அனுபவங்கள் தொடரத் தொடர நமக்குப் புரிதல் கிடைக்கத் துவங்கும். அதில் ஒன்று நிதர்சனம் என்று கூறப்படும் Fact ஆகும். Image Credit
Fact
‘இது தான்’ ‘இப்படித்தான்’ என்று உறுதியாகும் நிலையே Fact என்று அழைக்கப்படுகிறது. அதாவது, மாற்றம் இருக்காது, வாய்ப்புக்குறைவு.
நிதர்சனம், எதார்த்தம் என்று தமிழில் கூறலாம்.
இதை உணர்பவர்கள் மிகக்குறைவு, அதீத அனுபவங்கள், அந்த அனுபவங்களில் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இவற்றைப் புரிந்து கொள்ள உதவும்.
ஒரு பிரச்சனைக்கு இந்தத் தீர்வு மட்டுமே உள்ளது என்றால், அதை நோக்கிப் பயணப்படுவதே Fact, மாறாக மறுத்து வேறு வழியில் செல்வதால் எதுவும் நடக்காது.
தாமதமாக உணர்ந்து திரும்பப் பழைய இடத்துக்கே வர வேண்டியதாக இருக்கும்.
ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை
பெரும்பாலானவர்கள் நிதர்சனம் புரிந்து கொண்டாலும், உண்மையை ஏற்க மனம் வருவதில்லை. ஏமாறுகிறோம் என்றே தெரிந்தே ஏமாறுவார்கள்.
அலுவலக மேலதிகாரி குடைச்சல் கொடுப்பவராகவும், அவமதிப்பவராகவும், ஜால்ரா அடிப்பவருக்கு பதவி உயர்வு கொடுப்பவராகவும் இருக்கலாம்.
இந்நிலையில் என்ன வாய்ப்புகள் உள்ளது?
மேலதிகாரியை அனுசரித்துச் செல்லலாம், புகார் அளிக்கலாம், வேறு Team மாற முயற்சிக்கலாம், வேறு நிறுவனத்துக்கு மாறலாம்.
வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினையென்றால், நம் வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கலாம், அவரது வழிக்கு நாம் செல்லலாம், ஆலோசனை (counselling) பெறலாம், பிரச்சனையைப் பொறுமையாகக் கையாளலாம்.
தவற்றை எடுத்துக்கூறிப் புரிய வைக்க முயற்சிக்கலாம், இவை எதுவுமே சரிவரவில்லை என்றால், இறுதியாக விவாகரத்துக்கு முயற்சிக்கலாம்.
இவையே Fact.
இதில் எதிலுமே சேராமல் புலம்புவதால் என்ன தீர்வு கிடைக்கும்?
உணர்வது எப்படி?
நமக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதை விட எது சாத்தியமோ அதுவே Fact.
இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டால், அப்பிரச்சனையை எளிதில் கடந்து விடலாம், இல்லையேல் புலம்புவது மட்டுமே செய்ய முடியும்.
முன்பு Fact புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது அறிவுக்குத் தெரிகிறது ஆனால், மனதுக்குத் தெரிவதில்லை. எனவே, ஏமாறுகிறோம் என்றே தெரிந்தே ஏமாறுகிறோம்.
இதிலிருந்து வெளியே வரக் கடினமாக இருந்தது.
Fact உணர்ந்தவர்கள் உடனே தங்களை மாற்றிக்கொள்வார்கள், உணராதவர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்து இறுதியில் நிதர்சனம் உணர்வார்கள்.
மாறிய பிறகு ஏற்பட்ட மாற்றம்
இதைப் புரிந்து கொண்ட பிறகு, எதுவுமே சாதாரணமாகி விட்டது.
இனி என்ன செய்ய முடியும்? கடந்து செல்ல வேண்டியது தான் என்பதை பின்பற்றித் தற்போது அனைத்தையுமே கடந்து செல்கிறேன்.
