காலா பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி “கோச்சடையான்” பட அனுபவங்களைக் குறிப்பிடும் போது “புத்திசாலிகள் கூட நட்பு வைத்துக்கொள்ளலாம் ஆனால், அதிபுத்திசாலிகள் கூடச் சேரக்கூடாது” என்று அனுபவங்களைக் குறிப்பிட்டு இருந்தார்.
வாக்களிக்காதவர்கள் அதிபுத்திசாலிகள்!
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட பெங்களூரு வாக்காளர்களில் 35 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்குப்பதிவு 52%.
சமூகத்தளங்களில் பாருங்கள் ஒவ்வொருத்தருக்கும் வாய் காது வரைக்கும் இருக்கும்.
அவன் அப்படி இவன் இப்படி, அப்படிச் செய்து இருக்கணும் இப்படிச் செய்து இருக்கணும் என்று உலகத்தையே புரட்டிப் போடுவது போல வசனம் பேசுவாங்க ஆனால், செயலில் ஒன்றுமில்லை. Image Credit
ஆனால், உலகத்தையே புரட்டிப் போட்டு விடுவது போலப் பேசுவது.
அடுத்தவன் சரியில்லை என்று கூறும் அதே சமயம், நம் கடமையைச் செய்யவில்லை என்பதைப் பற்றிக்கவலையில்லை.
நியாயமான காரணத்தால் வாக்களிக்க முடியாதவர்களை விட்டுவிடுவோம் அவர்கள் மிகச் சிறு பிரிவினராக இருப்பார்கள்.
மீதி உள்ள பெரும்பாலானவர்கள் “அட! யாருப்பா வரிசையில் நிற்பது? வெய்யில் வேற அதிகமா இருக்கு! விடுமுறை வேற.. அப்படியே ஏதாவது படம் பார்ப்போம் இல்லையா.. இணையத்தை நோண்டுவோம்” இது தான் நடந்து இருக்கு.
சமூகத்தளங்கள் மூலமாகப் பல நல்ல செயல்கள் நடைபெற்றுள்ளதை மறுக்க முடியாது ஆனால், அதையவே எத்தனை காலத்துக்குக் கூறிக்கொண்டு இருப்பது.
பெங்களுருவில் வெளி மாவட்டம், மாநிலத்தைச் சேர்ந்தவங்க இருக்கலாம் ஆனால், பெங்களுருவில் வாக்குரிமை இருந்தால் நிச்சயம் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
சொந்த தொகுதியில் வாக்குரிமை இருந்தால், திட்டமிட்டு அங்கே சென்று வாக்களித்து இருக்க வேண்டும், அதற்குத் தான் விடுமுறை அளிக்கிறார்கள்.
சென்னை
பெங்களூருக்கு சற்றும் சளைத்தது இல்லை நம்ம சென்னை.
கடந்த சட்டமன்றத்தேர்தலில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது.
இவர்களின் முயற்சிகளைப் பார்த்து “அட! இந்த முறை சென்னை கலக்கப்போகுதுடா” என்று இருந்தால், இதே போல 50+% தான் வாக்கு பதிவாகி இருந்தது.
தேர்தல் ஆணையம் வாழ்க்கையே வெறுத்து இருப்பார்கள்.
“அடச்சே! இவனுங்களுக்குப் போய் இப்படி உழைத்தோமே! இதற்குப் பதிலா பணத்தையும் உழைப்பையும் வேறு எதற்காவது பயன்படுத்தி இருக்கலாம்” என்று கட்டாயம் நினைத்து இருப்பார்கள்.
படித்தவர்கள் இதில் அதிபுத்திசாலிகள் தான். வாயில வடை சுடுவதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர்கள்.
அரசியல்வாதிகளே! கவலையே படாதீங்க.. இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இவங்க எல்லாம் வெறும் வாய்.
கள நிலவரம்
நல்லதோ கெட்டதோ இருப்பவர்களில் சுமாரான! மோசமான அரசியல்வாதியைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் நம் நாடு உள்ளது.
இது தான் எதார்த்தம்! நமக்குப் பிடிக்கிறது பிடிக்கலை என்பது வேறு விசயம்.
நன்கு படித்தவர்கள் / நகரவாசிகள் அதிபுத்திசாலிகள் என்பதால், சமூகத்தளங்களில் மட்டும் வசனம் பேசிவிட்டு வாக்குச் சாவடிப் பக்கம் வருவதில்லை.
கள நிலவரமும் சமூகத்தளங்களின் பிரதிபலிப்பும் ஒன்றல்ல, அவை தேர்தலில் பிரதிபலிப்பதில்லை என்ற கூற்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
மக்களே புத்திசாலிகளாக இருங்கள், அதி புத்திசாலிகளாக அல்ல!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Sema… Sad but true… ☹️
உண்மைதான்…பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர்கள் மிகவும் அதிகம். நிழல் பிம்பத்திற்க்கு மட்டும் ஆர்வமாஇ உழைக்க பழக்க படுத்தப்பட்டவர்கள் நாம். ஓவ்வொரு துளியும் சேர்ந்து தான் பெருமழை ஆகிறது என உணராதவர்கள்
வாளர்ந்து வரும் நாடுகளில் மட்டும்தான் விடுமுறை அளிக்கிறார்கள் வாக்களிப்பதற்கு.
எனக்கு தெரிந்து மற்றய நாடுகளில் விடுமுறை தினங்களில்தான் வாக்களிப்பையே வைக்கிறார்கள்.
