மும்பை தாராவியில் இருக்கும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் எப்படி ஒரு Rap பாடகராகிறான் என்பதே Gully Boy கதை.
Gully Boy
நான் என்னமோ ஒரு வரியில் கதையைக் கூறி விட்டேன் ஆனால், ஒவ்வொரு காட்சியும் கவிதை மாதிரி உள்ளது. எப்படி இது போல எடுத்தார்கள் என்று வியப்பாக இருந்தது.
நாயகன் ரன்வீர் சிங் எனக்கு அடையாளமே தெரியவில்லை.
யாரோ புதுப் பையன் போல என்று நினைத்து அடுத்த நாள் Wiki ல பார்த்த பிறகு தான் ரன்வீர் என்றே தெரிய வந்தது. பெயர் போடும் போதும் கவனிக்கவில்லை.
ஒவ்வொரு ரன்வீர் காட்சியையும் ஆமாம், ஒவ்வொரு காட்சியும் ரசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முகபாவனையும் அட்டகாசம்.
புதியதாகக் கற்றுக்கொள்ளும் போதும், அலியாபட் கொடுக்கும் முத்தத்தில் அதிர்வதும், தன்னுடைய பாடல் முதல் முறையாகப் பாடப்படும் போதும், தன் பெயர் Gully Boy யாக மாறும் போதும், இன்னும் பல காட்சிகளில் அட அட… கலக்கல் 🙂 .
ரன்வீர் எப்படி இது போல நடிக்க முடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. விளையாட்டுக்குக் கூறவில்லை உண்மையாகவே ரொம்ப ரொம்ப ரசித்தேன்.
இந்த அலியாபட் இருக்கிறாரே… செம்ம. அவ்வளவு ஒரு இயல்பான நடிப்பு.
காதலை வெளிப்படுத்தும் போதும், தன்னுடைய அன்பை வெறித்தனமாகக் காட்டும் போதும், தனக்கு மட்டும் தான் ரன்வீர் என்று Possessive ஆக இருக்கும் போதும் கவர்கிறார்.
ரொம்ப சுவாரசியமான கதாப்பாத்திரம் அதோட கொஞ்சம்! அடாவடியான ஆள் கூட 🙂 .
காலா
இப்படத்தைக் காலா படத்தோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. இரண்டுமே தாராவி மக்களின் வாழ்க்கையைக் குறிப்பிடுவதால்.
ஆனால், இரண்டுமே வெவ்வேறு களம் என்பதால், தாராவி ஒன்றை தவிர ஒப்பிட ஒன்றுமில்லை.
படத்தில் மும்பையின் Rap இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். காலாவில் வந்தவர்களும் உள்ளனர்.
இப்படத்தில் எனக்கு மிகப்பிடித்தது, காட்சிகள் அனைத்தும் அப்படியே அதே இடத்தில் அரங்கம் அமைக்காமல் எடுக்கப்பட்டது தான்.
தமிழ் “மெட்ராஸ்” படத்தை நினைவுபடுத்தியது. ஒளிப்பதிவாளருக்கே சிறப்பு செல்கிறது.
கதாப்பாத்திரங்களும் ஒப்பனை இல்லாமல் அப்படியே உள்ளனர், அலியாபட் தவிர்த்து.
Rap இசை
படம் Rap இசையை வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும், இதே வேலையாகப் படம் முழுக்க பாடல் வந்து கொண்டு இருக்கவில்லை, வழக்கமான அளவிலேயே உள்ளது.
இசையை ரசிப்பவர்கள் படத்தை கூடுதலாக ரசிக்க முடியும்.
ரன்வீர் நண்பனாக வரும் Siddhant Chaturvedi மிகச்சிறப்பான நடிப்பு. இக்கதாப்பாத்திரத்துக்கு என்றே இருப்பவர் போலத் தூள் கிளப்பி இருக்கிறார்.
ரன்வீரை உற்சாகப்படுத்தி ஒவ்வொரு படியாக மேலே கொண்டு வர உதவும் போது அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
தாராவி மக்கள் கதை என்பதால், அங்கே உள்ள பிரச்சனைகளையும் உறுத்தாமல் தொட்டு செல்கிறார்கள்.
