அண்ணாமலையை TNM ஊடகவியலாளர் தன்யா பேட்டி எடுத்தது இடது மற்றும் வலது சாரி ஆதரவாளர்களிடையே விவாதப்பொருளாக இருந்தது.
TNM
The News Minute என்று அனைவருக்குமான செய்தித்தளமாக ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் The News Murasoli என்று மாறி விட்டது. Image Credit
கேரளாவில் பிறந்தவரான தன்யா ராஜேந்திரன் The News Minute செய்தி தளத்தைக் குறிப்பாகத் தென் இந்தியா செய்திக்காகத் துவங்கினார்.
நடிகர் விஜயின் சுறா படத்தை விமர்சனம் செய்ததற்காக அவரது ரசிகர்கள் தன்யாவை கடுமையாக ட்விட்டரில் விமர்சனம் செய்ததால், புகார் கொடுக்கும் அளவு சென்றதால், பலரும் அறிந்த நபரானார்.
துவக்கத்தில் அனைத்து செய்திகளையும் கொடுத்து வந்தாலும், காலப்போக்கில் இடது சாரி சிந்தனையுள்ள தளமாக மாறி விட்டது.
அதோடு கேரளா மாநிலம் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டத்தவறினார் அல்லது அவற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டினார்.
தற்போது இச்செய்தி நிறுவனத்தில், திமுகவினரால் அறிவாலயத்தில் அடி வாங்கிய ஷபீர் அகமதுவும் செய்தியாளராக இணைந்துள்ளார்.
திமுக ஆதரவு செய்திகளையும், பாஜக எதிர்ப்பு செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவார்கள். நடுநிலை என்பதைக்காட்ட அவ்வப்போது இருபக்க நிலவரத்தையும் குறிப்பிடுவார்கள்.
எதை, எப்படி வெளியிட்டாலும் அவர்கள் யார்? யாருடைய ஆதரவாளர்கள் / எதிர்ப்பாளர்கள்? என்று அனைவருக்கும் தெரியும்.
அண்ணாமலை
அண்ணாமலையை எப்படிக் கேள்வி கேட்டாலும் சரியான பதிலை அல்லது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை அளிப்பதால் இவரது பேட்டிக்கு ரசிகர்கள் அதிகம்.
அதாவது, வழக்கமான அரசியல்வாதி போல TEMPLETE பதில்களை அளிக்க மாட்டார். ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்‘ என்ற அரதப் பழசான வசனம் போல 🙂 .
தமிழக அரசியல்வாதிகள் செய்தியாளர்களிடம் எப்படி பேசுகிறார்கள், என்ன மாதிரியான பதில்கள் வரும் என்று பொதுமக்களுக்குத் தெரியும்.
ஆனால், இம்முறையை அண்ணாமலை மாற்றி, இவரது செய்தி தொடர்பாளர் நிகழ்ச்சியைப் பார்த்தால், புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்.
இவரைக் குறைத்து மதிப்பிட்டு, இவரைக் கோமாளியாக்கி விடலாம் என்று நினைத்த ஊடகவியலாளர்கள் அசிங்கப்பட்டு நின்றதை தமிழகம் கண்டது.
எனவே, எப்போதுமே அண்ணாமலை நேர்முகத்துக்குப் பார்வையாளர்கள் அதிகம்.
தன்யா ராஜேந்திரன்
கர்நாடக தேர்தல் அரசியலில் முக்கியப்புள்ளியாக இருக்கும் அண்ணாமலையைப் பேட்டி எடுத்து அவரைத் திணறடிக்க வேண்டும் என்று நேர்முகம் செய்தார்.
தன்யா ஏற்கனவே அண்ணாமலையை கார்னர் செய்யச் சிறப்பாக முன் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தது தெளிவாகத் தெரிந்தது.
அதாவது அண்ணாமலை இந்தப் பதிலைக் கூறினால், இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும், பதிலே சொல்ல முடியாத கேள்வியைக் கேட்க வேண்டும் என்று தயாரித்து இருந்தார்.
அதே போலக் கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டன. உண்மையில் எனக்கும் ஓரிரு கேள்விகள் (சந்தேகங்கள்) இவற்றில் இருந்தன.
