இலவசத்தால் நாம் இழந்தவை!

19
இலவசத்தால் நாம் இழந்தவை!

ந்த முறை தேர்தல் தேதி அறிவித்தவுடனே எனக்கு வந்த முதல் பயம் என்னென்னவெல்லாம் இலவசத்தை அறிவிக்கப்போகிறார்களோ என்பது தான்.

எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதே எண்ணம் தோன்றி இருக்கும்.

இலவசத்தால் நாம் இழந்தவை!

கலைஞர் இலவச தொலைக்காட்சியில் ஆரம்பித்து வைத்தது தொடர்ந்து அபாயகரமாகச் சென்று கொண்டு இருக்கிறது.

ஒரு மாநிலத்தையே சீரழிக்கும் வகையில் திமுக அதிமுக கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன.

இலவசத்தை முதலில் ஆரம்பித்தது அதிமுக ஆனால், தேர்தலுக்காக இல்லாமல் இடையில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது.

இச்சமயத்தில் அதிமுக ஆட்சி சிறப்பு இல்லையென்றாலும் மோசமில்லை.

அடுத்தத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் வாய்ப்பே இருந்த நிலையில் திமுக இலவச தொலைக்காட்சியை அறிவித்துக் கூட்டணி கட்சிகள் மூலம் வெற்றிப் பெற்றது.

இதைத் தான் ஜெயா தொலைக்காட்சியும் அதிமுகவும் ஐந்து ஆண்டுகளும் மைனாரிட்டி திமுக அரசு என்றே கூறி வந்தது.

அடுத்தத் தேர்தலில் கடந்த முறை போல நடந்து விடக்கூடாது என்று ஏகப்பட்ட இலவசங்களை அள்ளிக் கொடுத்தது அதோடு அப்போது இருந்த மக்கள் எதிர்ப்பு காரணமாகவும் திமுக தோல்வி அடைந்தது.

E-Waste என்ற மின்னணு கழிவு

இலவசத்தை அறிவித்த அதிமுக அதை நிறைவேற்ற பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்தது. இதனால் எந்த வித வளர்ச்சி திட்டங்களும் செய்யப்படாமல் கடன் மேல் கடன் என்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதை அனைத்தையும் விட இலவச பொருட்கள் தரமற்ற பொருட்களாகவும் E-Waste என்ற மின்னணு கழிவுகளாகவும் மாநிலத்தைக் குப்பை மேடாக்கி வருகிறது.

இது மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதோடு அழிக்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து சுற்றுப்புற சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது.

மக்களின் தேவை என்ன?

மக்களுக்கு வேண்டியது அடிப்படை தேவைகளான தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம் / குடிநீர், பாதுகாப்பு, நியாயமான கல்விக் கட்டணம், ஏரி / அணை / குளங்களைத் தூர் வாருதல், பொறுப்பான அரசாங்க சேவைகள் இவையே!

தொலைக்காட்சி, கிரைண்டர், மின் விசிறி, மடிக்கணினி போன்றவை மக்களே வாங்கிக் கொள்ள முடியும்.

இலவச மின்சாரப் பொருட்கள் அதிகரித்துப் போலியான மின்சாரத் தேவையை உருவாக்கி அனைத்து மக்களையும் கடந்த ஏழு வருடங்களாகச் சீரழித்து வருகிறது. மின்சாரப் பற்றாக்குறையால் பல தொழில்கள் அழிந்து, இடம்பெயர்ந்து விட்டன.

வெற்று அறிக்கைகள்

அதிமுக அரசு கடந்து ஐந்து வருடங்களில் உருப்படியான செயலாக எதையும் செய்யவில்லை. எல்லாமே வெற்று அறிக்கைகள் தான், செயலில் ஒன்றுமே இல்லை.

புதிய சாலைகள், பாலங்கள் வரப்போகுது, கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று இது வரை ஐந்து வருடங்களாக எத்தனை அறிவிப்பை நாம் கேட்டு இருப்போம்…! ஒன்றாவது செய்தார்களா..!

சென்னையில் அதிமுக சார்பில் கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரே பாலம் நெல்சன் மாணிக்கம் சாலையில் கட்டப்பட்டது மட்டுமே!

மீதி சென்னையில் கட்டப்பட்ட அனைத்துப் பாலங்களும் திமுக ஆட்சியில் கட்டியது அல்லது அவர்களால் துவங்கப்பட்டது. திறப்பு விழா மட்டும் ஜெ செய்து இவர்கள் கட்டியது போல விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்.

சென்னையின் முக்கியப்பாலங்களான கிண்டி, அண்ணா மேம்பாலம், பாடி, கோயம்பேடு ஆகிய பாலங்கள் திமுக கட்டியதே.