பெரிய உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
சில நேரங்களில் கல்நெஞ்சக்காரன் ஆகி விட்டோமோ என்றும் தோன்றும் 🙂 .
கடந்து செல்லுங்கள்
எனவே, எதார்த்தம் புரிந்து கொண்டால், வலியையும், சுமையையும், மன வருத்தத்தையும் கடந்து செல்ல முடியும்.
அனைத்தையுமே Just like that உடனே கடந்து செல்ல முடியாது ஆனால், விரைவிலேயே உணர்ந்து அதிலிருந்து விலகி எதார்த்தம் புரிந்து கொண்டு அடுத்து நிலைக்குச் செல்ல வேண்டும்.
நடந்ததை நினைத்துக்கொண்டு இருப்பதால், எதுவும் மாறப்போவதில்லை.
இதைப் பின்பற்றுகிறேன், நன்கு வித்தியாசம் தெரிகிறது. அதோடு ‘எல்லாம் மேல இருப்பவன் பார்த்துப்பான்‘ 🙂 என்ற நம்பிக்கையும்.
இதைப் பின்பற்றுவது எளிதல்ல, ஆனால், முடியும். தொடர் பயிற்சியாலே சாத்தியம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Looks like among a very very one of the few bloggers you are writing continuously. Happy to see. Since tamil typing not there in my mobile unable to write in tamil pls don’t mistake.
Pls keep writing.
கிரி.. ரொம்ப ஆழமாக இந்த கட்டுரையை இரண்டு முறை படிக்கும் போது என்னுடைய கடந்த காலம் எவ்வாறு இருந்தது என்பது நினைவில் வந்து செல்கிறது.. வாழ்க்கையில் எப்போதும் அடிக்கடி யோசிக்கும் ஒரே ஒரு விஷியம் என்னவென்றால்.. நான் கடந்த காலத்தில் செய்த தவறால் ஏற்படும் பாதிப்பை, என்ன செய்தாலும் அதை நிகழ்காலத்தில் மீண்டும் என்னால் ஒரு போதும் சரி செய்ய இயலாது..
நடந்தது நடந்து தான்.. ஒரு வேளை என் அனுபவத்தினால் என்னுடைய தவறை நான் உணர்ந்து, முன்பு செய்த அதே தவறை மீண்டும் இனி செய்யாமல் இருப்பது தான் அந்த முன் செய்த தவறுக்கான மன்னிப்பாக எடுத்து கொள்கிறேன்..
அடுத்தது உண்மையை முழுவதும் 100 % ஏற்றுக் கொள்வது.. ஆனால் இது ரொம்ப கஷ்டம்.. காரணம் பொய் ரொம்ப அழகாக இருக்கும்.. உண்மை பல நேரம் ரொம்ப கசப்பாக இருக்கும்.. இருந்தாலும் அதை முற்றிலும் ஏற்று கொள்ளும் பக்குவம் வந்து விட்டால், நாம் தனித்துவமாக இருப்போம்..
இந்த பதிவை படிக்கும் போது, நிறைய எண்ண ஓட்டங்கள் மனதில் வந்து செல்கிறது.. ஆனால் என்னால் அவற்றை வார்த்தைகளால் பகிர முடியவில்லை..
@சிவா நன்றி 🙂
@யாசின்
“நான் கடந்த காலத்தில் செய்த தவறால் ஏற்படும் பாதிப்பை, என்ன செய்தாலும் அதை நிகழ்காலத்தில் மீண்டும் என்னால் ஒரு போதும் சரி செய்ய இயலாது..”
இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளலாமே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது.
“அதை முற்றிலும் ஏற்று கொள்ளும் பக்குவம் வந்து விட்டால், நாம் தனித்துவமாக இருப்போம்..”
Fact Accept செய்து கொள்வதால், ஏற்றுக்கொள்ள பழகி விட்டேன் காரணம், அதை மாற்ற முடியாது என்பதால்.
இங்கே Hope இல்லையென்றால், கவலைப்பட்டு என்னவாகப்போகிறது.