலம் என்பது போல நீங்கள் எழுதியிருப்பதிலிருந்தே சிரித்து இடையிடையே பல முறை சிரித்தேன் . எனினும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
கிரி
உங்கள் ஆதங்கம் புரிகிறது
மதம் என்பது உள்ளாடை போன்றது தனிப்பட்ட வசதியாக வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதை வெளியே காட்டகூடாது
மதம் சார்ந்த தீவிர இயங்கங்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு நன்மை பயக்காது என்பது தான் உண்மை
மதச்சார்பற்ற தலைவர்கள்/அறிவாளிகள் இந்து மதத்தை மட்டுமே இகழ்ந்து மற்ற சிறுபான்மை மதங்களை இகழாமல் இருப்பது அந்த மத நண்பர்களை நம்மில் ஒருவராக எண்ணாமல் இருப்பதருக்கு சமம் . . . அவர்கள் போலி மதசார்பற்றவர்கள்
இந்த போலிகளை கண்டிப்பதோடு நிறுத்திகொள்வோமே
மதம் சார்ந்த அமைப்புகள் ஆதரவு நமக்கு வேண்டாமே
நீங்க என்ன சொல்றீங்க? மனுஷ்ய புத்திரன் இஸ்லாமியர் என்றா? அவர் நாத்திகர் இல்லையா?
இப்போ இஸ்லாமிய மதநம்பிக்கையாளர்கள், அவர்கள் மதத்துக்கு கெட்ட பெயர் வாங்கித் தர்ராங்களா?
விஸ்வரூபம், உ போ ஒ, கமல்ஹாசன் அப்புறம் நீங்க எல்லாம் இஸ்லாமை மதிக்கிறீங்க, அப்படித்தானே?
உங்க பதிவே நீங்க இந்துத்தவாக்களை தூண்டி விடுவதுபோலதான் இருக்கு, கிரி!
இந்தப்பதிவால் நீங்க சாதிச்சது என்ன?
நான் இந்து, நான் இந்து, நான் இந்து னு கொட்டம் அடிப்பதைத் தவிர??
***விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழிகள் என்று, கொஞ்சம் கூட நியாயமற்ற முறையில் படத்தையே தடை செய்ய வேண்டும் என்று வீம்பு பிடித்து அதற்கேற்றாப் போல நடந்து கொண்டதால்..***
கமலஹாசன் எந்த மாற்றமும் இஸ்லாமியரை நான் இழிவுபடுத்தவில்லை என்று சொல்லிக்கொண்டு படத்தில் எந்தவித மாற்றமும் செய்ய தயாராயில்லை என்பதால், படம் தடை செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டது என்பது என் புரிதல்.
இதை ஜெயலலிதா சொன்ன்னாரே?
***இவர் தன்னை நடுநிலைவாதி போல காட்டிக்கொண்டு இந்துக்களை சிறுமைப் படுத்திக்கொண்டு இருக்கிறார். இது தான், என்னுடைய பொறுமையை சோதித்துக்கொண்டு இருக்கிறது.***
***இவர் கூறியுள்ளதைப் பாருங்கள் “இஸ்லாமிய அன்பர்கள்” ஆனால் “இந்துத்துவா வெறியர்கள்”. ***
இப்போ பிரச்சினை இஸ்லாமியர்கள் கிளப்புகிறார்கள். அதனால அவர்களை சரிக்கட்ட “அன்பர்கள்”னு சொல்றாரு. நம்ம கமலு கூட இப்போ சதா “இஸ்லாமியர் சகோத்ரர்கள்”னு சொல்றாரு! இதேபோல் இந்துக்கள் எல்லாம் அவர் மேலே வெறியாக, கோபமாக இருந்தால், இந்து அன்பர்கள்னு சொல்லியிருப்பாரு. அம்புட்டுத்தான்.
“அன்பர்கள்”, “இஸ்லாமிய சகோதரர்கள்” போன்ற வார்த்தை ஜோடிப்புகளை லிட்டெராலாக எடுத்துக்கொண்டு பேசும் உங்களை என்ன செய்வதுனு தெரியலை!
கிரி,
நீங்க இந்த பதிவுல யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள் . மக்கள் அவர்கள் மனதில் என்ன ninaikirargalo , அதைதான் மற்றவரகள் கூறவேண்டும் என்று விரும்புவார்கள்
நன்பர் கிரி,
என் மனதிரையில் ஓடியதை அப்படியெ எழுதியுள்ளிர்கள்
நான் அண்ணன் ராஜேஷ் வேலப்பனை வழி மொழிகின்றேன்!!! # உங்கள் எண்ணங்களை 100 சதவிகிதம் தெளிவாக, அழகாக சொல்லிவிட்டீர்கள்; இங்கே குறுக்கு கேள்வி கேட்பவர்கள் ஒன்றில் பதிவை வாசிக்கவில்லை, இல்லை அவர்களுக்கு புரியவில்லை (புரியாததுபோல நடிக்கவும் செய்யலாம்); அவர்களிடம் நேரம் செலவழிப்பது வீண்விரயம்!!! # நான் வாசித்த பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு!!!
“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது…..” இது கீதையில் இல்லை, யாரோ கீதையில் உள்ளது என்று சொல்லி எங்க பார்த்தாலும் ஒட்டி வைச்சுட்டாங்க, நாம கீதை படிக்காததால் இது தெரியலை (இது கீதையில் இல்லை என்று கீதை படித்த நண்பர் தான் சொன்னார்). கீதையில் இல்லாமல் இருந்தாலும் இது மிக நல்ல கருத்து.
நல்ல இடுகை.