மக்களின் வளர்ச்சிக்காகவும், பயன்பாட்டுக்காகவும் சிறப்பான எந்தத் திட்டங்களையும் அதிமுக கடந்த ஐந்து வருடங்களில் செயல்படுத்தியதில்லை.

அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று அறிக்கையை வேண்டும் என்றால் காட்டலாம்.

மதுரவயல் மேம்பாலம் ஈகோ பிரச்சனை காரணமாகக் கடந்து ஐந்து வருடங்களாக அப்படியே கிடப்பில் உள்ளது அதோடு பல நூறு கோடிகள் முடங்கியுள்ளது.

இலவசப் பொருட்களின் / சேவைகளின் அறிவிப்புகள்

கடந்த முறை செய்த தவறை திமுக இந்த முறையும் செய்யுமே என்று பயந்த நிலையில் இலவசப் பொருட்கள் அறிவிப்பை கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தது.

இதோட மற்ற கட்சிகளும் பொருட்களாக இல்லாமல் வேறு வகையில் சலுகையை அறிவித்து இருந்தன.

எனவே, அதிமுகவும் இதே போல அறிவிக்கும் என்று இருந்தால், ஸ்கூட்டி, செல்போன் நூறு யூனிட் மின்சாரம், மடிகணினி, Wi- Fi, இணையம் இலவசம் என்று அள்ளி விட்டுள்ளது.

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெசின் இல்லாதது பெரிய ஆறுதல்

100 யூனிட் மின்சாரம் எப்படி இலவசமாக அளிக்க முடியும்?!

தமிழக மின்சாரத் துறை ஏற்கனவே படுமோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் எப்படி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்க முடியும்?! நாம் பிச்சை தான் எடுக்க வேண்டும்.

இப்படி இலவசம் இலவசம் என்று அளித்துத் தமிழ்நாட்டைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்து விட்டார்கள் போல.

அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து இருந்தால், எதற்கு இலவசத்தை அளிக்க வேண்டிய நிலை வரப்போகிறது.

மக்களே தாமாகவே வாக்களிக்கப் போகிறார்கள். தவறு செய்துள்ளார்கள் அதனாலே பயம், எனவே தான் இலவச அறிவிப்பு தேவைப் படுகிறது.

“இனி செய்வோம்” என்று கூறுவதை ஏன் கடந்த ஐந்து வருடங்களில் செய்யவில்லை?

ஜெ நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்கிறார். ஆட்சியில் இருந்த கடந்த ஐந்து வருடங்களில் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று மக்கள் யோசித்தாலே போதும்!

மழையால் எவ்வளவு சேதம் ஏற்பட்டது?! இதன் பிறகாவது அணை, ஏரியை தூர் வாரவோ, ஆழப்படுத்தவோ நடவடிக்கை எடுத்தார்களா என்றால்.. இல்லை!

எங்கெங்கு காணினும் “அம்மா அம்மா”

எங்கே பார்த்தாலும் “அம்மா அம்மா” என்று ஜெ படத்தைப் போட்டு நம் மாநிலத்தின் பெருமையையே குலைத்து விட்டார். மற்ற மாநிலத்தார் எல்லாம் கிண்டலடிக்கும் படியாகி விட்டது.

எப்படி அனைத்து இடங்களிலும் ஜெ தன்னுடைய படத்தையும் தன் பெயரில்!! திட்டங்களையும் அறிவிக்க முடிகிறது? கூச்சமாக இருக்காதா?

தமிழகரசு சின்னத்தில் மட்டும் தான் ஜெ படம் வரவில்லை, மற்றபடி அனைத்தும் நடந்து விட்டது.

எதோ ஒன்றிரண்டு என்றால் கூடப் பரவாயில்லை, அறிவிக்கும் ஒவ்வோர் திட்டத்திலும் இதே நிலை. “தமிழக அரசு” என்ற பெயரை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கமே எனக்கு வந்து விட்டது.

தமிழக அரசு என்ற பெயரில் திட்டங்கள் வந்தால் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கும்?!

குறைந்த பட்சம் “தமிழக அரசு திட்டம்” என்று கூறவில்லையென்றாலும் மறைந்த MGR அவர்கள் பெயரிலாவது அறிவித்து இருக்கலாம், கொஞ்சம் மரியாதையாவது இருந்து இருக்கும்.

MGR பெயர் தேர்தல் சமயத்தில் மட்டுமே ஜெ க்கு நினைவு வருகிறது.

அதிமுக என்றால் “நான்” தான் என்று MGR அடையாளத்தையும் அழித்து விட்டார் ஆனால், இன்னும் விழும் சில “இரட்டை இலை” வாக்குக்கள் MGR க்காகத் தான் என்பதை மறந்து.

