சிவாஜி 3D [2012]

18
சிவாஜி 3D

சிவாஜி 3D அட்டகாசமான அனுபவத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அனைவரும் ரொம்ப என்ஜாய் செய்து பார்த்தோம். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையோ அருமை.

சிவாஜி 3D

படத்திலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது பாடல்கள் தான் (சஹானா தவிர்த்து).

முதல் பாடலான “பல்லேலக்கா”… அட அட! என்ன ஒரு வண்ணம்.. அசத்தல் போங்க. நயன்தாரா பிங்க் கலர் உடையில் ஆடும் போது என் மனது என்னிடம் இல்லை 🙂 . 3

D யில் பார்க்கும் போது தான் பல காட்சிகளின் அருமையே தெரிந்தது.

ஷங்கர் வீசும் செல் ஃபோன் நம்மிடம் வருகிறது. பரந்த வெற்று வயல் வெளியில் நிற்கும் நடிகர்களைப் பார்க்கும் போது அட! இவ்வளவு பெரிய இடமா என்று தோன்றுகிறது. நயன்தாரா… ஸ்ஸ்ஸ்ஸ்.

“வாஜி வாஜி” ஹய்யோ! முடியல… ஸ்ரேயா என்னுடைய தூக்கத்தையே கெடுத்து விட்டார்.

ஸ்ரேயா இந்தப்பாடலில் ஆடும் நளினம் முன்பே அறிந்தது தான் என்றாலும் இதில் பார்க்கும் போது மூச்சு முட்டுகிறது. யப்பா! என்னமா இருக்காங்க.

வைரமுத்து கூறியது போல இந்தப்பாடலின் வரிகளின் அர்த்தம் தற்போது தான் முழுமை அடைந்தது.

வாவ்! ஸ்ரேயா பார்த்தாலே, அவர் தன் மீது கர்வம் கொண்டு விடுவார்.. அழகு என்றால் அழகு அப்படியொரு அழகு.

தலைவர் ராஜ உடையில் சர் சர்ர்னு வரும் போது அடி தூள் போங்க.

தலைவர் ஏற்கனேவே வேகம் அதிலும் 3D யில் அம்பு விடுவது (இதை புதிதாகச் சேர்த்து இருக்கிறார்கள்) ஆப்பிள் எறிவது என்று ரணகளப்படுத்தி இருந்தார்.

இதில் உள்ள செட்டிங்க்ஸ் தற்போது தான் எவ்வளவு அழகு என்றே தெரிகிறது.

எவ்வளவு பிரம்மாண்டம். அதிலும் வளைவாக இருப்பது 3D யில் அசத்தல்.

ஸ்டைல் ஸ்டைல்

“ஸ்டைல்” பாடலில் தலைவர் கலக்கலோ கலக்கல். வெள்ளைக்காரன் போல முன்பே பார்த்து விட்டாலும், இதில் சும்மா பளபளன்னு பார்க்கவே பட்டாசா இருக்காரு.

இதில் கலக்குவது ரஜினி தான். கலர்கலராக வரும் போது சூப்பர். பைக்கில் வரும் காட்சி, குழுவாக ஆடும் காட்சி என்று ஒவ்வொன்றிலும் அசத்தி இருக்கிறார்கள்.

இதே போல “அதிரடிக்காரன்” பாடல்.

இதில் பைக்கில் படுத்துக்கொண்டு வருவது துப்பாக்கியைச் சுற்றி விடுவது என்று பல காட்சிகள் செம. “சஹானா” பாடல் அவ்வளவாக இல்லை.

கண்ணாடி மாளிகை என்பதால் அவ்வளவாக எடுபடவில்லை என்று நினைக்கிறேன்.

“சஹானா” பாடல் முடிந்த பிறகு அடடா! இனி பாடல்கள் கிடையாதா! என்று கவலை ஆனது. இது போல எந்த ஒரு படத்திற்கும் பாடல்களுக்காக நினைத்தது இல்லை.