இப்படத்தை பொறுத்த வரை இதை எதிர்க்க வேண்டியவர்கள் துலுக்கர்கள் அல்ல பார்ப்பனர்கள் தான். தடை, எதிர்ப்பினால் நம்மக்களுக்கு புரியாத முறையில் உள்ள இப்படம் வெற்றிகரமாக ஓடப்போகிறது. நான் படம் பார்த்திட்டேன்.
உங்கள் பதிவு மிகவும் மிதவாத போக்கில் அமைந்தாலும், உள்ளே ஒரு மறைமுக மிரட்டல் இருப்பது போல் தெரிகிறது. சிறுப்பான்மை மக்கள் அவர்கள் நீதிக்காக ஜனநாயக முறைப்படிக்கூட போராடக்கூடாது, அப்படி போராடினால் நாங்கள் இந்துத்துவ அமைப்பில் இணைந்திடுவோம் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது சகோதரரே?
ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை. இது அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
ஒவ்வொரு வார்த்தையும் உண்மை
இந்துத்துவாவை வளர்த்துவிடுவதற்கு இங்குள்ள திராவிடர் கழகம்,தி.மு.க. தலைவர் களே போதும் அவர்களுக்க வேலலையை இல்லை. இது தான் உண்மை எனக்கு மட்டுமல்ல அனைத்து இந்துக்களுக்குமே தாங்கள் சொல்லிய கருத்துக்கள் பொருந்தும் என்பது உண்மை.
Will you accept if kamal produce a movie with Tamil Tigers instead of Talibans and help Sri Lankan government to fight against them? I dont think we will not allow right?
We Rajini fans bashed Kamal for screening Viswaroopam in DTH which is basically a benefit as a consumer. When the muslims proptested against Viswaroopam for degrading their religion, we supported Kamal. Why? We are unable to determine which is good for us and good for community?
நண்பர்களே… இங்கு பிரச்சினை கமலுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் மட்டும் தான். இதில் இந்து நண்பர்களின் மனம் புண்படும் படி எந்த முஸ்லிம்களும், அமைப்புகளும் நடந்துக்கொள்ளவில்லை. சில வகுப்பு வாத சக்திகள் இதை இந்து முஸ்லிம் பிரச்சனையாக மாற்ற முற்படுகிறார்கள். ஆனாலும், அவர்களின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது. திறந்த மனதுடன் போராட்டம் செய்பவர்களின் பக்கம் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டுமே தமிழக மக்கள் பார்ப்பார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து பார்க்கும் போதுதான் ‘போராட்டத்தின்’ வலியும், வேதனையும், நியாயமும் புரியும், அப்படி புரிந்துக்கொண்ட அனைவரும் போராடுபவர்களுக்கு ஒத்துழைபார்களோ இல்லையோ, குறைந்தது எந்தவித வெறுப்பையும், பகைமையும் காட்டமாட்டார்கள். அந்த விதத்தில் இக்கட்டுரை ‘ஒரு நிகழ்வினால்’ தமிழக இந்துக்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்பவார்களாக மாறிவிடுவார்கள் என்பது அபத்தம்.
இந்த உணர்வு தமிழ் நாட்டில் மட்டும்தான் இருக்குறது
பிரபலங்களும், முஸ்லிம் அமைப்புகளும் பின்னே நானும்!
“பின்னே நானும்” – ஓவரா மலையாள படம் பாக்கற பதிப்போ?
///தமிழக முஸ்லிம் அமைப்புகளும் மற்றும் இணையத்தில் உள்ள சிலரும் என்னைப் போன்றவர்களை “இந்துத்வா” ஆக்காமல் ஓய மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.///
என்ன ஒரு அபத்தமான கருத்து? குஜராத், மும்பை என்று இந்துத்துவாக்கள் திட்டமிட்டு நிகழ்த்திவரும் முஸ்லிம் இன அழிப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஒருவன் முஸ்லிம் தீவிரவாதி ஆவது சரியே என்று நியாயப்படுத்தினால் எப்படி இருக்குமோ அதைவிட படுமோசமாக இருக்கிறது உங்கள் நியாயம்.
ஒரு திரைப்படத்தடை கோரல், சில பதிவுகள், துவேஷ கருத்துக்கள் இதுதானே உங்களை இந்துத்துவத்தின் பக்கம் தள்ளுகிறது? அப்படியென்றால் தினம் தினம் பெரும்பான்மையினரால் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம், வீடு வாடகைக்கு கிடைக்காமல் அல்லாடும் ஒரு முஸ்லிம், பொது இடங்களில் தீவிரவாதியைப் போல் நடத்தப்படும், முகம் சுளிக்கப்படும் ஒரு முஸ்லிம், காவல்துறையினரால் சும்மா கைது செய்யப்பட்டாலே தீவிரவாதி கைது என்று மீடியாவால் கேவலப்படுத்தப்படும் முஸ்லிம் விஸ்வரூபத்திற்கு எதிராக கிளம்பியதில் என்ன தவறு இருக்க முடியும்?
உங்களுக்கு இந்தப்பிரச்சனை உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டி இந்துத்துவத்தை நியாயப்படுத்து பதிவெழுதி விட்டு போக உதவி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இது வாழ்வியல் பிரச்சனை என்று புரிந்து கொள்ளுங்கள்.
கோவை குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 200 பேர் வரை பாதிக்கப்பட்டார்கள். (அதிலும் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்). ஆனால் அதற்கு முன்னர் உங்கள் இந்து முன்னணி அமைப்பால் முஸ்லிம்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கோவை கலவரத்தில் கோவையில் வாழ்ந்த அனைத்து முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்து-முஸ்லிம் பிரச்சனையில் நேரடியாகவும் முழுமையாகவும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே.