40% கமிசன்

எந்த அரசாங்க ஒப்பந்த வேலையாக இருந்தாலும் 40% கமிசன் என்ற நிலையுள்ளது. அதிமுகவினர் ஏற்கனவே அனைத்து பொறுப்பிலும் நிலை கொண்டு விட்டார்கள்.

இவர்களே தொடர்ந்தால், இவர்கள் வைப்பதே சட்டம் என்றாகி விடும்.

கடந்த இடைத் தேர்தலில் எழுதிய கட்டுரையில் எழுதியதைத் திரும்ப இந்தத் தேர்தலிலும் நினைவு கூறுகிறேன்.

தொடர்ந்து பத்து வருடம் டேமேஜ் செய்வதற்கும் கேப் விட்டு டேமேஜ் செய்வதற்கும் வித்யாசம் இருக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்க வைத்து விட்டார்கள்!!

இலவசம் வேண்டவே வேண்டாம்

மக்களே! இலவசத்துக்கு ஆசைப்பட்டு வாக்களித்தால் நமக்குத் தர்மடி விழப்போவது உறுதி. தமிழ்நாடு மிக மோசமான மாநிலமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

இலவசத்தால் தமிழக மக்கள் பெற்றதை விட இழந்ததே அதிகம்!

ஏற்கனவே, இலவசத்துக்கு ஆசைப்பட்டு வாக்களித்ததுக்கான பலனைத் தான் தற்போது அனுபவித்து வருகிறோம்.

அரசியல்வாதிகளைக் குறை கூறி பயனில்லை. இலவசத்துக்கு பல்லைக் காட்டிக்கொண்டு வாக்களிக்கும் மக்களே இதற்கு முழுப் பொறுப்பு.

தயவு செய்து ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள். பணம் வாங்கினால் அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

இவ்வளவு கொள்ளை அடிக்குறாணுக அவனுக கிட்ட 1000 வாங்கினால் என்ன தவறு?” என்று நினைப்பது, நம் தவறை நியாயப்படுத்தும்  முயற்சியே ஆகும்..

நமக்குத் தேவை இலவசங்கள் அல்ல, அடிப்படைத் தேவைகளுக்கானத் தீர்வே!

19 COMMENTS

  1. கிரி. நீங்க திமுக அனுதாபி என்று நன்றாக தெரிகிறது.

    அதிமுகவை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் அல்லது ப்ளாக்கில் எழுதினால் தினமும் 300 ரூபாய் தருகிறார்களாமே. அந்த ஸ்கீமில் நீங்களும் இணைந்து விட்டீர்களா?

    அதிமுக ஆட்சி சரியில்லை என்று திமுகவுக்கு ஓட்டு அளித்தால் தமிழகம் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தில் 100 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும். ரவுடிகள் ஆட்சி தான் திமுக ஆட்சியில் நடக்கும். அந்த அவல ஆட்சிக்கு இந்த அதிமுக ஆட்சி எவ்வளவோ மேல்.

    உங்களுக்கு என்ன? ஐடி துறையில் வேலை இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்தால் எந்த தொழிலும் யாரும் செய்ய முடியாது. அனைத்திலும் அவர்களே மிரட்டி ஆதிக்கம் செலுத்துவார்கள். திமுக ஆட்சியில் நடந்த நிலஅபகரிப்பு எல்லாம் மறந்து விட்டதா?

    பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா. 8 மணி நேர மின்வெட்டு. குறுநில மன்னர்கள் போல திமுக மாவட்டச் செயலாளர்கள் போட்ட ஆட்டங்கள் எல்லாம் மறக்க முடியுமா? மீண்டும் அந்த ரவுடியிச ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா?

    5 வருடம் திமுக ஆட்சி செய்தால் திமுக சரியில்லை என்று அதிமுகவை ஆதரிப்பது. அடுத்த 5 ஆண்டு முடிந்த பிறகு அதிமுக சரியில்லை என்று திமுகவை ஆதரிப்பது. முதலில் உங்களை போல் உள்ளவர்களின் ஓட்டு உரிமையை பறிக்க வேண்டும்.

    இலவசத்திற்காக மக்கள் அடிமையாக்கியது திமுக தலைவர் கருணாநிதி தான். யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கலாம் ஆனால் திமுக மட்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. இந்த முறை அதிமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    ஜெயலலிதாவின் அரசியல் பாதையே வேறு. அதை கருணாநிதி தான் மாற்றினார். ஜெயலலிதாவும் ஆட்சி போய்விடுமோ என்று கருணாநிதி அமைத்த பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். அதை அவர் மாற்றி கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்.