இதில் பாடல்கள் 3D யில் அருமையாக இருந்ததால் இன்னும் இரண்டு பாடல் வராதா! அல்லது திரும்பப் போடமாட்டார்களா! என்று நினைத்தது உண்மை.

2.30 மணிநேரம்

கதை உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் புதிதாகக் கூற எதுவுமில்லை.

படம் 2.30 மணிநேரம் முன்பு 3.11 மணிநேரம். அங்கவை சங்கவை, தீபாவளி கொண்டாட்டங்கள், நகைச்சுவையில் சில வெட்டுகள் என்று குறைத்து உள்ளார்கள்.

ரஜினி அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் போது விவேக் கேமரா ஆன், ஷாட் ஓகே என்று கலாயிப்பது, காரில் வேஷ்டி மாற்றுவது.

யாரு ..ம்ம் மோரு என்று ரஜினி கூறுவது, ஹனிபாவின் சில நகைச்சுவைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்று காட்சிகளைக் குறைத்து உள்ளார்கள்.

புதிதாகப் பார்ப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது ஆனால், பல முறை பார்த்ததால் எந்தக் காட்சி குறைந்தாலும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு இருக்க தூண்டியது.

சில நகைச்சுவை காட்சிகளை வெட்டியது வருத்தமாக இருந்தது.

ரஜினி காசைச் சுண்டுவது, கடைசி சண்டையில் பணம் பறப்பது என்று ஏகப்பட்ட காட்சிகள் ரசிக்க உள்ளது. படத்தின் பலமே காட்சிகளின் தரம் தான்.

ஒவ்வொரு காட்சியும் வண்ண மயமாக அருமையாக உள்ளது.

K V ஆனந்த் 3D க்காகவே ஒளிப்பதிவு செய்தது போல ஒவ்வொரு காட்சியும் உள்ளது.

2D –> 3D

2D யில் இருந்து 3D க்கு மாற்றி உள்ளார்கள் என்று கூறினாலும் தெரியாத அளவிற்கு அசத்தலாகச் செய்து உள்ளார்கள்.

பிரசாத் ஸ்டுடியோ சிறப்பாகப் பணி புரிந்து உள்ளார்கள். டைட்டானிக் படத்தை மாற்றியதை விடச் சிவாஜி 3D அசத்தலாகச் செய்து உள்ளார்கள்.

டைட்டானிக்கில் பிரவுன் வண்ணம் அதிகம் இருக்கும் அதனால், அது அவ்வளவாக எடுபடாமல் போய் இருக்கலாம் ஆனால், இதில் ஒவ்வொரு காட்சியும் பளபளன்னு இருக்கு.

கலர்ஃபுல்!! இதை நிச்சயம் ரஜினி படம் என்பதால் கூறவில்லை.

பார்த்தால் நான் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

கடைசி நகைச்சுவை

கடைசியில் படம் முடிந்து எழுத்துப் போடும் போது குட்டியாக 2009 / 2010 ல் இது நடந்தது 2012 ல் கறுப்பு பணம் ஒழிந்தது, 2015 ல் இந்தியா வல்லரசாகியது என்று வரும்.

எத்தனையோ பார்த்துப் பார்த்துக் குறைத்தவர்கள் இதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்று தான் புரியவில்லை.

2012 / 2013 ல் கருப்பு பணம் ஒழிந்தது என்று வரும் போது எனக்கு சிரிப்பாகி விட்டது. இதை எல்லாம் நீக்கி இருக்கலாம். இதை எப்படி யோசிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.

வெட்டிய நகைச்சுவையை இதை வைத்துச் சரி செய்யலாம் என்று நினைத்தார்களோ என்னவோ! 😉 .

குடும்பத்துடன் சென்று அனைவரும் பார்த்து மகிழுங்கள். நான் இரண்டாவது முறை கண்டிப்பாகச் செல்வேன்.

இந்த வாரம் கும்கி போலாம் என்று இருக்கிறேன் அதனால் அடுத்த வாரம் திரும்பச் சிவாஜி 3D 🙂 .

கொசுறு

படம் எங்கே வெளியாகிறது என்று செவ்வாய் தான் தெரிந்தது.