///ஏன் சார்? தமிழகத்தில் மட்டும் 24 முஸ்லிம் அமைப்புகள் இருக்கும் போது, இரண்டு இந்து அமைப்புகள் கால் ஊன்றினால் என்ன தவறு?///
இஸ்லாமிய அமைப்புகளால் அதிகபட்சம் விஸ்வரூபம் தடை போன்ற விஷயங்களையும் சில ஆர்ப்பாட்டங்களையும்தான் செய்ய முடியும். அப்புறம் கழகங்களை பிடித்து ஒரு எம்.எல்.ஏ சீட் வாங்கலாம் அவ்வளவுதான். ஆனால் இந்துத்துவா அமைப்புகள் காலூன்றினால் உங்களைப்போன்ற ”நடுநிலை” வாதிகள் அனைவரும் வாக்களித்து ஆட்சியை கையில் கொடுத்துவிடுவீர்கள். அவர்களும் பள்ளி,கல்லூரி பாடத்திட்டதில் இருந்து அனைத்திலும் இந்து வெறியை புகுத்தி நன்றாக குளிர்காய்வார்கள். அதானே உங்கள் ஆசையும்?
/////செங்கோவி February 6, 2013 at 10:45 AM
//இதை என்னுடைய ஒருவனின் குரலாக நினைக்க வேண்டாம். நான் வெளிப்படையாகக் கூறி விட்டேன், மற்றவர்கள் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.//
சரியாகச் சொன்னீர்கள் கிரி..சமீபத்தில் என் நண்பரிடம் பேசியபோது, ‘மோடி வந்தாத்தான் சரியா வருமோ?’ என்றார். இத்தனைக்கும் அவர் நம்மைப்போல்’சொரணை கெட்ட’ இந்து. இப்படி பலரையும் இந்துத்வாவை நோக்கித் தள்ளுவது தான் இவர்களின் சாதனை. மம்மியும் அதனால்தான் ஆதரிக்கிறாரோ, என்னவோ!
////////
இப்போது உண்மை வெளிவரத்துவங்கி விட்டதே? மோடி என்னமோ நிர்வாகத்திறமை மிக்கவர் அதனால் தான் அவர் வரவேண்டும் என்று எல்லாரும் கூவுகிறார்கள் என்றல்லவா நினைத்தேன். மோடியை அனைவரும் முன்னிறுத்துவது முஸ்லிம்களை அவர் தட்டி, அடக்கி வைத்திருக்கிறார் என்பதால்தானே? அய்யா செங்கோவி அவர்களே, ஒரு திரைப்படத்திற்கு தடை கோரியதற்காக ஒரு இனப்படுகொலையை ஆதரிக்க விரும்புகிறீரே? விஸ்வரூபத்திற்கு தடை கோரியதில் இந்துக்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிட்டது? பால்தாக்கரே பாலிவுட் படங்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் விதிக்காத கட்டுப்பாடா? பாம்பே படத்தை மணிரத்னம் பால்தாக்கரே சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டுத்தானே ரிலீஸ் செய்தார். அப்போது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் அய்யா? உங்கள் முஸ்லிம் வெறுப்பைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் அமைந்து விட்டது, நல்லதுதான். உண்மைகள் வெளியே வருவது நல்லதுதான்.
மிகவும் அருமையான பதிவு
//இதை என்னுடைய ஒருவனின் குரலாக நினைக்க வேண்டாம். நான் வெளிப்படையாகக் கூறி விட்டேன், மற்றவர்கள் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.//
இதில் என்னுடைய குரலையும் சேர்த்து கொள்ளலாம்
அன்புள்ள நண்பர் கிரி,
உங்கள் அநேகப் பதிவுகளையும் தொடர்ந்து வாசிக்கிறேன் நான். முஸ்லிம் என்பது கூடுதல் தகவல். :-)))
//7 வருடமாக எழுதுகிறேன் இது வரை எந்த மதத்தையும் அவமதித்தோ கிண்டலடித்தோ எழுதியதில்லை, அப்படி செய்யவேண்டிய அவசியமும் எனக்கில்லை.//
அதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், உங்களின் இந்தப் பதிவு எனக்குள்ளும் சில கேள்விகளை எழுப்பியது.
//இதை என்னுடைய ஒருவனின் குரலாக நினைக்க வேண்டாம். நான் வெளிப்படையாகக் கூறி விட்டேன், மற்றவர்கள் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.//
நீங்கள் கூறியதுபோல, உங்களைப் போன்ற பலரும் இப்படி நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதால்,
இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதினால், சில சந்தேகங்கள் தெளிவுபடும் என்று நினைக்கிறேன். பேசித் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே? தவறான கருத்தோ, மனம் புண்படக்கூடிய கருத்தோ இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள்.
இங்கே கவனிக்க வேண்டியது, விஸ்வரூபம் படம் குறித்தோ, அதன் தடை இன்னபிற விஷயங்கள் குறித்தோ நான் எழுதவில்லை. அதன் பின்விளைவுகளாக நிகழ்ந்தவைகளைப் பற்றி மட்டுமே.
1. மனுஷ்யபுத்திரனின் கருத்துக்கு ஏன் நீங்கள் அவரிடமே ஃபேஸ் புக்கில் விளக்கம் கேட்கக்கூடாது? அது உங்கள் விருப்பம் என்றாலும், தொடர்புகொள்ளக்கூடிய தூரத்தில் இருப்பவரிடம் நேரிலேயே கேட்கலாமே என்பதால் சொல்கிறேன்.