நியூசிலாந்தில் மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக காரணமில்லாமல் வாக்களிக்காவிட்டால் தண்டப்பணமாக 100$ என்று சட்டம் உள்ளது . நடைமுறையில் இல்லை. ஆனால் வாக்களிப்பு வீதம் குறையும் போது நடைமுறைப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். நான் இது வரை ஒரு தேர்தலில் மட்டும்தான் வாக்களித்துள்ளேன். அந்த ஒரு வாக்கினால் 9 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசு வீட்டுக்கு சென்றது.
மக்கள் வாக்களிக்காமல் போவதற்கு நல்ல அரசியல் தலைவர்கள் இல்லதது இன்னொரு காரணம். நல்ல அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் கிடைப்பதில்லை. பத்திரிகைக்களும் நல்லவர்களை போற்றுவதில்லை. அத்துடன் மக்களுக்கு அவ நம்பிக்கை , நல்லவர்கள் வெல்லமாட்டார்க்ள் என்று. தமிழ் நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத ரசினிக்குத்தானே இன்று எல்லா பத்திரிகைகளும் விளம்பரம் செய்கின்றன. ரசினி வெல்லமாட்டார். ஆனால் வென்றாலும் ஆட்சி செய்ய்யபோவது மோடியும் , லதா ரசினியும்தான் என்பது மக்களுக்கு தெரியும். இதனாலேயே அரைவாசி மக்களுக்கு வாக்களிக்கவே விருப்பமிருப்பதில்லை. ஸ்டாலின் நடை பயணத்தை விட வேறு எதுவும் செய்வதில்லை. அதில் இப்போது உதய நிதி ஸ்டாலின் வேறு களத்திற்கு வருகிறாராம். இதுவே நடு நிலை வாக்களர்கள் திமுக விற்கு வாக்களிப்பை தடுக்கும். அதிமுக ஏற்கனெவே செத்துவிட்டது. வேறு யாருக்கும் வாக்களித்து நேரத்தை வீணடிப்பதிலும் பார்க்க விடுமுறையை பயன்படுத்த நினைப்பர்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு யாராவது தெரிகிறார்க்ளா என்றால் யாரும் தெரிவதில்லை. கமியூனிஸ்ட்கள் காணாமல் போய்விட்டார்கள். நல்ல கண்ணு ஜயா பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் தேர்தலில் அவர் போட்டியிட்டதாக கேள்விப்படவில்லை. நிச்சயமாக நல்லவர்கள் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுகிறார்க்ள். ஆனால் மக்களுக்கு அவர்களை தெரிவதில்லை. தங்களை விளம்ப்பரப்படுத்துவதற்கு அவர்கலிடம் பணமிருப்பதில்லை. அதை செய்யவேண்டிய ஊடகங்கள் நடிகர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும்தான் செம்பு தூக்குவார்கள், வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், அதிபுத்திசாலியா இருக்கும் நீங்களும் கூட சினிமா என்ற மாயவலைக்குள் வீழ்ந்து இன்னமும் ஜுப்பர் ஸ்டாரிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதுதான். நீங்கள் 1000 காரணம் சொன்னாலும் ….
கிரி அண்ணா. இந்த கேள்விக்கு நிச்சயமாக நீங்கள் பதிலளிக்கவேண்டும். நீங்கள் புத்திசாலியா இல்லை அதிபுத்திசாலியா?
அருமையான கருத்து! “…நிச்சயமாக நல்லவர்கள் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுகிறார்க்ள். ஆனால் மக்களுக்கு அவர்களை தெரிவதில்லை. தங்களை விளம்ப்பரப்படுத்துவதற்கு அவர்கலிடம் பணமிருப்பதில்லை. அதை செய்யவேண்டிய ஊடகங்கள் நடிகர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும்தான் செம்பு தூக்குவார்கள்..”
பிரியா ஜோசப் குமுறி விட்டார். பலமுறை கிரி தளத்திற்கு வர பயப்படுவதற்குக் காரணத்தை வெளிப்படையாகவே எழுதி விட்டார். வாழ்த்துகள். கிரி கோவிச்சுக்காதீங்கோ.
@ப்ரியா
அண்ணா என்று கூறியதால், இனி “ங்க” என்று அழைக்காமல் நேரடியாகவே கூறுகிறேன். அதோட உனக்கும் சின்ன வயது என்பதால், போலியான மரியாதை தேவையில்லை.
ப்ரியா நான் On Screen ரஜினியை விட Off Screen ரஜினிக்கு தான் அதிக ரசிகன். ஏனென்றால் அவரை பார்த்து நான் கற்றுக்கொண்டதே அதிகம்.
உனக்கு ஏன் ரஜினி பிடிக்கவில்லை? நீ ரஜினி பிடிக்காது என்று ஏன் சொல்கிறாய்? என்று கேட்டால் அது எவ்வளவு அபத்தமோ அது போலத்தான் என்னை கூறுவது.
உனக்கு ரஜினியை பிடிக்காமல் இருக்க 1000 காரணங்கள் இருப்பது போல எனக்கு பிடிக்க 100 காரணங்கள் இருக்காதா?
யார் நினைப்பது / கூறுவது சரி? இதை யார் தீர்மானிப்பது?
“ரஜினி வெல்ல மாட்டார்? அப்படியே வந்தாலும் மோடியும் லதா ரஜினியும் தான் ஆட்சி செய்வார்கள்!!” இப்படி கூறினால் சரி.
ரஜினி மீது நம்பிக்கையுள்ளது அவர் வந்தால் நல்லது செய்வார் என்று நம்புகிறேன் என்று நான் கூறினால் தவறு, சினிமா மோகம்!
