Uncle [2018 – மலையாளம்]

6
Uncle Movie poster

லையாளத்தில் பெரிய நடிகர்கள் கூடச் சாதாரணக் கதையில் நடிப்பது வழக்கமானது. அவற்றுள் ஒரு படம் தான் Uncle. Image Credit

Uncle

ஊட்டியில் படிக்கும் கல்லூரிப் பெண் கார்த்திகா. கல்லூரியில் மாணவர்கள் வன்முறையால் திடீர் விடுமுறை விடப்படுகிறது.

இதனால் சொந்த ஊர் கோழிக்கோடு செல்ல முயற்சிக்கும் போது கலவரம் காரணமாகப் பேருந்து கிடைக்காது.

எப்படி ஊருக்குச் செல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது, கார்த்திகா அப்பாவின் நண்பரான மம்முட்டி, தான் கோழிக்கோடு செல்வதாகக் கூறி காரில் அழைத்துச் செல்கிறார்.

மம்முட்டி தொழிலதிபர், திருமணமாகாதவர், PLAYBOY போல இருப்பவர். இவருடன் கார்த்திகா பிரச்சனை இல்லாமல் ஊர் போய்ச் சேர்ந்தாரா என்பது தான் கதை.

மிகச் சாதாரணமான கதை, இது போலக் கதையில் மம்முட்டி நடிக்கிறார் என்பதே வியப்பாக உள்ளது. வேறு ஒருவரும் நடித்து இருக்கலாம் ஆனால், படம் முக்கியத்துவம் பெற்று இருக்காது.

மம்முட்டி மனுசன் அப்படியே இருக்காரு! இவருக்கு வயசே ஆகாது போல!! 😮 .

மம்முட்டி நல்லவரா? கெட்டவரா? அந்தப்பெண்ணை ஏதாவது செய்து விடுவாரா? என்ன விபரீதம் நடக்கும்? என்று படம் முழுக்கத் திகில் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் பயணம் மசினகுடி உட்பட இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் வழியாகச் செல்வதால், படம் பார்க்கும் நமக்குச் சுவாரசியமான பயணமாகவுமுள்ளது.

Read மசினகுடி பயணம் [2013]

Road Movie” ரசிப்பவர்களுக்கு இப்படம் மிகப் பிடிக்கும்.

தமிழ் கதாப்பாத்திரங்கள்

மலையாளப் படங்களில் தமிழ் கதாப்பாத்திரங்கள் வருவது இயல்பு, ஒருத்தராவது இருப்பார். படம் ஆரம்பிப்பதே ஊட்டியில் தான், அதோடு பல தமிழ் பேசும் கதாப்பாத்திரங்களும் உண்டு.

மம்முட்டி நண்பர்கள் இவருக்கு ஊட்டியில் எந்தத் தொழில் சம்பந்தப்பட்ட வேலையும் இல்லை என்று கூறுவார்கள்.

அப்படி இருக்கையில் மம்முட்டி எப்படி, எதற்கு ஊட்டி வந்தார்? என்பது பற்றிய விளக்கம் படத்தில் இல்லை. இது தான் படத்தின் அடிப்படை.

கார்த்திகாக்கு நடிக்க வாய்ப்பில்லை, இக்கதாபாத்திரத்தில் எவரும் ஒரு பயணியாக நடிக்கலாம்.

சிறு சிறு காட்சிகள் மூலம் பரபரப்பை எதிர்பார்ப்பைக் கூட்ட வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி.. மம்முட்டி நல்லவர் தான் போல என்று நினைத்தால், அடுத்தக் காட்சியில் நமக்குச் சந்தேகம் வருவது போலக் காட்சி 🙂 .

படம் ஒரு மாதிரி சென்று, இப்படி இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பில் இருந்தால், இறுதியில் வேறு மாதிரி சென்று நம்மை அதிர்ச்சியடைய வைக்கும்.