2./படத்தையே தடை செய்ய வேண்டும் என்று வீம்பு பிடித்து அதற்கேற்றாப் போல நடந்து கொண்டதால், இது வரை இந்து மதம் என்ற எந்தப் போர்வையும் இல்லாமல் இருந்த சாதாரணமானவர்களைக் கூட தீவிர இந்துக்களாக மாற்றியது./
நீங்கள் மட்டுமல்ல கிரி, நிறைய நண்பர்கள் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. நீங்களே சொல்லுங்கள். கிரி, நடந்தது ஒரு படத்துக்கு எதிரான போராட்டம். அந்தப் படமும், இந்துக்களைப் பற்றியோ, இந்து தெய்வங்களைப் பற்றியதோ அல்ல. மாறாக, தாம் சார்ந்த மதத்திற்கெதிரான கருத்துக்களைக் கொண்டதாகக் கூறி, முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் செயலில், இந்துக்களையோ, இந்து மதத்தையோ குறிப்பிட்டுக் காயப்படுத்தும் விதத்தில் அவர்கள் நடந்து கொண்டார்களா? கருத்து தெரிவித்தார்களா? தாக்கினார்களா? இல்லையே? பிறகெப்படி அவர்களின் இந்த செயல்கள் உங்களைப் போன்றவர்களைத் தீவிர இந்துக்களாக மாற்றுகிறது என்று சொல்கிறீர்கள்?
தம்மை இழிவுபடுத்துவதாக நினைக்கும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் எப்படி இந்துக்களைத் தூண்டுவதாக அமையும் என்பதுதான் எனது கேள்வி.
சரி, கிறிஸ்தவர்கள் யாராவது “இந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் நான் கிறிஸ்தவனாக உணர்கிறேன்” என்று சொன்னார்களா கிரி?
3. /தற்போது நீங்கள் செய்த காரியம், நினைக்காதவனையும் வம்படியாக முஸ்லிம் என்றால் இந்துக்களுக்கு எதிரி என்று நினைக்க வைத்ததே ஆகும்./
மறுபடியும் அதே லாஜிக். முஸ்லிம்களின் போராட்டம் அந்த திரைப்படத்தையும், அதை எடுத்தவரையும் நோக்கியே தவிர, இந்துக்களுக்கு எதிராக அல்லவே? பிறகெப்படி, இந்தச் சம்பவம் முஸ்லிம்களை இந்துக்களுக்கு எதிரியாக்கும்?
3./உலகில் தீவிரவாதிகள் பெரும்பான்மையோர் முஸ்லிம்களாக இருப்பது உண்மை தான். /
இதைத்தான் படத்தை எதிர்ப்பவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள் கிரி. ஊடகங்கள் நமக்கு அப்படி போதிக்கின்றன. தீவிரவாதிகள் திடீரென்று ஒரு நாளில் தோன்றிவிடுவதில்லை. அடக்குமுறை அதிகரிக்கும்போதுதான் புரட்சி, தீவிரவாதம் எல்லாம் தோன்றும். நமக்குத் தெரிந்த எல்.டி.டி.இ., மாவோயிஸ்ட், நகஸலைட் எல்லாம் அப்படி உருவானதுதானே? என்ன, இவர்களைப் ”போராளிகள்” என்று பெருமையாக சொல்லும் நாம், மற்றவர்களை “தீவிரவாதிகள்” என்கிறோம்.
(தனிப்பட்ட முறையில் தீவிரவாதியோ, போராளியோ – வன்முறைகளை நான் ஆதரிப்பதில்லை.)
4. //படம் வெளிவரும் முன்பே போராட்டம் / படத்தை தடை செய்ய வேண்டும் என்பதெல்லாம், எந்த விதத்திலும் நியாயம் இல்லை.//
கிரி, படம் வெளிவந்தபின்போ, முன்போ – எதிர்ப்பு சட்டரீதியாக இருந்தால் போதும்தானே? வன்முறையோ, அடக்குமுறையோ இல்லாத எதிர்ப்புதானே இப்போது இருந்தது? மற்றபடி, என்ன காரணத்துக்காக எதிர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து, நியாயம்-அநியாய வரைமுறைகள் தனிநபர்களின் கருத்து வேறுபடும்.
5. //தற்போது பதிவுலகில் [Blog] இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக தீவிரமாக பலர் எழுதி வருகிறார்கள்.//
இந்தக் கருத்தும் அதிகமானோர்களால் தெரிவிக்கப்படுகிறது. கிரி, அவர்களுக்குச் சொந்தமான வலைப்பூவில்தானே எழுதுகிறார்கள்? நமது வலைப்பூவில் நமக்கு என்ன விருப்பமோ அதை எழுதிக்கொள்ள உரிமை இருக்கிறதுதானே? அதுபோல்தானே இதுவும்? அவர்களின் எல்லையைத் தாண்டி, நமது வலைப்பூவில் பிரச்சாரத்தைத் திணித்தால், கண்டிப்பாக எதிர்ப்பேன்.
சில திரட்டிகளைத் திறந்து பார்த்தால், ஆபாச தலைப்புகள் எத்தனையெத்தனையோ இருக்கின்றன. அவற்றை எழுதுவோரை என்ன செய்தோம்? என்னால்தான் அவர்களை என்ன செய்யமுடியும்? அந்தப் பக்கங்களின்பால் செல்வதைத் தவிர்க்கிறேன். அவ்வளவுதான் என்னால் செய்யமுடியும்.
இந்த ஆபாசங்களைவிடவா, மதப்பிரச்சாரம் அசிங்கமானது கிரி?
6.அதிலும் ஒருவர் இதே வேலையாக இந்துக்களை திட்டியும், இந்தியாவை அவமதித்தும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இது கண்டிப்பாகத் தவறுதான். யாரென்று தெரிவித்தால் – கண்ணியமானவராகத் தெரிந்தால் – எதிர்க்கருத்து தெரிவிப்பேன்.
7. தமிழக முஸ்லிம் அமைப்புகளும் மற்றும் இணையத்தில் உள்ள சிலரும் என்னைப் போன்றவர்களை “இந்துத்வா” ஆக்காமல் ஓய மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.
கிரி, கொஞ்சம் முன்னால் “இந்து”வாக உணரவைக்கிறார்கள் என்று சொன்னீர்கள். இப்போது “இந்துத்வா” ஆக்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்கிறீர்களா?
