வழக்கமான ரஜினி படங்களிலிருந்து மாறுபட்ட படமாக வேட்டையன் வெளியாகியுள்ளது. Image Credit
வேட்டையன்
துஷ்ரா கொடூரமாகக் கொல்லப்படுகிறார், அவரைக் கொலை செய்த நபரைத் தவறான தகவலின் அடிப்படையில் ரஜினி என்கவுண்டர் செய்து விடுகிறார் ஆனால், அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வருகிறது.
அப்படியென்றால் குற்றவாளி யார்? என்று விசாரிக்க ஆரம்பிக்கும் போது மிகப்பெரிய தலை சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் என்ன ஆனது? உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட்டாரா? என்கவுன்ட்டர் செய்யப்பட்டாரா? என்பதே வேட்டையன்
ஞானவேல்
ஞானவேல் நேர்முகத்தில் ரஜினியை முள்ளும் மலரும் நடிப்பு போல இதில் காண்பிக்க முயற்சித்து இருக்கிறேன், அவர் ஒரு சிறந்த நடிகர் என்று கூறி இருந்தார்.
ஆனால், வித்தியாசமான நடிப்பாக எதையும் காணவில்லை, வழக்கமான ரஜினி மட்டுமே எனக்குத்தெரிந்தார் குறிப்பாக கபாலியில் இருந்த நடிப்பு கூட இல்லை.
ஞானவேல் கூறிய ஒன்று மிகச் சரியாக வேலை செய்துள்ளது.
அதாவது கருத்தைக் கூறுகிறேன் என்று முழுக்க அவர் பாணியில் எடுத்தால், படமும் ஓடாது, சொல்ல வந்த கருத்தும் மக்களையும் சென்றடையாது என்றார்.
இதை அற்புதமாகக் கையாண்டு கூறியபடியே கருத்தான படத்தில், ரஜினி மாஸையும் நுழைத்து அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்துள்ளார்.
திரைக்கதை
சமீப காலங்களில் இது போன்று முயன்ற படங்கள் ஒன்றே ஒன்று கபாலி.
அதாவது மாஸ் மற்றும் கதை கூறிய விதம் ஆனால், மாஸ் குறைந்து மற்றவை அதிகரித்ததால் ரசிகர்களிடையே விமர்சனங்களுக்குள்ளானது.
ஆனால், இதில் இரண்டுமே சரிவிகிதத்தில் கலந்து படத்தின் ஜீவன் தொலைந்து போகாமல் அசத்தலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமான கருத்தை, வறட்சியாகக் கொண்டு சென்று விடாமல் இயக்கியதே இப்படத்தின் வெற்றி. இதே போன்று அவர் கூறிய கதாபாத்திரங்கள் தேர்வு.
கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்களின் தேர்வு எவ்வளவு முக்கியம் என்பதற்கு அமிதாப், ஃபகத், துஷாரா, ரித்விகா, ராணா சிறந்த எடுத்துக்காட்டு.
அமிதாப் அவர்களின் அனுபவம் படத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை தெரிகிறது. அலட்டிக்கொள்ளாமல், பதட்டப்படாமல் அப்படியொரு இயல்பாக நடித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதியாக வரும் அமிதாப்பை தவிர்த்து வேறு ஒருவரை இக்கதாபாத்திரத்தில் நினைத்தே பார்க்க முடியவில்லை.
எதனால் மக்கள் என்கவுன்ட்டரை விரும்புகிறார்கள் என்பதற்கும், என்ன நடந்தால் தேவையில்லை என்பதையும் நீதிமன்றத்தில் அமிதாப் கூறுவது செம லாஜிக்.
இப்படம் முழுக்க அமிதாப் குருவாகவும், தலைவர் சிஷ்யனாகவுமே தெரிந்தார்கள், இறுதிக்காட்சி அதை உறுதிப்படுத்தியது.
33 வருடங்களுக்குப் பிறகு இணைந்ததின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தியுள்ளார்கள்.
