லஞ்சம் கொடுத்தவன் ஊழல் பற்றிப் பேசக்கூடாதா?

23
லஞ்சம் கொடுத்தவன் ஊழல்

சாரே போராட்டம் தற்போது ஆதரவையும் அதே சமயம் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறது. Image Credit

ஹசாரே போராட்டம் குறித்து முன்பு எழுதி இருந்தாலும் எனக்கு சில விசயங்களில் தற்போது உடன்பாடு இல்லாததால், இது பற்றி தற்போது எழுதவில்லை.

எனக்கு இவரது போராட்டத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவருக்கு என் ஆதரவு தான்.

காரணம், நம் எண்ணங்கள் படியே ஒருவர் போராட்டம் நடத்தினால் மட்டுமே ஆதரவு தருவேன் என்றால் நம்மால் யாருக்குமே ஆதரவு கொடுக்க முடியாது.

அதாவது எல்லோருக்கும் பிடித்த மாதிரி எவராலும் இருக்க முடியாது.

Read: எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

ஹசாரே போராட்டம்

ஹசாரே போராட்டத்தை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்விகளுள் ஒன்று லஞ்சம் கொடுக்கும் நீ ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது நியாயமா? அதற்கு தகுதி படைத்தவரா? இது தான் பலரின் கேள்வி.

லஞ்சம் வாங்குகிறோம் என்றால் பேச்சே கிடையாது காரணம் நமக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க!

இது முற்றிலும் நம் ஒருவரை மட்டுமே சார்ந்தது. லஞ்சம் கொடுப்பது என்பது இதில் சற்று வேறு படுகிறது.

இந்தியாவில் நடக்கும் போராட்டத்தைப் பற்றி பேசுவதால் இதையே உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன்.

நான் இது வரை ஐந்து பைசா கூட லஞ்சமாக வாங்கியது கிடையாது என்பதை உறுதியாக மனசாட்சியுடன் கூற முடியும்.

ஆனால், லஞ்சம் கொடுத்தது இல்லை என்று நிச்சயம் என்னால் கூற முடியாது. நான் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பாலனவர்கள் கூற முடியாது.

காரணம், இந்தியாவில் கடமையை மீற லஞ்சம் என்பது போய்க் கடமையைச் செய்யவே லஞ்சம் என்றாகி விட்டது.

அப்படி இருக்கும் போது நான் மற்றும் என்னைப்போல இருப்பவர்கள் எப்படி லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியும்?!

லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை

ரேசன் கார்டு வேண்டுமா? பென்சன் வேண்டுமா? சான்றிதல் வேண்டுமா? ஓட்டுனர் லைசென்ஸ் வேண்டுமா? முதியோர் தொகை வேண்டுமா? பாஸ்போர்ட் வேண்டுமா?

இதைப்போல எத்தனை எடுத்துக்காட்டு வேண்டும் இதில் கூறும் அத்தனைக்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு வேலை நடைபெறும்.

இல்லை என்றால் வேண்டும் என்றே ஏதாவது காரணம் கூறி உங்கள் மனு தள்ளப்படும் தாமதப்படுத்தப்படும்.

இதில் ஏமாற்றிப் பெறுபவர்கள் கணக்கில் வரமாட்டார்கள் நான் கூறுவது நேர்மையாக நியாயமாக கிடைக்க வேண்டிய விசயங்களை மட்டுமே கூறுகிறேன்.

அனுமதிக்கப்பட்ட முதியோர் தொகை தனக்கு கிடைக்க ஒரு தாத்தாவோ அல்லது பாட்டியோ எத்தனை பேருக்கு லஞ்சம் அழுது பின் தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தைப் பெற்று இருக்கிறார்கள்.

இவர்கள் எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்? அரசு அனுமதித்தது தானே! நியாயமாக கிடைக்க வேண்டியது தானே! எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்?

சிரிப்பாக இல்லையா!