இதில் ஏதாவது லாஜிக் உள்ளதா?! உனக்கு பிடிக்கலை, நம்பிக்கையில்லை. எனக்கு பிடித்துள்ளது, நம்புகிறேன்.
இது ஒவ்வொருவர் நம்பிக்கை, விருப்பம் சார்ந்தது.
தனக்கு பிடிக்கவில்லை என்றால், ஒருவருக்கும் பிடிக்கக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை!
நீ கூறுவது, நினைப்பது சரி என்று யார் உனக்கு உறுதி அளித்தார்கள். எந்த அடிப்படையில் இதை நம்புகிறாய்?
இது சரி இது தவறு என்று தீர்ப்பு கூறுவது யார்?
உனக்கு ஒரு நம்பிக்கை இருப்பது போல எனக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் என்ன தவறு?
மக்கள் தீர்மானிக்கட்டும். மக்களுக்கு ரஜினி பிடிக்கவில்லை தோற்கடித்து விட்டார்கள் என்றால், அதை ரஜினி ஏற்றுக்கொண்டு செல்லட்டும்.
இதற்கான நேர்மையான பதிலை தரக்கூடிய ஒரே நபர் “காலம்” மட்டுமே!
நீ நினைப்பதையே நானும் ஏன் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? உன்னுடைய எண்ணத்தை என் மீது ஏன் திணிக்கிறாய்?
அப்புறம் நான் அதி புத்திசாலியும் இல்லை முட்டாளும் இல்லை நடைமுறை எதார்த்தத்தை புரிந்தவன், அதன்படி நடப்பவன்.
சுருக்கமாக, மனதுக்கு பிடித்ததை, எனக்கு சரி என்று தோன்றுவதை எழுதுபவன், தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்பவன். இது தான் நான்.
இது குறித்து தனிக்கட்டுரையாகவே எழுதுகிறேன். ஒரு கட்டுரையாக எழுதி விட்டால், யாராவது கேட்டால் கட்டுரை இணைப்பை கொடுத்து விட்டால் வேலை முடிந்தது.
ஏனென்றால், நிறைய பேர் குறித்து கூறுகிறார்கள். ஒவ்வொரு முறையும் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியதாகிறது.
@ஜோதிஜி
நீங்க எழுதியதை பொறுமையாக திரும்ப ஒரு முறை படித்துப் பாருங்கள், ரொம்ப அதிகம் என்று உங்களுக்கே தெரியும்.
என்னுடைய தளத்துக்கு வர நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? அப்படி என்ன எழுதக்கூடாததை எழுதி விட்டேன்?
ரஜினி பற்றி எப்பவாவது எழுதுவது அவ்வளவு ஒரு பெரிய குற்றச்செயலா? மற்ற கட்டுரைகள் எழுதுவது போல ரஜினி பற்றியும் எழுதுகிறேன், இதில் என்ன குறை கண்டீர்கள்?
கருத்துவேறுபாடு இருந்தால் கூறுங்கள்.. விவாதிப்போம்! நான் என்ன உங்களுக்கு பதில் அளிக்காமல் இருந்தேனா அல்லது அநாகரீகமாக கருத்தை தெரிவித்தேனா!
நான் என்னமோ எழுதும் கட்டுரைகள் எல்லாமே ரஜினி பற்றித்தான் என்பது போல இவ்வளோ பெரிய பில்டப் கொடுத்து இருக்கிறீர்கள்.
100 கட்டுரைகள் எழுதி இருந்தால் அதில் 5 ரஜினி பற்றி இருக்கலாம். இது அப்படி என்ன கொலை குற்றமா?!
அப்படி என்ன நீங்க வர பயப்படும் அளவுக்கு எழுதினேன்?! என்று எப்படி யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை.
தயவு செய்து நீங்கள் பயப்பட்ட தருணங்களை கூறுங்கள். ஒருவேளை அதை நான் உணராமல் இருக்கலாம், அதில் தவறு என்று தோன்றினால் மாற்றிக்கொள்கிறேன்.
அது ஏன் ரஜினிக்கு மட்டும்… ரசினி?!
ப்ரியா சோசப்புனு போட்டுக்கிட வேண்டியதுதானே!