ஃபகத்
அதே போல் எதனால் இரு மாதங்கள் காத்திருந்து ஃபகத்தை ஞானவேல் நடிக்க வைத்தார் என்பதும் புரிந்து கொள்ள முடிந்தது.
இவரைத்தவிர வேறு யாரும் நடித்து இருந்தால், ஒன்று அக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்து இருக்கும் அல்லது சராசரி கதாபாத்திரமாக மாறி இருக்கும்.
தர்பார் படத்தில் தலைவர் கூட யோகி பாபு இருப்பது போல.
இன்ஃபார்மராக இருக்கும் ஃபகத்துக்கு அதிகாரிகள் அளவுக்கு முக்கியத்துவம், சுதந்திரம் கொடுப்பது மட்டுமே நெருடல்.
மீண்டும் ஒருமுறை ரஜினியும் ஃபகத்தும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதே இவர்களின் காம்போ வெற்றி.
ரித்திகா சிங் துஷாரா
ரித்திகா சிங் கதாபாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு யார் இவ்வளவு பொருத்தமாக இருப்பார்கள்?! எனக்கு யாரும் நினைவுக்கு வரவில்லை.
பெண் காவல் அதிகாரிக்கு மிகப்பொருத்தமாக உள்ளார், படம் முழுக்க ரஜினியுடன் பயணிக்கிறார்.
ரித்திகா திரை வாழ்க்கையில் அற்புதமாக அமைந்தது இரு படங்கள். ஒன்று இறுதிச்சுற்று இரண்டாவது Oh My கடவுளே. மூன்றாவதாக வேட்டையன்.
ஒரு ஆரம்ப நிலை அதிகாரியாக துறுதுறுவென்று ஒவ்வொன்றையும் செய்வது சிறப்பு. இவருடன் வரும் இன்னொரு நபரும் மிகை நடிப்பு செய்யாமல் நன்றாக நடித்துள்ளார்.
துஷாரா தவிர்த்து வேறொருவர் நடித்து இருந்தாலும், இதே உணர்வைக் கொண்டு வந்து இருக்க முடியும். இருப்பினும் துஷாரா பொருத்தமாக உள்ளார்.
மஞ்சு வாரியர், ரக்ஷன் ஆகியோருக்கு முக்கியத்துவம் இல்லை. அபிராமி, கிஷோர் ஓகே.
Why?
படத்திலேயே எரிச்சல் படுத்தியது என்னவென்றால், துஷாரா பாதிக்கப்படும் காட்சியைக் கிட்டத்தட்ட 7 முறை வெவ்வேறு தருணங்களில் காண்பிக்கிறார்கள்.
முதலிலேயே எல்லாமே தெரிந்து விட்டது. அப்படியிருக்கையில் ஒவ்வொரு முறையும் விளக்கமாகக் காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சுருக்கமாகக் காண்பித்துச் சொல்ல வந்ததை சொல்லக்கூடாதா? இதை ஏன் ஞானவேல் உணரவில்லை? அவர் திரும்பத்திரும்ப படத்தைப் பார்த்து இருக்கும் போது ஏன் அவருக்குத் தோன்றவில்லை?
ரஜினியை ராணா கையாளும் விதமும், அவரது கெத்தை தொடர்வதும் பின்னர் அதற்கு ரஜினி வழியில் பதிலடி கொடுப்பதும் வரவேற்பு மிகுந்த காட்சிகள்.
மாஸ் தேவையென்றாலும் ஜெயிலர் போலச் சண்டைக்காட்சிகளை நறுக்கென்று அமைத்து இருந்தால் இன்னும் மாஸாக இருக்கும்.
நீட் எதிர்ப்பு பரப்புரை படமாக மாறி விடுமோ என்ற சந்தேகம் இருந்தது ஆனால், பொதுவான நுழைவுத்தேர்வு, பயிற்சி வகுப்புகள் என்று சென்றது பரவாயில்லை.