கிரி, “We are not complete without “u” and “i” – இதையே நானும் வழிமொழிகிறேன்.
வாசகன் என்று வந்து இருக்கும் முகம் தெரியாத நண்பருக்கு. உங்களின் நீண்ட பொறுமையான பின்னூட்டத்திற்கு நன்றி. நான் என் மனதில் இருந்த கருத்துகளை கூற விரும்பினேன். அதை நாகரீகமாக கூறி இருக்கிறேன் என்று கருதுகிறேன்.
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் நிச்சயம் பதில் அளிக்க முடியும். ஒரு கேள்வி விடாமல் ஆனால், அந்த விவாதத்திற்கு முடிவே கிடையாது.
நான் யாருக்குமே பதில் அளிக்க கூடாது என்று தான் இருந்தேன். நீங்கள் பொறுமையாக இவ்வளவு பெரியதாக கேட்டதால் அதோடு நீண்ட நாளாக படிக்கிறீர்கள் என்று வேறு கூறி இருக்கிறீர்கள் அதற்கு பதில் தருவது தான் மரியாதை என்ற அளவில் தான் இதை எழுதுகிறேன்.
இந்த விஷயங்கள் பேசி தீர்க்க முடியாது.. அதுவுமில்லாமல் ஒன்று இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விசயமில்லை இது.
எனவே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
இதன் பிறகு பின்னூட்டம் இடுபவர்களுக்கும் இதுவே பதில். உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி.
ஒரு ரஜினி ரசிகனான நீங்கள் கமலுக்கு ஆதரவாக எழுத வந்ததே சில இஸ்லாமிய மதகும்பல் போட்ட ஆட்டம்தான். நீங்கள் எழுதி இருப்பதையேதான் பல இந்து நண்பர்கள் சொல்கிறார்கள். அல்லது எண்ணுகிறார்கள். தங்கள் அடையாளங்களை வெளியில் காட்டாமல் வேறு பெயரில் சில இஸ்லாமிய நண்பர்கள் இந்துக்களின் மாறி வரும் இந்த மன உணர்ச்சிக்கு நீங்கள் இப்படியெல்லாம் செய்யகூடாது. நாங்கள் மட்டுமே மதத்தை பற்றி பேசுவோம் நீங்கள் எப்போதும் போல சகிப்புத்தன்மையோடு இருங்கள் என உபதேசம் செய்ய வரிந்து கட்டிக்கொண்டு வருவது நன்றாகவே தெரிகிறது.
முஸ்லிம் தீவிரவாதம் உலகம் முழுவதும் தலைவிரித்தாடுகிற போது அதைப்பற்றி பேசாமல் அப்படி செய்யவைத்ததாக சொல்லிக்கொண்டு அமெரிக்க நாட்டையும் அந்த மக்களையும் வெறுப்புடன் விமர்சிக்கும் இவர்கள் தற்போது தமிழகத்தில் சாதாரண இந்து அடையாளம் இல்லாத ஒருவர் எங்களை எங்கள் மதம் பற்றி யோசிக்க வைத்து விட்டீர்களே என சொல்லும்போது அதை தவறு என்று ஒரே போடாக போடுவது என்ன நியாயமோ தெரியவில்லை.
இது கமலுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான பிரச்சினை இதில் இந்து என்ற அடையாளம் எங்கே வந்தது என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்கும் நண்பர்களே, கமல் நாத்திகம் பேசும் ஐயங்கார் என்பது இங்கே எல்லோருக்குமே தெரிந்ததுதானே. அவரையே இவன் ஒரு இந்துத்துவா சக்தி,அமெரிக்க அடிவருடி,( மேலும் சிந்திக்கவே முடியாத அளவுக்கு )யூத அபிமானி என்று புதிது புதிதாக வெவேறு வடிவங்களில் குற்றம் சுமத்தும் நீங்கள்தானே இதை முஸ்லிம் இந்து பிரச்சினையாக காட்டிகொண்டீர்கள்? இதற்க்கு எதிர் வினையாக சில முட்டாள்.. மன்னிக்கவும் முஸ்லிம் தலைவர்கள் மேடையில் பேசிய பேச்சு இன்னும் இங்கே பெரும்பான்மையான வர்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்று.
மனதளவில் இந்த படம் முஸ்லிம் மக்களின் உண்மையான எண்ணங்களை மற்றவர்களுக்கு பறைசாற்றி விட்டது. இதனால் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் உங்களை போல இணையத்தில் மத தீவிரவாதம் பேசாத, சகிப்புத்தன்மை கொண்ட உங்கள் சகோதரர்களே பாதிக்கப்படபோகிறார்கள். மதத்தை தாண்டி சிந்தித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பது வெளிப்படை ஆனால் அதற்கு இஸ்லாமில் இடமில்லை.
//ஹீசைன் படங்களை விமர்சித்தால் அவர் இந்து வெறியரா!//—சத்தியமாக இல்லை. நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டுதான் ஹுசைனின் அந்த ஆபாச அக்கிரம செயலை என்னுடைய ஹிந்து சகோதரர்களுடன் இணைந்து எதிர்த்தேன்.
அதேபோல…
விஸ்வரூப படத்தை எதிர்த்தால் அவர் முஸ்லிம் வெறியரா..? உங்கள் முஸ்லிம் நண்பர்களின் மனம் புன்படும்படி அவர்களின் இறைவனையும் இறைவேதத்தையும் கேவலப்படுத்தி எடுத்த படத்தை அவர்கள் எதிர்க்கும் போது நீங்களும் உடன் சேர்ந்து குரல் கொடுத்து இருப்பீர்கள் என்றுதான் இதை படிக்க வந்தேன். ஏமாற்றம்..!
