வக்பு வாரியம் பல்வேறு இடங்களைத் தங்களது சொத்துக்களாக அறிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Image Credit
வக்பு வாரியம் என்றால் என்ன?
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற மக்களின் சொத்துக்கள் வக்பு வாரிய சொத்துக்களாக அறிவிக்கப்பட்டது.
இவ்வகை சொத்துக்களை வக்பு வாரியம் நிர்வகிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த இந்துக்களின் சொத்துக்களை பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
சுருக்கமாக, வெளியேறிய மக்களின் சொத்துக்களை இந்தியாவில் வக்பு வாரியமும், பாகிஸ்தானில் அரசும் எடுத்துக்கொண்டது.
பாகிஸ்தானைப்போல இந்தியாவிலும் செய்து இருக்க வேண்டும் ஆனால், கேடுகெட்ட காங்கிரஸ் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொடுத்து விட்டது.
என்ன பிரச்சனை?
ஒருவரின் சொத்தை வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்று வக்பு வாரியம் அறிவித்து விட்டால், இடம் நம்முடையது என்று நாம் தான் நிரூபிக்க வேண்டும்.
உங்களுடைய இடம் என்று தீர்ப்பு வரும்வரை சொத்தை விற்க முடியாது. இதெல்லாம் எவ்வளவு பெரிய சிக்கல் என்று யோசித்துப்பாருங்கள்!
உங்கள் இடம் என்றாலும், நீங்கள் வழக்கமான நீதிமன்றத்தில் முறையிட முடியாது மாறாக, அவர்களுடைய Waqf Tribunal Court க்கே செல்ல முடியும்.
பலரின் விவசாய நிலங்கள், கோவில் இடங்கள், வீடுகளை வக்பு வாரியத்தின் சொத்து என்று அறிவித்து மக்களைக் கிறுகிறுக்க வைத்து வருகிறார்கள்.
மொகலாயர்கள் இந்தியா வந்தே 500 ஆண்டுகள் ஆகிறது, இஸ்லாம் மதம் உருவாகியே 1400 வருடங்கள் ஆகிறது.
ஆனால், அதை விடப் பழமையான கோவில்களைக் கூட வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது என்று அறிவித்து வருகிறார்கள்.
படிக்கவே பைத்தியக்காரத்தனமா இருக்கும் ஆனால், 100% உண்மை.
இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் 250 நினைவுச் சின்னங்கள் வக்பு சொத்தாகப் பதியப்பட்டுள்ளது
மக்கள் ஏன் எதிர்க்கவில்லை?
துவக்கத்தில் வக்பு வாரியம் உரிமை கோரியபோது, நம் வீடு, நிலம் இல்லையென்று கண்டுகொள்ளாமல் சுயநலமாக மக்கள் இருந்தார்கள்.
ஆனால், தற்போது அவர்களின் வீடுகளே அறிவிக்கப்பட்டவுடன் அதிர்ந்து உள்ளார்கள். கர்நாடகாவில் பல நூறு விவசாய ஏக்கர்கள் வக்பு இடங்களாக அறிவிக்கப்பட்டது.
இதற்குக் காங்கிரஸும் உடந்தையாகச் சட்டத்தை இயற்ற முயன்றது, இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகு அரசு பின்வாங்கி விட்டது.
தமிழ்நாட்டில் ஒரு முழு கிராமத்தையே வக்பு வாரியம் தனது சொத்தாக அறிவித்தது.
உபியில் இது போன்று Udai Pratap கல்லூரி இடத்தை அறிவிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், வக்பு வாரியம் அறிவிப்பைத் திரும்பப் பெற்றது.
இது போன்று பல்வேறு இடங்கள், கோவில்களை, விவசாய நிலங்களை வக்பு வாரியம் உரிமை கொண்டாடி வருகிறது.
காங்கிரஸ்
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம், நேரு, ராஜிவ் மற்றும் சோனியா!
முஸ்லிம்களின் வாக்குகளுக்காக எவ்வளவு கேப்மாரித்தனம் செய்ய முடியுமோ அவ்வளவையும் வெட்கமே இல்லாமல் செய்து இருக்கிறார்கள்.
இவை ஒன்றையுமே அறியாமல் இந்துக்கள் தூங்கிக்கொண்டுள்ளனர்.