ஒளிப்பதிவு பின்னணி இசை கலை
ஒளிப்பதிவு மிகச்சிறப்பு, அதே போல கலை. எது செட்டிங்ஸ் எது உண்மையென்றே தெரியவில்லை.
படத்தின் கதைக்குப் பின்னணி இசை அவசியம் ஆனால், கதையின் ஜீவனைச் சிதைக்காமல் இருக்க வேண்டும். அப்பணியை அனிருத் மிகச்சிறப்பாக வேட்டையனில் செய்துள்ளார்.
ஜெயிலர் போல மனதில் நிற்கும் தனித்த இசையாக எதுவும் தோன்றவில்லை ஆனால், படத்தின் எண்ணவோட்டத்திலேயே பின்னணி இசையும் பயணிக்கிறது.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கலாம்.
இரண்டு முறை பார்த்து விட்டேன், முதல் முறையை விட இரண்டாவது முறை பார்க்கும் போது பல தெளிவாகப் புரிந்தது, கூடுதலாக ரசிக்க முடிந்தது.
ஞானவேலின் வேட்டையன் குறி தப்பவில்லை, நினைத்ததைச் சாதித்துள்ளார்.
தலைவரின் திரை வாழ்க்கையில் அவரின் மதிப்பைக் கூட்டிய படங்களில் ஒன்றாக வேட்டையன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Directed by T. J. Gnanavel
Written by T. J. Gnanavel
Screenplay by B. Kiruthika
Produced by Subaskaran Allirajah
Starring Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Ritika Singh, Dushara Vijayan
Cinematography S. R. Kathir
Edited by Philomin Raj
Music by Anirudh Ravichander
Release date 10 October 2024
Running time 163 minutes
Country India
Language Tamil
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தலீவரின் திரை வாழ்க்கையில் அவரின் மதிப்பைக் கூட்டிய படங்களில் ஒன்றாக வேட்டையன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
@கிரி. அப்ப அண்ணாத்த படம் ?
Gir- : “இதை அற்புதமாகக் கையாண்டு கூறியபடியே கருத்தான படத்தில், ரஜினி மாஸையும் நுழைத்து அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்துள்ளார். ”
Unmai vilambi :நிச்சயம் எந்த ஒரு படமும் அனைவரையும் கவர்வது கடினம்.
என்னை இந்த படம் கவரவில்லை. ஏமாற்றமாக இருந்தது
முதல் பாதி படம் ஒரு 30 நிமிடத்தில் கூட சொல்லி இருக்கலாம்.
இரண்டாம் பாதி துவக்கத்திலேயே கதை எப்படி செல்ல போகிறது என்று சுலபமாக யூகிக்க முடிகிறது.
இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த “corporate criminal ” கதைகளை கூறிக்கொண்டு இருப்பார்கள். மிகவும் போர் அடித்துவிட்டது கிரி.
இரண்டாம் பாதி இழுவையோ இழுவை.
அமிதாப் பச்சன் வேறு மொழியில் பேச அதை தமிழில் dub செய்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு connect ஏற்படவில்லை என்பதே உண்மை .pan india ப்ரோமோஷன்கு அமிதாப் தேவை படுகிறார்.இந்த கதாபாத்திரம் நடிக்க தமிழில் ஆளே இல்லையா ? எல்லாம் வியாபார நோக்கம் மட்டுமே.
fazhad fazil கேரக்டர்க்கு அவர் நியாயம் செய்துள்ளார் உண்மைதான். ஆனால் rajnji துதி பாட fahad எதற்கு.அதே படத்தில் வரும் ரக்ஷன் கூட அந்த கேரக்டர்ஐ செய்து இருக்கலாம்.fahad வீணடிக்க பட்டிருக்கிறார்.
படத்திற்கு பெயர் மட்டும் “வேட்டையன்” ஆனால் படத்தில் ஒரு டயலாக் வரும் “police are not hunters , they are protectors ” என்று.