அதுவும் சிங்கப்பூரின் டெர்ரர் ரஜினி ரசிகர் மகேஷ் ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடுங்குற மாதிரி அனத்தி திரையரங்குகளைக் கேட்ட பிறகு தான் தெரிந்தது.

எங்கும் விளம்பரம் கொடுக்கவில்லை.

ஏன் தான் இப்படி செய்கிறார்களோ! எந்திரன் படத்துக்கும் இதே மாதிரி தான் நடந்தது. கடைசி வரை எங்கே வருகிறது என்றே தெரியவில்லை, இதனால் பலருக்கு வந்ததும் தெரியவில்லை.

படம் வெளியானதும் வார நாளில், வெளியான திரையரங்கு மிகப்பெரிய அரங்கு.

முதல் காட்சியே மாலை 5.30 க்கு பலர் இவ்வளவு சீக்கிரம் எப்படி அலுவலகத்தில் இருந்து வர முடியும்? இதை 6 அல்லது 6.30 க்கு வைத்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

திரையரங்கில் இருந்தது 25 % பேர் கூட இருக்காது.

இது போதாது என்று மகேஷ் கேக் சாக்லேட் பூ என்று செம முன்னேற்பாடாக வர, கூட்டமே இல்லாமல் செம கடுப்பாகி விட்டது 😀 .

படம் முடிந்து திரையரங்கு நபர்களிடம் அனுமதி பெற்று ரஜினி பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடினோம்.

இரவுக் காட்சி

இரவுக் காட்சிக்குக் கூட்டம் அதிகம், அவர்கள் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்கள்.

பெண்கள் உட்பட பலர் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ப்ரைவசி கருதி யாருடைய படத்தையும் இங்கே பகிரவில்லை.

நாங்கள் படம் முடிந்து கேக் வெட்ட ஏற்பாடு செய்து கொண்டு இருந்த போது, திரையரங்கு ஊழியர் ஒருவர் வந்து ‘ஏங்க! உள்ளே பூவெல்லாம் வீசி குப்பை செய்தது நீங்களா?‘ (தமிழ் ஆள் தான்) என்று கோபமாகக் கேட்க…

ஹி ஹி அது நாங்க தான் என்று கூறியவுடன், ‘அடுத்த முறை இப்படி செய்யாதீங்க.. கூட்டி முடிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகி விட்டது‘ என்றார்.

நம்ம ஆளு உடனே பொங்கிட்டான்… ‘அண்ணா! தலைவர் படத்துக்கு எப்படிண்ணா இதெல்லாம் இல்லாம இருக்கும்…‘ என்று எகிறினான்.

கேக் வெட்டும் போது எதுவும் ஆகாம பார்த்துப்போம் வா..‘ என்று கூறி சமாதானப்படுத்தினேன்.

மகேஷ்

மகேஷ் செய்து இருந்த ஏற்பாடுகள் வாய்ப்பே இல்லை. அனைவர் சார்பாக மகேஷுக்கு மிகபெரிய நன்றி. நீ இல்லை என்றால் இவ்வளவு என்ஜாய் செய்து இருக்க முடியாது.

இதெல்லாம் செய்வதால் எல்லோரும் பொறுப்பில்லாமல் இருப்பவர்கள் என்று வழக்கமான சிந்தனையை ஓட விட்டு விடாதீர்கள்.

அனைவரும் பொறுப்பான வேலையில் இருப்பவர்கள், இவை எல்லாம் ஒரு சிறு என்ஜாய்மென்ட் அவ்வளோ தான், இதுவே வாழ்க்கை கிடையாது.

பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் போது, மகேஷ் சிவாஜி பட டிக்கெட் வாங்கிய அனுபவம் பற்றிக் கூறினான்.

சிவாஜி பட டிக்கெட் 2007ல் வாங்க வரிசையில் நின்ற போது இவனுக்கு அடுத்த நபர் ஒரு பெண்.