எவ்வளவு துரோகம் செய்ய முடியுமோ அவ்வளவையும் இந்துக்களுக்கு காங்கிரஸ் செய்துள்ளார்கள்.
துரோகம் என்பதை விட நியாயமே இல்லாத செயல்களைச் செய்துள்ளார்கள்.
2014 தேர்தலுக்கு முன்பு டெல்லியில் உள்ள ₹100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வக்பு வாரியத்துக்கு மாற்றி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள்.
இந்தியாவில் இராணுவம், ரயில்வே துறைக்குப் பிறகு அதிகச் சொத்துக்களை வக்பு வாரியம் வைத்துள்ளது.
நாட்டையும் பிரித்துக்கொடுத்து, இந்தியாவிலும் பெரும்பகுதியை வக்பு வாரியத்துக்குக் கொடுப்பவர்களை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது.
ஆனால், இது எதையுமே உணராமல் இந்துக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
பாதிக்கப்படும் முஸ்லிம்கள்
இந்துக்கள் மட்டுமல்ல ஏழை முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்துக்களிலாவது ஏதாவது போராட முடியும் ஆனால், முஸ்லிம்களில் அவர்கள் ஜமாத்தை எதிர்த்தோ, மௌலியை எதிர்த்தோ போராட முடியாது.
வக்பு வாரிய ஊழலைத் தடா ரஹீம் ஒரு பேட்டியில் கூறினார்.
வக்பு வாரியதின் சொத்து எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை சுஃபி முஸ்லிம்கள் கூறியுள்ளார்கள்.
இதில் சுன்னி, ஷியா வக்பு வாரிய பஞ்சாயத்துகள் தனி.
சிறுபான்மையினர்
தற்போது வக்பு வாரிய சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வருவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. இச்சட்டம் வந்தால், மாற்றம் வரும்.
ஆனால், முஸ்லிம்கள் வாக்குகளுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ‘இம்மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்‘ என்று கூறி வருகிறார்கள்.
கெஜ்ரிவால் ஒருபடி மேலே சென்று,
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வக்பு வாரியத்துக்கு அளவற்ற அதிகாரத்தை அளிப்போம். வக்பு வாரியம் என்ன கேட்டாலும் கொடுப்போம்‘ என்கிறார்.
இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பது பெயரளவில் மட்டுமே!
அவரவர் வீடு, நிலம் வக்புவாரியத்தால் உரிமை கோரப்பட்டால் மட்டுமே இதன் ஆபத்தை மக்கள் உணர்வார்கள்.
ஆக்டோபஸ்
காங்கிரஸ் செய்த சட்டத் திருத்தங்களைப் படித்தால், ரத்தக்கொதிப்பே வந்து விடும். வாக்குகளுக்காக ஒரு அரசியல் கட்சி இப்படியும் மனிதாபிமானமற்று, அநியாயமாக நடக்க முடியுமா?!
எளிமையாகப் புரிந்து கொள்ளப் பாதிப்பின் விவரங்கள் மட்டுமே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டங்களை விரிவாகக் கூறினால் படிக்கக் கடினமாக இருக்கும், பலரும் படிக்காமல் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் குறிப்பிடவில்லை.
வக்பு வாரியம் ஒரு ஆக்டோபஸ், ஒவ்வொரு பகுதியாக வளைத்து வருகிறது. ஒருநாள் உங்கள் இடமும் வரலாம்.
ஒருதலைப்பட்சமான சட்டம்
பாகிஸ்தான் போல, அரசு தானே இவ்வகை நிலங்களை உரிமை கோர முடியும். தனியார் அமைப்பு எப்படி தீர்மானிக்கலாம்? இது எந்த வகையில் நியாயம்?!
ஆதாரமே இல்லாமல் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுவது சட்டப்படி சரி.
ஆனால், தொல்லியல் துறை ஆதாரத்துடன் கோவில் நிலத்துக்கு இந்துக்கள் சட்டப்படி போராடுவதற்கு இடைக்காலத் தடை.
கோவிலை மாற்றித்தான் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பது கட்டிட அமைப்பைப் பார்த்தாலே தெரியும் நிலையிலும் சட்டப்படி முயற்சிக்கத் தடை.
சுருக்கமாக,
இந்துக்களுக்கு இடத்தைச் சட்டப்படி நிரூபித்தாலும் பெறுவது எளிதல்ல, முஸ்லிம்கள் எந்த இடத்தையும் வக்பு வாரிய சொத்து என்று கூறி எடுத்துக்கொள்ள முடியும்.