படத்தில் நீட்டையும் எதிர்க்க வேண்டும் அதே சமயம் encounter பற்றியும் சொல்ல வேண்டும் என்று நினைத்து எழுதப்பட்ட திரைக்கதை சுவாரசியம் இல்லை.
ரஜினி ஒரு ஹீரோ வாக சண்டை போடுவதை த்விர்த்து வேறு எதையும் செய்ய வில்லை. அவர் தவறாக encounter செய்து விட்டு , தனது உடன் இருப்பவர்களை குறை கூறுகிறார். இதில் குறி வெச்சா இறை விழணும் என்று பஞ்ச் வேறு.
படத்தின் முதல் பாதி என்பது ஹீரோ செய்யும் சொதப்பல். அதை ரஜினி போன்று மாஸ் ஹீரோவை வைத்து காண்பிப்பது நெருடல்.
படத்தில் வரும் இன்வெஸ்டிகஷன் எல்லாம் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது.சுலபமாக எல்லாம் காய் கூடி விடுகிறது. இன்டெரெஸ்டிங்காக இல்லை என்பதே உண்மை.
கொசுறு : ராணாவும் வீணடிக்க பட்டிருக்கிறார்.
படத்தில் வில்லன் இரண்டாம் பாதியில்தான் வருகிறார்.பெரியதாக எதுவும் செய்ய வில்லை டம்மி வில்லன்.
t half was good, but the second half was miserable. The super start was pathetic in fights and unrealistic. The way he pushed Rana is laughable. Already a mixed review/ Rajni fans started saying, that Thalaiver is acting energetically at the age of 73. Who asked him to act. As long as the movie is good, people will watch it. He has been struggling for a long time. Amitab role is not impressive. Fahad is one of the finest actors of this era not sure why he accepted this role to do the “Jalra to Rajni” Not sure when these directors going to stop giving build ups for Rajnikanth. It has gone overboard. Background elevation for Rajni is intolerable. The first half was decent, but the second half was a disaster. The superstar’s performance in the fight scenes was disappointing and felt unrealistic. The way he pushed Rana was almost laughable. Reviews are already mixed, with Rajni fans defending him, saying he’s energetic even at 73. But who asked him to act? If the movie is good, people will watch it, regardless of age. He’s been struggling for a while now. Amitabh’s role didn’t leave an impact, and it’s puzzling why an actor as talented as Fahadh accepted a role that just plays second fiddle to Rajni. When will directors stop hyping Rajnikanth unnecessarily? The over-the-top build-ups and background elevation are unbearable
கிரி.. வேட்டையன் டத்தோட ட்ரைலர் பார்க்கும் போது எனக்கு இந்த ஒரு எதிர்பார்ப்பும் எழவில்லை.. அதனால் படத்திற்கு இது வரை செல்லவில்லை.. சில படங்கள் ட்ரைலர் பார்க்கும் போதே ஒரு வித ஈர்ப்பு நிச்சயம் எழும்.. அந்த பீலிங்க்கே நம்மை படத்தை பார்க்க தூண்டும்..
சில சமயம் இது போல ட்ரைலர் பார்த்து பீலிங் ஏற்பட்டு, படத்துக்கு சென்று பல்பு வாங்கிய தருணங்களும் உண்டு.. ரஜினி ரசிகனா நிச்சயம் படம் உங்களை கவர்ந்து இருப்பது புரிகிறது.. அதற்குளே நீங்கள் இரண்டு முறை பார்த்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..
நானும் சக்தியும் கோவையில் இருந்த சமயத்தில் ஒரு படத்தை திரையில் ஒரு முறை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதியை வைத்து இருந்தோம்.. அதை மீறி சம்திங் சம்திங் படத்தை மட்டும் (அதோட மேக்கிங் பிடித்து) இருந்ததால் இரண்டு முறை திரையில் பார்த்தோம்.. அந்த நாட்கள் எல்லாம் என் வாழ்வின் வசந்த காலநாட்கள்…
@ஹரிஷ்
தற்போது AXIS Airtel Offer எதுவுமில்லை, இருந்தால் கூறுகிறேன்.