    ஆனால் இதற்காக எல்லாம் திமுகவை ஆட்சியில் அமரவைத்தால் நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்ட மாதிரி தான். அந்த தவறை மக்கள் செய்ய மாட்டார்கள். திமுகவிற்கு ஆதரவு தேடுவதை விட்டு விட்டு இப்போதைக்கு யார் ஆட்சி அமைந்தால் நல்லது என்று பாருங்கள்.

    தினமும் கிடைக்கும் 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 5 வருட வாழ்க்கையை திமுகவிடம் அடகு வைக்க வேண்டாம்…..

  2. கிரி இலவசங்கள் இனி ஒழிய போவதில்லை அதிமுக திமுக இரு கட்சிகளை ஒழித்தாலே தமிழ்நாடு முன்னேறும்

  3. திரு மாதவன்,

    //ஓட்டு உரிமையை பறிக்க வேண்டும்.//

    உங்கள் தரம் என்னவென்று நன்கு தெரிகிறது.

    • சர்வாதிகார அம்மாவின் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேறு என்ன வழி!

  4. கிரி, தெளிவான பதிவு. ஆனால் மக்களுக்கு என்று நல்லாட்சி அமையும் என்றே தெரியவில்லை… மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தாலே இலவசத்தை எதிர்பார்க்கும் நிலை கண்டிப்பாக ஏற்படாது.. இனி வரும் காலங்களிலாவது சுயநலமில்லா நல்ல தலைவர்கள் தோன்ற வேண்டும்.

  5. @மாதவன்

    “அதிமுகவை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் அல்லது ப்ளாக்கில் எழுதினால் தினமும் 300 ரூபாய் தருகிறார்களாமே. அந்த ஸ்கீமில் நீங்களும் இணைந்து விட்டீர்களா?”

    இதையே நான் உங்களை கேட்க எவ்வளவு நேரம் ஆகி விடப்போகிறது?!

    மாதவன் முதலில் எப்படி விமர்சனம் செய்ய வேண்டும், மாற்றுக் கருத்தைக் கூற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பின் வந்து எனக்கு புத்திமதி சொல்லுங்கள்.

    @கபாலி இது அனைவருக்கும் தெரிகிறது ஆனால், இப்படியே போய்க் கொண்டு இருக்கிறது.

    @சுரேஷ் & வேகநரி நன்றி

    @யாசின் அது ரொம்பக் கஷ்டம். அரசியல்வாதிகள் பதவிக்கு வர நிறைய முதலீடு செய்கிறார்கள். எனவே அதை எடுக்கவும் அதற்கு மேல் வரைமுறையற்று சம்பாதிக்கவும் தான் நினைக்கிறார்கள்.

    எனவே அடிப்படை அமைப்பே மாறினால் ஒழிய இந்த நிலை மாறாது.

    • கிரி. கேளுங்களேன். நான் உங்களை விமர்சிக்கும் போது நீங்கள் என்னை விமர்சிப்பது தவறில்லை. நான் அதை ஏற்று கொள்கிறேன். உங்களின்செயல்பாடுகள் குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நீங்கள் ஆர்வமாக இருப்பது போல் தான் உள்ளது. யார் ஆட்சி நடத்தினாலும் குறைகள் இருக்கவே செய்யும் என்பது உங்களுக்கு தெரியாதா? இருப்பதில் யார் பரவாயில்லை என்று பார்த்து வாக்களிக்க வேண்டும். இப்போதுள்ள சாய்ஸ் ஜெயலலிதா மட்டுமே. எக்காரணம் கொண்டும் குடும்ப ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் வளரவிட கூடாது. செம்பரம்பாக்கம் ஏறி விஷயம் எதிர்கட்சிகள் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்ய எடுத்த ஆயுதம். மக்கள் சாக வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே செய்தது போல் நீங்கள் சொல்வது படித்தவர்கள் பேசும் பேச்சு அல்ல.

      • இவை அனைத்துக்கும் காரணம் மக்களாகிய நாம் தான். ஏனெனில் இவர்களை தவிர வேறு வாய்பே இல்லாமல் தெரிந்தோ தெரியாமலோ நாமே அமைத்து கொடுத்து விட்டோம். அது இன்று தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து இருக்கிறது நமக்கு.

        இடையில் மாற்றாக வந்தவர்கள் காமெடி பீஸாக மாறியது தமிழகத்தின் விதி.

