All Of Us Are Dead | series | அது நம்மை நோக்கித்தான் வருது ஓடுங்க!

2
All of us are dead

கொரியன் படம் என்றால் வன்முறைக்கும், ரத்த களரிக்கும் பிரபலம். All Of Us Are Dead முழுக்கவே அப்படிதான் எனும் போது ரணகளமாக உள்ளது. Image Credit

All Of Us Are Dead

இது ஒரு ஜாம்பி கதை.

பள்ளியில் தன் மகனை மற்ற மாணவர்கள் துன்புறுத்துவதால், அவனைப் பலம் உள்ளவனாக மாற்ற அப்பள்ளியிலேயே அறிவியல் ஆசிரியராக இருக்கும் அவனது அப்பா ஒரு மருந்து தயாரிக்க அது ஏடாகூடமாகி விடுகிறது.

எதிர்பாராமல் மாணவி ஒருவர் பாதிக்கபட, அனைவரும் ஜாம்பியாக மாறுகிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே All Of Us Are Dead.

எப்படி எடுத்தார்கள்?

பாதிக்கப்பட்ட ஒருவர் மற்றொருவரை கடித்தால், அவர் ஜாம்பி ஆகி விடுவார். இது போலக் கூட்டமாக உள்ள இடத்தில் சம்பவம் நடந்தால்..?

ஒரு பள்ளி வளாகத்தில் உள்ளவர்கள் ஒரு சிலரைத்தவிர அனைவருமே ஜாம்பியானால் எப்படி இருக்கும்? ரணகளம் தான் 🙂 .

எப்படி இவ்வளவு மாணவர்களை வைத்து எடுத்தார்கள் என்று வியப்பாக இருந்தது. இதில் நடித்தவர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள்.

ஒவ்வொரு மாணவ மாணவியும் அவர்களுடைய குணத்தில் எப்படி வேறுபடுகிறார்கள், எப்படிச் சுயநலமாக இருக்கிறார்கள், மற்றவர்களுக்கு எப்படி உதவுகிறார்கள் என்று உளவியலையும் கூறுகிறார்கள்.

இதில் வில்லனாக வரும் மாணவன் நடிப்புச் சிறப்பு. எப்படா இவன் சாவான் என்று நினைக்க வைத்து விடுகிறான் 🙂 .

இவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் மட்டும் வேறு மாதிரியான விளைவுகள் ஆவது மற்றவர்களுக்குச் சிக்கலாகி விடும்.

எனவே இவனைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும்.

இருப்பதிலேயே கடினமானது நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் ஜாம்பியாகும் போது அவர்களையும் நாமே கொல்ல வேண்டிய நெருக்கடி தான்.

ஒவ்வொருவராகக் கடித்து நகரத்துக்குள்ளும் பரவிக் கட்டுக்கடங்காமல் போகும் போது அரசுக்கு நெருக்கடி அதிகரித்து விடும்.

இப்பிரச்சனையில் மாட்டும் அரசியல்வாதிகள் அதை எப்படி நம்ம ஊர் அரசியல்வாதிகள் போலத் தங்கள் அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கூறியுள்ளார்கள்.

பொறுப்புக்கு வரும் இராணுவ அதிகாரி உணர்ச்சிக்கு வேலை கொடுக்காமல் அறிவுக்கு வேலை கொடுத்து அதனால் ஏற்படும் மன உளைச்சல்களை இயல்பாகக் கூறியுள்ளார்கள்.

ஜாம்பிகள் எதற்கும் கவனம் திரும்ப மாட்டார்கள் ஆனால், ஒன்றைத்தவிர. அது தான் கதையின் முக்கியத்திருப்பம்.

இறுதியில் சில காட்சிகள் தேவையற்று நீட்டிக்கப்பட்டுள்ளது சுவாரசியத்தை, பரபரப்பை குறைக்கிறது. ஒரு எபிசோடை குறைத்து இருந்தால், இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.

பல படங்களில் நமக்குத் தோன்றுவது போல, “ஏங்க இதெல்லாம் நம்புறமாதிரியாங்க இருக்கு” என்று இதிலும் தோன்றுகிறது 🙂 .

நம்பலைனா ஜாம்பி படம் பார்க்க முடியாது 😀 .

இரண்டாம் பாகத்துக்கு ட்விஸ்ட் கொடுத்து விட்டார்கள்.

யார் பார்க்கலாம்?

ஜாம்பி படம் என்றால் எப்படி இருக்கும் என்று புரிந்தவர்கள் ஏற்புடையதாக இருந்தால் பார்க்கலாம். மற்றவர்கள் விலகி இருப்பதே நலம்.

ஜாம்பி படங்களில் ஆர்வமில்லை ஆனால், கொரியன் என்பதற்காக மட்டுமே இதைப் பார்த்தேன்.

Squid Game போல இதுவும் மிகப்பெரிய அளவில் அனைவரையும் கவர்ந்துள்ளது. உலகளவில் அதிகம் பார்த்தவர்கள் பட்டியலில் இந்தச் சீரிஸும் இணைந்துள்ளது.

ஜாம்பி படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உலகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் ஒளிப்பதிவு, பின்னணி இசை முன்னோட்டத்திலேயே ரொம்பப் பிடித்து விட்டது. எனவே, இதற்காகவே பார்த்தேன்.

NETFLIX ல் காணலாம்.

Genre Coming-of-age Horror Zombie apocalypse
Created by Chun Sung-il, Lee Jae-kyoo, Kim Nam-su
Based on Now at Our School by Joo Dong-geun
Written by Chun Sung-il
Directed by Lee Jae-kyoo, Kim Nam-su
Starring Park Ji-hu, Yoon Chan-young, Cho Yi-hyun Lomon
Composer Mowg
Country of origin South Korea
Original language Korean
No. of seasons 1
No. of episodes 12
Cinematography Park Se-seung
Editor Shin Min-kyung
Camera setup Multi-camera
Running time 53–72 minutes
Distributor Netflix
Original network Netflix
Picture format 4K (Ultra HD)
Audio format Dolby Digital
Original release January 28, 2022

தொடர்புடைய விமர்சனம்

Squid Game | Series | பணமா? உயிரா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. ஜாம்பி படம் என்றால் எப்படி இருக்கும் என்று புரிந்தவர்கள் ஏற்புடையதாக இருந்தால் பார்க்கலாம். மற்றவர்கள் விலகி இருப்பதே நலம்.ஜாம்பி படங்களில் ஆர்வமில்லை ஆனால், கொரியன் என்பதற்காக மட்டுமே இதைப் பார்த்தேன்.
    ========================================================

    நான் இது போன்ற படங்களை பார்த்ததில்லை.. ஆர்வம் குறைவுதான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. கிரி நான் உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்த்துஉள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!