இப்படி கட்டாயப்படுத்தி லஞ்சம் கொடுக்க வைத்து இவர் லஞ்சம் கொடுத்து விட்டார் அதனால் இவருக்கு ஊழலைப் பற்றிப் பேச அருகதை இல்லை என்று கூறினால், சிரிப்பாக இல்லையா.

யாரும் லஞ்சம் கொடுத்துத் தான் வேலை நடக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

அந்தந்த வேலை நியாயமாக நடந்தாலே போதும் யாரும் கொடுக்க மாட்டார்கள், கொடுக்க வேண்டிய தேவை இருக்காது.

சிங்கப்பூரில் நான்கு வருடமாக இருக்கிறேன் இதுவரை ஐந்து சென்ட் கூட லஞ்சம் கொடுத்தது கிடையாது அப்புறம் எங்கே வாங்குறது.

எனக்கு கொடுக்க வேண்டிய தேவையே இல்லை காரணம் எல்லாமே அரசால் சிறப்பாக கவனிக்கப்படுகிறது.

லஞ்சம் கேட்கப்படுகிறது என்றால், அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் அதனால் யாரும் வாங்க பயப்படுகிறார்கள்.

நீங்கள் கொடுக்க முயற்சித்தால் கூடக் காவல்துறையிடம் கூறி விடுவார்கள் ஆனால், அதையும் மீறி மிகக்குறைந்த அளவில் நடக்கிறது தான்.

100 சதவீதம் யாராலும் இதை நிறுத்த முடியாது ஆனால், நிச்சயம் இதைப்போல குறைக்க முடியும்.

இன்று கேள்வி கேட்க ஆளில்லை.

என்ன செய்து விட முடியும்?

லஞ்சம் வாங்கினால் எவன் என்ன செய்து விட முடியும்? அப்படியே உள்ளே போட்டாலும் எளிதாக வெளியே வந்து விடப்போகிறேன் என்ற எண்ணத்திலேயே பலர் இருக்கிறார்கள்.

இதை யாரும் மறுக்க முடியாது.

நான் இருந்த நிறுவனத்தில் நான் நினைத்து இருந்தால் லஞ்சம் பெற்று இருக்க முடியும், IT பிரிவில் இருப்பதால் அதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரு ஆர்டர் எடுத்தாலே அதில் கமிசன் பெற முடியும் நான் பேசிக்கொண்டு இருப்பது தனியார் நிறுவனத்தில் தான்.

எனக்கு தெரிந்தே நண்பனுக்கு (வேறு நிறுவனம்) லஞ்சம் கொடுக்க முயற்சித்தார்கள்.

சும்மா இல்லை கோடிக்கணக்கில், எதற்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை இவனைப் போல என்னைப் போல இன்னும் எவ்வளவோ பேர் லஞ்சம் வாங்காமல் இருக்கிறார்கள்.

சாதாரண பொது ஜனம் என்ன செய்ய முடியும்?

ஆனால், மேற்கூறிய கடமையைச்செய்ய லஞ்சம் வாங்குபவர்களை மீறி ஒரு சாதாரண பொது ஜனம் என்ன செய்ய முடியும்?

அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தலாம் ஆனால், இவை போன்றவை திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம், இல்லை லட்சத்தில் ஒருவருக்கு சாத்தியம்.

அன்றாடப் பிரச்சனைகளையே போர்வையாகப் போர்த்திக்கொண்டு இருக்கும் சராசரி குடிமகன் என்ன செய்ய முடியும்?

இவர்களுக்கு எல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது ஆசையா! இல்லை வேண்டுதலா!!

நம்முடைய ஆதிகாலத்துச் சட்டங்களையே இன்னும் தொடர்ந்து கொண்டு இருந்தால் எப்படி குற்றங்கள் குறையும்.

சிங்கப்பூரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சட்டங்களை மாற்றி அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப.

நாமோ சுதந்திரம் வாங்கிய போது என்ன சட்டம் இருந்ததோ அதையோ இன்னும் அரைத்துக்கொண்டு இருக்கிறோம், இதில் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் வேறு.