        ஆனால் இன்று திமுக என்று யோசித்தால் மனதில் பல பயங்களும், அவர்கள் கொடுத்த பல இன்னல்களும் தான் நினைவுக்கு வருகிறது. இதை நினைத்து மக்கள் நமக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று தெரிந்ததால் தான் ஸ்டாலின் நாங்கள் தவறு செய்தோம் என்று ஒப்புக் கொண்டார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமலேயே இவர்கள் செய்த கொடுமைகளை மக்களால் மறக்க முடியவில்லை எனில் மீண்டும் வந்தால் ?……

        அதிமுகவினரும் சளைத்தவர்கள் இல்லை தான். ஆனால் திமுகவினர் செய்த அராஜகங்களால் இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்து விட்டது. ஆகையால் அன்று இருந்த திமுக வெறுப்பு இன்று அதிமுக மேல் இல்லை என்பதும் உண்மை. ஆகையால் அதிமுக வெற்றி பெறுவதே கூட நாமே அறியாமல் நமக்கு நன்மை பயக்கலாம்…… என்ற ஒரு பேராசை……..

        ஆனாலும் அடுத்த வரும் தேர்தலுக்கு முன்பாவது நாம் இரு கழகங்களை தவிர வேறு ஒருவரை உருவாக்க வேண்டும்……
        நாம் தான் அழிந்து விட்டோம் இவர்களால். நம் சந்ததியினரையாவது காப்பாற்றுவோம் இவர்களிடமிருந்து ………

        நமக்கு நாமே…………..

  6. Dear giri,
    AIADMK & DMK ivanga rendu pearum than Mathi Mathi tamilnada rule pannuranga. DMK rule pannuna avanga pannuna corruption na pathu AIADMK iku vote poduranga…aparam AIADMK pannuna corruption na pathudu DMK iku vote poduranga.. so both are same … CM seat iku aasa paduravan athula vulla power than pakkuran.. antha seat Iku vulla responsibility a pakarathu illa…makkalai pichaikaragal aki avargaluku pichai poduvathaiyae ivargal samuga thoondaga ninaikirargal

  7. @மாதவன்

    “நான் உங்களை விமர்சிக்கும் போது நீங்கள் என்னை விமர்சிப்பது தவறில்லை.”

    மாதவன் நீங்கள் செய்வது விமர்சனம் அல்ல தனிபர் தாக்குதல். என்னா.ல் அதையே திரும்ப செய்ய முடியாது.

    “உங்களின்செயல்பாடுகள் குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நீங்கள் ஆர்வமாக இருப்பது போல் தான் உள்ளது. ”

    நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை நான் திமுக அதிமுக க்கு வாக்களிக்கவும் இல்லை ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் விட திமுக ஆட்சி காலத்தில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது (பாலம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்றவை ) என்பது மட்டுமே நான் கூறியது.

    அதிமுக ஆட்சியில் இது போல என்னென்ன தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்று கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.

    “செம்பரம்பாக்கம் ஏறி விஷயம் எதிர்கட்சிகள் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்ய எடுத்த ஆயுதம். மக்கள் சாக வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே செய்தது போல் நீங்கள் சொல்வது ”

    மாதவன் நீங்கள் கட்டுரையை முழுவதும் படித்தீர்களா?

    நான் எங்கே இது போல கூறி இருக்கிறேன். உங்களுடைய அதிமுக கண்ணாடியை கழட்டி விட்டு விமர்சனம் செய்தால் மட்டுமே நீங்கள் சரியாகக் கூற முடியும்.

    உங்கள் விருப்பபடி அதிமுக வெற்றி பெற்று விட்டது. வாழ்த்துகள்.

    BTW நான் திமுக என்று கூறி வருவதற்கு கொஞ்சம் என்னோட Blog FB Page ம் பாருங்க..

    @kolanginathan என்ன செய்வது? 🙂 மாற காலம் எடுக்கும் வேறு வழியில்லை.