😀. அண்ணாத்த அளவுக்கு ஆஃபர் மோசமாக இல்லாமல் இருந்தால் சரி
@உண்மை விளம்பி
“நிச்சயம் எந்த ஒரு படமும் அனைவரையும் கவர்வது கடினம்.”
மாற்றுக்கருத்தில்லை.
நான் கூற வந்தது மாஸ் மற்றும் கன்டென்ட் எதிர்பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது என்கிற அடிப்படையில்.
இதில் எல்லோருக்கும் பிடிக்கும் என்பது சாத்தியமில்லை.
மக்களின் விமர்சனம் வழக்கமாக ரஜினி என்றால் மாஸ் காட்சிகளை மட்டும் கூறுவார்கள். வேட்டையன் அதிலிருந்து விலகி இருந்ததால் பலரும் இதை கூறி வருகிறார்கள்.
இந்த அர்த்தத்தில் கூறினேன், நீங்கள் கூறுவதும் சரியே.
“என்னை இந்த படம் கவரவில்லை. ஏமாற்றமாக இருந்தது”
நீங்களே கூறியது போல அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லையே. அடுத்து வரும் படங்களில் உங்களுக்கும் பிடித்த படமாக நடிக்க எதிர்பார்க்கிறேன்.
‘”இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த “corporate criminal ” கதைகளை கூறிக்கொண்டு இருப்பார்கள்”
மாற்றம் இருந்தால் நல்லது தான்.
“அமிதாப் பச்சன் வேறு மொழியில் பேச அதை தமிழில் dub செய்து பார்க்க வேண்டியிருக்கிறது.”
நல்லவேளை சொன்னீங்க . .நான் இதை குறிப்பிட மறந்து விட்டேன்.
தொழில்நுட்பம் எவ்வளவு அழகாக உதவுகிறது. தமிழே தெரியாத ஒருவரை தமிழ் பேச வைக்கிறது. அற்புதம்.
அமிதாப் குரல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை .
“pan india ப்ரோமோஷன்கு அமிதாப் தேவை படுகிறார்.இந்த கதாபாத்திரம் நடிக்க தமிழில் ஆளே இல்லையா ?”
எனக்கு அமிதாப் தான் சரியான நபராக தோன்றுகிறார். ரஜினிக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்றும் அதே சமயம் கன்வின்சிங்காக இருக்க வேண்டும் என்றால், அமிதாப் சிறந்த தேர்வு.
நீங்க சொல்லுங்க வேறு யாரை போடலாம்?
“படத்தில் நீட்டையும் எதிர்க்க வேண்டும் அதே சமயம் encounter பற்றியும் சொல்ல வேண்டும் என்று நினைத்து எழுதப்பட்ட திரைக்கதை சுவாரசியம் இல்லை.”
என்னதான் அழுத்தி இதை மையமாக வைத்து இல்லை என்றாலும் நீட் குறிப்பிட்டதை தவிர்த்து இருக்கலாம் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.
“அவர் தவறாக encounter செய்து விட்டு , தனது உடன் இருப்பவர்களை குறை கூறுகிறார்.”
அவர் உறுதிப்படுத்திக்கொண்டு தான் செய்கிறார். இதற்கு ரஜினி விசாரணை அதிகாரி கிடையாது.
@Vinayr Raghav
“If the movie is good, people will watch it, regardless of age.”
As simple as that.
Let’s see how the movie is performing. If people accepted then will be blockbuster and if not will be disaster.
So leave it to the people. Makkal Theerppe Magesan Theerpu.
@யாசின்
” வேட்டையன் டத்தோட ட்ரைலர் பார்க்கும் போது எனக்கு இந்த ஒரு எதிர்பார்ப்பும் எழவில்லை..”