இந்த லட்சணத்தில் இருந்தால் ஊழல் ஏன் மலிந்து போகாது?

ஹசாரே

ஹசாரே ஒன்றும் யோக்கிய சிகாமணி என்று சான்றிதல் கொடுக்க நான் வரவில்லை எனக்கும் அவரது நடவடிக்கையில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு தான்.

என் கருத்துகள் அனைத்துக்கும் சரியாக வந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஆதரிப்பேன் என்றால், உங்கள் கருத்தையே நீங்கள் ஆதரிக்க முடியுமா என்பதே சந்தேகம்.

அனைவரையும் திருப்தி படுத்தும் படி எவராலும் ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்த முடியாது அதுவும் இதைப்போல மிகப்பெரிய நாடு தழுவிய போராட்டத்தை.

லஞ்சம் கொடுக்கும் நீ ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கும் இவர்கள் இதுவரை ஊழலை ஒழிக்க என்ன முயற்சி எடுத்தார்கள்?

லஞ்சம் கொடுத்தவர்கள் இதைப்போல போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது குறைந்த பட்ச முயற்சியையாவது செய்கிறார்கள்.

ஆனால், இவர்களோ தங்களுடைய மேதாவித்தன பேச்சால் குறைகளை மட்டுமே காண்கிறார்கள்.

நீங்கள் எப்படி முன்னெடுப்பீர்கள்?

ஹசாரே செய்வது தவறு என்றே வைத்துக்கொள்வோம் இதை வேறு வழியில் நீங்கள் எப்படி முன்னெடுப்பீர்கள்? அதைக்கூறுங்கள்.

அனைவரும் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினால் ஊழல் ஒழியுமாம்.. ஆஹா! என்ன ஒரு அறிவுப்பூர்வமான பேச்சு.

இதைச் சின்னக் குழந்தையைக் கேட்டால் கூட ஆமாம் என்று கூறும். இது யாருக்கும் தெரியாத ரகசியம் பாருங்க!

இந்தியால ஒரு கோடிப்பேர் இருக்காங்க அதனால எல்லோரையும் லஞ்சம் கொடுக்காதீங்க என்று பிரச்சாரம் செய்து இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக மாற்றி விடலாம்….. என்ன சொல்றீங்க?

120 கோடி பேர் உள்ள இந்த நாட்டில் ஒவ்வொருத்தரும் தானாகத் திருந்தி லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி இந்தியா ஊழலற்ற நாடாக மலருவதை என் கொள்ளுப்பேரனுக்கும் கொள்ளுப்பேரன் கூட பார்க்க மாட்டான்.

தானாக லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம் வடிகட்டின முட்டாள்த்தனம்.

கடமையைச் செய்யவே லஞ்சம்

இங்கே கடமையை மீற என்றால் கூடப் பரவாயில்லை கடமையைச் செய்யவே கொடுக்க வேண்டியது இருக்கும் போது எந்தக்காலத்திலும் நிற்காது.

அது குறைந்த பட்சம் ஜன்லோக்பால் போன்ற சட்டங்களினால் குறைய வாய்ப்பு இருக்கிறதே தவிர முற்றிலும் ஒழிக்க வாய்ப்பே இல்லை.

இவை எல்லாம் மாற நாம் வெகு தூரம் பயணிக்க வேண்டியதுள்ளது எனவே ஜன்லோக்பால் எல்லாம் ஒரு ஆரம்பம் தான் சுபம் அல்ல.

ஜன்லோக்பால் சட்டம் வந்து விட்டால் உடனே இந்தியாவில் ஊழல் நின்று பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறும் அளவுக்கு முட்டாள் இல்லை.

ஒரு சிலர் உண்மையாலுமே அவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அது அவர்கள் அறியாமை ஆனால், நிச்சயம் இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறுவேன். எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் ஊழல் ஒழிய வேண்டும் என்றால் எப்படி ஒழியும்?

லஞ்சம் கொடுக்கும் நீ ஊழலை பற்றிப்பேசாதே உனக்கு அந்தத் தகுதி இல்லை என்று கூறும் நீங்கள் ஊழலை ஒழிக்க என்ன செய்தீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள்?