இதில் ஏதாவது நியாயம் உள்ளதா?! காங் செய்துள்ளது புரிகிறதா?
இந்துக்கள் மட்டும் செக்குலராக இருக்க வேண்டும் மற்றவர்கள் இருக்க வேண்டியதில்லை என்பதே இந்தியாவின் தற்போதைய நிலை.
ஆனால், இந்தியா செக்குலர் நாடு. நம்பித்தான் ஆகணும்!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. வக்பு வாரியத்தை குறித்து நீங்கள் பகிர்ந்த பல செய்திகள் எனக்கு புதிதாக இருந்தது.. குறிப்பாக அதனுடைய தொடக்கம் எப்படி என்பது இது வரை நான் அறியாத தகவல்..
மொகலாயர்கள் இந்தியா வந்தே 500 ஆண்டுகள் ஆகிறது, இஸ்லாம் மதம் உருவாகியே 1400 வருடங்கள் ஆகிறது. இதில் முகலாயர்கள் வந்தது 500 வருடம் என்பது சரி… ஆனால் இஸ்லாம் தோன்றி 1400 வருடம் என்பது தவறு.. காரணம் முகமது நபியின் வருகைக்கு பல வருடங்கள் முன்பே இஸ்லாம் இருந்திருக்கிறது என்பது தான் சரியான தகவல்..அதை மெய்பிக்கும் வகையில் குரானில் பல தகவல்கள் உண்டு..
இந்தியாவில் இராணுவம், ரயில்வே துறைக்குப் பிறகு அதிகச் சொத்துக்களை வக்பு வாரியம் வைத்துள்ளது. உண்மையில் இந்த தகவல் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது..
(இந்துக்களிலாவது ஏதாவது போராட முடியும் ஆனால், முஸ்லிம்களில் அவர்கள் ஜமாத்தை எதிர்த்தோ, மௌலியை எதிர்த்தோ போராட முடியாது. இதில போராட்டம் என்பதை நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை..) WAFQ சொத்துக்களுக்கும் மௌலவிகளுக்கும் என்ன சம்மதம் என்று நினைக்கிறீர்கள்????
(இந்துக்களுக்கு இடத்தைச் சட்டப்படி நிரூபித்தாலும் பெறுவது எளிதல்ல, முஸ்லிம்கள் எந்த இடத்தையும் வக்பு வாரிய சொத்து என்று கூறி எடுத்துக்கொள்ள முடியும். ) இதை எவ்வாறு எடுத்து கொள்வது என்று எனக்கு புரியவில்லை கிரி..
சட்டம் என்பது எல்லோர்க்கும் சமமாக இருக்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.. இதில் உயர்ந்தவன் / தாழ்ந்தவன் / ஏழை / பணக்காரன் / உயர்ஜாதி / கீழ் சாதி என்ற பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்… இஸ்லாம் மதம் வேண்டுமானால் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கலாம்.. ஆனால் நாங்கள் வேறு நாட்டிலிருந்து வரவில்லை ..
என் பாட்டன் , பூட்டன், என் தந்தை இங்கு தான் பிறந்தார்கள்.. இந்த மண்ணை நேசித்தார்கள் . இங்கு தான் மரித்தும் போனார்கள்.. இந்தியனாக இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.. நடப்பேன்.. நாளை என் சந்ததிகளும் இதை தான் தொடர வேண்டும் என்று வலியுறுத்துவேன்…
@யாசின்
“அதனுடைய தொடக்கம் எப்படி என்பது இது வரை நான் அறியாத தகவல்..”
எனக்கும் சில வருடங்களுக்கு முன்பு வரை எதனால் வக்பு வாரியம் உருவானது என்று தெரியாது.
இது குறித்த சர்ச்சைகள் அதிகம் வர ஆரம்பித்து, எங்கள் கோபியிலும் இது போன்ற பிரச்சனை ஆன பிறகே என்னவென்று தேடிப்படித்ததில் இது தெரிய வந்தது.
இப்ப கூடப் பார்த்தீங்கன்னா . .. எங்க ஊர்ல பிரச்சனை என்றவுடன் தான் நானே தேடி பார்க்கிறேன் 🙁 .