@ஜோதிஜி ஏன் பயப்படறாருன்னா… ரஜினியைப் பற்றி தவறானக் கருத்துக்களை எவ்வுளவு பரப்பினாலும்… சரியான ஆதாரத்துடன் பதிலடி தருகின்றீர்களே..அது காரணமாக இருக்கலாம்
கிரி அண்ணா. உங்களுக்கு ஏன் இந்த கோபம். உங்களுக்கு ரசினியை ஆதரிக்க எவ்வளவு உரிமை உள்ளதோ அதேயலவு உரிமை அவரை எதிர்க்க எனக்கு உள்ளது. அவரை நீங்கள் ஆதரிக்க கூடாது என்று எங்காவது சொன்னேனா?. அவரை ஆதரிப்பதால் நீங்கள் ஒரு முட்டாள் என்று சொன்னேனா. அவரை ஆதரிப்பவர்கள் எல்லாரும் லூசு என்று சொன்னேனா. அப்படி சொல்லியிந்தால் கூட நீங்கள் என் மேல் கோபப்படலாம். யாரையும் நான் தாக்கவில்லை. ரசினியை ஒப்பொருவரும் பார்க்கும் கோணம் வேறு. நான் அவரை பார்த்ததில்லை. அவருடய படத்தை திரையரங்கில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. உங்களுக்கு அவருடன் நேரடி பழக்கமில்லை என்று நினைக்கிறேன். நீங்களும் அவரை பற்றி கேட்டறிந்தது/ வாசித்த்றிந்தது. நான் வெறும் வாசித்தறிந்த்ததுதான். நீங்கள் அவருடய விசிறி என்பதால் சிலதை கடந்து போவீர்கள். ஆனால் மற்ற்யவர்களும் அப்படியே கடந்து போகவேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தமுடியாது . உதாரணத்திற்கு அவருடய மகளின் திருமணத்திற்கு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதாக கூறியது. நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் என்ன காரணத்திற்காக அதை பின்னர் சொல்லவேண்டும். இதையேதான் அரசியலுக்கு வருவத்ற்கு ஆணடவன் கட்ட்ளையிட வேன்டும் என்று நான் பிறப்பதற்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருக்கிறார். நீங்கள் அவரின் ரசிகர். நம்ம தலைவன் வாரான் . நம்மை ரட்சிக்கபோகிறான் என்று கடந்து சென்றுவிடுவீர்கள். ஆனால் மற்றயவர்களுக்கு அது வெறும் பட விளம்பரமாக மட்டுமே தெரியும். வெறுப்புத்தான் வரும். நீங்கள் எனக்கு முந்தய தலை முறை. ரசினியை பற்றி ஆயிரம் கேள்விப்படிருக்கலாம். அடக்கமானவர் என்பது மட்டும்தான் நான் அறிந்தவரை ரசியின் நல்ல குணம். வேறு எதுவுமே எனக்கு தெரியவில்லை.தெரியாமலே போகட்டுமே யாருக்கு நட்டம். உங்களுக்கு உயர் அழுத்தம் வந்த்தை தவிர்த்து. 🙂 “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ” என்று ஒரு சொலவடை உள்ளது. ஜோதியி அவர்கள் கூட விலையாட்டாக சொன்னதை கூட என்னுடனான கோபத்தில் நீட்டி முழக்கியுள்ளீர்கள். நான் அறிந்தவரை அவர் சொன்னது ” நீங்கள் புத்திசாலியா இல்லை அதி புத்திசாலியா என்பது குறித்து. ஆனால் அதைக்குட நீங்கள் உங்களின் ஸ்டாருடன் தொடர்புபடுத்தி கோபப்பட்டுள்ளீர்கள். இனி நான் இங்கே வரவேயில்லை. தேவையில்லாமல் உங்களின் ஆரோகியத்தை கெடுப்பதில் எனக்கு எந்தவித நன்மையுமில்லை. நன்றி . வணக்கம்.
முக்கிய குறிப்பு
பாட்சா பட இயக்குனரின் ரசினி குறித்த புத்தகத்தை வாசிதிருந்தேன். அதில் ரசினிதான் நான் ஒரு தடவை சொன்னால் 100 தடவை சொன்னமாதிரி என்ற வசனத்தை உதவி இயக்குனர் ஒருவர் பாவித்தபோது கணடறிந்த்ததாக எழுதியிருந்தார். அனால் நேற்று ஆனந்தவிகடனின் சிட்டிசன் இயக்குனர், பாலகுமாரன் எங்கேயிருந்து அந்த வசனத்தை பிடித்தார் என்று சொல்லியுள்ளார். எது உண்மை? எது பொய்?
@ப்ரியா ஜோசப்
இது நிச்சயம் கோபம் இல்லை ப்ரியா, சலிப்பு.
உன்னுடைய முதல் கருத்தில் எங்க வீட்டு ஒற்றுமையை பற்றி ஒன்றுமே தெரியாமல் நீ கருத்திட்ட போது வராத கோபமா எனக்கு தற்போது வந்து விடப்போகிறது.
ஊரில் என்ன நடந்தாலும் அனைத்துக்கும் ரஜினியே காரணம் என்பது போல வந்து விடுகிறார்கள்.
ரஜினி ஆதரவாளர்களை விட ரஜினி எதிர்ப்பாளர்களே எப்போதும் அவரையே நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆதரவு எதிர்ப்பு
சரி நான் சொன்னதையே அப்படியே திருப்பி எனக்கு சொல்லி இருக்கே! 😀
நானும் ரஜினியை எதிர்ப்பவர்கள் எல்லாம் அரைகிறுக்கு, லூசு என்று நான் எதுவும் கூறவில்லையே! அவரவர் கருத்து அவரவர்க்கு. இதில் நான் எப்படி கூற முடியும்?
நான் யாரையும் இதை தான் சொல்ல வேண்டும் என்று என்னுடைய தளத்தில் நிர்பந்தித்ததில்லை. என்னுடைய தளத்தில் கருத்து மட்டுறுத்தல் கூட கிடையாது.
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நாகரீகமாக கருத்தை தெரிவிக்கலாம்.
ரசிகர்களுக்கு விருந்து
உன்னை போன்றவர்களின் பிரச்சனையே இது தான். ரஜினி விருந்து கொடுக்கிறேன் என்று சொன்னது ரசிகர்களுக்கு! உன்னை போன்றவர்களுக்கு இதில் என்ன அக்கறை? ஜோதிஜி கூட கொஞ்சநாள் முன்பு இதையே கேட்டு இருந்தார்.
ரஜினி பின்னாடி போகின்றவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளோ அக்கறை? இது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள புரிதல். நாங்களே இது பற்றி யோசிக்கவில்லை, உங்களுக்கு ஏன் இவ்வளோ கவலை.
எங்கள் மீது தான் எவ்வளோ பாசம் 🙂 BTW கடந்த வருட ரசிகர் சந்திப்பில் வந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. வந்தவர்களும் விருந்தை எதிர்பார்த்து வரவில்லை.