கொசுறு

படத்தில் நண்பரின் மகள். ரொம்ப ரசித்த காட்சி.

படத்தில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் என்னைக் கவர்ந்து இருக்கிறார்கள் ஒவ்வொருவரின் முகபாவனையும் ஒவ்வொரு விளக்கம் கூறுகிறது 🙂 .

படத்தை வெளியிட அனுமதி அளித்த நண்பருக்கு நன்றி.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

23 COMMENTS

  1. கொசுறு செய்தியில் உள்ள இரண்டு அருமையான படங்களும், உங்கள் பதிவில் மற்ற விஷயங்களை கவனிக்க விடவில்லை. கொள்ளை அழகு!

  2. கிரி, அருமையான பதிப்பு. நான் என் நண்பர்களுடன் இதே விவாதத்தில் இருந்தேன்.

    லஞ்சம் கொடுத்தவன் ஏன் அண்ணாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது? – சரியான கேள்வி.

    அண்ணாவை ஆதரிக்கலாம் அல்லது ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் மக்கள் எல்லர்கிடேயும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு கருத்து மேலோங்கி உள்ளது பாராட்டத்தக்கது.

    தக்க தருணத்தில் வந்த அருமையான பதிப்பு.

  3. பாருக்குள்ளே சிறந்த நாடு பாரத நாடு!!!! என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!!! இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!!!

    கருத்து சொல்ல மனமில்லை…. தகுதியும் இல்லை…

  4. …மீண்டும் மீண்டும் இங்கே ‘எல்லாருமே லஞ்சம் கொடுக்கிறோம்…ஊழலை எதிர்க்க நமக்கென்ன தகுதி இருக்கிறது’ என்று கேள்வி எழுவதைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது.

    அமெரிக்காவில் ஆட்டோ-கியர் வண்டிக்கு மூன்று முறை ஃபெயிலாகி நாலாவது முறையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற பல இந்தியர்களை நான் அறிவேன். ஆனால் நம் ஊரில் அதே நபர் லஞ்சம் கொடுத்து ஒரே நாளில் உரிமம் எடுத்து விடுவார். காரணம், அவர் ஊழல்வாதி என்பதல்ல. சரியான ஒரு நபர், லஞ்சம் கொடுக்காவிட்டால் எந்த அலைக்கழிப்பும் இன்றி உரிமம் எடுத்துவிடலாம் என்ற நிலை இங்கு இல்லை. லஞ்சம் மட்டுமே தகுதியாக உள்ள ஒரு இடத்தில், சாமானிய மக்கள் செய்யக்கூடியது அண்ணா ஹசாரே போன்ற ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான்…”

  5. உங்களுக்கும் அதே கேள்வி…

    சரி கிரி லஞ்சம் ஊழல்கு கேள்வி கேளுங்கள் .. அண்ணா உடன் அமர்ந்து அதரவு கொடுக்கும் போலி சாமியார்களை என்ன செய்யலாம்.. ?

  6. எனக்குள்ள சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்.
    பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது
    என்று சொல்கிறார்களே அது ஏன்?
    தினமணி நாளிதழ் கூட பிரதமரையும், நீதிபதிகளையும் இதில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது. இது ஏன்?
    வெளிப்படையான விளக்கம் அளிக்க யாரும் முன் வரவில்லை.
    யாரேனும் விளக்கினால் தேவலை.

    எனக்குள்ள சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்.
    பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது
    என்று சொல்கிறார்களே அது ஏன்?
    தினமணி நாளிதழ் கூட பிரதமரையும், நீதிபதிகளையும் இதில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது. இது ஏன்?
    வெளிப்படையான விளக்கம் அளிக்க யாரும் முன் வரவில்லை.
    யாரேனும் விளக்கினால் தேவலை.