எனக்கே எதிர்பார்ப்பு இல்லை 😀
காரணமாக இது வழக்கமான ரஜினி படமாக இல்லையாததால் Hype வேண்டாம் என்று தவிர்த்து விட்டதாக ஞானவேல் கூறி இருந்தார்.
கபாலி டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அப்படத்துக்கு வேறு மாதிரியான தோற்றத்தைக் கொடுத்து விட்டது ஆனால், படம் முழுக்க அது போல இல்லை.
எனவே, இதை அனுபவமாக எடுத்துக்கொண்டு எதிர்பார்ப்பைக் குறைத்துள்ளார்கள் அது நன்றாக வேலையும் செய்துள்ளது.
“சில சமயம் இது போல ட்ரைலர் பார்த்து பீலிங் ஏற்பட்டு, படத்துக்கு சென்று பல்பு வாங்கிய தருணங்களும் உண்டு.”
எனக்கும் உண்டு 🙂 .
“அதற்குளே நீங்கள் இரண்டு முறை பார்த்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”
முன்னரே நானும் என் நண்பனும் முடிவு செய்து இருந்தோம். அதனால் முன்பே முன்பதிவு செய்து விட்டோம்.
உங்களுக்கு சக்தி போல எனக்கு இவன்.
பா.ரஞ்சித்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ரஜினியை வைத்து தனது கருத்துகளை திணித்துள்ளார்.
படம் ஆரம்பத்திலேயே கல்வி தந்த மெக்காலே வாழ்க என நன்றி அறிவிப்புடன் ஆரம்பிப்பதே பெரிய ஒலா ஸ்கூட்டர் தான்.
அடுத்து வரிசையாக நீட் உருட்டுகள் தான்.
1. எந்த நீட் கோச்சிங் சென்டர் டா ஆன்லைன் கிளாஸ் நடத்துறான்.
2. நீட்டால் நிறைய கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வியை பயில்கின்றனர்.
3. நீட் கோச்சிங் சென்டர் சென்று பயின்றால் மட்டுமே நீட்டில் வெற்றி பெற முடியாது.
4. ஏன்டா நீங்க தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சீட்டிற்கு கொள்ளை அடிக்கும் கும்பலை உங்களால் காட்ட முடியுமா?
5. நீட் இல்லாத போது செல்வந்த மாணவர்கள் பல கோடி ரூபாய் கொடுத்து மருத்துவ சீட்டை பெறுகின்றனர் நீட் வந்த பிறகு இந்த சூழல் இல்லை
படிக்கும் திறன் திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்!
ஆக மொத்தத்தில் “இந்த படத்தில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் கஞ்சா அடிக்கின்றனர் என்று தொடங்கி
நீட் ஒழிப்பு, ஒன்றிய அரசு என்று சொல்லி மத்திய அரசுக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார்”.
இது தவிர தனது கம்யூனிச நக்சல் கருத்துகளை நம்ம தலைவரை வைத்து அழகாய் திணித்துள்ளார் ..
ரஜினியை வைத்து தனது சிந்தனைகளை திணித்த ரஞ்சித்தை தொடர்ந்து ஞானவேல் ..
அடுத்த படமும் ஞானவேலுடன் ரஜினி இணையாமல் இருக்க கடவுள் தான் அருள் புரியணும்.
‘புருஷன் சொல்லுறதை, எந்த பொண்டாட்டிடா கேட்டிருக்கா’ என்று சூப்பர் ஸ்டார் பஞ்ச் அடிக்கும்போது தியேட்டரில் விசில் சத்தம் கூரையைப் பிளக்கிறது. படப்பிடிப்பில் இந்த டயலாக்கை சொல்லிவிட்டு தலைவரும் விசிலடித்தார் என்று படக்குழுவினர் நெகிழ்ச்சியாக சொல்கிறார்கள்.
வேட்டையன் படத்திலிருந்து மெக்காலே வந்து தான் நமக்கு கல்வி கொடுத்தான் என்கிற காட்சிகள் நீக்கம்!
வேட்டையன் 🚩குறி தவறி விட்டது.