நீங்கள் ஹுசைன் படத்தை எதிர்க்கும்போது எனக்கு முஸ்லிம் என்ற உணர்வே வரவில்லை. உங்களுக்கு மட்டும் விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் காவல்துறை , நீதித்துறை வழியாக எதிர்க்கும்போது ஹிந்து என்ற உணர்வும் ஹிந்துத்துவா என்ற மாற்றமும் வருகிறது என்றால்……….
உங்களுக்கும் இதுநாள் வரை ஒளிந்து கொண்டு இருந்த மதவெறி வெளிப்பட்டு விட்டது.
மதவெறி என்றால்… தனது மதம் என்ன சொல்லி இருக்கு என்றே அடிப்படையும் கூட தெரியாமல் அதன் மீது அதீத பற்று கொள்வதும், தனது மதத்தவன் அநியாயமாக என்ன தீமை செய்தாலும் கண்மூடித்தனமாக அதற்கு ஆதரவு அளிப்பதும், தனது மதத்துக்கு மாற்றமான அனைத்து மத மனிதர்கள் மீதும் வெறுப்பு கொள்வதும் தான் சகோ.கிரி,
அதாவது நீங்கள் பதிவில் சொல்லி இருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் போல..!
தயவு செய்து இனியாவது பகவத் கீதை படியுங்கள். அதில், எளியவன் மீது வலியவன் பொய் சொல்லி அநியாயமாக போர் தொடுத்தால், அந்த அநியாயத்தை எதிர்க்க வேண்டும் என்ற “ஜிஹாத்” நீதி உங்களுக்கே எளிதாக புரியும்.
முஸ்லிம்கள் மட்டுமே அநியாயத்துக்கு எதிராக உலகில் அதிகமாக போராடுகிறார்கள் என்றால்….. அவர்கள் தான் அதிகமாக அநியாயம் இழைக்கப்பட்டு வருகிறார்கள் என்று அர்த்தம்.
எனவே, இதை ஒழிக்க….
நோய் நாடி………………………………………….
ஆக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சமூகம் பார்ப்பதுதானே பிரச்சினை? அப்படி பார்க்க வைப்பது யார்? சரி, “இந்தியாவில் இந்துத்துவா பத்திரிகைகள் அப்படிப்பட்ட செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்று முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற என்னத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள்” என்றே வைத்துக் கொள்வோம். இந்து மதமே இல்லாத நாடுகளில் கூட எதனால் அதே எண்ணமே மக்கள் மனதில் நிலவுகிறது?
100 சதவீதம் உண்மை நண்பரே,வரிக்கு வரி உடன்படுகிறேன்…நான் மனசுக்குள்ள நினைச்சு நினைச்சு புழுங்கிட்டு இருந்ததை நீங்க பதிவா கொண்டு வந்துடீங்க….நன்றி
கிரி ,
நெற்றி பொட்டில் அடித்தாற் போன்ற பதிவு. முழுவதும் ஒத்துபோகின்றேன் .
-பயபுள்ள
நண்பர்களே! சகோதரர்களே!
உங்களது நீண்ட கட்டுரையை படித்தேன். கொஞ்சம் கருத்து மாறுபாடு எனக்கு உள்ளது. எனது கருத்தை இங்கே சொல்கிறேன். ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள். சரியாக இருந்தால் அனைவரிடமும் சொல்லுங்கள்.
நீங்கள் நேர்மையாக சொல்லியிருந்தீங்க, முழுமையாக இந்து வேதத்தை அறிந்தவரில்லை என்று. நண்பரே உண்மையான இந்து வேதம் கீதையோ, திரு. கண்ணதாசன் அவர்களின் ‘அர்த்தமுள்ள இந்து மதமோ’ கிடையாது. இதனை நீங்கள் இந்து வேத வல்லுனர்களிடமே கேட்டு தெளிந்து கொள்ளலாம். ரிக், யஜூர், சாமம், அதர்வன என்ற நான்கு வேதங்கள்தான் உண்மையான இந்து வேதங்களாகும். இது எனக்கு ‘சிமிலாரிட்டி பிட்வீன் ஹிண்டுயிஸம் அண்ட் இஸ்லாம் ‘ என்ற தலைப்பில் திரு. ஜாஹிர் நாயக் என்பவர் பேசியிருப்பார். யூ டியூப்-ல் அதன் தமிழ் மொழி பெயர்ப்பு கூட உள்ளது. நண்பர்கள் ஒருமுறை தயவு செய்து பார்க்கவும்.
உன் மார்க்கம் உனக்கு, அவர் மார்க்கம் அவருக்கு. இதை இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது. சகோதரர்களே கவனியுங்கள், இங்கே இஸ்லாம் மார்க்கம் (வழி) மட்டுமே. மதம் அல்ல. 0% கூட மதம் அல்ல. உதாரணமாக நம் மூதாதையார்கள் முதலில் கால் நடையாக போனார்கள், பின் மாட்டு வண்டியில் போனார்கள், இப்போ பென்ஸ் காரில் போகிறார்கள், 787-ல் போகிறார்கள். அதைப்போல முன்பு காட்டுமிராண்டிகளாக இருந்த நமது மூதாதையர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது தோன்றிய பெரியார்களால் மாற்றப்பட்டு இந்துவாகவும், முஸ்லிமாகவும், கிற்ஸ்தவர்களாவும், இன்ன பிறவாகவும் ஆனார்கள். இதில் ‘நீ முஸ்லிம், பக்கத்து நாட்டுக்கு ஓடிப்போ’ என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான சொல். ஏன்னா அவனும் இந்த மண்ணை சேர்ந்தவந்தான். ஆனால் அவனது மார்க்கம் வேற. அவ்வளவுதான். எல்லாருடைய மூதாதையாரும் காட்டுமிராண்டிதான்.