எனக்கு உன் மீது செம்ம வியப்பு! சிங்கப்பூர் பற்றி பல தகவல்கள் கூறினாய். உண்மையில் எனக்கு வியப்பாக இருந்தது.
தற்போது சோதிடம் வேறு கற்றுக்கொண்டு வருகிறாய் போல ஆனால், இன்னும் முழுமையாக கற்கவில்லை என்று தெரிகிறது, எனக்கு உயர் ரத்த அழுத்தம் எதுவுமில்லை.
இதற்கெல்லாம் உயர் ரத்த அழுத்தம் என்றால், பல ரணகளங்களை, வாக்குவாத அடிதடிகளை எல்லாம் கடந்த 10 வருடங்களில் தாண்டி வந்து இருக்கிறேன். எத்தனை விமர்சனங்கள்! எத்தனை திட்டுகள்.
இப்பெல்லாம் யாராவது விவாதத்துக்கு வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துட்டு இருக்கிறேன். இதை தான் நீ எனக்கு முதன் முதல் கருத்து கூறிய பதிவிலும் கூறி இருந்தேன்.
ஆனால் என்ன.. தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி எல்லாத்துக்கும் நீ ரஜினி ரஜினின்னு ரஜினியையே விமர்சித்துட்டு இருக்கிறாய்.
மற்றதையும் விவாதித்தால் சுவாரசியமாக இருக்கும். ஏன் என்றால், உனக்கு சின்ன வயது என்றாலும் பெரியவர்கள் அளவுக்கு விசயமும் பேசவும் தெரிந்து உள்ளது.
அதை நீ வெறும் ரஜினி என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே உன் சக்தியை என்னிடம் வீணாக்கி வருகிறாய்.
புதிய செய்திகளை, தகவல்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம், அதை உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் அது எனக்கு இது போன்ற விவாதங்களில் வீணாகி வருகிறது.
நான் 100 கட்டுரைகள் எழுதினால் (அதில் எத்தனையோ பயனுள்ள கட்டுரைகள் உள்ளன) அதில் 5 தான் ரஜினி பற்றி வருகிறது ஆனால், அந்த 5 மட்டுமே தான் அதிக கவனம் பெறுகிறது.
ஊடகங்களுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?!
ஊடகங்கள் ரஜினிக்கு முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டு வைக்கும் நீயும் அதே தானே செய்கிறாய்! ஏன் ரஜினி தவிர்த்து பல விஷயங்கள் இருந்தும் ஊடகங்கள் போலவே நீயும் ரஜினி ரஜினி என்று அவரைப் பற்றியே பேசுகிறாய்?!
ஜோதிஜி
என்னுடைய கோபம், ஆத்திரம் எல்லாம் 2010, அதிபட்சம் 2011 லியே போய் விட்டது. என்னுடைய கோபம் எல்லாம் நீ பார்க்கணும் என்றால், 2008 – 2010 கட்டுரைகளில் நடந்த விவாதங்களை சென்று பார்க்கலாம்.
ஜோதிஜியை பற்றி உனக்கு தெரிந்ததை விட எனக்கு தெரியும். நான் அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து பழக்கம். எனவே…
அதோட ஜோதிஜி அனைத்து கட்டுரைகளுக்கும் விவாதத்துக்கு வருவார். அவரிடம் இருந்தும் நான் தெரிந்து கொண்டது அதிகம். இதெல்லாம் சும்மா மாற்றுக்கருத்துக்கள் அவ்வளவே!
மற்றபடி அவரிடம் எனக்கு நல்ல புரிதல் உள்ளது.
நீ இங்கு வருவதும் வராததும் உன்னுடைய விருப்பம். நான் என்றுமே யாரையுமே வர வேண்டாம் என்று கூற மாட்டேன்.
என்னுடைய ஆரோக்கியத்தை நான் மட்டுமே கெடுக்க முடியும், மற்றவர்கள் செய்ய முடியாது, அனுமதிக்கவும் மாட்டேன். உன்னை விட எனக்கு என் மீது அக்கறையுள்ளது, கவலைப்பட வேண்டாம் 🙂 .
அதே போல எனக்கு பிடித்ததை மனதில் தோன்றுவதைத்தான் நான் எழுதுவேன். உனக்கு பிடிக்கவில்லை என்றால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட தளம், செய்தி தளமல்ல.
இங்கு எனக்கு பிடித்த, எனக்கு சரி என்று படுவதை நான் பகிர்ந்து கொண்டு தான் இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் என்னுடைய திருப்திக்காக எழுதுகிறேன், மற்றவர்களை திருப்தி செய்ய எழுத வரவில்லை.
பாட்ஷா வசனம்
எனக்கு ரஜினி கூறியது தான் தெரியும். நீ கூறியதே எனக்கு புதிய செய்தி, நான் இதுவரை படிக்கவில்லை. இருந்தாலும் இது உறுதி செய்ய தற்போது பாலகுமாரன் அவர்கள் உயிருடன் இல்லை.
நான் ரஜினியை நம்புகிறேன் நீ சிட்டிசன் இயக்குனரை நம்பினால் அது உன்னுடைய எண்ணம். நான் கருத்துக் கூற எதுவுமில்லை.
—-
விஜய் கேட்ட மாதிரி அது என்ன “ரசினி”… நானே கேட்கணும் என்று இருந்தேன் 😀 ஜோசப், ஜுப்பர் எல்லாம் சொல்லலாம் ஆனால், ரஜினி சொல்லக்கூடாதா!