    எனக்குள்ள சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்.
    பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது
    என்று சொல்கிறார்களே அது ஏன்?
    தினமணி நாளிதழ் கூட பிரதமரையும், நீதிபதிகளையும் இதில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது. இது ஏன்?
    வெளிப்படையான விளக்கம் அளிக்க யாரும் முன் வரவில்லை.
    யாரேனும் விளக்கினால் தேவலை.

    எனக்குள்ள சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்.
    பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது
    என்று சொல்கிறார்களே அது ஏன்?
    தினமணி நாளிதழ் கூட பிரதமரையும், நீதிபதிகளையும் இதில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது. இது ஏன்?
    வெளிப்படையான விளக்கம் அளிக்க யாரும் முன் வரவில்லை.
    யாரேனும் விளக்கினால் தேவலை.

    எனக்குள்ள சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்.
    பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது
    என்று சொல்கிறார்களே அது ஏன்?
    தினமணி நாளிதழ் கூட பிரதமரையும், நீதிபதிகளையும் இதில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளது. இது ஏன்?
    வெளிப்படையான விளக்கம் அளிக்க யாரும் முன் வரவில்லை.
    யாரேனும் விளக்கினால் தேவலை.

  7. தூக்கில தொங்கபோகிறவன்
    தவறு செய்யாதீர்கள் மீறி செய்தால் இப்படிதான் சாகவேண்டியிருக்கும் என சொன்னால் அது தவறா

    அது போல தான் லட்சம் கொடுத்து கொடுத்து நாசமாகிபோனவர்கள் போரட்டம் செய்தால் தவறில்லை

  8. திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…

  9. மன்னிக்கவும்… சான்றிதழ் எழுத்துப் பிழை உள்ளது…

  10. இந்தியாவின் அரசியல்வாதிகள் மீது நான் எப்போதும் தப்பு சொல்ல மாட்டேன்.

    நாம் எதிர்க்க விரும்பதில்லை. அல்லது அவர்களைப் போல நமக்கு ஒரு வாய்ப்பு வராத என்று காத்திருப்பவர்கள் தான் அநேகம் பேர்கள்.

    நாம் விமர்சிக்கப் பிறந்தவர்கள் என்ற நோக்கத்தில் தான் நாம் எல்லாவற்றையும் கரடுமுரடாக எப்போதும் விமர்சித்துக் கொண்டே இருக்கின்றோம்.

    அரசியல்வாதிகளுக்கு மக்களின் மனோபாவம் நன்றாகவே தெரியும்.

    கத்துவார்கள்……….. மற்நது விடுவார்கள்.

    ஆனால் இந்தஅன்னா ஹாசரே விவகாரம் சற்று மேலே எழுந்து வந்து கொண்டு இருப்பது சந்தோஷமே?

    ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்காத பிரதமர் ஒரு வெட்கக்கேடு என்றால் சோனியாவின் கைப்பாவையாக இந்த அரசாங்கம் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது அதை விட வெட்கக்கேடு.

    ராஜிவ் காந்தி அறக்கட்டளை ஒன்று இருக்கிறது? அதன் சொத்து மதிப்பு எவருக்காவது தெரியுமா? எங்கிருந்து வருகின்றது என்பது போன்ற விபரங்களாவது பொது மக்களுக்காகவது புரியுமா?

    குடுமி எப்போதும் மக்கள் கையில் இருக்க வேண்டும்.
    பயத்துடன் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்.

    இந்த மசோதா ஒரு வகையில் நிறைவேறும் பட்சத்தில் அடுத்து எவர் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கு நித்யகண்டம் பூர்ண ஆயுசு.

    நன்றி கிரி. எல்லாபதிவுகளை படித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். ஆனால் நாம் எப்போது முணியாண்டி விலாஸ் பார்ட்டி. இது போன்ற காரசாரமான விவகாரத்தை படிக்கும் போது தான் விமர்சனம் அருவி மாதிரி கொட்டுது.

  11. //லஞ்சம் கொடுத்தவன் ஊழல் பற்றிப் பேசக்கூடாதா?//

    நேற்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கிரி;

    நாளை

    லஞ்சம் கொடுப்பவன் ஊழல் பற்றி பேசலாமா?