இயக்குநர் Zoya Akhtar ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு ரசித்து, அனுபவித்து எடுத்து இருக்கிறார். பெண் இயக்குனர்கள் கலக்குவது மகிழ்ச்சியளிக்கிறது.
படத்தில் குறையாக எதுவுமே எனக்குத் தோன்றவில்லை. ரன்வீர் கல்லூரி பையன் என்பது மட்டுமே முரணாக இருந்தது ஆனால், பழகி விட்டது.
இப்படம் இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தாலும், தாராவி வாழ்க்கையையும் கொண்டு வந்துள்ளது.
எனவே, இசை சம்மபந்தப்பட்டது சிலருக்கு ஆர்வமில்லை என்றாலும், மற்ற பகுதிகளை ரசிக்க முடியும்.
இறுதியில் வரும் பாடலில் கண் கலங்கிட்டேன். தாறுமாறு..!
Rap பாடல் சண்டை
Rap பாடல் பாடும் போது ஒருவருக்கொருவர் பாடலில் சண்டை போடுகிறார்கள். அது ஏன் என்பது புரியவில்லை.
சண்டை போட்டுத் தான் திறமையை வெளிப்படுத்த வேண்டுமா? இது குறித்து தெரிந்தவர்கள் இருந்தால் விளக்கவும்.
இறுதியில் ரன்வீர் தனது அப்பாவிடம் தன் விருப்பத்தை விளக்கும் காட்சி அசத்தல்.
இதில் வரும் Rap இசையை என்னுடைய Speaker ல் கேட்கும் போது தாறுமாறாக இருக்கிறது.
இப்பாடல்களைக் கேட்டு இது தொடர்புடைய சில ஆல்பம் பாடல்களைக் கேட்டேன், அசத்தல். என்னுடைய தேடல் Rap தான் என்று தற்போது தான் புரிந்தது.
இது குறித்துப் பின்னர் எழுதப்போகும் கட்டுரையில் விரிவாகக் கூறுகிறேன். பேச வேண்டியது நிறைய இருக்கு 🙂 .
படத்தின் திரைக்கதை அட்டகாசம். இப்படம் உங்களைக் கவர்ந்தால் மகிழ்ச்சி!
இப்படம் அமேசானில் உள்ளது. இப்படம் 8 Mile (2002) படத்தை வைத்து உருவாக்கப்பட்டதாகச் சர்ச்சை உள்ளது. A copycat Indian version என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
Directed by Zoya Akhtar
Produced by Ritesh Sidhwani, Zoya Akhtar, Farhan Akhtar
Written by Vijay Maurya (dialogue)
Screenplay by Zoya Akhtar, Reema Kagti
Starring Ranveer Singh, Alia Bhatt
Music Score: Karsh Kale
Cinematography Jay Oza
Edited by Nitin Baid
Production company Excel Entertainment, Tiger Baby Productions
Distributed by AA Films, Zee Studios International, Cinestaan Film Company
Release date 9 February 2019 (Berlin), 14 February 2019 (India)
Running time 153 minutes
Country India
Language Hindi
கொசுறு
இப்படம் பார்த்ததில் இருந்து, இதில் வரும் பாடல்களையும் இது தொடர்பான Rap பாடல்களையும் அதிர விட்டுக்கொண்டு இருக்கிறேன். செமையா இருக்கு.
வீட்டுல எல்லோரும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு போய்ட்டாங்க.
மனைவியிடம், மேல் வீட்டில் உள்ளவர் பேசும் போது “உங்க வீட்டுக்காரர் நீங்கெல்லாம் போனதும் சத்தமா பாட்டுக் கேட்டுட்டு ஜாலியா இருக்கார்” ன்னு சொல்லி இருக்காங்க 😀 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பாத்துட்டேன் ஜி… கடைசி 15 mins தான் படம்…. கடைசி பாடல் எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுடிச்சி…Ranveer & Alia – ரொம்ப சிறப்பு…Cinematography அசத்தல்…
https://www.youtube.com/watch?v=LY_rMXXuJp8