MGM போன்ற ஒரு விளையாட்டு இடத்தில் இருந்து Halle Berry யின் மகனை இருவர் கடத்தி விட, அவர்களைக் காரில் துரத்திச் செல்கிறார். மகனை மீட்டாரா இல்லையா? என்பதே Kidnap படத்தின் கதை. Image Credit
Kidnap
அங்கு நிலவும் சூழ்நிலையைப் பார்க்கும் போதே ஏதோ நடக்கப்போகிறது என்று புரிந்து விடுகிறது. படத்தின் பெயரும் அதை உறுதிப்படுத்தி விடுவதால், மனதளவில் தயாராகி விடுகிறோம்.
கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வது என்றாலே பக்கு பக்குனு இருக்கும். மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவு கூட வாழ்நாள் நிம்மதியைத் தொலைத்து விடும்.
Read : “6” [2013] | குழந்தைக் கடத்தல்
தன் மகன் கடத்தப்படுவதைக் காணும் Halle Berry அவர்களைப் போக்குவரத்தில் காரில் துரத்துவது பரபரப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘என் பையனை விடவில்லையென்றால், நானும் உன்னை விட மாட்டேன்‘ என்று வெறித்தனமாகத் துரத்துகிறார்.
எப்படிக் காரை வழி மாற்றிச் செலுத்தினாலும் விடாமல் துரத்துகிறார். இந்நிலையில் எதிர்பார்த்தது போலக் காரில் எரிபொருள் தீர்ந்து போகச் சிக்கலாகிறது.
தெளிவான திரைக்கதை
சில திரைப்படங்களின் கதை பல கிளைக்கதைகளாகப் பிரியும், சில வெவ்வேறு கோணத்தில் கூறப்படும். இப்படம் ஒரே நேர்கோட்டில் உள்ளது.
அதாவது Halle Berry துரத்துகிறார், பையன் கிடைத்தானா இல்லையா? அவ்வளவு தான். கதையில் எந்தக் குழப்பமும், சந்தேகமும் இல்லை.
புகார் கொடுக்கச் செல்லும் காவல்நிலையத்தில் ஏற்கனவே பல குழந்தைகள் காணாமல் போன தகவல்களைக் காணும் Halle Berry க்கு இன்னும் கலக்கமாகிறது.
என்ன விபத்து நடந்தாலும், Halle Berry மட்டும் எப்படியாவது தப்பிப்பது, காரைத் தவறவிட்டாலும் எப்படியாவது தொடர்வது என்ற வழக்கமான ஹாலிவுட் லாஜிக் மீறல்கள் இருப்பினும், சுவாரசியத்தில் குறையாகத் தோன்றவில்லை.
Halle Berry
தன் பையனை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற பரிதவிப்பு, ஒரு அம்மாவாக ஏற்படும் பதட்டம் ஆகியவற்றை Halle Berry மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
Halle Berry இறுதியில் ‘You took the wrong kid‘ என்று கூறி தெறிக்க விடுகிறார்.
ஒரு தாயாகப் படத்தைப் பார்ப்பவர்கள் தானே தன் பையனைக் காப்பாற்ற துரத்துவதாக உணர முடியும்.
பரபரப்பான த்ரில்லர் படங்களைப் பார்க்க விருப்பமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத படம் Kidnap. படத்தின் தயாரிப்பாளர்களில் Halle Berry யம் ஒருவர்.
அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். Amazon Prime ல் உள்ளது. சில நாடுகளில் NETFLIX லும் உள்ளது.
பையனைக் காப்பாற்ற அம்மாவின் வெறி துரத்தல் Kidnap என்றால், பெண்ணைக் காப்பாற்ற அப்பாவின் காட்டுத்தனமான துரத்தல் Taken.
மரண மாஸ் படம். மின்சாரத்தைத் தொட்டது போல இருக்கும் 🙂 .
Read: Taken (2008) தந்தையின் அதிரடி துரத்தல்
Directed by Luis Prieto
Screenplay by Knate Lee
Starring Halle Berry, Sage Correa, Chris McGinn, Lew Temple
Music by Federico Jusid
Cinematography Flavio Martinez Labiano
Edited by Avi Youabian
Release date July 31, 2017 (ArcLight Hollywood), August 4, 2017 (United States)
Running time 95 minutes
Country United States
Language English
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி , இது போல படங்களை காணும் போது உள்ளுக்குள் ஒருவித பயமும் , பதட்டமும் நிச்சயம் ஏற்படும் .. எனக்கும் பிடிக்கும் .. நேரம் இருக்கும் போது காண முயற்சிக்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
கண்டிப்பா பாருங்க யாசின்