  12. @Pugal arasan

    மேடையில் அன்னா மட்டும் தான் அமர்ந்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆதரவு தான் இவர்கள் கொடுத்து வருகிறார்கள். எனக்கும் தான் இவர்கள் விசயத்தில் உடன்பாடில்லை. இனி அதற்காக நான் கூறும் நபரை பக்கத்துல வைத்தால் தான் ஆதரவு தருவேன் என்று என்னால் கூற முடியாது அதைத்தான் மேலே கூறி இருக்கிறேன்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் இன்னும் ஒரு சிலர் அன்னாவே மேடையில் உட்காரக்கூடாது என்பார்கள்..இதை எல்லாம் பார்த்தால் எந்த போராட்டமும் செய்ய முடியாது. இப்படி பேசுகிறவர்கள் ஏதாவது போராட்டம் செய்து பார்க்கட்டுமே! மக்கள் ஆதரவு தருகிறார்களா இல்லையா என்று தெரிந்து விடும். மக்கள் அனைவருக்கும் ஆதரவு தருவதில்லை. ராம்தேவ் கதை என்ன ஆகியது என்று உங்களுக்கு தெரியும்.

    என்னுடைய தேவை ஜன்லோக்பால் அதனால் மற்றவைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    @அன்பு

    பிரதமரை சேர்த்தால் தேவையற்ற பல புகார்களுக்காக பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டியது இருக்கும் மற்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த முடியாது என்பதும் ஒரு காரணம். சும்மாவே ஒரு சிலர் புகார் கொடுத்து நேரத்தை வீணடிப்பார்கள்.

    @ஜோதிஜி

    எனக்கென்னவோ அவ்வளவு எளிதில் சட்டத்தை கொண்டு வந்து விடமாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது அப்படியே வந்தாலும் உருப்படியா இருக்குமா என்று சந்தேகமா இருக்கு. பிஜேபி யவே எடுத்துக்குங்க.. இவ்வளோ நாளா ஜன்லோக்பால் வேண்டும் என்று முழங்கி போராட்டம் செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து விட்டு தற்போது அனைத்துக்கட்சி கூட்டத்தில் பார்லிமன்ட் என்ன சொல்லுதோ அதைத்தான் கேட்க வேண்டும் என்று இரட்டை வேடம் போடுகிறார்கள். எந்த அரசியல்வாதியும் கட்சியும் யோக்கியம் இல்லை. இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் இதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று கூற வேண்டியது தானே! சொல்லப்போனால் காங்கை விட பிஜேபி கேவலமாக நடந்து கொண்டுள்ளது.

    @காத்தவராயன்

    பேசலாம் இதைப்போல கடமையைச்செய்ய லஞ்சம் வாங்குவதை மற்றவர்கள் தொடர்ந்தால்.

  13. இவர்களுக்கு எல்லாம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது ஆசையா! இல்லை வேண்டுதலா!!..///

    ஆமா அண்ணே .. நாம லஞ்சம் கொடுத்தே ஆகா வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் …

    எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்தே நொந்து போனவனுக்கு ஊழல் பற்றி பேச … உழலை எதிர்க்க முழு தகுதி உண்டு

  14. facebook ல இந்த மெசேஜ் கன்னா பின்னான்னு சுத்துது. இது உண்மையா கிரி?
    In Singapore, LOKPAL BILL was implemented in 1982 and 142 Corrupt Ministers & Officers were arrested in one single day.. Today, Singapore has only 1% poor people & no taxes are paid by the people to the government, 92% Literacy Rate, Better Medical Facilities, Cheaper Prices, 90% Money is white. Re-post this if you want to live in a corruption free country.

  15. //பேசலாம் இதைப்போல கடமையைச்செய்ய லஞ்சம் வாங்குவதை மற்றவர்கள் தொடர்ந்தால்.//

    கிரி நான் கேட்டக வந்தது;

    தன் சுயநலத்திற்காக இனிமேலும் லஞ்சம் கொடுப்பவன் ஊழல் பற்றி பேசலாமா?