ஒரு விவசாயி,
ஒரு ஆசிரியர்,
ஒரு கூலித்தொழிலாளி,
ஒரு என்ஜினீயர்,
ஒரு டாக்டர்
etc…
இவர்கள் எல்லோரையும் விட நடிப்பு தொழில் செய்கிற நடிகன் ஒரு படி கீழானவன் தான். மேல் கூறியவர்களுள் யார் இல்லையென்றாலும் சமுதாயம் சரியாக இயங்காது. ஒரு நடிகன் இல்லையென்றால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. I am not degrading any individual (like Mr. Rajini) here. But the Job acting doesn’t contribute anything to the humankind (except entertainment). If not cinema, entertainment will come by some other means.
@கருணை இக்கட்டுரைக்கும் நீங்கள் கூறிய கருத்துக்கும் என்ன தொடர்பு?
இக்கட்டுரை வாக்களிப்பதில் அலட்சியம் காட்டுபவர்கள் பற்றி கூறியது. நடிகன் மேலானவனா கீழானவனா என்பது பற்றியது அல்ல.
It is my right to comment in the open comment box. If you don’t find it relevant, you have all right to delete or not to publish.
ஒட்டு போடாதவர்களுக்கும், அதிபுத்திசாலி என்கிற வார்த்தைக்கும் என்ன தொடர்பு?
கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளேனே!
ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்வார்கள், எப்படியெல்லாம் இருக்கணும் என்று கூறுவார்கள் ஆனால், வாக்களிக்க வாக்குச்சாவடி வரமாட்டார்கள்.
இக்கட்டுரையில் “அதிபுத்திசாலி” என்ற வார்த்தை விமர்சிக்கும் / கேலியான பதத்தில் வஞ்சப்புகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டது.
து நிச்சயம் கோபம் இல்லை ப்ரியா, சலிப்பு.
உன்னுடைய முதல் கருத்தில் எங்க வீட்டு ஒற்றுமையை பற்றி ஒன்றுமே தெரியாமல் நீ கருத்திட்ட போது வராத கோபமா எனக்கு தற்போது வந்து விடப்போகிறது.
// அதுதானே பார்த்தேன் ; அப்பவே நீங்கள் கடுப்பகியிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாகரீகமாக நீங்கள் அபோது காட்டவில்லை இப்போது காட்டுகிறீர்கள்.
ஊரில் என்ன நடந்தாலும் அனைத்துக்கும் ரஜினியே காரணம் என்பது போல வந்து விடுகிறார்கள்.
ரஜினி ஆதரவாளர்களை விட ரஜினி எதிர்ப்பாளர்களே எப்போதும் அவரையே நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
// ரசினி ஆதரவாலர்களும் எல்லாம் அவர் வந்தவுடன் சரியகிவிடும் என்று சொல்வது மாதிரித்தான் இதுவும்.அதுதவிர நான் உங்கலை கடுப்பேற்றமாத்திரமே ரசினியை நினைப்பேன் மற்றும்படி நினைப்பதேயில்லை. சொல்லபோனால் அவரின் எந்த படமும் திரையரங்கில் பார்த்ததில்லை.
சிகர்களுக்கு விருந்து
உன்னை போன்றவர்களின் பிரச்சனையே இது தான். ரஜினி விருந்து கொடுக்கிறேன் என்று சொன்னது ரசிகர்களுக்கு! உன்னை போன்றவர்களுக்கு இதில் என்ன அக்கறை? ஜோதிஜி கூட கொஞ்சநாள் முன்பு இதையே கேட்டு இருந்தார்.
// அவர் நம்பியுள்ள ரசிகர்களுக்கே சொன்னசொல்லை காப்பாத்தாதவர் ரசிகரல்லாதவர்களுக்கு என்ன செய்வார். கிரெடிபிளிட்டி என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உள்ளது. சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. இது போன்ற விடயங்களை உங்களை போன்ற ரசிகர்கள் நம்ம தலைவர்தானே என்று கடந்து போய்விடிவீர்கள். மற்றய மக்கள் ஏன் அப்படி கடந்து போகவேண்டும். உங்கள் தலைவரை எதிர்க்கும் ஜோதிஜி ஏன் கடந்து போகவேண்டும். இந்திய குடியுரிமையே இல்லாத , தேர்தலில் வாக்களிக்கவே முடியத நான் ஏன் கடந்து போகவேண்டும்.
ரஜினி பின்னாடி போகின்றவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளோ அக்கறை? இது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள புரிதல். நாங்களே இது பற்றி யோசிக்கவில்லை, உங்களுக்கு ஏன் இவ்வளோ கவலை.
எங்கள் மீது தான் எவ்வளோ பாசம் ? BTW கடந்த வருட ரசிகர் சந்திப்பில் வந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. வந்தவர்களும் விருந்தை எதிர்பார்த்து வரவில்லை.
// இங்கே யாருக்கும் ரசிகர்க்ளில் அக்கறையில்லை, உங்களின் அறியாமையை பயன்படுத்து உங்களின் தலைவரில் வெறுப்பு. மாவட்டத்திற்கு 200 பேர்களை மட்டும் சந்தித்தாக வாசித்தேன் . அவ்வளவுதானா அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை? அதுவும் பணம்படைத்தவர்களிற்கு அடையாள அட்டைகள் விற்கப்பட்டதாக கூட கேள்வி. ரசிகர்கள் விருந்தை எதிர்ப்பார்ப்பதில்லை. எல்லாருக்குமே தெரியும் அது. ஆனால் உங்களின் தலைவர் சொன்னதைத்தான் கேட்கிறோம். ஆன்மீக அர்சியல்வாதி வாக்குகொடுத்தால் கடைப்பிடிக்கவேண்டாமா?