இன்றைக்கு அமெரிககன் ஒருத்தன் இந்து மதத்தை பின்பற்றுகிறான். அதனால் அவனை மற்ற அமெரிக்க கிறிஸ்தவர்கள் இந்தியாவுக்கு ஓடிப்போ என்று சொல்ல முடியுமா? எனவே சகோதரர்களே, இந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்பதெல்லாம் நாம் வாழும் வழிமுறைகள்தான். அதை இன்று ’வலி’முறையாக மாற்றிக்கொண்டிருகிறார்கள். உங்கள் வழி உங்களுக்கு உயர்ந்தது என் படுகிறதா, அதை தாராளாமாக பின்பற்றுங்கள். ஆனால் அடுத்தவர் வழியை குறை சொல்லாதீர்கள். உங்களிடமிருந்து ஒருவர் பிரிந்து அடுத்தவர் வழிக்கு போகிறாரா?
தாராளாமாக போக சொல்லுங்க. அங்கே கல்லு முள்ளு இருந்தா தானாக உங்க வழிக்கே வந்து விடுவார். காசுக்காக போனாலும் ரொம்ப நாள் நீடிக்காது. அடுத்தவர் வழி பற்றி முழுமையாக தெரியாது அதைப்பற்றி கருத்து சொல்வதும் கூடாது. இந்த தவறை கமல் செய்ததைதான் சில முஸ்லிம்கள் கண்டித்தார்கள். இதில் கல்லெறிதல் போன்ற வன்முறைகள் இவற்றிற்கு இடமில்லை. அவர்கள் முஸ்லிம் பெயர் கொண்டவர்களாக இருக்கலாம். கீதையை ஒருத்தன் கையில புடுச்சிகிட்டு ஒரு
கொலையை பண்ணா அது இந்து தீவிரவாதம் ஆகிவிடுமா? அது போல ஒருத்தன் குரானை கையில வச்சிகிட்டா அது முஸ்லிம் தீவிரவாதம் ஆகிடுமா? குரான்ல எங்கே தீவிரவாதம் பண்ண போதனைகள் இருக்கு. அவர்களை ஒரு இடத்தில் காட்ட சொல்லுங்க சகோதரர்களே. சரிதானே?
இதில் ‘நீ முஸ்லிம், பக்கத்து நாட்டுக்கு ஓடிப்போ’ என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான சொல்.
இந்த சிறுபிள்ளைத்தனமான சொல்லை என்றும் நாங்கள் செல்லவில்லை ஆனால் உங்களுக்கு தெறியுமா பாகிஸ்தான் இந்துக்களை அடித்து விரட்டி இருக்கிறது என்று.. எத்தனை புராதான கோயில்களை இடித்திருக்கிறது என்று.
வாழவழிதேரியாமல் இந்தியாவிற்க்கு எத்தனைப்பெயர் தஞ்சம் புகுந்தனர் என்று.. பாகிஸ்தானில் மண்ணில் பிறந்தவர்கள் இந்தியா என்று ஒன்று இருக்கிறதே தெறியாத போழுது(1947-1948). இந்திய நாட்டிற்கு ஒடிவந்தனர் என்று. இது போல நாங்கள் செய்தோம். மனசாசி இருந்தால் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்
“நாங்கள் செல்லவில்லை ஆனால் உங்களுக்கு தெறியுமா”
அர்ஜுன், Abdul Shajahan தமிழ்லில் தானே எழுதி உள்ளார்? தமிழர் தானே அவர்? பின்பு ஏன், நீங்கள், “நாங்கள்”, “நீங்கள்” என்று பிரித்து பேசுகிறீர்கள்? பாகிஸ்தானில் அப்படி செய்கிறார்கள், நாங்கள் அப்படி செய்கிரோமா என்று கேட்பது, நல்ல இருக்கா?
is it right to compare us with them? அவர்களோட நாம compare பண்ணி நாம நம்பள தரம்தாழ்த்திகொள்ள வேண்டுமா.
“நாங்கள்”, “நீங்கள்” என்று பிரித்து பேசாதீர்கள். நாம் எல்லோரும் தமிழர்கள்தானே? இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இந்த பேச்சு வரட்டும், ஆனால் நம்மிடம் வேண்டாமே. நாம் சிங்கலரிடம்மும், சோனியாவிடமும் தோற்றதுவே போதும், நம்மிடமே நாம் தோர்க்க வேண்டாமே.
நாங்கள் என்பதை ஓர் இந்தியனாய் சொன்னேன். ஏன் என்றால் இந்தியாவில் மதங்கள் அதிகம் அதைவிட ஜாதிகள் அதிகம் அதைவிட சிறுபான்மையினர் அதிகம் (ஆவ்வலவு பேரும் இந்தியாவை பிரித்தால் ஆயிரத்திற்கும் அதிகமான மானிலத்தயோ நாட்டையோ தாண்டியிருக்கும்) ஆதலால் நாங்கள் என்றால் இந்தியான் என்றுதான் அர்தம். நான் கொஞ்சம் புரியும் படி எழுதி இருந்தால் இந்த குழப்பம் நேர்ந்தியுக்காது.
கிரி
நான் இந்த பதிவை படித்த போது எனது கருத்தை கூறவேண்டும் என்ற ஆவலை அடக்கிகொண்டேன் ஏன் என்றால்.. நாம் எதாவது சொல்ல போக அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டு.. விட்டால் பதில் கூறி மாளாது என்று தான்.. இந்த திரைப்படம் நம் ஊரில் நடப்பது போல் இல்லம்மல் அயல் நாட்டில் அதுவும் அவர்கள், அவர்களின் நாட்டுக்காக.. ஓர் நாட்டின்மேல் உள்ள பகையால் செய்யும் செயல்களை சித்தரிக்கும் படம்.. இதற்காக.. நாம் இங்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றதே ஆகும். இந்த திரைப்படத்தை.. கண்டும் கானனது போல் விட்டிருந்தால்.. தொல்லையே இல்லை.. இங்கு தமது கருத்தை கூறி இருக்கும் இஸ்லாமிய சஹோதரர்கள் தாங்கள் இங்கு படும் சரமத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.. நம் அரசியல் வாதிகள் அவர்களின் வசதிக்காக செய்யும் பல காரியங்கள் நம்மில் ஒரு வேற்றுமையை வளர்த்து இருக்கவேண்டும்.. அப்படி எதுவும் நிகழ்ந்ததாக எனக்கு தோன்றவில்லை..