    உதாரணத்திற்கு;

    மேலே நண்பர் சீனு எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தை மேற்கோள்காட்டியுள்ளார்.
    இந்த ஜெயமோகன் தனது அரசுப்பணியில் (BSNL) நீண்ட விடுப்பு எடுத்து முழுநேர எழுத்தாளராக பணியாற்றுகிறார்.
    இவ்வாறு இணையத்தில் பிரச்சாரம் செய்வதை விட பணிக்கு சென்று நேர்மையாக பணியாற்றலாமே?
    வேலை பிடிக்காவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு அந்த வாய்ப்பை வேறு யாருக்கேனும் வழங்கலாமே?
    இத்தகைய ஒழுங்கீனங்கள் ஊழல் பற்றி பேசலாமா?

  16. அன்புள்ள கிரி:

    எப்படியோ இன்று தான் உங்கள் வலைப்பூவை பார்க்கும் பாக்கியம் கிட்டியது. எழுத்தும், எண்ணமும் உங்களுக்கு வசமாகியிருக்கிறது. இந்தக்கட்டுரையில் நான் நூறு சதத்துக்குமேல் உங்களோடு உடன்படுகிறேன். நானே எழுதியதுபோல் இருக்கிறது! இனி ஒவ்வொன்றாக உங்கள் பழைய கட்டுரைகளைப்படிக்க முயற்சி செய்வேன். என் முகநூலில் நான் எழுதியது:

    ”அடுத்தவாரம் நான் பார்க்கவேண்டிய கார்ப்பொரேஷன் ஊழியர் ராம்லீலா மைதான அண்ணா லீலைகளை டி.வி.யில் பார்த்திருப்பாரா? எதற்கும் ஒரு காந்திக்குல்லா பையில் கொண்டுபோகவேண்டும்! ”

    பால்ஹனுமானில் நீங்கள் எனது ஒரே புத்தகத்தை, மிகவும் இடைஞ்சலுக்குப்பிறகு, வாங்கியதாகவும், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்வதாகவும் எழுதியிருந்தீர்கள். படித்தீர்களா? படிக்க முடிந்ததா?! என்ன கருத்தாக இருந்தாலும், எனக்கும் தெரிவியுங்களேன்! திருத்திக்கொள்ள உதவும்.

    தொடர்பில் இருப்போம்.

    அன்புடன்,

    பாரதி மணி

  17. @ஆனந்த் 🙂

    @தினேஷ்

    அனைத்தும் உண்மை இல்லை. நான் விசாரித்தவரை யாரும் இதைப்போல கைது செய்யப்படவில்லை. டேக்ஸ் 7 சதவீதம். நமது ஊரைப்போல குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு. வேலை இல்லாதோர் உண்டு தற்போது குறைந்து இருக்கிறது. மருத்துவ செலவுகள் அதிகம் அதே போல விலை குறைவு இல்லை மிக அதிகம். சராசரி மக்கள் ரொம்ப சிரமப்படுகிறார்கள் விலைவாசி உயர்வால். வெள்ளைப் பணம் அதிகம் தான்.

    @காத்தவராயன்

    இனிமேலும் என்றால் என்ன அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. தற்போது செய்வது நியாயம் என்றால் இனி செய்வதும் நியாயம் தான். தற்போது செய்வது தவறு என்றால் இனிமேல் செய்வதும் தவறு தான் அதாவது அதே நிலை என்றால்.

    இது ஜெயமோகன் பிரச்சனை இல்லை BSNL பிரச்சனை அவர் சட்டத்திற்கு உட்பட்டு தான் செய்கிறார் நீங்கள் கூறுவது படி பார்த்தால். இதைப்போல செய்கிறார்கள் என்றால் BSNL தான் இது போல மற்றவர்கள் செய்யாமல் இருக்க விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். என்னை பொறுத்தவரை அவர் மீது தவறில்லை. விதிமுறைகள் அனுமதிப்பதாலே தானே செய்கிறார்.

