அமரன் திரைப்படத்தை எதிர்த்து SDPI முஸ்லீம் அமைப்புப் போராட்டம் நடத்தியுள்ளது. இவர்களோடு திராவிட ஆதரவாளரான திருமுருகன் காந்தியும் அவதூறாகப் பேசியுள்ளார். Image Credit
தீவிரவாதிகள்
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து மக்களை, நாட்டைக் காக்க இறந்த இராணுவ வீரர்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பர். இதன் இன்னொரு அர்த்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமரன் படத்தில் தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பது காண்பிக்கப்படுகிறது.
SDPI குற்றச்சாட்டு
முஸ்லிம்களை தவறாக காண்பிக்கிறார்கள் என்பது SDPI குற்றச்சாட்டு, இவங்க கூறுவதில் ஏதாவது லாஜிக் இருக்கா?
முஸ்லிமை தவறாக எங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது?!
தீவிரவாதியைத் தீவிரவாதியாகத்தானே காட்ட முடியும். நடந்த, நடக்கும் ஒன்றைத்தானே உண்மைச்சம்பவமாகக் காண்பிக்க முடியும்.
கல்லெறிந்தவர்களைத்தானே காண்பிக்க முடியும். தினமும் ₹500 கொடுத்து இராணுவத்தின் மீது கல்லெறிய வைத்தது பொய்யா?!
தற்போது வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக்கொண்டுள்ள அனைவருமே பாகிஸ்தானால் அனுப்பி வைக்கப்பட்ட தீவிரவாதிகள்.
தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று கூறியவர்களுக்கு தற்போது என்ன நடந்தது?
PFI அமைப்பைத் தடை செய்தது போல, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வரும் SDPI அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.
அமரன்
அமரன் படத்தை இவர்கள் பார்த்தார்களா என்பதே தெரியவில்லை.
நாட்டுக்காக உயிரை விடும், தன் தம்பியைப் போல இன்னொருவர் பாதிக்கப்படக் கூடாது என மிக ஆபத்தான முடிவை எடுத்து ஊடுருவும் முஸ்லிமை காட்டுகிறார்கள்.
நாட்டுக்காக ஏன் போராடுகிறாய்? என்று கூறி பொது இடத்தில் தீவிரவாதிகள் கொல்ல முயல்வது ஒரு முஸ்லிமை. மோசமாக அடிபட்டுப் படுத்து இருக்கும் போதும் நாட்டுக்காகப் போராட ஆர்வமாக இருப்பது ஒரு முஸ்லீம்.
முஸ்லிமை உயர்வாக, நாட்டுக்காகப் போராடுபவர்களாகக் காண்பிப்பவர்களைப் போற்றாமல், தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் இன பொது மக்களையே தீவிரவாதிகள் கொல்கிறார்கள். அது தவறாகத் தெரியவில்லையா? பாதிக்கப்படுவதும் இவர்களைப் போல ஒரு முஸ்லீம் தானே!
பின்னர் எப்படித் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்க முடிகிறது?
தயாரிப்பாளர் கமல் உருவபொம்மையை எரிக்கத் தெரிந்தவர்களுக்கு, அப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் பற்றி எதுவும் கூறத்தோன்றவில்லையே!
முஸ்லிம்களுக்கு எதிரிகள் யார்?
SDPI போன்ற அமைப்புகளே முஸ்லிம்களுக்கு எதிரிகள். இவர்களே மோசமான பிம்பத்தை, பொதுப்பார்வையை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
முஸ்லிம் அல்லாதவர், போராட்டம் நடத்துபவர்களை SDPI அமைப்பு என்று பார்ப்பார்களா? அல்லது முஸ்லிம்கள் என்று பார்ப்பார்களா?
மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காததால் இதை அனுகூலமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குக் குண்டு வைக்க முயன்ற தீவிரவாதியைக் கோவை முஸ்லிம்கள் கண்டித்தது போல இவர்களையும் கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமே பொதுப்பார்வையை மாற்ற முடியும்.
தமிழக அரசியல்
இதுவரை அமரன் படத்தைப்பாராட்டாத முக்கிய கட்சித் தலைவர் இருப்பார் என்றால், அது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாக தான் இருக்கும்.
காரணம், SDPI இவரது கூட்டணிக்கட்சி.
இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்று யோசித்துப் பாருங்கள். SDPI க்கு பயந்து எந்தப்பிரச்சனைக்கும் குரல் கொடுக்க மாட்டார்.
ஸ்டாலினை விட மோசமாக மாறி வருகிறார்.
தேசப்பற்றை ஊக்குவிக்கும் படத்தைப் பாராட்டக் கூடத் தயங்கும் தலைவர் எப்படி அனைத்து மக்களுக்குமான தலைவராக இருப்பார்.
மே 17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி என்ற பைத்தியக்காரன் தீவிரவாதிகளைக் கொல்லும் முகுந்தை போர்க்குற்றவாளி என்று கூறுகிறான்.
தீவிரவாதிகளைப் போராளிகள் என்று கூறுகிறான். பொது மக்களைக் கொல்பவர்கள் எப்படிப் போராளியாக இருக்க முடியும்?!
இவனெல்லாம் ஒரு மனுசனா? எப்படி இது போலப் பேச முடிகிறது?! இவனையும் நம்பி ஆதரிக்கும் கூட்டத்தை நினைத்தாலே கண்டபடி கோபம் வருகிறது.
இந்தியா பிடிக்கல, இந்தியர்களைப் பிடிக்கல, இந்திய இராணுவம் பிடிக்கல அப்புறம் எதுக்கு இந்தியால இருக்கீங்க!
நீங்க எதிர்பார்ப்பது எங்கே நடக்குதோ அங்கே போய்த் தொலைங்க.
இந்தியாவாது நிம்மதியாக இருக்கும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. படத்தை இது வரை நான் பார்க்கவில்லை.. அதனால் இந்த பதிவில் கருத்தை தெரிவிக்க முடியவில்லை.. அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்காதது ஒன்றும் புதிதல்ல கிரி.. ஈழத்தில் போர் முடிவுறும் தருணத்தில் இங்கு ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் போராளிகள் இங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது உலகமே அறியும்…
===========================
இந்தியா பிடிக்கல, இந்தியர்களைப் பிடிக்கல, இந்திய இராணுவம் பிடிக்கல அப்புறம் எதுக்கு இந்தியால இருக்கீங்க!
நீங்க எதிர்பார்ப்பது எங்கே நடக்குதோ அங்கே போய்த் தொலைங்க.
இந்தியாவாது நிம்மதியாக இருக்கும்.
===========================
100 % உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்.. உண்மையை உறக்க கூறியதற்கு நன்றிகள் பல…
@யாசின்
பொதுவெளியில் நாட்டுக்கு எதிராக பேசுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கையே எடுப்பதில்லை. எரிச்சலாக உள்ளது.
படம் பாருங்க யாசின். அற்புதமாக இருக்கும், வழக்கமான தமிழ் படமாக இல்லாமல், ஒரு மாற்றமாக இருக்கும்.
அதோடு இந்திய இராணுவத்தை உயர்வாகவும், அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் காண்பித்துள்ளார்கள்.