    • கிரி. தர்மம் வென்று விட்டது. குடும்ப ஆட்சிக்கு விடைகொடு‌த்த தமிழக மக்களுக்கு நன்றி. அதிமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்கள் வரவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்.? விஷன் 2020 என்று ஜெயலலிதாஅறிமுகப்படுத்தி உள்ளார். பாலம் கட்டுவதால் மட்டும் முன்னேற்றம் வந்து விடுமா? பாலம் கட்டினேன். பஸ் நிலையம் கட்டினேன் என்று சொல்வதெல்லாம் சாதனையா? நடுத்தர மக்களின் வீடுகட்டுவதற்கு சிமெண்ட் 190 ரூபாய்க்கு ஜெ, தருகிறார். வெளியில் சுமார் 400 ரூபாய்க்கு விற்கும் சிமெண்ட் 190 ரூபாய்க்கு தந்து உதவுவது தொலை நோக்கு திட்டம் இல்லையா? திமுகவே மனதிற்குள் பாராட்டும் அம்மா உணவகம் ? ஏழைகளின் பசியை ஆற்றும் மிக மிக தொலை நோக்கு திட்டங்கள். இன்னும் பல திட்டங்களை எழுதிக்கொண்டே போகலாம். எதிரியாக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும். பாராட்ட மனமில்லைஎன்றால் தூற்றாமல் இருங்கள். பசி தான் மிக கொடிய நோய். அந்த பசியை ஆற்றும் தாயை பழிக்காதீர்கள். பாலம் கட்டுவதாலோ, பஸ் நிலையம் திறப்பதாலோ ஏழைகளின் பசி ஆறாது உங்களை போல் நல்ல வருமானம் உள்ளவர்கள் தங்கள் நிலைமையை மட்டுமே நினைத்து பேசக்கூடாது. தினசரி 100 ரூபாய் சம்பாதிப்பதற்கே அல்லல் படும் எளியவர்களை நினைத்து பாருங்கள். திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சி நன்றாகவே உள்ளது. 8 கோடி மக்களை ஆட்சி செய்வது சாதாரண விஷயமா? அதுவும் கருணாநிதி ஸ்டாலின் போன்ற நரிகள் வாளும் இடத்தில்.? இவ்வளவு தூற்றியும் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் சாதனை. ஆனால் சென்னையில் வெள்ளம் வந்த போது அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டியது கண்டிக்கத்தக்கது தான். அதோட பலனாக தான் அதிமுக சென்னையை இழந்துள்ளது. அதிமுக மீது சில குறைகள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை திருத்திக்கொண்டு வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள். திமுக இல்லாத தமிழகம் வேண்டும். இந்துக்களை தூற்றும் போக்கை திமுக மாற்றி கொள்ள வேண்டும்.ஜெயலலிதா போல இந்து பண்டிகைகள் வரும் போது வாழ்த்து சொன்னால் குறைந்து விடவா போகிறார்கள்..? வீரமணியை அடக்கி வைக்க வேண்டும். சென்ற தலைமுறை போல இவர்கள் என்ன சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை. பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக கைவிட வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது திமுக தன்னை மாற்றி கொள்ள. . அனைவருக்கும் அனைத்து மதத்தினருக்கும் தோழனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் திமுகவின் ஆட்சி கனவு பகல் கனவாக தான் இருக்கும்.

    • அரசியலைத் தொட்டாலே தமிழினம் பிரிந்துகிடக்கும். நடு நிலைக் கருத்து என்று யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு பதிவை, பதிவரின் கருத்து என்று பார்ப்பதுதான் சரி. மாதவனின் கருத்துக்கு நேர் எதிர் கருத்து திமுக ஆதரவாளர்களிடம் உண்டு. எதுக்கு குழாயடிச் சண்டை.

      கிரி சரியாகத்தான் எழுதுகிறார். அவர் சொல்வது உண்மைதான். திமுக எப்போதும் ஏதாவது செய்திருக்கிறார்கள் (அவர்கள் நல்ல கமிஷன் அடிக்கும் நோக்கத்துடன் செய்திருந்தாலும்). அதிமுக எம்ஜியார் காலத்திலிருந்தே infrastructure ல் குறிப்பிடும்படியாகச் செய்ததில்லை. சில சமயம் நான் நினைப்பது, மெட்’ரோவோ அல்லது மற்றவையோ.. (மதுரவாயில் போன்றவை) திமுக ஆரம்பித்து மொத்த பிராஜக்டுக்கும் கமிஷனைக் கறந்திருப்பார்கள். அதனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தனக்குப் பிரயோசனமில்லை என்று கிடப்பில் போடுவார்கள். அல்லது திமுகவுக்கு பேர் போகக்கூடாது என்று காலி பண்ணுவார்கள்.

  8. கிரி. சுவாதி கொலை சம்பவத்திற்கு பிறகு எனது எண்ணம் முற்றிலும் மாறி விட்டது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாப்பவர் என்று அறியப்படும் ஜெயலலிதா இன்று தூங்கி கொண்டு இருக்கிறார். சுவாதி கொலை சம்பவத்திற்கு முதல்வரோஅமைச்சர்களோ நேரில் சென்று ஆறுதல் கூடசொல்லவில்லை. இது கண்டிக்கத்தக்க. ஜெயலலிதா எப்போதும் தனக்கு யார் துரோகம் செய்கிறார்கள் அவர்களை எப்படி பந்தாடலாம் என்று சதாசர்வ காலமும் தனது அரசியல் வாழ்க்கையிலே இருக்கிறார். இதில் தமிழகம் அமைதி பூங்காவாம்? நித்தம் பல கொலைகள் நடக்கிறது. மௌனமாக இருக்கிறார். ஜெயலலிதாவிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதியை போல் அனைத்திலும் ஓட்டு வங்கியை ஜெயலலிதா பார்க்க ஆரம்பித்துவிட்டார். முன்பு ஜெயலலிதாவை பற்றி நான் சொன்ன அனைத்து கருத்துக்களையும் வாபஸ் வாங்கி கொள்கிறேன். ஜெயலலிதா அவர் பாதையை விட்டு விலகி விட்டார்.