இவன் நண்பர்களிடம் 75 டிக்கெட் என்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துத் திகிலான பெண்.. ‘ஏங்க! நான் முதல்ல வாங்கிக்கிறேன்.. ப்ளீஸ் நீங்க வாங்கி தீர்த்துடாதீங்க!‘ என்று கூறியதை பகிர்ந்து சிரித்துக்கொண்டு இருந்தோம்.

எந்திரன் படத்திற்கு டிக்கெட் வாங்க நின்ற போது அப்போது யாருமே இல்லையாம்.

இன்னொருத்தர் வந்து நிற்க எல்லாம் விசாரித்து விட்டுப் பார்த்தால் வந்தவர் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்திற்கு வந்தவர்.

அவர் “நீங்க எப்ப இந்தப்படம் (எந்திரன்) பார்ப்பீங்க” என்று கேட்க.. ‘எனக்குப் பார்க்கணும் என்று தோன்றும் போதெல்லாம் வந்து பார்ப்பேன்‘ என்று நம்ம ஆளு கூற.

கேட்டவர் ஏற இறங்க பார்த்து விட்டுப் போய் விட்டாராம் 🙂 .

150 டிக்கெட்

150 டிக்கெட் வேண்டும் என்று கவுண்ட்டரில் கேட்டதும் அவர்கள் மிரண்டு, ரகளை செய்யத்தான் இப்படி கேட்கிறார்கள் என்று பயந்து கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்களாம் 🙂 .

பின்னர் உட்காரக் கூட இடம் கிடைக்காமல் பார்த்தது தனிக்கதை.

சிவாஜி 3D என்னுடன் பார்த்தவர்கள் ரஜினியால் கிடைத்த நண்பர்கள்.

யாரையுமே எனக்குச் சிங்கப்பூர் வரும் முன்பு பழக்கமில்லை. அனைவருமே இணையம் மூலமாகவும் நானும் ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையிலும் அறிமுகமானவர்கள்.

இன்று சூர்யா, மகேஷ் போன்றவர்கள் ரஜினி ரசிகன் என்பதையும் தாண்டி ரொம்ப நெருக்கமாகி விட்டார்கள்.

ரஜினிக்கு ரசிகனாக இருந்து உனக்கு என்ன பயன் என்று யாரும் கேட்டால் இவர்கள் போல நபர்கள் தான் என்று தாராளமாகக் கூறலாம்.

18 COMMENTS

  1. நேத்து படம் பாக்கலாம்னு போனா (பெங்களூர்), ‘கன்னட ரக்ஷா வேதிகே’ ஆளுங்க படத்தை வெளியிடக் கூடாதுன்னு ‘அன்பு வேண்டுகோள்’ விடுத்ததாகச் சொல்லி தியேட்டர்ல திருப்பி அனுபிட்டாங்க!!! வட போச்சே! 🙂

  2. நேற்று பெங்களூர் சினிபோலிஸ் தியேட்டரில் படம் பார்த்தேன். அருமை. சூப்பர் அட்டகாசம். படம் ஹவுஸ் புல்.

    கார்திக், கன்னட ரஷண வேதிகே அப்படி ஏதும் சொன்னது போல தெரியவில்லை. நான் சினிபோலிஸ் தியேட்டரில் தான் படம் பார்த்தேன்.

  3. ஷங்கர் செல்போன் வீசுவது எந்த காட்சியில்?

    படம் பார்த்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் நினைவில்லை.

  4. நான் இதை எதிர் பார்க்கவே இல்லை .5 வயது குறைந்த ரஜினி ,நயன்தாரா.சினமா ஜாம்பவான் ரகுவரன் மற்றும் ஹனிபா 3d அலைவ் .பல்லேலக்க சாங் அடில் படப்பதிவு ,ஒளிபதிவு 3d காகவே எடடுதடை போல் உள்ளது .kiingkong பட காட்சி கார் சேசிங் கடைசி சண்டை பணம் அரங்கு முழுவதும் பறப்பது துப்பாக்கி குண்டு நிற்பது எல்லாம் பார்த்தால் மட்டும் புரியும் அருமை .நங்கள்ளும் வன்டுவேட்டோம் உங்கள் பக்கத்தில்
    holywood .