அனைத்துக்கும் அண்ணாமலை சளைக்காமல் பதில் கூறினார். சிலவற்றுக்குத் திருப்தியான பதில் இல்லையென்றாலும் CONVINCING ஆன பதிலைக் கொடுத்தார்.
ஒரு சில விவரங்களில் தவறுகள் இருந்தன. வழக்கமாக இதைச் செய்ய மாட்டார் ஆனால், இந்தமுறை சில NUMBERS ல் தவறுகள் இருந்தன.
தன்யாவின் சில கேள்விகளுக்கு எடுத்துக்காட்டுக் கூறுங்கள் என்று கேட்டு, அதற்குத் தன்யா தமிழ்நாட்டைக் குறிப்பிட்டதால், அதை வைத்தே அவரை மடக்கினார்.
இதனால், சில பதில்களுக்கு அண்ணாமலையைக் கார்னர் செய்ய முடியாததால், அடுத்தக் கேள்விக்குச் சென்று விட்டார்.
விமர்சனங்கள்
இந்நேர்முகம் வந்ததும் இடது சாரிகள் பலரும் அண்ணாமலையைத் தன்யா திணறடித்து விட்டார் என்று கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள்.
அதே போல அண்ணாமலை சரியான பதிலடி கொடுத்தார் என்று வலது சாரிகள் கூறிக்கொண்டு இருந்தார்கள்.
வலது சாரி ஆதரவளானாக இருந்தாலும், இருவருமே தங்கள் பங்கைச் சரியாகச் செய்தார்கள் என்பதே என் தனிப்பட்ட கருத்து.
தனிப்பட்ட ஈகோவை திருப்திப்படுத்த அவரவர் ஆதரவாளர்கள் மறுக்கலாம் ஆனால், இருவருமே சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்று தான் கூற முடியும்.
ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.
அண்ணாமலை ஏன் ஒத்துக்கொண்டார்?
இந்த நேர்முகத்துக்கு அண்ணாமலை ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டு அண்ணாமலை ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து இருந்தார்கள்.
அண்ணாமலை ஆதரவாளனாக இருப்பவர்கள், அவர் எதனால் ஒப்புக்கொண்டார் என்பதை உணரவில்லையென்பது வியப்பளிக்கிறது.
வலது சாரி எண்ணங்களுக்கு எதிரான ஊடகம் TNM. இங்கே பார்ப்பவர்கள், படிப்பவர்கள் பெரும்பாலும் இடது சாரி ஆதரவாளர்களே இருப்பார்கள்.
இவர்களிடம் தங்கள் கருத்துகளை முன் வைக்கும் போது மாற்றுக்கருத்துடைய சிலர் அண்ணாமலையை, பாஜகவின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு.
ஆதரவாளர்களிடமே தொடர்ந்து பேசுவதால் என்ன பயன்? மாற்று கருத்துள்ளவர்களின் மனதை மாற்றுவது தான் முக்கியம்.
இதையேன் ஆதரவாளர்கள் உணரவில்லை?
அண்ணாமலையை ஆதரிப்பவர்களிடம் தொடர்ந்து பேசுவதால் மட்டுமே என்ன பயன்? ஆதரவு உறுதிப்படும் ஆனால், என்ன மாற்றம் நடக்கும்?
கிரி! நீங்க சூப்பரா எழுதறீங்க! என்று கூறிக்கொண்டு இருந்தால், எனக்கு என்ன பயன்?! விமர்சனங்களை முன் வைக்கும் போது தான் தவறுகளைத் திருத்த முடியும்.
விமர்சனங்களை முன் வைத்த பலரால், என் ஏராளமான தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
அதே போல அண்ணாமலைக்கும் இனி எதை, எப்படி, எங்கே கூற வேண்டும் என்ற கூடுதல் அனுபவம் இந்த நேர்முகம் மூலம் கிடைத்து இருக்கும். மேலும் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புரிந்து இருக்கும்.
இது எங்கே நடக்கும்? இது போல எதிர்முகாம் நேர்முகத்தில் தான் நடக்கும். இங்கே தான் பக்குவப்படுத்திக்கொள்ள முடியும்.
தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் 18, நியூஸ் 7 போன்ற ஊடகங்கள் கலைஞர் டிவி, சன் டிவி க்குப் போட்டியாகச் செயல்படுகின்றன. தொடர்ந்து அண்ணாமலையை இழிவுபடுத்துகின்றன, பொய் செய்திகளைப் பகிர்கின்றன.
இதற்காக இத்தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கக் கூடாது என்றால், எப்படி மாற்றுக்கருத்துள்ள வெகுஜன மக்களைச் சென்றடைவது.
சில நேரங்களில் மனது சொல்வதைக் கேட்பதை விட, அறிவு சொல்வதைத் தான் கேட்க வேண்டும்.
எனவே, இம்முடிவை வெகுவாகப் பாராட்டுகிறேன். அண்ணாமலை, எதிர்முகாமில் மேலும் பல நேர்முகம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்.
முடிந்தால் கேட்டுப்பாருங்கள்?
இறுதியாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
அண்ணாமலையைக் கேட்டது போல, ஸ்டாலின், உதயநிதியிடம் தன்யா கேட்க முடிந்தால் அவரைத் தைரியமான பத்திரிகையாளர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.
அவர்களிடம் சிரித்துக்கொண்டு, சாப்பிட என்ன பிடிக்கும்? என்ன பாடல் பிடிக்கும்? என்ன சட்னி பிடிக்கும்? சிறு வயதில் என்ன குறும்பு செய்தீர்கள்? என்ற சப்பை கேள்விகளைக் கேட்பதால் என்ன பயன்?
அண்ணாமலை எதிர்கொள்ளும் 5% கேள்விகளை இவர்கள் எதிர்கொண்டால், அதன் பிறகு நேர்முகம் கொடுப்பதையே நிறுத்தி விடுவார்கள்.
இது தான் அண்ணாமலைக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்யாசம்.
கிரி.. அரசியல்வாதிகளின் நேர்காணல்களை நான் அதிகம் பார்ப்பவன் அல்ல. காரணம் பெரும்பாலும் முன்பே தயாரித்த விடைகளுக்கு கேள்விகள் கேட்பதில் எந்த சுவாரசியமும் இல்லை.. சமீபமாக நீங்கள் அண்ணாமலையை பற்றி கூறுவதால், இவர் குறித்த நேர்காணல்களை காண ஆர்வம் இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்..
அவர்களிடம் சிரித்துக்கொண்டு, சாப்பிட என்ன பிடிக்கும்? என்ன பாடல் பிடிக்கும்? என்ன சட்னி பிடிக்கும்? சிறு வயதில் என்ன குறும்பு செய்தீர்கள்? என்ற சப்பை கேள்விகளைக் கேட்பதால் என்ன பயன்? இந்த கேள்விகளுக்காவது குறிப்புகளை பார்க்காமல் பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும்..
சமீபத்தில் ஹிட்லரின் சில பழைய வீடியோக்களை பார்த்து மிரண்டு விட்டேன்.. ஒரு மிக பெரிய மக்கள் கூட்டத்தில் ஹிட்லரின் உரை, சிங்கம் கர்ஜிப்பது போல இருக்கிறது.. அவரின் உடல் மொழி எப்படி சொல்வது என்று தெரியவில்லை.. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஹிட்லர் என்றுமே என்னை கவர்ந்த தலைவர் என்பதில் ஐயமில்லை..
@யாசின்
“நீங்கள் அண்ணாமலையை பற்றி கூறுவதால், இவர் குறித்த நேர்காணல்களை காண ஆர்வம் இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்..”
ஏற்கனவே கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறன்.. அவரோட நேர்காணல், செய்தியாளர் சந்திப்பு பாருங்க.. செமையா இருக்கும்.
“இந்த கேள்விகளுக்காவது குறிப்புகளை பார்க்காமல் பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும்..”
இந்தக்கேள்விகளும் ஏற்கனவே அனுப்பப்பட்டு, இது தான் வரும் என்று தெரிந்து கொடுக்கப்படும் பேட்டிகள் 🙂 .
“ஒரு மிக பெரிய மக்கள் கூட்டத்தில் ஹிட்லரின் உரை, சிங்கம் கர்ஜிப்பது போல இருக்கிறது.”
ஆமாம். அவருடைய உடல்மொழி செமையா இருக்கும்.