  9. மாதவன், அப்பவும் சரி இப்பவும் சரி உணர்ச்சிவசப்பட்டே பேசுகிறீர்கள்.

    ஜெ 2001 ல் இருந்த ஐந்து வருடங்கள் மட்டுமே இது போல பிரச்சனைகள் இல்லாமல் இருந்தது. 2011 ல் இருந்து தற்போது வரை பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இது குறித்து ஜெ எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பொதுவாகவே கலைஞர் ஆட்சியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகமாகவும் ஜெ ஆட்சியில் அது குறைவு என்றும் கூறப்படும், 2001 ஜெ ஆட்சியை மனதில் வைத்து.

    ஆனால் 2011 க்குப் பிறகு இரண்டு ஆட்சியுமே ஒன்று தான் என்று ஆனது.

    சுவாதி கொல்லப்பட்டது சோகமான நிகழ்வு தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், இது போல பல சம்பவங்கள் இதற்கு முன்பும் தற்போதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தன இருக்கின்றன ஆனால், இது மட்டும் ஊடக கவனம் பெற்று இருக்கிறது அவ்வளவே!

    கலைஞர் ஆட்சியாக இருந்தாலும் இதே தான் நடந்து இருக்கும்.

    சென்னையே முழுகி பலர் இறந்த போதும் கண்டுகொள்ளாத ஜெ / அமைச்சர்கள் செய்ததை விடவா இந்தக் கொலை முக்கியத்துவம் பெற்றுள்ளது!!

    நியாயமாக நீங்கள் கோபப்பட்டு இருக்க வேண்டியது இந்தக் கொலைக்கு / சமீபத்தில் நடக்கும் கொலைகளுக்கு என்பதை விட சென்னையில் வெள்ளத்தால் பலர் இறந்த போதும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருந்த அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் எதிர்த்துத்தான்.

    தற்போது கூட உடனடியாக பல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் (இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை) எனவே நீங்கள் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதே என் கருத்து.

    அதாவது வழக்கமாக நடக்கும் கொலைகள் தான்.. இந்த சமயம் ஒரே நேரத்தில் நடந்து விட்டது அதில் ஒரு பெண் ஐடி துறை என்பதாலும் நடந்தது ரயில் நிலையத்தில் என்பதாலும் ஊடக கவனம் பெற்று விட்டது.

    எனவே, இதற்காக நீங்கள் கோபப்பட்டு ஜெ வை விமர்சிப்பதில் நியாயமில்லை.

    “செம்பரம்பாக்கம் ஏறி விஷயம் எதிர்கட்சிகள் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்ய எடுத்த ஆயுதம். மக்கள் சாக வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே செய்தது போல் நீங்கள் சொல்வது”

    இதை திரும்ப ஒருமுறை யோசித்துப்பாருங்கள்.. நீங்கள் கூறியது தவறா சரியா என்று புரியும். யாரும் சாக வேண்டும் என்று செய்யவில்லை என்றாலும் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிப்பதும் செய்த தவறை நியாயப்படுத்த நினைப்பதும் இது போன்ற தவறுகள் தொடரக்காரணம்.

    தற்போது நடந்த கொலைகளைக் கூட ஜெ வேண்டும் என்றா கண்டுக்காமல் இருந்தார்? என்று கேட்டால் எப்படி இருக்குமோ அதே தான் செம்பரம்பாக்கம் ஏரி விசயத்திலும் நீங்கள் கூறியது.

    உங்களுக்கு தற்போது கொலைகள் பெரிதாக தெரிவது போல அப்போது அரசாங்கம் செயலற்று இருந்ததை கூறினேன் அவ்வளவே!

    நீங்கள் கூறிய

    “அதிமுக ஆட்சி சரியில்லை என்று திமுகவுக்கு ஓட்டு அளித்தால் தமிழகம் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தில் 100 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும். ரவுடிகள் ஆட்சி தான் திமுக ஆட்சியில் நடக்கும். அந்த அவல ஆட்சிக்கு இந்த அதிமுக ஆட்சி எவ்வளவோ மேல்.”