  5. //Saran December 13, 2012 at 10:59 AM
    ஷங்கர் செல்போன் வீசுவது எந்த காட்சியில்?

    படம் பார்த்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் நினைவில்லை//

    ”பல்லேலக்கா” பாடலில் “கூவும் செல்ஃபோன் நச்சரிப்பை குறைத்து, சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்” என்ற வரி வரும் போது (அந்த காட்சியில் ஷங்கர், தோட்டா தரணி, கே.வி.ஆனந்த்) ஷங்கர் தன் கையில் இருக்கும் செல்ஃபோனை தூர எறிவார்…..

    • பெங்களூர் தின தந்தியில் விளம்பரம் வந்தது.
      வந்து கொண்டு இருக்கிறது.

  6. ரஜினிக்கு ரசிகனாக இருந்து உனக்கு என்ன பயன் என்று யாரும் கேட்டால் இவர்கள் போல நபர்கள் தான் என்று தாராளமாகக் கூறலாம்.

    கரெக்ட் கிரி

    கருப்பு பணம் ஒழிந்தது என்று வரும் போது எனக்கு சிரிப்பாகி விட்டது. இதை எல்லாம் நீக்கி இருக்கலாம். இதை எப்படி யோசிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. வெட்டிய காமெடியை இதை வைத்து சரி செய்யலாம் என்று நினைத்தார்களோ என்னவோ!

    ஹா….ஹா

  7. எனக்கு வாஜி வாஜி பாடலும் சரி அதன் விசுவலும் சரி எப்போதும் பிடிக்கும் நீங்க வேற சொல்லிட்டீங்க 3 D இன்னும் சூப்பரா இருக்கு னு

    பார்த்துருவோம்

  8. சிங்கம் சிங்கிளா தான் வரும் பைட் எப்படி இருக்கு கிரி

  9. கிரி, நானும் நேத்து தான் பெங்களுரில் பார்த்தேன். 3Dல சாங்ஸ்லாம் பட்டைய கிளப்புனுச்சு.
    ஆன்லைன்லா 50% தான் புல்லாகிருந்துச்சு. தீயேட்டர் போனா ஹவுஸ் புல்.

    புதுப்பட ரிலிஸ் ஆன மாதிரி கலக்கிட்டாங்க.

    Raja

  10. I too saw that movie……….saw the movie on first day second show in sangam cinemas…..awesome experience.

    ……..Adhiradikaran song and oru koodai sunlight songs were superb……..My doubt is whether avm will recover the cost incurred by them . Waiting for kochadaiyan 3 d.

    Next time i am planning to see the movie in sathyam.

    Rajesh.v

  11. இங்க ரிலீஸ் ஆகல தல
    சரி பரவா இல்லை சொல்லிட்டு சிவாஜி 2d பாத்துட்டேன் வீட்ல

    – அருண்

  12. கிரி, கலிபோர்னியாவில் எங்கே ரிலீஸ் பன்னீருக்கங்கன்னு தெரியுமா?

  13. எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் இங்கே கலிஃபோர்னியாவில் ரிலீஸ் ஆகவில்லை 🙁

  14. ஸ்ரீனிவாசன், கலிஃபோர்னியாவில் ரிலீஸ் ஆகும்போது, இங்கே தெரிவிக்கவும். நன்றி.

  15. அனைவரின் வருகைக்கும் நன்றி

    பெங்களூர் ல பார்த்தால் சூப்பரா தான் இருந்து இருக்கும்.. 🙂

    @சரவணன் இதை விட பாடல்கள் தான் அருமை.

    @ராஜேஷ் இரண்டாவது முறை பார்த்தாச்சா!

    @ரெங்கா ஸ்ரீநிவாசன் நான் இன்று இரண்டாவது முறையாக சென்று இருந்தேன். 3D க்ளாசில் சில கோடுகள் .. பார்க்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. நம்ம ஆளுங்க இரண்டாவது வாரத்துலையே கண்ணாடிய காலி பண்ணிட்டானுக :-).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here