காமேஷ்
Giri Na, Kudos for writing an Excellent article that reflects the views of most common people.
Being a Rajni Fan, I never bothered about any other actors since childhood. I never had any good opinions about Kamal except for a few things. But with the Vishwaroopam issue, I decided to support Kamal, for several reasons. Apart from his dedication for Art, I respect his sensibility in promoting universal brotherhood in recent years.
Quoting the concept/dialogue from ‘Anbe Sivam’ movie: When some other human helps us in times of distress, we recognize the Godliness in the innate quality of that person. This in turn inspires us to behave Godly for other humans in our lives. “You. You tried to save the child. I see God in your love. You are a good man.” The above words also summarize my views about Spirituality/Religion, in general. But as you have mentioned, I remind my identity as Hindu and want to be a staunch supporter only when such issues arise and that too merely as a protection and to establish some basic rights for all. Only when love for fellow humans becomes instinctive and universal brotherhood is prevalent, we could get rid of such identities permanently. – “Nam noi-ku Anbu andri veru marunthu illai..”
சகோதரர்களே!
ஏண்ணா, திரும்பவும் புரிஞ்சிக்காம சண்டை புடிக்கிறீங்க. யாராயிருந்தாலும் அவரவர் மார்க்கத்தில், மதத்தில் உள்ளதை பின்பற்றாவிட்டால் அவர் அந்த பிரிவை சேர்ந்தவன் என்று சொல்வதில் அர்த்தமில்லை. அவன் பாக்கிஸ்தானை சேர்ந்தவனாயிருந்தாலும் சரி, வாட்டிகனை சேர்ந்தவனாயிருந்தாலும் சரி. யாருடைய மார்க்கத்திலோ, மத வேத புத்தகத்திலோ அடுத்தவரை வேதனைப்படுத்தவோ, துன்புறுத்தவோ, புண்படுத்தவோ எங்காவது சொல்லியிருக்குதா பிரதர்?
நல்ல சொன்னிங்க தம்பி.
ஆனால் நா கருப்பு அடுகளை இனம் கானவேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை ஆனால் அதில் எல்லோரும் தீயவரல்ல.
இந்து போலிசாமியார்கள் இருக்கின்றன ஆனால் அதில் எல்லோரும் போலிசாமி இல்லை.
முஸ்ஸிம் தீவிரவாதிகள் உண்டு ஆனால் அதில் எல்லோரும் தீவிரவாதிகலல்ல.
எல்லா கிருஸ்தியன் பதிரியாரும் உத்தமரும் இல்லை.
தமிழீலம் தீவிரவாதிகள்/ஆதரவாலர் எல்லோரும் பிரபாகரனைப்பிடிப்பதர்தில்லை.
இன்னும் எவ்வளவோ இருக்கு. இதை யாரும் மறுக்க முடியாது.
அடுத்து படம் வரவேண்டும் என்றால் திட்ட திட்ட லச்சக்கன அமைப்பினரிடமும் முரையாக படத்தை பொட்டு எல்லம் வெட்டினால் மிதி வரும் ஒரு பிட்டைதான் பார்க வேண்டிவரும். அதுவும் எவனவது பிட்டு ஒடுதுன்னு சொன்னால் அதையும் ஓட்ட முடியாது..
இது எங்கே போய் முடியுமோ தெரியலை. ஆனா எல்லோருக்கும்/எல்லோத்துக்கும் ஒரு நாள் ஒருத்தன் ஆப்பு வைக்க வருவான். அப்பதெரியும்.
//////////நான் இந்து மதத்தை சார்ந்தவன் என்றாலும் நீங்கள் குரானை அப்படியே வரிக்கு வரி பின்பற்றுவது போல, நான் கீதையை பின்பற்றுவதில்லை. இன்னும் கூறினால் எனக்கு முதலில் இந்து மதத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை ஆனால், என் மதம் பிடிக்கும் அவ்வளோ தான். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை நான் கொஞ்சம் கூட படித்தது கிடையாது. அதனால், உங்களைப் போல வரிக்கு வரி குரானில் இருந்து உதாரணம் காட்டுவது போல கீதையில் காட்டுவது என்னால் சாத்தியமே இல்லாதது.
கீதையில் எனக்கு தெரிந்த ஒரே விஷயம் “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது…..” இது மட்டும் தான். இது முஸ்லிம்களான உங்களுக்கே தெரியும். இது கூட நிறைய இடத்தில் பலர் ஒட்டி வைத்து இருப்பதால் தான், இல்லைனா அது கூடத் தெரியாது. எனக்கு பகவத் கீதையை முழுவதுமாக படிக்க பொறுமையும் / ஆர்வமும் இல்லை. இந்த அளவில் தான் என்னுடைய இந்து மத அறிவு / ஆர்வம்.////////////////////////
facebook மூலமே உங்கள் பதிவை நான் பார்க்க முடிந்தது. என் மனதில் உதித்த எண்ணங்களை, எழுதுக்களாக்கிய உங்களுக்கு நன்றி.
நல்ல பதிவு… மிக்க நன்றி… பெரும்பான்மையினரின் உணர்வுகளை உங்கள் ஒரே பதிவில் வெளிபடுதியமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி…. வாழ்க பாரதம்.