    நீங்கள் கூறுவது எடுத்துக்காட்டாக சில அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை வைத்து அரசு வேலைக்கு செல்லாமல் அல்லது குறைவான நேரம் சென்று தங்கள் சொந்த மருத்துவமனையை கவனித்து வருகிறார்கள் அவர்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் கூறுவது பொருந்தும். சட்டப்படி இது தவறு ஆனால் பலர் செய்து வருகிறார்கள்.

    @பாரதி மணி

    சார் ரொம்ப நன்றி

    சார் உங்க புத்தகம் தொடர்ச்சியாக படிக்க நேரம் கிடைக்கவில்லை. முழுவதும் ஒரே நேரத்தில் படித்து விரைவில் விமர்சனம் செய்கிறேன். நீங்களே வந்து கேட்டது எனக்கு ஒரு விதத்தில் சந்தோசமாகவும் இவ்வளோ தாமதம் செய்து விட்டோமே என்று கொஞ்சம் சங்கடமாகவும் உணர்ந்தேன்.

  18. கடமையைச்செய்ய லஞ்சம் வாங்குபவர்களை மீறி ஒரு சாதாரண பொது ஜனம் என்ன செய்ய முடியும்? அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தலாம் ஆனால் இவை போன்றவை திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் இல்லை லட்சத்தில் ஒருவருக்கு சாத்தியம் அன்றாடப் பிரச்சனைகளையே போர்வையாகப் போர்த்திக்கொண்டு இருக்கும் சராசரி குடிமகன் என்ன செய்ய முடியும்?

  19. Just because I gave bribe at some point of time in my life why do you want to deny my right to protest against corruption and for தட் purpose join Hazare group. Importantly the term corruption need to be explained. I had mentioned in my suggestion to IAC தட் the donation asked and accepted for admission to small children to the primary classes should also be termed as corruption. Some people accept gifts on festival occasions, will it not tantamount to corruption. A traffic police man is paid just Rs.5/- by each lorry passing that way. They call it mamool. No offense committed, no charge framed. His total income per day is about Rs.10000/- of which he pays Rs.7500/- to his boss the SI who also gets similar amounts from 10 other police men. He too pays 75% of his income to his boss the Ci and to DSP, Dig, etc. Is this not corruption. It was said during the course of discussion in the Hazare group that a national permit lorry driver while starting from Chandigarh to Madurai has to carry lakhs of rupees in cash for disbursal to the policemen on the way inspite of all his papers being perfect. Will it not be corruption. Everybody fights. The giver and the taker, every body wants this evil system to be eradicated from our society.

  20. லஞ்ச ஊழல் சமூகதிர்க்கே ஆபத்து. அதை ஒழித்து கேட்டவேனும் என்று சொல்வதற்கு, முன்னாள் லஞ்சம் வாங்கினவனுக்கோ கொடுதவனுக்கோ இயலாது என்கின்றீர்கள். அது தவறு. இது ஒரு மக்கள் முன்னேற்றம். இதில் எல்லாவரும் பங்கு சேரவேண்டும். ஒருவேளை லஞ்சம் கொடுத்தவனும் வாங்கினவனும் சட்டப்படி பிடிக்கப்பட்டு தண்டனை பெறலாம் அது வேறே சங்கதி. தலையில் “நான் அண்ணா” என்று எழுதிய தொப்பி வைத்து டில்லியிலும் மும்பையிலும் மட்டு இடங்களிலும் நடந்தவர்கள் எல்லாம் சரியானவர்கள் என்று சொல்லோ முடியாது.

  21. தற்போதைய காலத்தில் லஞ்சம் ஒழிக்கப்படவேண்டும்

  22. லஞ்சம் கொடுப்பவர்களையும் , லஞ்சம் வாங்குபவர்களையும் இனியும்
    ஒழிக்கமுடியாது .

    எங்கே நீதி கேட்டு போகிறோமோ அங்கேயும் லஞ்சப்பேர்வழிகள் இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here