எனக்கு உன் மீது செம்ம வியப்பு! சிங்கப்பூர் பற்றி பல தகவல்கள் கூறினாய். உண்மையில் எனக்கு வியப்பாக இருந்தது.
தற்போது சோதிடம் வேறு கற்றுக்கொண்டு வருகிறாய் போல ஆனால், இன்னும் முழுமையாக கற்கவில்லை என்று தெரிகிறது, எனக்கு உயர் ரத்த அழுத்தம் எதுவுமில்லை.
//சோதிடத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தபோதும் உங்களின் நம்பிக்கையை வீணாக்காமல் கற்கிறேன்.
ஆனால் உங்களின் எழுத்தில அப்படி ஒரு கோபம். படிக்கும்போது மிகவும் மகிழ்சியாக இருந்தது 🙂 அதனால்தான் உங்களுக்கு உயர் அழுத்தம் என்று உய்த்தறிந்தேன்.
இதற்கெல்லாம் உயர் ரத்த அழுத்தம் என்றால், பல ரணகளங்களை, வாக்குவாத அடிதடிகளை எல்லாம் கடந்த 10 வருடங்களில் தாண்டி வந்து இருக்கிறேன். எத்தனை விமர்சனங்கள்! எத்தனை திட்டுகள்.
இப்பெல்லாம் யாராவது விவாதத்துக்கு வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துட்டு இருக்கிறேன். இதை தான் நீ எனக்கு முதன் முதல் கருத்து கூறிய பதிவிலும் கூறி இருந்தேன்.
ஆனால் என்ன.. தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி எல்லாத்துக்கும் நீ ரஜினி ரஜினின்னு ரஜினியையே விமர்சித்துட்டு இருக்கிறாய்.
// அடிதடி ? அப்ப நீங்கள் ஒரு முன்னாள் ரவுடியா?
மற்றதையும் விவாதித்தால் சுவாரசியமாக இருக்கும். ஏன் என்றால், உனக்கு சின்ன வயது என்றாலும் பெரியவர்கள் அளவுக்கு விசயமும் பேசவும் தெரிந்து உள்ளது.
அதை நீ வெறும் ரஜினி என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே உன் சக்தியை என்னிடம் வீணாக்கி வருகிறாய்.
புதிய செய்திகளை, தகவல்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம், அதை உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் அது எனக்கு இது போன்ற விவாதங்களில் வீணாகி வருகிறது.
// நீங்கள் உங்களின் தலைவரை கண்மூடித்தனாக நம்புவதாய் எழுதுவதை நிறுத்தும்வரை நீங்கள் இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான்வேண்டும்.
நான் 100 கட்டுரைகள் எழுதினால் (அதில் எத்தனையோ பயனுள்ள கட்டுரைகள் உள்ளன) அதில் 5 தான் ரஜினி பற்றி வருகிறது ஆனால், அந்த 5 மட்டுமே தான் அதிக கவனம் பெறுகிறது.
ஊடகங்களுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?!
ஊடகங்கள் ரஜினிக்கு முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டு வைக்கும் நீயும் அதே தானே செய்கிறாய்! ஏன் ரஜினி தவிர்த்து பல விஷயங்கள் இருந்தும் ஊடகங்கள் போலவே நீயும் ரஜினி ரஜினி என்று அவரைப் பற்றியே பேசுகிறாய்?!
// யாரவது புதிதாக தமிழ் படிக்க உங்களின் தளத்திற்கு வருபவர்கள் நீங்கள் உங்கள் தலைவரை பற்றி எழுதுவதை அப்படியே நம்பிவிட்டால்? அதனால்தான் என் எதிர்ப்பை பதிவது இங்கே முக்கியம்மகிறது. நீங்கள் அப்ப்டி யாரவ்து இருக்கிறார்களா என்று நினைக்கலாம்.. ஆனால் ஒருகாலத்தில் நானும் உங்கலின் பதிவுகளில்தான் தமிழ் படித்தேன். ஆங்கிலத்தில் வந்த கட்டுரைகளை நம்பாமல் 2014 இல் மோடி நல்லது செய்வார் என்று உங்களுடய் பதிவுகளியும் , நிசப்தம் பதிவுகளையும் நம்பினேன். அப்படித்தான் இப்போது யாரவது நம்பலாம்.
ஜோதிஜி
என்னுடைய கோபம், ஆத்திரம் எல்லாம் 2010, அதிபட்சம் 2011 லியே போய் விட்டது. என்னுடைய கோபம் எல்லாம் நீ பார்க்கணும் என்றால், 2008 – 2010 கட்டுரைகளில் நடந்த விவாதங்களை சென்று பார்க்கலாம்.
ஜோதிஜியை பற்றி உனக்கு தெரிந்ததை விட எனக்கு தெரியும். நான் அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து பழக்கம். எனவே…
அதோட ஜோதிஜி அனைத்து கட்டுரைகளுக்கும் விவாதத்துக்கு வருவார். அவரிடம் இருந்தும் நான் தெரிந்து கொண்டது அதிகம். இதெல்லாம் சும்மா மாற்றுக்கருத்துக்கள் அவ்வளவே!
மற்றபடி அவரிடம் எனக்கு நல்ல புரிதல் உள்ளது.
// ஜோதிஜியை உங்களுக்கு நல்லா தெரியும் . நீ பொத்திட்டு போ என்று சொல்லுகிறீர்கள் நாகரிகமாக..:)
நீ இங்கு வருவதும் வராததும் உன்னுடைய விருப்பம். நான் என்றுமே யாரையுமே வர வேண்டாம் என்று கூற மாட்டேன்.