    உங்கள் குற்றச்சாட்டே உங்கள் மனசாட்சியை உறுத்தியதால் இந்த பின்னூட்டத்தை இட்டு இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

    அப்படியே சென்று விடாமல் திரும்ப வந்து அதை தவறு என்று ஏற்றுக் கொண்ட உங்கள் குணத்தை பாராட்டுகிறேன்.

    உண்மையில் நீங்கள் கூறியதை நானே மறந்து விட்டேன்.

    மாதவன் நாம எல்லோருமே மக்களுக்கு நல்லது நடக்கணும் என்று தான் நினைக்கிறோம் ஆனால், அதில் சில கருத்து வேறுபாடுகள் அவ்வளவே!

    தற்போதும் கூறுகிறேன் நான் திமுக க்கும் ஆதரவல்ல அதிமுக க்கும் ஆதரவல்ல. யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன், தீமை செய்தால் விமர்சிப்பேன்.

    இது தான் நான்.

    “முன்பு ஜெயலலிதாவை பற்றி நான் சொன்ன அனைத்து கருத்துக்களையும் வாபஸ் வாங்கி கொள்கிறேன்.”

    அதெல்லாம் தேவையில்லை மாதவன், இதுவும் கடந்து போகும் அவ்வளவே! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போல சம்பவங்கள் தொடரும்.

    ஜெ தற்போது தீவிரமான நடவடிக்கை எடுத்து வருவதாகவே கருதுகிறேன். இது தொடர்ந்தால் மகிழ்ச்சி.

  10. நான் அதிமுகமுன்பு போல் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கவனம் செலுத்த வில்லை என்று கோபப்படுகிறேனே தவிர அதற்காக நான் திமுக ஆட்சி வந்து இருக்கலாமோ என்று எப்போதும் நினைத்ததில்லை. திமுக ஒரு தீயசக்தி. ரவுடிகள் நிரம்பிய கட்சி என்பதில் எனக்கு இப்போதும் மாற்று கருத்து இல்லை. நான் திமுக மீது வைத்த குற்றச்சாட்டில் இருந்து இப்போதும் பின்வாங்கவில்லை. எனக்கு ஏன் மனசாட்சி உறுத்தவேண்டும்.? திமுக ஆட்சிக்கு அதிமுக ஆட்சி எவ்வளவோ மேல் தான் என்பதே இப்போதும் என் கருத்து. ஆனால் அது திமுக வந்துவிட கூடாதே என்கிற பயத்தில் சொன்னது. அதற்காக அதிமுக ஏது செய்தாலும் ஏற்று கொள்ள முடியாதல்லவா? எனது பின்னூட்டங்களை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. நான் அதிமுகவிற்கு ஆதரவாக கருத்து சொன்னாலும் மழை வெள்ளம் வந்த போது ஸ்டிக்கர் ஒட்டியது கண்டிக்கத்தக்கது தான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளேன். (இவ்வளவு தூற்றியும் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் சாதனை. ஆனால் சென்னையில் வெள்ளம் வந்த போது அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டியது கண்டிக்கத்தக்கது தான். அதோட பலனாக தான் அதிமுக சென்னையை இழந்துள்ளது. அதிமுக மீது சில குறைகள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை திருத்திக்கொண்டு வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்)
    இதை நீங்கள் கவனிக்கவில்லையா.? அல்லது கவனிக்காதது போல் நடிக்கிறீர்களா? இன்னொன்று செம்பரம்பாக்கம் ஏறி விஷயம் ஜெயலலிதாவால் அப்போது என்ன செய்திருக்க முடியும்.? இயற்கையை எதிர்த்து போராட எவராலும் முடியாது. அதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டாலும் தேர்தல் நெருங்குவதால் அதில் அரசியல் செய்தனர். என்னுடைய இப்போதைய ஆதங்கமே ஜெயலலிதா முன்பு போல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லையோ என்கிற கோபத்தில் தான். நான் ஜெயலலிதா மீது பாஸிட்டிவாக சொன்ன கருத்தை வாபஸ் வாங்குவதாக சொன்னேன். இவனே ஒத்துக்கொண்டு விட்டான் இதுதான் சாக்கு என்று நீங்கள் என் மீது பாய்கிறீர்கள்.

  11. “இவனே ஒத்துக்கொண்டு விட்டான் இதுதான் சாக்கு என்று நீங்கள் என் மீது பாய்கிறீர்கள்.”

    நான் அவ்வாறு நினைத்து நிச்சயமாக கூறவில்லை, அவ்வாறு செய்யவும் மாட்டேன். எப்போதுமே போலவே என் எண்ணங்களைக் கூறினேன். அவ்வாறு உங்களுக்கு தோன்றி இருந்தால், மன்னிக்க அடுத்த முறை இன்னமும் கூடுதலாக கவனம் எடுத்து எழுதுகிறேன்.

    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here