இந்தத் திருப்பத்தை எவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இதில் கார்த்திகா அம்மா பேசும் பேச்சு கலக்கல். கலக்கல் என்பதை விட.. சரவெடி என்பது தான் பொருத்தம். பட்டையைக் கிளப்பிட்டாங்க.

இவங்க கிட்ட இப்படியொரு அதிரடியை எவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இவரோட தைரியம் ரொம்பப் பிடித்தது.

இதை த்ரில்லர் படம் என்று கூற முடியாது, த்ரில்லர் படம் மாதிரி.

சலிப்படைய வைக்காமல் சின்னச் சின்னப் பரபரப்புகளுடன் நம்மைப் படத்தோடு பயணிக்க வைப்பது இப்படத்தின் வெற்றி.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

6 COMMENTS

  1. நேற்று இரவு 11 மணிக்கு லக்ஸ்மி இப்போது காதல் கசக்குதய்யா படம் பார்த்தேன் trailer பார்க்கமல் ௦% எதிர்பார்ப்பில்லாமல் பார்த்ததால் படம் மிக நன்றாக இருந்தது.
    இப்போது என்னிடம் பார்ப்பதற்காக இருக்கும் படங்கள்
    Pyaar Prema Kaadhal , The One – Jue shi gao shou (original title) (2017), In the Name of the King (2007)
    the nun உங்க நாட்டில் தமிழில் வெளியாகியுள்ளதா? (எங்க நாட்டுல தமிழில் போடுவதற்கு அனுமதி இல்லை )

  2. கிரி, இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை.. என்னுடைய விருப்பமான நடிகர் மம்முட்டி.. ஆனால் மலையாள படங்களை பார்க்க ஆர்வம் இருந்தாலும் தற்போதைய பணி சூழலினால் நினைத்த நிறைய காரியங்களை செய்ய முடிவதில்லை.. நேரம் இருக்கும் போது பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. மெளனகுரு=akira (hindimovie) தமிழில் ஆண் hindi ல் பெண் அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு hostel காட்சியில் தலைவர் புகைப்படம் இருப்பது அருமை.
    நடிகையின் நடிப்பு செம.

    கிரி தோழா (பரிந்துரை) கால்கட்டு இணையத்தள நாடகம் (web series) நகைச்சுவையுடன் நன்றாக செல்கிறது பாருங்கள்.
    அட்லீயின் துணை இயக்குனர் இயக்கிய காலப்பயணம் குறும்படம் youtube ல் வெளியாகியுள்ளது,

  4. hero மௌனகுரு=akira (Hindi Movie) heroin akira படத்தில் நடிகையின் நடிப்பு அருமையாக இருந்தது.
    கால் கட்டு (இணையத்தள {நகைச்சுவை கலந்த] நாடகம்) அருமையாக உள்ளது. Link https://www.youtube.com/channel/UCEAPAq7XXzGxOFmurLV4www
    அட்லியின் துணை இயக்குனரின் காலப்பயணம் குறும்திரைப்படம் அருமையாக இருந்தது. link https://www.youtube.com/watch?v=3izvBtcr3V0

  5. கிரி, இன்று இந்த படம் பார்த்தோம். எங்களுக்கு ரொம்ப பிடித்தது. மம்முட்டி பட்டையைக் கிளப்பி விட்டார். பரிந்துரைக்கு மிக்க நன்றி.

  6. நான் பரிந்துரைக்கும் படங்களை நீங்கள் பார்த்து வருவது மட்டுமல்லாமல், அது குறித்து கருத்துகளைக் கூறுவது மிக்க மகிழ்ச்சி.

    குறைந்த பட்சம் யாரோ ஒருத்தராவது நாம கஷ்டப்பட்டு எழுதுவதை படித்து முயற்சி செய்து பார்க்கிறாங்க என்று தெரிய வரும் போது மகிழ்ச்சி அளிக்கிறது 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!