என்னுடைய ஆரோக்கியத்தை நான் மட்டுமே கெடுக்க முடியும், மற்றவர்கள் செய்ய முடியாது, அனுமதிக்கவும் மாட்டேன். உன்னை விட எனக்கு என் மீது அக்கறையுள்ளது, கவலைப்பட வேண்டாம் ? .
அதே போல எனக்கு பிடித்ததை மனதில் தோன்றுவதைத்தான் நான் எழுதுவேன். உனக்கு பிடிக்கவில்லை என்றால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட தளம், செய்தி தளமல்ல.
இங்கு எனக்கு பிடித்த, எனக்கு சரி என்று படுவதை நான் பகிர்ந்து கொண்டு தான் இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் என்னுடைய திருப்திக்காக எழுதுகிறேன், மற்றவர்களை திருப்தி செய்ய எழுத வரவில்லை.
// யாரும் நீங்கள் உங்களின் தலைவரை ஆதரித்து எழுதக்கூடாது என்று சொல்லவில்லையே? எதிர்ப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களால் சலாப்பாமல் பதிலழிக்கமுடியவில்லையானால், உங்களின் சிஸ்டத்தில் ஏதோ ஒரு பிழையுள்ளது. அந்த பிழையை திருத்தினால் ஒழிய நீங்கள் நினைப்பது நடக்காது. உதாரணத்திற்கு அந்த விருந்து. ” ஆமா. எங்களின் தலைவர் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்லிவிட்டார் . ஆனால் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் விருந்தளிக்கவில்லை” அப்படினு சொல்லி முடித்திருக்கலாம். இல்லை வேறு ஏதாவது நடைமுறை காரணங்களை சொல்லி விளக்கலாம். ஆனால் உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுவது , முழுவதும் சாமாளிப்பெயன்றி வேறு ஒன்றுமில்லை.
பாட்ஷா வசனம்
எனக்கு ரஜினி கூறியது தான் தெரியும். நீ கூறியதே எனக்கு புதிய செய்தி, நான் இதுவரை படிக்கவில்லை. இருந்தாலும் இது உறுதி செய்ய தற்போது பாலகுமாரன் அவர்கள் உயிருடன் இல்லை.
நான் ரஜினியை நம்புகிறேன் நீ சிட்டிசன் இயக்குனரை நம்பினால் அது உன்னுடைய எண்ணம். நான் கருத்துக் கூற எதுவுமில்லை.
// உங்கள் தலைவர் எந்த இடத்திலும் அந்த வசனம் தன்னுடய கண்டுபிடிப்பு என்று உரிமை கோரவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரிடம் வாய்ப்பினை எதிர்ப்பார்ப்பவர்கள்தான் இப்படி புழுகிறார்கள் என்று நினைக்கிறேன்,
ரசினி என்று பயன்படுத்துவதற்கு காரணம் — இந்தி எதிர்ப்பு போராட்டம்தான். ஜி என்பது வட எழுத்து. முன்னர் தமிழில் யாரையாவது கூப்பிடும்போது அண்ணா, அக்கா , தம்பி, தங்கச்சி, நண்பர் , என்று பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது ஜி என்று பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் எங்கள் முப்பாட்டன் துரத்திய இந்தி மீண்டும் வருகிறது. ஆகவே நான் என் அம்மா மேல் சத்தியம் பண்ணியுள்ளேன் “ஜி” என்ற எழுத்தினை/ வார்த்தையை பயன்படுத்தமாட்டேன் என்று. மற்றும்படி வேறு எந்த காரணமும் இல்லை. இனிமேல் நீங்கள் கூட ரசினி என்று பாவிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. 🙂 இல்லாவிடில் நீங்கள் ஒரு தமிழின துரோகியாக்கப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள்.
நீங்கள் திரையில் தோன்றும் ரசினியிலும் பார்க்க நிஜமான ரசினியைத்தான் அட்மயர் ( தமிழ் தெரியவில்லை) ஆனதாக சொன்னீகள். அவரின் அந்த குணங்கள் தருணங்கள் குறித்து எழுதியுள்ளிர்களா? இருந்தால் எங்கே? இல்லவிட்டால் ஏன் இல்லை. நன்றி வணக்கம்.!
Priya,
படையப்பா தான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். அவர் எல்லோரைபோல பொய் சொல்லக்கூடிய ஒரு சாதாரண மனிதர் தான். அவர் மீது எந்த விமர்சனமும் இல்லை எனக்கு. (அவருடைய பொய்யினால் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால்). ஆனால் என்னுடைய விமர்சனமெல்லாம், நடிப்பு தொழில் செய்கிற ஒரு சாதாரண மனிதனை தலைவராக கொண்டாடுகிற அதிபுத்திசாலி (அதி முட்டாள்) ரசிகனைப் பற்றி தான்.
@ப்ரியா “நாகரீகமாக நீங்கள் அபோது காட்டவில்லை இப்போது காட்டுகிறீர்கள்.”
எனக்கு நீ கூறியது அன்று வருத்தம் தான் ஆனால், இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இதை நம்புவதும் நம்பாததும் உன்னுடைய விருப்பம்.
இருவரும் ரஜினி மற்றும் சில கருத்துகளில் எதிரெதிர் துருவம் எனவே, இருவரும் ஏற்றுக்கொள்ளாத ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப விவாதிப்பதில் பயனில்லை.
இருவரும் அவரவர்க்கு சரி என்று தோன்றுவதை செய்வோம், பேசுவோம். யார் சரி தவறு என்பதை காலம் தீர்மானிக்கட்டும்.
நன்றி