“முகமது நபியின் வருகைக்கு பல வருடங்கள் முன்பே இஸ்லாம் இருந்திருக்கிறது என்பது தான் சரியான தகவல்..அதை மெய்பிக்கும் வகையில் குரானில் பல தகவல்கள் உண்டு”
சம்பந்தப்பட்டவர் நீங்கள் என்பதால், நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்.
நான் இணையத்தில் தேடிப்பார்த்ததில் 1400 வருடங்கள் என்று வந்தது. Islam age in years என்று தேடினால், 1400 தான் கூறியதால் குறிப்பிட்டேன்.
“உண்மையில் இந்த தகவல் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது..”
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“போராட்டம் என்பதை நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.. “WAFQ சொத்துக்களுக்கும் மௌலவிகளுக்கும் என்ன சம்மதம் என்று நினைக்கிறீர்கள்?”
வக்பு சொத்துக்களுக்கும் மௌலவிகளுக்கும் மட்டுமல்ல ஜமாத்துக்குமே சம்பந்தமில்லை. வக்பு வாரியம் என்பது இதிலிருந்து வேறுபட்டது.
நான் கூறியது பொதுப்படையாக அதாவது, கிராமங்களில் ஒரு முஸ்லீம் குடும்பம் ஜமாத்தை எதிர்த்து எதையும் செய்ய முடியாது.
நகரங்களில் இது போன்று பெரியளவில் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், கிராமங்களில் மிகச்சாதாரணம்.
கிராமங்களில் ஜமாத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை மீறி எந்த முஸ்லிமும் செயல்பட முடியாது.
எனவே, இந்துக்களை விட முஸ்லிம்களுக்கு சட்டப்படி நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகளில் நெருக்கடியுள்ளது என்ற அர்த்தத்தில் கூறினேன்.
சென்னையில் வக்பு வாரியம் பெயரில் ஏழை முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தடா ரஹீம் பேட்டியில் கூறினார்.
மௌலவிகள் என்றால் அறிஞர்கள் என்ற கருதுகிறேன். தமிழகத்தில் இவர்களின் பாதிப்பு அதிகம் கண்டதில்லை ஆனால், வடமாநிலங்களில் இவர்களின் influence அதிகம்.
இவர்களின் பேச்சுக்கு, கருத்துக்கு மதிப்பு அதிகம். எனவே, இவர்களின் Influence ஒரு பிரச்சனையில் அதிகம்.
இவர்களின் ஒரு பிரச்சனையின் போக்கையே மாற்றுகிறார்கள். மற்றவர்களை Influence செய்கிறார்கள்.
“சட்டம் என்பது எல்லோர்க்கும் சமமாக இருக்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு”
மிகவும் சரி ஆனால், அப்படியில்லை.
“இந்தியனாக இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.”
சட்டப்படி தான் வக்பு வாரியமும் நடக்கிறது யாசின்.
இங்கே பிரச்சனை சட்டமில்லை ஆனால், அதில் உள்ள பாரபட்சம் தான் பிரச்சனை.
திருமணத்துக்கு ஷரியா சட்டம் வேண்டும் என்பவர்கள், குற்றங்களுக்கு இந்திய சட்டம் வேண்டும் என்கிறார்கள்.
தப்பு செய்தால் சவுதியில் செய்வது போல கை, கால், தலையை எடுப்பது தானே ஷரியா சட்டம். அது வேண்டும் என்றால், இதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
முஸ்லிகளுக்கு ஒரு சட்டம், இந்துக்களுக்கு ஒரு சட்டம் என்பதே விமர்சிக்க காரணமாகிறது. இதற்கு Uniform Civil Code சட்டம் வந்தால், சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றாகும்.
“இஸ்லாம் மதம் வேண்டுமானால் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கலாம்.. ஆனால் நாங்கள் வேறு நாட்டிலிருந்து வரவில்லை ..”
நியாயமான வாதம் ஆனால், வேறு நாட்டின் சட்டம் தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
நீங்களே கூறுங்கள், வக்பு வாரியம் உங்கள் இடத்தை அவர்கள் இடம் என்று எடுத்துக்கொண்டால் உங்கள் மனநிலை என்ன?
ஆனால், இந்துக்களின் கோவில் என்று பார்த்தாலே தெரியும் நிலையிலும் இந்துக்கள் போராட கடும் எதிர்ப்பு, சட்ட சிக்கல்கள்.
இந்த சட்ட பாரபட்சத்தையே இக்கட்டுரையில் கூறியுள்ளேன்.